...

"வாழ்க வளமுடன்"

வீட்டுக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மார்ச், 2012

பட்டுச் சேலை பராமரிப்பு!



1. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.


2. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.


3. எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.


4. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.


5. பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.



6. அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.



7. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.



***
thanks Mohamed
***



"வாழ்க வளமுடன்"
      

13 மார்ச், 2012

முதுமையை விரட்டும் ஓட்ஸ்!



உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

***
thanks tbs
***




"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2012

'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்

அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று ஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம் முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.

அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரான மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சில விவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்ய விழைகின்றேன்.

1.   வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன் அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்து கொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.



2.    கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையொப்பத்தை இட வேண்டும்.



3.   உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்பு மையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும்.



4.  உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன் வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள் மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts ) வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.


5.  அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.


6.   கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.


7.   டன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்.


8.  கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


9.   பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.


10.    டன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள் கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கான விலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும். உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில் தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையை கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறு பிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றவும்.



11.   நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையை இயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



12.    'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளை செய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



13.   உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டை தொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும். இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாக செய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவது முக்கியம்.




14.   உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசிய எண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லது வங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லது வேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள் தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும் கூட.


15.   எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன் அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில் வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்று இலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள். மேலே உள்ள படத்தை பார்க்கவும்.


16.   உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டை தொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோ அல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோ உங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.




***
நன்றி:சட்டபார்வை
***



"வாழ்க வளமுடன்"

13 அக்டோபர், 2011

பழசுக்கு வருது மவுசு :)

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படும் "மால்' கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்' கலாசாரம் தவறில்லைதான்; ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் எழுந்த ஆர்கானிக் கோஷம் இப்போது, இந்தியாவில் பரவி வருகிறது. ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது.

எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்

உப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்பு தான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இது தான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவை தான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்னை தான்.

(பதிவர் கண்ணோட்டம்: இயற்கை நலவாழ்வியல் முறையில் உப்பு பயன்படுத்துவது தேவையற்றது என்று வலியுருத்துப்படுகிறது. அதனால் கல்லுப்போ அல்லது அயோடின் உப்போ எதுவாகிலும் உப்பு தப்பு தான்.)

ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப் போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாக் கெட் உணவு எண்ணெய் தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண் ணெய் இன்னமும் சில இடங் களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண் ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இது தான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி: மூன்றுமே கொழுப்பு சார்ந்தது தான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு , தானியங்கள் தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு தான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

பாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம் தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி,பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக் கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல் தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்: பால் உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்பு சத்து நீக்கப் பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில் தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கது தான். அதிலும் , பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள் தான்.
மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தை பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம்.

இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.


***
நன்றி: தினமலர்
***


"வாழ்க வளமுடன்"

03 அக்டோபர், 2011

குழந்தைகளோடு பயணம் செய்யும் போது...

*

குழந்தையோடு ஊருக்கு வந்த இடத்தில் அவனுக்கு திடீர்னு காய்ச்சல் வந்துடுச்சே" என்று கையை பிசைந்து கொண்டு நிற்காமல் பயணிக்கும்போதே... குழந்தைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் அவசியமான பொருட்களை கையோடு கொண்டு செல்வது நல்லது.


"பீடிங்" பாட்டில் முதல் அவர்களுடைய அன்றாட உணவு வரை கையில் வைத்திருப்பது எந்த நேரத்திலும் கைகொடுக்கும்! இல்லாவிட்டால் அருகில் இருப்பவர்கள், "ஒரு தாய்க்கு இதுகூடவா... ஞாபகமில்லே..." என்று
ஈஸியாக உங்களை குறை சொல்லும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.


முக்கியமாக... பயணத்திற்கான டிக்கெட் முதல் திரும்பி வருவதற்கான டிக்கெட் வரை அனைத்தையும் "புக்" செய்து கொள்வது மிகவும் நல்லது.


பஸ், ரெயில் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு ரெயில் பயணமே பெட்டர். கோடைகால விடுமுறை என்பதால், டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி விடும்.
அதனால் தேவையான டிக்கெட்டுகளை முன்கூட்டியே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். சொந்த காரிலோ அல்லது ரெயிலிலோ செல்வதாக இருந்தாலும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்.



கோடைகாலத்தின் வெயிலின் தாக்கம்

குழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். இதனால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதனால், குழந்தைகளின் உடல்நிலை, வயது
ஆகியவற்றைக் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.

எவ்வளவு தூரம் பயணம் செய்வோம்... எத்தனை நாள் தங்குவோம்? என்று கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல்
முன்னெச்சரிக்கையாக இருங்கள். பஸ்சிலோ அல்லது காரிலோ செல்லும்போது கண்டிப்பாக குழந்தைகள் உடல்ரீதியாக சோர்ந்து விடுவார்கள்.

பயணம் தொடங்குவதற்கு முன்னர், ஒரு லிஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள். அதில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும்; எத்தனை உடைகள் எடுத்து வைக்க என்பதெல்லாம் நினைவில் இருக்கட்டும். ஞாபகம் வரும்போதெல்லாம், ஒரு பேக்கில் அவற்றை எடுத்து வைத்தால் புறப்படும் போது பதட்டப்படவேண்டியதில்லை.


சொந்தமாக வாகனத்தில் சென்றால் லக்கேஜ் பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல்
எடுத்துச் செல்வது அவசியம். சிலர் அழகான "பேக்" வாங்குவார்கள். அதுவே பெரிய லக்கேஜாகி விடும்! லக்கேஜ்கள் எப்போதுமே ரொம்ப சிம்பிளாக இருக்க வேண்டும். உடைகள் விஷயத்தில் இன்னொரு விஷயம் முக்கியம். தெரிந்த... உறவினர்கள் வீட்டுக்கு சென்றால் துவைத்துக் கொள்ளலாம்.


ஆனால் அப்படி துவைக்க முடியாத இடங்களுக்கு செல்லும்போது, அதற்கு தகுந்தாற் போல் கூடுதலான துணிகளை எடுத்துச் செல்லுங்கள். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது... திட்டமிடல் அவசியம். இல்லாவிட்டால் அந்த இடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால்... அவஸ்தைப்பட வேண்டியதுதான்!


பயணத்தின் போது குழந்தைகளுக்கு அலுப்பு ஏற்படாமல், "போர்" அடிக்காமல் இருக்க... சி.டி பிளேயர், டேப் ரிக்கார்டர் ஆகிய சாதனங்களை எடுத்துச் செல்லலாம். அதில்
குழந்தைகளை பாடச் சொல்லி... பேசச் சொல்லலாம்.


இல்லாவிட்டால் அவர்களுக்கு கதை சொல்லலாம். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது கேமரா
எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் புகைப்படம் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல், எந்த இடத்துக்கு சென்றாலும் அங்கே கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும்போதே குழந்தைகளின் ஆர்வத்தை திசை திருப்பி விடுவது நல்லது.

உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் வாங்கி கொடுக்கலாம். ஒரு இடத்துக்கு செல்வதற்கு
முன்னரே அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்குவது நல்லது. இதை நினைவில் வைத்து அந்த இடத்துக்கு செல்லும்போது கண்டிப்பாக குழந்தைகள் அதைப்பற்றி நினைவூட்டுவார்கள்! அதேமாதிரி, வரலாற்று, புராண இடங்களுக்கு
செல்லும்போது அதை ஒரு கதை போல் நினைவுபடுத்துங்கள்.

முக்கியமான நம்பர்கள், முக்கியமான இடம் மற்றும் உதவி நம்பர்களை குறித்து வைத்துக் கொள்வது அவசியம். மேலும் குடும்ப டாக்டரின் செல்போன் நம்பர்கள், அவருடைய மருத்துவமனை போன் நம்பர் என அனைத்தையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எங்கே தங்கினாலும் 2, 3 நாட்களுக்கு தேவையான பழவகைகள், ரொட்டி, பிஸ்கட் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவையெல்லாம் கெட்டு விடாது. முக்கியமாக... சுத்தமான... சுகாதாரமான குடிநீர் அவசியம்.

தங்கும் இடத்தில் பால்கனி மற்றும் தடுப்புச்சுவர்... குழந்தைகளுக்கு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அங்கே லிப்ட்
இருந்தால், அதை குழந்தைகள் ஆபரேட் பண்ணாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் தங்குவதற்கு முன்னர், அங்கே உள்ள டாய்லெட், படுகை அறை, தரை விரிப்புகள் ஆகியவற்றை கவனிக்கவும். சுத்தமில்லாமல் சுகாதாரமற்று இருந்தால்... அவை எளிதாக குழந்தைகளை பாதித்துவிடும். மேலும்
எலக்ட்ரிக் வயர்கள், சாக்கடை திறப்புகள் ஆகியவற்றையும் கவனிக்கவும். கொசு உருவாகும் சீஸன் என்பதால்... கொசு வலையையும் கையோடு எடுத்துச் செல்லவும்.

குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆரோக்கிய உணவுகளையும்
எடுத்துச் செல்லுங்கள். காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கை நீக்கும் மாத்திரைகளையும் பாக்கெட்டில் வைத்திருங்கள்.

ஊருக்கு கிளம்புவதற்கு முன்பே, குடும்ப டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.
ஏதாவது பிரச்சினை என்றாலும் போனிலேயே அதற்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். சிலருக்கு பயணத்தின் போது வாந்தி வரும்.

அதற்கும் நிவாரண மாத்திரைகளை எடுத்துச் செல்லலாம். பயணத்தின் போது அப்படி வாந்தி வந்தால்,
யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காமல் பாலிதீன் கவரில் எடுத்து, வெளியே எறிந்து விடலாம். மேலும், தெர்மா மீட்டர், பேண்டேஜ், மருந்து, மாத்திரைகள்,
ஸ்பூன் ஆகியவற்றை கொண்ட முதலுதவி பெட்டி வைத்திருந்தால் எல்லாவற்றுக்கும் உதவியாக இருக்கும். கோடை காலம் என்பதால் காட்டன் உடைகள் பெஸ்ட். குளிர்ந்த இடங்களுக்கு செல்லும்போது அதற்கு தகுந்த உடைகளை எடுத்துச் செல்லலாம்.

குழந்தைகளுக்கான உடையை உடனே கழுவி சுத்தம் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் கிருமிகள்
தொற்றிக் கொள்ளும். மேலும் அவைகளை உடனே எடுப்பதற்கு வசதியாக கையில் உள்ள பையில் வைத்திருங்கள்.

மெடிக்ளெய்ம் பாலிசி, ஏ.டி.எம். கார்டு என அனைத்தையும் கையில் வைத்திருங்கள். ரெயில் பயணத்தின் போது குழந்தைகளுக்கு டாய்லெட் செல்லும்போது, இன்பெக்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால்... கவனம் அவசியம்.

அதேபோல், மேல் படுக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். மேலும், அடுத்தவர் கொடுக்கும் உணவை சாப்பிடக் கூடாது என்பதை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பயணத்தின்போது, குழந்தைகளுக்கு ஆபரணங்களை அணிய வேண்டாம்.

உங்களுடைய மொபைல் நம்பர், வீட்டு முகவரி ஆகியவற்றை ஒரு கார்டில் எழுதி, குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடையில் உள்ள பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள்.

எங்கேயாவது, தொலைந்து விட்டால்கூட... தன்னுடைய முகவரி, பெற்றோர் குறித்து என்ன பேசுவது?
யாரிடம் போய் சொல்ல வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லிக் கொடுங்கள்.

இப்படி உஷாராக... எச்சரிக்கையாக பயணம் மேற்கொண்டால்... கோடைப்பயணம் ஜாலியாகவே இருக்கும்.


***
thanks usetamil
***



"வாழ்க வளமுடன்"

06 செப்டம்பர், 2011

குக்கர் பற்றிய சில உண்மைகள் :)


பெரும்பாலும் குக்கர் இல்லாத சமையல் கட்டே இருக்காது எனலாம்.


* சமையலை துரிதமாக முடிக்க உதவும் குக்கரை நாம் சிறியது,மீடியம் சைஸ்,பெரியது என்று 3 அளவு வைத்துக்கொண்டால் மிக வசதி.

* சேஃப்டி வால்வ்,காஸ்கட் ரொம்ப முக்கியமான பகுதி,அதனை அடிக்கடி செக் செய்து கொள்ளவேண்டும்.

அவை சரியாக இருந்தால் குக்கர் ஆயுள் நீளம். சேஃப்டி வால்வ்,காஸ்கட் ,வீட்டில் எப்பவும் எக்ஸ்ட்ராவாக ஒன்னு இருக்கனும்.காஸ்கட் எப்பவும் குக்கருடனே இருப்பது தான் நல்லது.சமைக்கும் முன்பு காஸ்கட் சுத்தம் செய்து இழுத்து போடனும்.

* சமைக்கும் உணவு அளவும் குக்கர் அளவும் ஒத்துப்போகவேண்டும்.அதிகமானா உணவை சிறிய குக்கரில் வைத்து வேக வைக்க முயன்றால் ,ஒரு வேலைக்கு இரண்டு வேலை யாகிவிடும்.

தண்ணீர் அளவில் மிக கவனம் தேவை.குக்கரில் வைக்கும் பொருள் கொதி வந்து மூடி வெய்ட் போட்டால் விரைவில் ஆகிவிடும்.வெய்ட் எப்பவும் ஒரே இடத்தில் வைத்து எடுத்து பழக வேண்டும்,அவசரத்திற்கு தேடத்தேவை இருக்காது.

* ஹேண்டில் மிக முக்கியம்,கொஞ்சம் லூஸானால் உடனே டைட் செய்து விட வேண்டும்.சமையல் கட்டில் ஒரு ஸ்க்ரு ட்ரைவர் வைத்துக்கொள்வது நல்லது.இல்லாவிட்டால் ஆட்டம் கண்டு ஹேண்டில் வீணாகிவிடும்.

* குக்கரில் அடியில் தட்டு போட்டு சமைக்கும் போது எலுமிச்சை தோடை அடியில் போட்டு வைத்தால்,கருப்பாக அல்லது வெள்ளையாக படியாது.ஜூஸ் பிழிந்ததை பயன்படுத்தலாம்.

* குக்கர் க்ளீன் செய்ய அதற்குண்டான மெல்லிய கம்பியை பயன்படுத்தினால் எப்பவும் பளிச்சென்று இருக்கும். குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதும்,சுததமும் கூட.எனவே அதனை சரியான முறையில் உபயோகித்து அதன் பயனை அடைவோம்.


***
thanks ஜாஹீதாபானு
***




"வாழ்க வளமுடன்"

20 ஆகஸ்ட், 2011

குக்கரில் உள்ள கறைகள் நீங்க...

*

குக்கரின் உள்ளே கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்த்தால் கறைகள் விட்டுவிடும்.

பயிறு வகைகள் புழுத்து போகாமல் இருக்க...

பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.

வற்றல் குழம்பு சுவையாக இருக்க...

வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப்பொடியும் கலந்தால் சுவையுடன் இருக்கும்.

ரொட்டி காய்ந்து போனால்...

ரொட்டி காய்ந்து போனால் இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தால் புதிய ரொட்டி போல் மிருதுவாக ஆகிவிடும்.

பூண்டை சுலபமாக உரிக்க...

வெங்காயம், பூண்டை தண்ணீரில் தனித்தனியே போட்டு பிறகு உரித்தால் சுலபமாக உரிக்க வரும். கண் எரிச்சல் வராது.

கோதுமையில் பூச்சி வராமல் இருக்க...

கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க...

பக்கோடா செய்யும்போது மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் சேர்த்துப் பாருங்கள். பக்கோடா மொறுமொறுப்பாக இருப்பதோடு ருசியாகவும் இருக்கும்.


***
thanks Mohamed Ali
***



"வாழ்க வளமுடன்"

13 ஆகஸ்ட், 2011

எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?


பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

*

காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


*

அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்


***
thanks Mohamed Ali
***




"வாழ்க வளமுடன்"

25 ஜூலை, 2011

பூச்சிகளற்ற சமையல் அறை- 10 வழிகளில்




மற்ற உயிரினங்களை போல , பூச்சிகளும் தாங்கள் உயிர்வாழ ஏதுவாக, உணவின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் பாங்குடையவை. ஆகையால், பூச்சிகள் வந்த பின்பு அவற்றை ஒழிப்பதைப் பற்றி சிந்திப்பதை விட, அவை வரும் முன்னரே அதற்குண்டான ஆயத்தங்கள் செய்வது ஒரு நல்ல உத்தி ஆகும்.




உங்கள் சமையல் அறையிலிருந்து பூச்சிகளை அகற்ற கீழ்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றலாம் :



1) தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தப்படுத்துவது நல்லது.



2) உபயோகித்த பாத்திரங்களை இரவு முழுதும் "சிங்கில்" போட்டு வைக்க வேண்டாம். முடிந்தவரை, அவைகளை இரவிலேயே கழுவி வைத்துவிடுங்கள்.



3) உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி வையுங்கள். பழைய செய்திதாள்கள், அட்டைபெட்டிகள் மற்றும் காகிதப்பைகளை நீண்ட நாள் வைத்திருப்பதை தவிர்க்கவும்.



4) சமையல் அறையின் அலமாரிகளில் காணப்படும் விரிசல்களை நன்கு அடைத்துவைக்கவேண்டும்.




5) உணவு பொருளையோ, குப்பைகளையோ, திறந்து வைக்காதீர்கள், உயிர் பிழைக்க உணவின்றி தவிக்கும் பூச்சிகள் தாமாகவே நம் வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.




6) மாவு, ஊறுகாய், மற்றும் பருப்பு வகைகளை, நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால், அவற்றில் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு இராது.



7) பூச்சிகளின் இயல்பு உணவிடம் தேடி செல்வதுதான். ஆகையால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்குள் பூச்சிகளின் வருகை இருக்காது.




8) வாரம் ஒரு முறை உங்கள் வீட்டை சோப்பு பயன்படுத்தி கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால், தேவை இல்லாத பூச்சிகளின் தொல்லை இன்றி இருக்கலாம்.




9) ஒரு பஞ்சு உருண்டையை "பெப்பர்மின்ட் எண்ணை" யில் முக்கி எலிகள் வருமிடத்தில் வைத்தால், அவற்றின் வாசனையில், எலிகள் நெருங்காது.




10) "சில்வர்ஃபிஷ்"




"சில்வர்ஃபிஷ்" எனும் இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, அடித்தளங்கள், சமையல் அறை, புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் "லெப்பிஸ்மா சக்காரினா" ஆகும்.




மீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் "சில்வர்ஃபிஷ்" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் "கார்போஹைட்ரேட்டை" உணவாக அருந்தும்.



இவைகள் ஈரப்பதம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப்பெருகும். 75% முதல் 95% சதவிகிதம் ஈரப்பதம் இவை வளர சாதகமான ஒன்றாகும். 1/2 (அ) 1 இன்ச் அளவுகொண்ட "சில்வர்ஃபிஷ்" பூச்சிகள் உலர்ந்த உணவுகள், பசைத்தன்மை மிகுந்து காணப்படும் புத்தகங்கள், சுவரொட்டிகள் போன்ற இடங்களில் உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும்.



பருத்தி, பட்டு, "ஸின்தெட்டிக்" துணிகளையும் இவை அரித்துவிடும். இவ்வாறு வீட்டின் பொருள்களையும், உணவுகளையும் கபளீகரம் செய்வதால் "சில்வர்ஃபிஷ்" இல்லங்களில் கேடு விளைவிக்கும் பூச்சி வகையாக கருதப்படுகின்றன.




"சில்வர்ஃபிஷ்ஷை" ஒழிக்க சில வழிகள்


1) இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.



2) பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.



3) "சில்வர்ஃபிஷ்" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது "டையாட்டம் மண்" தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.




4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது "ப்லாஸ்டிக் டேப்பை" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், "சில்வர்ஃபிஷ்" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.



5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது "டால்கம்" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக இருக்கும்.




6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.




7) துணி அலமாரிகள் மற்றும் "சிங்க்கில்" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.




8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.




இது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்........





***
thanks யாழினி
***




"வாழ்க வளமுடன்"

08 ஜூலை, 2011

ஊட்டச்சத்துக்களை பாதுகாத்தல் & மேம்படுத்துதல்



சமைக்கும் போது சத்துக்களை சேமிப்பதே சத்துக்களை பாதுகாப்பாகும்.

சமையல் தயாரிப்பின் போது சத்துக்கள் வீணாகுவதை குறைப்பதற்கான வழிமுறைகள்:

புத்தம் புதிய உணவுகளை தேர்வு செய்தல்.


காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவ வேண்டும்.


காய்கறிகளை பெரிதாக நறுக்கி வைட்டமின் சத்துக்களை வேகவைக்கும் போது மீட்பதாகும்.


தோலுரிப்பு கருவிக் கொண்டு காய்கறிகளின் தோலை சீவுதல்.


குறைந்த அளவு நீரையே நமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.


காய்கறிகளை பிரஷர் குக்கரை கொண்டு வேக வைக்கவும்.


காய்கறிகளை வேகவைக்கும் போது மூடியிட வேண்டும்.


பரிமாறுவதற்கு சில மணி துளிகளுக்கு முன் காய்கறி கலவையை தயாரிக்க வேண்டும்.


lime juice அல்லது வினிகரை வேகவைக்கும் முன் சேர்த்தால், வைட்டமின் சி இழப்பு நேரிடாது.


உணவு பொருட்களை குளிர்ந்த நிலையில் சேமிக்கவும்.


காய்கறிகளை வேகவைப்பதற்கு சூடு நீரையே பயன்படுத்தவும்.


வேகவைத்தலும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு பயன்படுத்தப்படுத்தும் சமையல் வகை ஆகும்.


தேவைப்பட்டால் காய்கறிகளை சமைத்த நீரை குழம்பு செய்வதற்கு சாஸ் மற்றும் சூப் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.


உணவு பாதுகாப்பை கருதி குறைந்த அளவு நீரையே சமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.


பேக்கிங் சோடா உப்பை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது ஏனெனில் வைட்டமின் சி இழப்பு அதிகம் ஏற்படும்.


செம்பு பாத்திரத்தை சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.


சமைப்பதற்கு முன் பருப்பு வகைகளை உரை வைக்க வேண்டும்.


பருப்பு தண்ணீரை ரசம் அல்லது சாம்பார் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்


***


செறிவூட்டுதல்:( மேம்படுத்துதல் )




உணவு சத்துக்களை சிறப்பான சமையலைக்கொண்டு செய்வதே உணவு செறிவூட்டுவதாகும்

உணவு சத்துக்களை மேம்படுத்தலின் முக்கியத்துவங்கள்:


உடலுக்கேற்ற உணவு சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்தல்.


சிறந்த உணவு வகை மற்றும் தயாரிப்பு மேற்கொள்ளுதல்.


சமச்சீரான உணவை நுகர்தல்.


உணவுகளின் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்துதல்.


விதவிதமான உணவு வகைகளை தயாரித்தல்.


தினசரி உணவு வகைகளை என்னவென்று திட்டமிடுதல்.


உடலில் உள்ள நோய் பற்றாக்குறையை அகற்றுதல்.


நல்ல உணவு பழக்கவழக்கங்களை உருவாக்குதல்.



ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தும் முறைகள்:

இணைத்தல்:

ஊட்டச்சத்துக்களின் தரத்தை மேம்படுத்த பலவகையான உணவுகளை ஒன்றாக்கும் செயல்கூறுகள் ஆகும்.
பலவகையான உணவு வகைகளை ஒன்றாக இணைப்பதே சத்துக்களை எளிய முறையில் உண்ணுவதாகும்.

(எ-டு) பருப்பரிசி.

தானிய வகைகளில் சில அமினோ அமிலங்கள் குறைந்து காணப்படும். ஆனால் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படும். அதே போல் பருப்பு வகைகளில் சிலவகை அமினோ அமிலங்கள் இருக்காது. அவை தானியங்களில் நிறைந்திருக்கும். எனவே இவை இரண்டையும் இணைத்து தயாரிக்கும் உணவுகள் ஊட்டச்சத்துக்கள் மேம்படுத்தும்.



நொதித்தல்:


நொதித்தல் என்பது உணவு வகைகளோடு சில பயன்தரும் நுண்ணுயிர்களை சேர்ப்பதாகும். அவை ஏற்கொனவே உள்ள சத்துக்களை எளிதாக மாற்றி உண்ணுவதற்கு ஏதுவாக்கும். நொதித்தல் இட்லி மாவு அரைத்த பின் பொங்க செய்து இரண்டு மடங்காக்கும்.

(எ-டு) ரொட்டி, தயிர், இட்லி



நன்மைகள்:


உணவு ஜீரணிக்கும் சக்தியை மேம்படுத்தும்.


சில வகை தானியங்கள் பயிறு வகைகளில, தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு சத்துக்கள் மாற்றப்பட்டு உடலுக்கும் எளிதாக உட்கிரப்பதற்கு ஏதுவாக இருக்கும்.


நொதித்த உணவு வகைகள் மிகவும் பஞ்சு போல் மெருதுவாக இருக்கும். எனவே இவற்றை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்பர்.



முளைத்தல்:

பயிறு வகைகளை அல்லது தானியங்களை சிறிது தண்ணீரில் ஊர வைக்கும் போது சிறிய தண்டு வெளியில் காணப்படும். இவையே முளைத்தல் என்பதாகும்.


கோதுமை, பாஜ்ரா, ஜோவர் ஆகியவை முளைவிடும் தானியங்களாகும். பின்பு தானியங்களை நிழலில் உலர்த்தி தவாவில் வாட்ட வேண்டும். பின்பு அரைத்து பல வகை பதார்த்தங்கள் செய்ய உபயோகப்படுத்தலாம். பருப்பு வகைகள் முளைத்தபிறகு வேகவைத்து உண்ணலாம். பொதுவாக 8-16 மணி நேரம் உளறவைத்து சுமார் 12-24 மணிநேரம் கழித்து முறைவிடும்.


நொதித்த பிறகு முளைவிடும் அனைத்து வகை தானியங்களிலும் வைட்டமின் அதிகம் இருக்கும்.



நன்மைகள்:

உணவின் ஜீரண் சக்தியை அதிகரிக்கும்
ஊட்டச்சத்துக்களின் மதிப்பை அதிகரிக்கும்

மூலதனம்: http://www.textbooksonline.tn.nic.in/books/11/nutrition-EM/CHAPTER_2.pdj



***
thanks agritech.tnau.ac.in
***








"வாழ்க வளமுடன்"

சமைக்கும் பொழுது ஊட்டச்சத்துக்கள் இழப்பு



உணவு சமைக்கும் முறை குடும்ப சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகள் சாப்பிடுவதற்கு நல்ல சுவையுடனும் மற்றும் நல்ல தோற்றம் உடையதாக இருக்க வேண்டும்.



உணவு வகையான பழங்கள் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் பச்சையாகவே அல்லது சடைத்தும் உட்கொள்ளலாம். உணவு பொருட்களை வேக வைப்பதே சமையல் எனப்படும்.



சமைப்பதன் குறிக்கோள்:


சமையல் செய்யும்போது உணவுகள் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. 40 டிகிரி வெப்பத்திற்கு வேக வைப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். எனவே உணவுவன நுகர்வதற்காக பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.



தொடர்பு கொண்ட திசுக்கள் கொண்ட இறைச்சி மற்றும் தானிய பருப்பு மற்றும் காய்கறி நார்கள் சமைக்கும் போது மென்மையாக படுகிறது. ஆதலால் ஜீரணிக்கும் கால நேரம் குறைந்து, குடல் பகுதியில் சிறிது எரிச்சல்களே ஏற்படும்.


நுகரும் தன்மை மற்றும் உணவு தரம் சமைப்பதினால் மேம்படுத்தப்படுகின்றன.

(எ-டு) தோற்றம், சுவை, இழைநய, அமைப்பு மற்றும் நறுமணம்.



பல விதமான சமையல் வகைகளை ஒரே பொருளில் இருந்து தயாரிக்கலாம்.

(எ-டு) அரிசியைக் கொண்டு பிரியாணி மற்றும் கீர் தயாரிக்கலாம்.


உணவு நுகரும் தன்மை அதிகரிக்கப்படுகிறது.



சமைக்கும் முறைகள்:


__________________________________________________________

நீர்வெப்பம் - உலர் வெப்பம் - பிணைப்பு
__________________________________________________________

வேகவைத்தல் - வதக்குதல் - நெருப்புக்கலமிடுதல்

புழுங்க வைத்தல் - வறுத்தல் -

அவித்தல் - பொரித்தல் -

குக்கர் கொண்டு
சமைத்தல்


__________________________________________________________

சமைக்கும் பொழுது மின் கடத்தி கதிர்வீச்சு மற்றும் நுண்அலையின் மூலம், வெப்பம் உணவுக்கு பரிமாற்றப்படும்.




***
thanks textbooksonline
***







"வாழ்க வளமுடன்"

06 ஜூலை, 2011

நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க சூப் & ... :)



நம் உடலில் நச்சுப்பொருட்கள் எவ்வாறு சேருகின்றன? சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்து உருவாகும் தூசி, மாசுகள் தவிர நாம் உண்ணும் உணவிலிருந்தும் நம் உடலில் குடிகொள்கின்றன.


நச்சுப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுவதால், ஆரோக்கியம் சீரடைகிறது. ஆயுர்வேதம் தொன்று தொட்டு உடலை விஷப்பொருட்கள் இல்லாமல் வைப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விடுகிறது. அதற்காக சிறந்த சிகிச்சை முறையான “பஞ்சகர்மா” வை உருவாக்கியது.


தவிர சிகிச்சை முறைகளின்றி உணவு முறைகளாலேயே நச்சுப்பொருட்களை விலக்கும் வழிகளையும் ஆயுர்வேதம் சொல்கிறது. நச்சுப்பொருட்களை நீக்குவதால் உடலின் ஜீரணசக்தி மேம்படுகிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகளை உருவாக்கும். அஜீரணம் களையப்படுகிறது.

தவிர அஜீரணம் களைப்பு, பசியின்மை, வாயில் துர்நாற்றம், பிரட்டல் இவற்றையும் உண்டாக்கும். ஆயுர்வேதம் கெடுதலை உண்டாக்கும் வேதிப்பொருட்களை உணவிலிருந்து தவிர்க்கவும். உடலை சுத்திகரிக்கும் உணவுகளையும் பரிந்துரைக்கிறது.


நச்சுப்பொருட்கள் நீங்கினால் உடல், லேசாகி, வலிமை நிறைந்து, நல்ல ஜீரண சக்தியால் சுறுசுறுப்புடன் செயலாற்றும்.
ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். அந்தந்த தோஷங்களுக்கு ஏற்றவாறு, நச்சுப்பொருட்களை நீக்கும் சூப் வகைகளை கீழே தரப்பட்டுள்ளன.


***

வாததோஷத்திற்கேற்ற சூப்:


தேவை

பாஸ்மதி அரிசி – 1/4 கப்
சுத்தமான தண்ணீர் – 6 (அ) 8 கப்
நறுக்கிய கீரை – 1/2 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
நறுக்கிய பீட்ரூட் – 1/4 கப்
துருவிய வெள்ளை முள்ளங்கி – 1 டே.ஸ்பூன்
கருமிளகு பொடி – 1/8 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/8 டீஸ்பூன்
தனியாப்பொடி – 1/8 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
இந்துப்பு (அ) உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை கழுவி நீரை வடிகட்டவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரிலிட்டு கொதிக்க வைக்கவும்.
அரிசி, காய்கறிகள், இஞ்சி, சீரகம், தனியா இவற்றை கொதிக்கும் நீருடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
பாத்திரத்தை மூடி சிறு தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் சமைக்கவும்.

உப்பையும், மிளகையும் சேர்க்கவும்.
ஒரு கரண்டியால் வெந்த காய்கறிகளை பாத்திரத்தின் பக்கவாட்டில் நன்றாக நசுக்கவும்.
வடிகட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.


***

கபதோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்:

தேவை

சுத்தமான தண்ணீர் – 4 – 6 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1/4 கப்
நறுக்கிய பச்சைக்கீரை – 1/2 கப்
கருமிளகு – 6 – 8
இஞ்சி – 1 – 2 சிறு மெல்லிய துண்டுகள்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்தையும் போட்டுக் கலக்கவும்.

கலவையை கொதிக்க வைக்கவும்.

இளந்தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கொதிக்க விடவும்.

நன்கு வெந்த பின் காய்கறிகளை கரண்டியால் நசுக்கவும். வடிகட்டி உபயோகிக்கவும்.



***


பித்ததோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்:


தேவை

பாஸ்மதி அரிசி – 1/4 கப்
சுத்தமான தண்ணீர் – 6 – 8 கப்
நறுக்கிய கீரை – 1/2 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
பெருஞ்சீரகக் கிழங்கு நறுக்கியது – 1/4 கப்
பெருஞ்சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/8 டீஸ்பூன்
தனியாப்பொடி – 1/8 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன்
இந்துப்பு (அ) உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை

அரிசியை கழுவி நீரை வடிகட்டவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரிலிட்டு கொதிக்க வைக்கவும்.
அரிசி, காய்கறி, பெருஞ்சீரகம், சீரகம், தனியா இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இளந்தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கொதிக்க விடவும்.

ஒரு கரண்டியால் வெந்த காய்கறிகளை பாத்திரத்தின் பக்கவாட்டில் நன்றாக நசுக்கவும்.

வடிகட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

***

இதர நச்சு அகற்றும் பொருட்கள்

நச்சு அகற்றும் வாசனை திரவியங்கள் (மசாலா மிக்ஸ்) சில வாசனை திரவியங்கள் உடலிலிருந்து நச்சு அகற்றுவதற்கு மிகவும் உதவுகின்றன.

இந்த மசாலாப் பொடிகளை காய்கறிகளிலும், சூப்புகளிலும் பயன்படுத்தலாம். இவற்றை ஒரு முறை செய்து கொண்டும் தினசரி உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்.


உபயோகிக்கும் முன்

(பருப்பு, காய்கறிகளில்) நெய்யில் வறுக்கவும்.


ஒரு பாகம் மஞ்சள் பொடி,
இரண்டு பாகம் சீரகப் பொடி,
மூன்று பாகம் தனியாப்பொடி,
நான்கு பாகம் பெருஞ்சீரகப்பொடி.


இவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

***


நச்சு அகற்றும் டீ

இவற்றை காலையில் எடுத்துக் கொள்வது நல்லது. அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.


இத்துடன் கால் டீஸ்பூன் சீரகம்,
அரை டீஸ்பூன் தனியா,
அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து பத்து நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.

வடிகட்டி ஒரு தெர்மோ பிளாஸ்கில் ஊற்றி நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.

***

நச்சு அகற்றும் பாகற்காய்

பாகற்காய் உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு சிறந்த காய்கறி. பாகற்காய் சாறு, கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு, தேன் – இவை ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நன்றாகக் கலந்து குடிக்கவும்.



***
thanks உணவு நலம்
***




"வாழ்க வளமுடன்"

05 ஜூலை, 2011

உடல் இளைக்க கொள்ளுப்பால்



இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம்

உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.



முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும். பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும்.



பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.



***
thanks luxinfonew
***




"வாழ்க வளமுடன்"

02 ஜூலை, 2011

பெட்ரோல் விலை உயர்வு -சிக்கன முறைகள்


பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!


வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.


அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.



இரண்டாவது, சிக்கன மாக பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த டிப்ஸ்:

டயர் பராமரிப்பு :

டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.



சிக்னலில் சிக்கனம்:

சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.



ஏர்கன்டிஷன் :

கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.



வேகம் :




வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது நல்லது.


தேவை என்ன?

சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.



ஓவர் லோடு :

தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.



***
நன்றி: மோட்டார் விகடன்.
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "