...

"வாழ்க வளமுடன்"

01 ஜூலை, 2011

நெகடிவ் கலோரிகளை தரும் உணவுகளின் பட்டியல் !!!உணவில் என்ன நெகடிவ், பாசிடிவ் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நெகடிவ் உணவு என்றால் நெகடிவ் கலோரிகளை தரும் உணவுகள். அதாவது நீங்கள் ஒரு உணவுப்பொருளை மென்று, ஜீரணித்து, வளர்சிதை மாற்றத்தால் உட்கிரகித்து, மிகுந்த பகுதியை கழிவாக வெளியேற்ற செலவாகும் கலோரிகளை விட, நீங்கள் உண்ட அந்தப்பொருள் குறைவான கலோரிகளை உடையதாக இருந்தால் அது நெகடிவ் உணவு!


உதாரணம் செலரி. இதில் உள்ளது நீரும், ஜீரணிக்க முடியாத செல்லூலோஸ், கலோரிகளற்ற விட்டமின்களும், தாதுப்பொருட்களும் தான். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். அஸ்பாரகஸ், லெட்டூஸ், புரோக்கலி, முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், ஆப்பிள் முதலியன நெகடிவ் உணவுகளாக சொல்லலாம்.


நெகடிவ் உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. ஆனால் வெறும் நெகடிவ் உணவுகளை உண்டு, எடையை குறைக்க முயற்சிப்பது ஆபத்தானது. ஒரு நாளைக்கு இதர உணவுகளுடன், அதிக அளவில் காய்கறிகளும், பழங்களையும் நிறைந்த பரிமாறல்கள் போதுமானது. பொதுவாக நெகடிவ் உணவுகள் உடலுக்கு நல்லவை. ஆனால் அவையே உணவாகாது.


கலோரி என்றால் என்ன?

கலோரி என்பது சக்தியை அளவிடும் அலகாகும். ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்துவதற்கு தேவையான சக்திதான் கலோரி. அதிக எடை உள்ளவர்களுக்கு தேவையான கலோரிகள் – அவர்களது எடையின் ஒரு கிலோவுக்கு 20 கலோரி வீதம் தேவை.


அதாவது உங்கள் எடை 80 கிலோ இருந்தால், தினசரி கலோரியின் தேவை – 80 ஜ் 20 = 1600 நார்மல் எடை உள்ளவர்கள், அவர்களின் எடையின், கிலோவுக்கு 30 கலோரி தேவை. குறைவான எடை உள்ளவர்களுக்கு அதிக கலோரிகள் தேவை. அவர்களது எடையின் ஒரு கிலோவுக்கு 40 கலோரிகள் தேவை. இந்த அளவுகள் வயதிற்கேட்ப மாறுபடும்.


சமச்சீர் உணவில் இருக்க வேண்டியவை

கார்போஹைடிரேட்
புரதம்
கொழுப்பு

முன்பு சொன்னது போல், நெகடிவ் கலோரி உணவுகளால் உடல் அதிகம் கலோரிகளை செலவிட நேருகிறது. இதனால் உடலின் கொழுப்பு கரையும் வாய்ப்புகள் அதிகம்.


உதாரணமாக ஒரு இனிப்பு 400 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். அதை ஜீரணிக்க 250 கலோரி செலவான பின் மீதி 150 கலோரி உடலில் கொழுப்பாக சேர்ந்து கொள்கிறது. ஆனால் ஒரு துண்டு செலரியை உட்கொண்டால் 5 கலோரி கிடைக்கும். அதை ஜீரணிக்க அதிக கலோரிகள் செலவாகும். இதனால் உடல் எடை குறையும்.


எல்லா உணவுகளிலும் கார்போஹைடிரேட் அல்லது புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், விட்டமின்கள் உள்ளன. நெகடிவ் கலோரி உணவுகளில் உள்ள விட்டமின்கள், தாதுப்பொருட்கள் சில என்ஜைம்களை உருவாக்குகின்றன. இவை இந்த உணவுகளை மட்டுமல்ல, உடலில் உள்ள கலோரிகளையும் சிதைத்து ஜீரணமாக உபயோகப்படுத்துகின்றன.


நெகடிவ் உணவுப் பட்டியல்

பீட்ரூட்
ப்ராக்கோலி
முட்டைக்கோஸ்
கேரட்
காலிஃப்ளவர்

காரமிளகாய்
வெள்ளரிக்காய்
பூண்டு
பீன்ஸ்
லெட்டூஸ்

வெங்காயம்
முள்ளங்கி
பசலைக்கீரை
டர்னிப்
அஸ்பாரகஸ்

செலரி
பழங்கள்
ஆப்பிள்
எலுமிச்சைபழம்
மாம்பழம்

ஆரஞ்சு
பப்பாளி
அன்னாசி
ஸ்டாபெர்ரி
தக்காளி
தர்பூசணி


***
thanks உ ந
***"வாழ்க வளமுடன்"

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? = part -5அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

அதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.


புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.


அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.


ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.


புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.


உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.


கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்


*

மேலும் சில தகவல்கள்


ஆடைத்தெரிவு:

அழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம்.

முடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்.

நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகி விடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாகத் தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம்.

இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது.

மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக் கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம்.

இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.

ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விட வேண்டும்.

பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.

மொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிங்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...!***
thanks panippulam
***


"வாழ்க வளமுடன்"

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? = part -4பொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி?

சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்தமில்லாமல் இருப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.


நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம்.


காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.


சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம்.


குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.


கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள்.
காதோரம் குட்டிக் குட்டித் தோடுகள் அழகாக இருக்கும்.


அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். கழுத்து நீளம் குறைவென்றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும். விழாக்களுக்கு செல்லும்போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்புங்க.


மூக்கு மற்றும் உதடுகளை அழகாக காட்ட

மூக்கு:
நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ளது மூக்கு. அதனை மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம்.


கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும்.

சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும்.


குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.


உதடு:

மனதின் ஜன்னல் கண்கள் என்றால், உதடு அதன் மேடை என்பார்கள். மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள்.


முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.


தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும்.


மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.


மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.
உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது.


காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள்.


ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம். டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும்.

வீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகிவிடும்.
கை, நகம் மற்றும் வளையல்


அழகான கைகளும், நகங்களும் பார்ப்பவர்களை கவரக்கூடியவை. பொதுவாக பெண்கள் முகத்துக்கு காட்டும் அக்கறையை கைகளுக்கு காட்டுவதில்லை.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வயதைக் காட்டினாலும் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள் அதை அதிகப்படுத்திக் காட்டுவதுடன் பெர்சனாலிட்டியையும் குறைத்துக் காட்டும். பாத்திரம் தேய்க்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீர், சோப்பால் கைகள் சொரசொரப்பாக மாறிவிடும். கைகளுக்கு அடிக்கடி ஒயிட் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொள்ளுங்கள். கைகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


நகத்தால் பாட்டில் திறப்பது, நகத்தை கடிப்பது போன்றவை செய்யாதீர்கள். நகங்களை ஒரே சீராக ஓவல் வடிவில் வெட்டுங்கள்.

சல்வாருடன் மேட்சிங்கான மெல்லிய கண்ணாடி வளையல்கள் (ஆறு அல்லது எட்டு) அணியலாம்.


குண்டு விரல்களாக இருந்தால் அணியும் மோதிரங்கள் மெல்லிய கம்பி போன்று இருப்பதும், சிறுகற்கள் கொண்ட நெளிமோதிரமும் அழகு சேர்க்கும்.


குண்டான கைகளுக்கு மெல்லிய வளையல்கள், மெல்லிய ப்ரேஸ்லெட், மெல்லிய ஸ்டிராப் வைத்த வாட்சுகள் மிகவும் அழகாக இருக்கும்.


வர்ண வலையல்களை அணிய விருபுகிறீர்களா?

கலர் கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம்
வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா?


அதை வெள்ளை ரிசூவில் சுற்றி பெட்டியிலே வைத்து பாதுபாதுகாப்பாக வையுங்கள். இதனால் பொருளின்
உபயோகக் காலம் கூடும். மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.


உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம்.


ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும்.
எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.


காலணிகள் வாங்கும் போது

காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத்தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.


அதனால்தான் ஆடை, அணிகலன்களுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல்லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப்புகள் விற்கப்படுகின்றன.


கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் செருப்பு என்பது நமது உள்ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடையதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலுடன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.


இப்போது திருமணம் போன்ற விசேஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங்குவது நல்லது. பொருத்தமான செருப்புகளை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.


செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களைவிட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப்பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.


மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.


பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல்லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணியவும்.

பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப்புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது.


வண்ண வண்ண பைகள்

நவநாகரிக யுகத்தில் நங்கையர் எல்லாம் அங்கமாக ஜொலிக்க தங்கத்தை அணிந்தார்கள். எல்லா அங்கங்களையும் அழகுபடுத்திக் காட்டினாலும் அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம்.

கடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்வதில் குழப்பம் எற்படலாம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்யவே உங்களுக்கு ஒரு குறிப்பு. *கைப்பை வாங்க செல்பவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் என்ன நிறத்தில் கைப்பையை வாங்கப்போகிறீர்கள் என்று வீட்டிலேயே தீர்மானித்து கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்


*கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்யும் போது அது விலைக்கேற்ற தரமுடையதாக உள்ளதா என பார்க்கவேண்டும்.


* நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்கவேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்யவேண்டும். *கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்கவேண்டும். *கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும்.


*கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்கவேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமானஅளவில் இருபக்கமும் கைப்பை தெரியவேண்டும்.


தங்க நகைகளின் உண்மையான பெறுமதி

எட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது கடமை அல்லவா!


நிறத்தையும் பளிச்சென்ற தன்மையையும் பார்த்து ஒருபோதும் தங்கம் வாங்கக்கூடாது. பொலிஷ் மூலம் தங்கத்துக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.மஞ்சள்நிறம் அதிகம் கொண்ட நகைகள் அதிக பெறுமதிமிக்கவை என்று எண்ணி விடாதீர்கள்.வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவதே சிறந்தது. அதற்கு செய்கூலி குறைவு என்பதோடு, விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிக கழிவும் ஏற்படாது.


தங்க நகைகள் வாங்கும் போது பலர் ரசீதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ரசீது இல்லையென்றால் பணம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணி ரசீது வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகிறார்கள். உண்மையில் ரசீது வாங்கினால்தான் பிற்காலத்தில் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். ரசீது வாங்கும் போது நகையின் எடை ,மொடல், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும். கற்கள், முத்துகள் பதித்த நகைகளை வாங்கும் போது அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடைபோல கணக்கிட்டு விடுவார்கள். கற்களுக்கு தனி எடையும் தங்கத்துக்கு தனி எடையும் போடுவதே சரியான தொழில் தர்மம்.


தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.


வழக்கமாக வாங்கும் கடைகளில் தங்கம் வாங்குவது நல்லது. அதனால் நம்பகத்தன்மை கூடும். அதோடு பாதிப்பு ஏதேனும் ஏற்படினும் உடனடி பரிகாரம் காணமுடியும்


***


"வாழ்க வளமுடன்"

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? = part -3நகைகள்:

நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும்.


அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள்.


குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.


குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.


மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும்.


கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.


அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.


சிவப்பு நிறம் உள்ளவர்கள்:

ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.


கறுப்பு நிறம் உள்ளவர்கள்:
வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்!


முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும்.


அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.


முத்து செட்டும் அம்சமாக இருக்கும்.
தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள்.


ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.
பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.


சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம். இது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.


கால்களின் கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.


குண்டான கால்களுக்கு மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு அழகாக இருக்கும்.


நடுத்தரமான கால்களுக்கு மெல்லிய, பட்டையான கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.


மெல்லிய விரலுக்கு பட்டையான சலங்கை வைத்த மெட்டி அழகாக இருக்கும்.


விரல்கள் கொழுகொழுவென்று இருந்தால் மெல்லிய மெட்டிகள் போடலாம். குறிப்பாக இரண்டாவது விரலில் மெட்டி போட்டால் அழகுக் கூடும்

குள்ளமானவர்களுக்கான உடை
புடவை:
கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.


டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.


தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.


காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.


கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.

சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.


இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.


ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.


சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.


குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.


ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.


சுடிதார்:

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.

பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.

நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.


ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.


குண்டாக இருப்பவர்கள்:


ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.


எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.


முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.


ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.


அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.


சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.


மேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.


பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.


காட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே.


ஒல்லியாக இருப்பவர்களுக்கான உடை:

இப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.
பளீர் நிறமாகத் தேர்ந்தெடுங்கள்.


குட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.


ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.


லூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங்களுக்குப் பொருந்தும்.


காட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.


ஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.


ஜீன்ஸ், டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ் ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ் போடலாம்.


கண்களை அழகாக காட்ட

சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதான் ஜீவனையே இழந்துவிடும்.

கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.

குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.


கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.


பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.


விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.


கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்


முக அழகிற்கு தகுந்த மாதிரி புருவத்தை மாற்ற
முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.
குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.


நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.


ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.


அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.


புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.


சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.


புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.


கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.


வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.


நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.


நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.


வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.


உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.***

"வாழ்க வளமுடன்"

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? = part -2


பிளவுஸ்:

ஒல்லியானவர்கள் ஹை காலர் நெக் அல்லது பின்புறம் க்ளோஸாக வந்து முன்புறம் பாட் நெக் அல்லது யு-நெக் மாதிரி தைத்துக் கொண்டால் பொருத்தம். பாதி காலர் நெக் என்றால் முன்பக்கம் யு, ப வடிவில் தைத்துக் கொள்ளலாம். ரொம்ப லோ நெக் வேண்டாம். எலும்பு துருத்திக் கொண்டு, மேலும் உங்களை ஒல்லியாகக் காட்டும்.


கை மட்டும் ஒல்லியாக இருப்பவர்கள் கஃப் ஸ்லீவ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். கை சற்று குண்டாகக் காண்பிக்கும். கழுத்தின் முன் அல்லது பின்புறம் டிசைன் வைத்த பிளவுஸ் தைத்துக் கொள்ளலாம்.

சற்று சதைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு லோ நெக் அழகாக இருக்கும். பிளவுஸ் முழுக்கை, முக்கால் கை, நடுத்தர கை எல்லாமே உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்லீவ் லெஸ், ஷார்ட் ஸ்லீவ், மெகா ஸ்லீவ் ஓகே. ஷார்ட் ஸ்லீவ் சற்று லூசாக தையுங்கள்.

குச்சி போல கை உள்ளவர்கள் ஷார்ட் ஸ்லீவ் அணிய வேண்டாம். அகல ஜரிகை, ரெட்டை பேட்டு ஜரிகை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கேற்ப தைத்துக் கொள்ளலாம்.


ப்ளைய்ன் பிளவுஸூக்கு கையில் மட்டும் லேஸ் வைத்து தையுங்கள். பிளவுஸின் உயரம் உங்கள் புடவையின் உயரத்திலிருந்து 4 இன்ச் வரை இருக்கலாம். டிசைன் பிளவுஸில் ஜரிகை, ஜம்கி, மணி போன்றவை வைத்து தைத்தால் மேலும் அழகூட்டும். சற்றே புடவையை இறக்கிக் கட்டினாலும் அழகாகவே இருக்கும்.


உயரமானவர்கள்

சுடிதார் டாப்ஸை சற்று இறக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை சற்ற குறைத்து காண்பிக்கும்.
லைட் கலரில் திக்கான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.


நிறைய பூக்கள் வைத்த டாப்ஸ் லைனிங் கொடுத்த லேஸ் கமீஸ், ஜரிகை வைத்து தைத்த பட்டு கமீஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

டாப்ஸின் சைடு டீப் ஸ்லிட் அற்புதமாக பொருந்தும்.


கழுத்து, தோளின் இருபக்கங்களிலும், ஸ்லிட்டின் ஓரத்திலும் லேஸ், ஜரிகை, ஜம்கி எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து தைக்கலாம்.

முன் பக்கம் அகலமான ஜரிகை, அடர்த்தியான எம்ப்ராய்டரி இடுப்புவரை வருமாறு தைத்து போடலாம்.


நல்ல கான்ட்ராஸ்ட் கலராக பார்த்து அணியலாம். கருப்பு-ஆரஞ்ச், அரக்கு-மஞ்சள் போன்ற பளீர் கலர்கள் எடுப்பாக இருக்கும்.
முழு கை, முக்கால் கை உங்களுக்கு மிக அழகாக இருக்கும்.


டார்க் நிறத்தில் கான்ட்ராஸ்ட் பார்டர், குறுக்கு கோடுகள் உள்ள சல்வார் உங்களுக்கு பொருந்தும்.

துப்பட்டா:

ஷிபான் துப்பட்டாவை கழுத்தோடு அல்லது கழுத்தை சுற்றி போட்டு கொள்ளுங்கள்.

ஸ்டார்ச் துப்பட்டாவை ஒரு பக்கமாக தோளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொள்ளலாம்.

***

பிரா - அறிய வேண்டிய உண்மைகள்.

பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.


திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.


அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுதத்தும்?


இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.


முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...


டி-சர்ட் பிரா:

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.


டீன்-ஏஜ் பிரா:

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.புல் போர்ட் பிரா

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.


நாவல்டி பிரா:

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.


ஸ்போர்ட்ஸ் பிரா:

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.


மெட்டர்னிட்டி பிரா:

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.


நர்சிங் பிரா:

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.


கன்வர்டபுள் பிரா:

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.


அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாக காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவுகள் பிராக்கள்...


மினி மைஸர்:

இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.


பேடட் பிரா:

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா:

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா:

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.


கியூட் வெட்டிங் பிரா:

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.


மெசக்டமி பிரா:

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...

கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?


பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.


கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?
பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?
பதில்: நிச்சயம் அணியக்கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.

கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?
பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?
பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?
பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

***"வாழ்க வளமுடன்"

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? = part - 1சாறி கட்டுமுன் கவனத்தில் கொள்ளவும்


1. சில சாறிகளில் உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்றப் பக்கம் மங்கலாக இருக்கும். இதனை அவதானித்துக் கொள்ளவும்.


2. சாறியின் ஒரு முனையில் முகதலையும் மறுமுனையில் சில சாறிகளில் சட்டைக்கான துணியும் இருக்கும். சட்டை தைப்பதற்கான் துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் கூடியதாக இருக்கும்.

3. சாறி கட்டுவதற்கு முன் அதனை அயன் செய்து கொள்ளுங்கள்.

சாறி கட்டுவது எப்படி?

சாறி பல விதமாக கட்டுகிறார்கள். ஆனால் பொதுவான ஒரு முறை பற்றி இங்கே விளக்கம் தரப்படுகின்றது.


சாறியின் வெளிப்பக்கம்(அழகான பக்கம்) வெளியே தெரியக்கூடியதாக, சாறியின் முகதலை அற்ற முனையைப் வலது கையால் பிடித்து (அகலமான கரை கீழே இருக்கக் கூடியதாக) மேல் கரைத்தலப்பில் இரண்டு மூன்றுமுறை கொய்து சிறிய மடிப்புகள் மடித்து அதனை கட்டியிருக்கும் உள்பாவாடைக்குள் வலது பக்க இடுப்போரமாக செருகுங்கள். (செருகும்போது சாறியின் கீழ் உயரத்தை அவதானித்துக் கொள்ளுங்கள்) அனேகமானோர் நுனியில் ஒரு சிறு முடிச்சுப் போட்டு அதனைச் செருகுவர்.

2. அதன்பின் சாறியின் மேல்கரைப் பகுதியை சுருக்கிப் பிடித்து இடப்பக்கமாக எடுத்து உடம்பை ஒருமுறை சுற்றியபின் சாறியின் மேல்கரையைப் பிடித்து திரும்பவும் வலது வயிற்ரடியில் உள்பாடைக்குள் இறுக்கமாகச் செருகுங்கள். சாறியின் உயரத்தைக் கவனித்து அதற்கு ஏற்றாப்போல் உயர்த்தியோ இறக்கியோ செருகி விடுங்கள். இப்போது உடம்பைச் சுற்றிய சாறியின் மேல் விளிம்பு பாவாடைக்கு மேல் தெரியலாம். அவற்றையும் உடம்பைச் சுற்றிவர பாவாடைக்குள் செருகி விடுங்கள்.

3. இப்போது மிகுதியாக இருக்கும் சாறியை திரும்பவும் இடது பக்கமாகச் எடுத்து உடம்பை மீண்டும் ஒருமுறை சுற்றி இடது தோழின்மீது போட்டுவிடுங்கள். இம் நிலையில் நீங்கள் விரும்பும் உயரத்தில் தாவணி தொங்கக் கூடியதாக உயரத்தை (உயரமாகவோ, பதிவாகவோ) சரிசெய்து கொள்ளுங்கள்.

இப்போது சேலையின் முன் பக்கத்தில் சேலையின் ஒரு பகுதி தொய்வாக தொங்கிக்கொண்டு இருக்கும். அதில்தான் கொய்யகம் அமைக்க வேண்டும். சேலையை முதல் சுற்று சுற்றி இடுப்பில் செருகிய இடத்தில் இருந்து சுமார் நான்கு விரல்கள் அகலத்திற்கு மடிப்புகளாக மடித்து (தொய்ந்த சாறி இறுக்கமாகும்வரை) கொய்து கொண்டு அதனை வலது பக்க வயிறரடியில் முதல் செருகிய இடத்தில் ஒழுங்காகாகவும் இறுக்கமாகவும், கரைகள் வெளியில் தெரியாதபடி, முழுமடிப்பும் உள்ளே ஒழுங்காக இருக்கக்கூடியதாக செருகுங்கள்.(இல்லையேல் அவ்விடம் முன்னுக்கு தள்ளி அசிங்கமாக இருக்கும்).


இப்போது கொய்து செருகிய இடத்தில் இருந்து மேல்கரையை உடம்பைச் சுற்றி அணைத்துப் பிடித்து (நெஞ்சை மறைத்து) கொஞ்சம் இறுக்கமாக தோழ்மூட்டடியில் வைத்து ப்ளவ்சுடன் பின் செய்து விடுங்கள்

இப்போது சாறியின் கீழ்க்கரை சுற்று ஒழுங்காக இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில் ஒருபக்கம் உயர்ந்தும் பதிந்தும் காணப்படும். அப்போது கரையைக் கொஞ்சம் கீழ் இழுத்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவது சுற்றில் பின்பக்கச் சாறி வலதுபக்கமாக உயந்து சென்று வலது கமக்கட்டுக்குக் கீழால் நெஞ்சை மூடிக்கொண்டு இடது தோழ்மூட்டுவரை சென்றிருக்கும். இந்த நிலையில் இளம் பெண்கள் தாவணியயை பின்னால் தொங்க விடாது இடது கையில் முழங்கையில் ஏந்தி பரவி விட்டு பிடித்திருப்பார்கள்.

வயது வந்தோர் தாவணியின் மேல்கரை தோழின் உட்பகுதியிலும், கீழ்க்கரை மேற்பக்கமாகவும் வருமாறு மடித்து ப்ளவ்சுடன் பின் பண்ணி பின்னால் தொங்க விடுவார்கள். இவ்வாறு செய்யும்போது சாறியின் மேற்கரை நெஞ்சின் உள்பக்கத்தில் மறைக்கப்பட்டுவிடும்.

அத்துடன் கொய்து முன்னுக்ககு செருகப்பெற்ற மடிப்புகள் ஒழுங்காகவும், நீற்ராகவும் இருக்கின்றனவா என பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள். அவற்றின் மடிப்புகள் விலகாது இருப்பதற்காக மடிப்புகளின் உள்புறமாக ஒரு சேவ்ரி பின்னால் வெளியே தெரியாதபடி பின் செய்து கொள்ளுங்கள்.

முன்னால் எடுத்து இடது தோழில் இடப்பெற்ற (தாவணியை) முகதலையை எடுத்து கீழ்க் கரை மேல் பக்கமாக இருக்கக் கூடியதாக் சுமார் ஒரு சாண் அகலத்தில் அடுக்காக மடித்து விட்டு இரண்டு மூன்று இடத்தில் விலகாது இருக்க பின் செய்யுங்கள்.

இப்போது தாவணியை இடது தோழில் போட்டு கீழே தூங்கும் உயரத்தை சரிசெய்யுங்கள்.

தாவணி சரியாக அமைந்தால் மடிக்கப் பெற்ற தாவணியை தோழ்ப்பகுதியில் வைத்து ப்ளவ்சின் உள்பகுதியின் கீழ் ஊசியைக் குடுத்தி வெளியே ஊசி தெரியாதபடி பின்பண்ணி விடுங்கள்.

தோழில் பின் செய்யப்பெற்ற மடிப்புகளுக்கு ஏற்றவாறு நெஞ்சுப் பகுதியில் இருக்கும் சாறியின் சுருக்கங்கள் ஒழுங்காக உள்ளனவா என்பதனையும் கவனித்து கொள்ளுங்கள். ப்ளவ்சோடு அமைந்திருக்கும் மடிப்பு விலகாது இருப்பதற்காக ப்ளவ்சின் நெஞ்சுப்பகுதில் உள்பக்கமாக பின் செய்து விடுங்கள். கீழே உள்ள படங்கள் சிலவற்றில் மேல்கரை வெளியே தெரிவதையும் மற்றையவற்றில் கீழ்க்கரை வெளியே தெரிவதையும் அவதானிக்கலாம்.

குறிப்பு:
சாறி கட்டுவதற்கு முன் அதனை உடம்பில் சுற்றி அளவிட்டு மடிப்புகள் வரும் இடங்களை குறிப்பெடுத்து அவ்விடங்களில் முன் கூட்டியே பின்பண்ணி வைத்தால் சாறி கட்டுவது சுலபமாக இருக்கும்.

முகதலைப்பகுதியை மடிக்கும்போது முகதலை விளிம்புகள் ஒழுங்காக இருக்குமாறு பாத்து மடித்து மூன்று நான்கு இடங்களில் பின்பண்ணி வைத்திருங்கள். சாறி கட்டியபின் தேவையில்லாதவற்றைக் கழற்றிவிடலாம்.


*

ஆள் பாதி... ஆடை பாதி என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

கோடைகாலம் பிறந்தாச்சு கொண்ட்டாட்டங்களுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் குறைவே இல்லை. தங்கள் அழகை எடுப்பாக காட்ட இதுதான் நல்ல சந்தற்பம் என சொப்பிங் செல்லும் பெண்கள் கூட்டம். இதுவே நாட்டு நடப்பகிவிட்டது.

சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.

அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது.

சிறிய போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.

உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.

நல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக, ஒல்லியாக இருந்தால் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். கடும் நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.

அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது. டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.

மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.

குட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.

காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.

பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.

சீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி?
இப்போதெல்லாம் குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.***வெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:

பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.


காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.


ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.
வெயில் காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.


ஆண்களுக்கு காட்டன் வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட், சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.


காட்டன் குர்தா, பைஜாமாவும் பொருத்தமாக இருக்கும்.


***உயரமானவர்களுக்கான உடை அலங்காரங்கள்


புடவை:பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.


அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.


பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.


பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.


பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.


***

"வாழ்க வளமுடன்"

வேர்க்கடலையின் சில மருத்துவ தகவல்கள்எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.

சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம்.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

பின்குறிப்பு :

வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கேளாறுகள் ஏற்படும். நீரிழிவுநோய், மேக நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

***

மாணவர்களுக்கு வேர்க்கடலை அவசியம்!


வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.


மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.


நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.


மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.

இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.

வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.


***
நன்றி : தினத்தந்தி
***"வாழ்க வளமுடன்"

திட்டமிடுதலும், செயல்படுதலும் இணைந்தால்தான் வெற்றிஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!


”வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர்களாகவே இருப்பார்கள்”.


இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை! “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்?

ஆனால், இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், சொல்லில் வராத செய்தி ஒன்று புதைந்திருக்கிறது! என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்?

செக்கு மாட்டிற்கும் வண்டி மாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்? இரண்டு மாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன; இது ஒற்றுமை. என்ன நடந்தாலும், செக்கு மாடு, இருக்கும் இடத்தை விட்டு ஓர் அடிகூட முன்னேறுவதில்லை! ஆனால் வண்டிமாடு கிளம்பின இடமும் போய்ச் சேரும் இடமும் வெவ்வேறு. இது வேற்றுமை.

நடந்துகொண்டே இருப்பதாலேயே, முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்பது பொருளில்லை. உடற்பயிற்சிக் கூடங்களிலும், உடல் தகுதி காணும் சில மருத்துவமனைகளிலும், ஒரு நடைக்கருவி (Treadmill) வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சிலர் அதில் நடப்பார்கள். சிலர் வேகமாக மூச்சிரைக்க, வேர்வை வழிய ஓடுவார்கள். ஆனால் ஓர் அங்குலம்கூட முன்னே செல்ல மாட்டார்கள்.

இது உடற்பயிற்சிக்குப் பொருந்தும். வாழ்க்கைக்குப் பொருந்துமா? நடப்பதன் நோக்கமே ஓர் இடம் விட்டு வேறு இடம் போக வேண்டும் என்பதுதானே? “இங்கிருந்து கிளம்புகிறேன்; இந்த இடத்தை அடைவேன்” என்ற தெளிவுடன் நடப்பவனே, குறித்த இடத்தை விரைவில் அடைகிறான். தெருத் தெருவாக நடந்து கொண்டே இருந்தால் பயன் உண்டா? ‘பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது’ என்றார் கண்ணதாசன்.

இது உழைப்புக்கும் பொருந்தும். ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!

உழைப்பின்றி ‘இப்படிச் செய்ய வேண்டும்! அப்படிச் செய்யவேண்டும் என்பவர்களை ‘வாய்ச்சவடால்’ பேர்வழி என்கிறோம். ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியதைப்போல’ என்ற பழமொழியும் இவர்களைக் குறிக்கிறது. உழைப்பில்லாத திட்டமிடல் வெறும் வீண் பேச்சுதான். ஆனால் திட்டமிடாத உழைப்பு?

‘விழலுக்கு இறைத்த நீர்’ என்ற பழமொழி இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால், இறைக்கும் நீர், எங்கே போய்ச் சேர வேண்டுமோ, அதை நோக்கிப் பாயவேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்?

திட்டமிடுதலும், செயல்படுதலும் இணைந்தால்தான் வெற்றியின் வாசல் தென்படுகிறது. நாட்டின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கு ஆணையம் (Planning commission) வைத்திருக்கிறது அரசு. திட்டமிடல் என்பதுதான் வேர். செயல்படல் என்பது, கிளைபரப்பி தளிர் விட்டு மலர் தருவது! வேரின்றி அமையாது மரம்!

ஓர் இராணுவத்திற்கு வெற்றி எதிரிகளைத் தாக்குதலால் மட்டும் வருவதில்லை! தாக்குதல் நடத்தப்போகும் நேரத்தையும், முறைகளையும், வேகத்தையும் திட்டமிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால்தான் வெற்றி சாத்தியமாகிறது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் தொடங்கி, பெரும் நிறுவனம் நடத்தும் முதலாளி வரை, திட்டமிட்டு செயல்படுபவரே வெற்றி பெறுகிறார்கள்.

ஒருமுறை தோற்றவர், மறுமுறை வெல்வதற்கான முதற்காரணம், எப்போதும் திட்டமிடுதலாகவே இருக்கிறது. இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் ஹிலாரி என்னும் செய்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடவில்லை என்பதே அது.

மலையேற முடியாமல் திரும்பிய போது, எட்மண்ட் ஹிலாரி சொன்ன சொற்கள் மிக உயர்ந்தவை. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி அவர் சொன்னார்: “உன்னை நான் கண்டிப்பாக வெல்வேன்; உன் சிகரத்தில் நான் கால் பதிப்பது உறுதி. காரணம், உனக்கு இதற்கு மேல் வளர்ச்சியில்லை. அது நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் இன்னும் முயல்வேன்; வளர்வேன்”.

மலையேறுதல் என்னும் அவரது செயலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடுமையான பயிற்சி உட்பட அனைத்தும் திட்டமிட்டு செயல்பட்டபோது, அந்த செயலுக்குரிய பலன் எட்மண்ட் ஹிலாரிக்கு கிடைத்து விட்டது.

உலகத்தையே வெல்வதற்கு வழி சொல்லவில்லையா நம் வள்ளுவன்?

‘ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்’

செயல்பட வேண்டிய காலத்தையும், செயல்பட வேண்டிய இடத்தையும் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுபவர்கள் எதைப் பெற விரும்புகிறார்களோ அதைப் பெற்றுவிடுகிறார்கள்!

‘திட்டமிடல்’ என்பதும் வறட்டுத்தனமாக இருந்து பயனில்லை. அறிவினாலும், அனுபவத்தினாலும் தீட்டப்பட்டதாக அது இருக்க வேண்டும். வள்ளுவனே அதற்கும் வழிகாட்டி விடுகிறான்.

'வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்'

செய்ய விரும்பும் செயலின் தன்மையையும் அதைச் செய்து முடிக்கத்தேவையான ஆற்றலையும் முதலில் அறிந்து கொள்ளல்; செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் ஏற்கனவே உள்ளதா - இல்லை, இன்னும் பெருக்கிக்கொள்ள வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்ளல்.

செயலை நாம் செய்து முடிக்க நமக்குச் சவாலாக இருப்பவர் எவர் என்றும் அவரது ஆற்றலின் அளவு என்ன? என்றும் தெரிந்து கொள்ளல்; அவருக்குத் துணையாக எவரேனும் வருவரா என்பதையும் வருபவரின் ஆற்றல் என்ன? என்பதையும் ஆய்ந்து கொள்ளல்; நமக்குத் துணையாக செயல்பட எவரேனும் உள்ளனரா என்பதையும் அவரின் ஆற்றலையும் புரிந்து கொள்ளல்!

எச்செயலை செய்வதற்கும் திட்டமிடல் என்பது அளவுக்கு கூர்மைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விளக்கவே வள்ளுவன் இவ்வாறு அடுக்கிக்கொண்டு செல்கிறான்.

“ஒரு மரத்தை வெட்டுவதற்கு 45 மணித்துளிகள் நேரம் தந்தால், அதில் முதல் 40 மணித் துளிகளை ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தவே செலவிட வேண்டும்” என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?

"30 நிமிட மேடைப்பேச்சை 5 நிமிடங்களில் நான் தயாரித்து விடுவேன். ஆனால் 5 நிமிட மேடைப்பேச்சினை தயாரிக்க எனக்கு 30 நிமிடங்கள் வேண்டும்” என்றார் மிகச் சிறந்த பேச்சாளரான சர்ச்சில்.

மிகச்சரியாகவும் கூர்மையாகவும் திட்டமிடுதலே சிக்கல்கள் வராமல் தடுக்கின்றன; எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கவும் வைக்கின்றன.

‘வாழ்க்கை ஒரு மிக மோசமான ஆசிரியர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாடம் நடத்தி, தேர்வு வைத்து அதில் தேர்ச்சியடையவில்லை என்றால், ஆசிரியர் தண்டனை தருவார். வாழ்க்கையோ முதலில் தேர்வு நடத்தி, தண்டனை வழங்கிவிட்டு அதிலிருந்து ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது.

திட்டமிட்டு படிக்காத மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை தருகிறார். திட்டமிட்டு செயல்படாதவனுக்கு வாழ்க்கையே தண்டனையாகி விடுகிறது.

‘வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றங்கள்கூட நடத்தப்படுகின்றன. விடை மிக எளிதானது. வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர் களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

மலர்ப் பாதையாக வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது சலிப்பினைத் தந்துவிடும்.

அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான். திட்டமிட்டு செயல்படுபவனே, வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்.

திட்டமிடுவது என்பது மிகப்பெரிய வேலை என்றும், நம்மால் அது முடியாது என்றும் எண்ணத் தேவையில்லை. எல்லோருக்குமே திட்டமிடல் என்பது ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது.

காலையில் உடற்பயிற்சிக்கோ அல்லது நடைப்பயிற்சிக்கோ நாம் அணியும் உடை வேறு. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடை வேறு. ஒரு நேர்காணலுக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவல் தொடர்பாகவோ வெளியே செல்லும்போது அணியும் உடை வேறு. மறந்தும் கூட ஓரிடத்து உடையைப் பிற இடத்துக்கு நாம் அணிவதில்லை. பழக்கத்தில் நமக்குள் குடியேறிவிட்ட ஒரு சிறு அளவிலான திட்டமிடல்தான் அது.

நம்முடைய ஒவ்வொரு சொல்லும் அதை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

சற்று முனைப்பு இருந்தால் இந்த பழக்கம் எளிதில் கைகூடும். வெற்றி இலக்கும் எளிதாகும்.

‘தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அனந்தாள்’ என்று கைகேயியைக் கம்பன் குறிப்பதுபோல, திட்டமிட்டே கெடுதல் செய்பவர்கள் உண்டென்றால், நம்மால் திட்டமிட்டு நற்செயல்கள் செய்யமுடியாதா என்ன?

வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

- வழக்கறிஞர் த. இராமலிங்கம்


***
thanks வழக்கறிஞர்
***"வாழ்க வளமுடன்"

அர்ப்பணிப்பு... சேவை... லட்சியம்: இன்று டாக்டர்கள் தினம்நாம் உயிர்வாழ்வதற்கு, டாக்டர்களின் பணி அவசியம். தன்னலம் கருதாமல், சேவை செய்யும் இவர்களது பணி விலைமதிப்பற்றது. டாக்டர்களின் சேவைகளுக்கு நோயாளிகள் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மருத்துவத்துறைக்கு டாக்டர்கள் தங்களது அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையிலும் டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினம் அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மார்ச் 30ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது.


மேற்குவங்கத்தின் இரண்டாவதுமுதல்வராக பதவிவகித்தவர் மறைந்த டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராகமட்டு மல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். ஏழை மக்களுக்காக பல்வேறு மருத்துவமனை களை தொடங்கினார். இவரது சேவைகளை போற்றும் வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை 1ல் டாக்டர்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. இவருக்கு 1961ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் மருத்துவம்,அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு "பி.சி.ராய் தேசியவிருது' வழங்கப்படுகிறது. லட்சியம் பெரும்பாலான மாணவர்களிடம், "நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்' என கேட்டால், "டாக்டர் அல்லது இன்ஜினியராக வருவேத லட்சியம்,' என கூறுவார்கள். ஆனால் அவர் களது லட்சியம் நிறைவேறு கிறதா என பார்த்தால் சந்தேகமே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மருத்துவ படிப்புகளுக்கான அரசு இடங்கள் குறைவு. எனவே நல்ல மதிப்பெண்கள் பெற்றும், பின்தங்கிய மாணவர்களால் மருத்துவ படிப்பை தொடர முடிவதில்லை. இதனால் டாக்டர்கள் அதிகளவில் உருவாவது தடைபடு கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அரசு இடங்களை அதிகரித் தால், டாக்டராக அதிகள விலான மாணவர்கள் உருவாக முடியும்.


மனிதாபிமானம்:

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். டாக்டர்கள் தங்களது பொறுப்புணர்ந்து, பணத்தை மட்டும் குறிக்கோளாகக்கொண்டு சிகிச்சையளிக்காமல், மனிதாபிமானத்தோடு சிகிச்சையளிக்க முன்வர வேண்டும்.

ஏழையின் சிகிச்சையில் "இறைவனை' காணலாம்:

அர்ப்பணிப்பு டாக்டர்களின் "அனுபவங்கள்'

காலைத் தூக்கம் கலைந்து, கண்விழித்து பார்க்கும் காட்சி நல்லதாக, இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு. இதில் டாக்டர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. பாதி தூக்கத்தில் எழுப்பினாலும் கோபமின்றி, ரத்தத்துடன் வலியால் அலறும் நோயாளியைக் கண்டு பதட்டப்படாமல் சிகிச்சை அளிப்பது தெய்வ இயல்பு. பொறுமையான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தை, அன்பான சிகிச்சையினால், இறைவனுக்கு அடுத்த நிலையில், டாக்டர்களை போற்றி வணங்குகிறோம். இன்று உலக டாக்டர்கள் தினம். தங்கள் பணியின் அர்ப்பணிப்பு அனுபவங்களை நினைவு கூறுகின்றனர், சில டாக்டர்கள்.


*

ஜி.துரைராஜ் (இருதய நோய் நிபுணர், மதுரை):

1976ல் பொதுமருத்துவராக பணியை துவங்கினேன். 1996 முதல் இருதய நோய் நிபுணராக உள்ளேன். இருதய நோய்க்கு சிறப்பு பயிற்சி பெற்ற பின், நான் சந்தித்த முதல் நோயாளியே சிக்கலான சூழ்நிலையில் இருந்தார். கையில் இ.சி.ஜி., குறிப்பை கொண்டு வந்திருந்தார். இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்த அடுத்த நொடி, அந்த 25 வயது இளைஞரின் நிலை மோசமாகி விட்டது. உடனடி மருத்துவ உதவி செய்து, உயிரைக் காப்பாற்றினேன். அவருக்கு வந்த இருதய நோய் கடுமையாக இருந்தது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக சொன்னபோது, அதிர்ந்து விட்டேன். அவரது உடல்நிலையை எடுத்துச் சொன்ன போது, பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, திருமணமும் செய்து நலமாக உள்ளார். பெரும்பாலானோர் இருதயவலியை, வாயு தொந்தரவாக நினைத்து கவனிக்காமல் விடுகின்றனர். வாயு தொந்தரவில் வலி அப்படியே இருக்கும் அல்லது குறையும். இருதய வலியில் தொடர்ந்து அதிகரிக்கும். அதிகமாக வியர்க்கும்.

*

இளங்கோ முனியப்பன் (பொது மருத்துவ டாக்டர், திண்டுக்கல்):

15 ஆண்டுகளாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறேன். சென்ற வாரம் கட்டுவிரியன் பாம்பு கடித்த இளைஞரை பேச்சு, மூச்சில்லாமல் அழைத்து வந்தனர் உறவினர்கள். வாலிபர் இறந்து விட்டதாக நினைத்து, கதறி அழுதனர். உடனடியாக மருந்தை செலுத்தி, செயற்கை சுவாசம் கொடுத்து இரண்டு நாட்கள் பேச்சு இல்லாமல் இருந்த வாலிபரை காப்பாற்றினேன். நலம் பெற்று கண்ணீர் மல்க என்னை வணங்கிய போது, நான் பிறவிப்பயன் பெற்றதாக நினைத்தேன். மற்ற தொழிலுக்கு நேர எல்லை உண்டு. டாக்டர் தொழிலுக்கு மட்டும் உயிர்களை காப்பாற்ற நேரம் காலம் கிடையாது. ஒவ்வொரு நிமிடமும் போராட வேண்டும். இதற்கு நான் எப்போதும் தயாராக இருப்பேன்.

*

எஸ்.கேசவன் (கண் மருத்துவர், தேனி):

29 ஆண்டுகளாக பொதுமருத்துவத்திலும், கண் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாகின்றன. தேனியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி, பார்வையிழந்த நிலையில், தள்ளாடியபடி என்னிடம் வந்தார். அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க செய்தேன். அதன் பிறகு நடந்த சுதந்திர தினவிழாவில், பங்கேற்க அவர் வந்ததை கண்டு, மனம் நெகிழ்ந்தேன். 2006ல் எனது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இக்கட்டான நிலையில், டாக்டர் என்ற முறையில் அவசரமாக செயல்பட்டு நின்ற நாடித்துடிப்பை மீட்டு, காப்பாற்றியது மறக்க முடியாத சம்பவம்.

*

ஆர்.பாத்திமா (மகப்பேறு நிபுணர், ராமநாதபுரம்):

கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஏழைகளிடம் சிகிச்சைக்கு பணம் வாங்குவதில்லை. கர்ப்பப்பையில் கட்டியுடன் வந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தேன். தொப்புள் கொடி சுற்றிய நிலையில், குழந்தை வெளியே வர அப்பெண் மிகவும் சிரமப்பட்டார். நெருக்கடியான நேரத்தில் ஒருவழியாக குழந்தையை உயிருடன் மீட்டேன். தாயும், சேயும் அதன்பின் நன்றாகி விட்டனர். எதிர்காலத்தில் ராமநாதபுரத்தில் அனைத்து நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையிலான மருத்துவமனையை உருவாக்கி, குறைந்த செலவில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

*

எஸ்.சபரிராஜா (குழந்தைகள் நல சிறப்பு நிபுணர், சிவகங்கை):

டாக்டர் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் உண்டு. கிளினிக்கில் இருந்த போது, ஒரு வயது குழந்தை அருகில் இருந்த பூச்சி மருந்தை அறியாமல் குடித்திருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். அக்குழந்தையின் கண்கள் இரண்டும் மூடிய நிலையில் இருந்தது. குழந்தையை அழைத்து வந்த 108 ஆம்புலன்சில், விஷத்தை முறிக்க"அட்ரோபைன்' ஊசி மருந்து போதுமான அளவு இருந்தது. அந்த மருந்தை குழந்தைக்கு செலுத்தினேன். அதற்கு பின் குழந்தை கொஞ்சம் தெளிவானது. பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்தனர். சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் பேசி, இலவசமாக மதுரை அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல, அனுமதி பெற்றேன். அங்கு குழந்தை பிழைத்துக் கொண்டது. குழந்தைகள் கைக்கு எட்டும் வகையில், எந்த பொருளையும் வைக்கக்கூடாது. சிவகங்கையில் குழந்தைகள் சிகிச்சைக்கு 24 மணி நேர கிளினிக் இல்லை. அதை விரைவில் துவக்க உள்ளேன்.

*

எஸ்.எம்.ரத்தினவேல், (சர்க்கரை நோய் நிபுணர், விருதுநகர்):

நான் 31 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் நடந்த பொருட்காட்சி அரங்கில் ராட்டினம் உடைந்து விழுந்தது. இரவு 12.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் 23 பேர் உயிருக்கு போராடினர். அரசு மருத்துவமனைக்கு, ஏழு தனியார் டாக்டர்கள் சென்று ஒருங்கிணைந்து பணியாற்றி முதலுதவி சிகிச்சை வழங்கி, மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பினோம். அனைவரும் உயிர் பிழைத்தனர். இதை என்னால் மறக்க முடியாது. எனது இரு மகன்களும் டாக்டர் ஒருவர் குழந்தைகள் நலப்பிரிவும், இருதய சிகிச்சை பிரிவுக்கும் மேல் படிப்பு படிக்கின்றனர். விருதுநகரில் ஏழைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், ஏற்பாடு செய்து வருகிறேன்.

**

எப்படி இருக்க வேண்டும் டாக்டர்கள்

டாக்டர்கள் மருத்துவத்துறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென, டாக்டர்கள் சொன்ன "டிப்ஸ்':

* மனிதாபிமானத்துடன், நேர்மையாக நடக்க வேண்டும்.

* கமிஷனுக்காக, தேவையற்ற மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன் எடுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* கட்டணம் குறைவாக வாங்கிக் கொண்டு, அதிக விலையுள்ள மருந்துகளை எழுதி தரக்கூடாது.

* பணமில்லாத ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க தயங்கக்கூடாது. இது தெய்வத்திற்கு செய்யும் சேவைக்கு சமம்.***
thanks தினமலர்
***

நல்ல முறையில் மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கம் :)"வாழ்க வளமுடன்"

பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த பெற்றோரின் மனமாற்றம் அவசியம்!- த.சிவபாலு எம்.ஏ.


எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்தாழம் மிக்கப்பாடல் வரிகள்.


இக்கருத்தை மெய்பிப்பது போன்று பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாடு, கட்டுப்பாடின்மை ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது உளவியலாளர்களின் ஆய்ந்தறிந்த துணிபு.


பெற்றோர்கள் எவ்வளவு தூரத்திற்குக் கண்டிப்பும், கடினமும், தண்டனை விதிப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களின் பிள்ளைகள் பின்னர் மிகவும் வலுச்சண்டையாளர்களாக, ஊறு விளைவிப்பவர்களாக, இன்னா செய்பவர்களாக வளர்கின்றார்கள் என்பது உளவியலாளர்களின் கணிப்பீடு. இதனை நாம் எமது அனுவபவாயிலாகக் காணலாம். கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள் ஒன்றில் மிகவும் பயந்த சுபாவமுடையவர்களாக அல்லது ஆக்கிரமிப்புத்தன்மை மிக்க வலுச்சண்டைக்காரராக வளர்வார்கள்.


ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பதனை மனதில் கொண்டு பார்க்கும் போது ஒரு விளைவின் மறுவிளைவினை நாம் காணலாம் என்பதனை உளவியல் ரீதியில் ஆய்வுகள் செய்பவர்கள் கண்டறிந்து அதன் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதோடு பிள்ளைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும், அவர்கள் நல்ல பண்பாளர்களாக மாறுவதற்கு பெற்றோரின் நடத்தையில், எண்ணத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதனை முன்வைக்கின்றார்கள்.


மிகக் கட்டுப்பாடு நிறைந்த பெற்றோரின் பிள்ளைகள் மிகவும் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள். பெற்றோர் தங்கள் செயல்களை மாற்றும் போது பிள்ளைகளின் நடத்தையும் மாற்றமடைகின்றது. National Longitudinal Survey of Children and Youth (NLSCY) என்னும் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின் படி, பெற்றோர் மிகக் கண்டிப்பான பிள்ளை வளர்ப்பு முறையினைக் கொண்டவர்களாக இருப்பதால், பிள்ளைகள் மிகக்கூடியளவு வன்முறைத் தன்மைகள், கவலைக்கிடமான, பொதுநல நோக்கற்ற அல்லது குறைந்த பண்புகளைக் காண்பிக்கின்றார்கள் என ஆலோசனை நல்கியுள்ளது.


எவ்வாறாயினும், இந்த ஆய்வு பெற்றோர் குறைந்தளவு கண்டிப்பு உடையவர்களாக இருக்கும்போது, பிள்ளைகளும் மிகக் குறைந்த வன்முறை அல்லது போரூக்கப் பண்புகளையே கொண்டிருக்கின்றார்கள் எனக் காட்டுகின்றது. இதை மறுப்பக்கமாகப் பார்க்கும்போது அது எதிர்விளைவைக் கொண்டிருப்பதும் உண்மையே.


கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூத்த பகுப்பாய்வாளரான எலினோர் தோமஸ் "பிள்ளைவளர்ப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது, பிள்ளைகளின் நடத்தையிலும் மாற்றம் ஏற்படும் என்பது ஒரு பெரும் செய்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கனடிய சமூக அபிவிருத்தி நிலையமும், கனடிய புள்ளிவிபர நிலையமும் இணைந்து 4,129 பிள்ளைகளைப் பின்பற்றிச் செய்து கொண்ட ஆய்வின் விளைவாக இந்த முடிவுகள் பெறப்பட்டன. பிள்ளைகள் இரண்டு வயதிற்கும் ஐந்துவயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்கும்போது 1994-95 காலப்பகுதியிலும், அவர்கள் 10 மற்றும் 13 வயதாக இருக்கும்போது 2002-03 காலப்பகுதியிலும் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் பெற்றோர் தமது கண்டிப்பு, தண்டனைகளைக் குறைவாகக் கொண்டிருந்த போது பிள்ளைகளின் வன்செயல்கள் அல்லது துன்புறுத்தும் பண்பு குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒருபோதுமே தண்டனை அழிக்காத பெற்றோரின் பிள்ளைகளைப் போன்று இந்தப் பிள்ளைகளும் குறைந்தளவு வன்முறைகளைக் கொண்டிருந்தனர் என்பது வெளியாகியுள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் மிகவும் தண்டிப்பவர்களாக இருந்த பெற்றோரின் பிள்ளைகளே கூடிய வன்முறைப் பண்பினை உடையவர்களாகக் காணப்பட்டார்கள் என்பதும் ஆய்வின் முடிவாகும்.


தண்டனை வழங்கும் பெற்றோரின் பிள்ளைகள், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், தண்டனை அழிக்காத பெற்றோரின் பிள்ளைகள், சமூகம் சார்ந்த நடத்தை, எந்தப் பயனையும் எதிர்பார்க்காத, ஒருவருக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கு நன்மைபயக்கும் செயல்களைச் செய்தல்... போன்ற பண்புகளைக் கொண்டவர்களாகவும் வளர்வதையும் இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.


மக்கள், பிள்ளை வளர்ப்பு முறைகள் எவ்விதம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதில் மிகுந்த அக்கறையாக உள்ளனர். ஆனால் எவ்விதம் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும் என தோமஸ் கருத்துத் தெரிவித்துள்ளர்ர்.


பிள்ளைகளின் நடத்தைகளில், பெற்றோரின் வருமான நிலைமைகளும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகளிடம் மிகக்கூடியளவு வன்முறைப் பண்பு காணப்படுவதாக ஆய்வு காட்டுகின்றது.


எனினும் இந்த நிலைமைகளுக்குச் சிலர் எதிர்த்தாக்கம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் என்பது ஏறைய வருமானக் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கண்டறியப்பட்டுள்ளது என்பதும் கருத்திற்கொள்ளத் தக்கது.
இவற்றிற்கு குடும்ப அமைப்பிலும் குடும்பத்தில் காணப்படும் ஒவ்வாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகளும் காரணமாக அமைவதாகக் கருதப்படுகின்றது.இதற்கு

1. மிகக்குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மிகக் கூடியளவு வன்முறை உடையவர்களாகக் காணப்படுவதற்கு குடும்பங்களின் குழப்ப நிலை காரணமாகின்றது.

2. தாய்வழி மனவழுத்தத்திற்குக் காரணமாக குறைந்தளவு வருமான நிலை காரணமாகின்றது

3. குழந்தைகளின் பயந்த நிலைக்கு குடும்பத்தின் குழ்பபநிலை காரணமாக அமைகின்றது எனக் கண்டறிய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த ஆய்வின் படி பெற்றோர் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடவேண்டியதும், கண்டிப்பிற்குப் பதிலாக அன்பினால் ஆட்சி செய்யவேண்டும் என்பதும் எடுத்துக் கூறப்படுவது அவதானிக்கத்தக்கது. பிள்ளைகளின் நன்னடத்தைக்காக, அவர்களின் நல்லொழுக்கத்திற்காகத்தான் நாம் அவர்களைத் தண்டிக்கின்றோம் என்று அடிக்கடி கூறும் பெற்றோர்களை நாம் கண்டிருக்கின்றோம்.


ஆனால் அவர்கள் தண்டனை அளிப்பதால் பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் அல்லது பாதிப்பு எத்தகையது என்பதனை பலர் உணர்ந்து கொள்வதில்லை. தண்டனை பெற்ற பிள்ளை பெற்றோருக்குத் தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு என்பதனை உணர்ந்து கொள்வதோ அல்லது அதன் தாக்கத்தை அறிந்து கொள்வதோ இந்தத் தண்டனையின் பாற்படுமா? என்பதனைச் சிறிதேனும் சிந்தித்துப்பார்க்கும் நிலை பெற்றோருக்கு உண்டா? அல்லது சிந்தித்துப்பார்க்கிறாரர்களா? என்பது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.


பெற்றோரின் நெருக்கமான தொடர்பு, பிள்ளைகளிளிடம் இன்பகரமான சூழலைத் தோற்றுவிக்கின்றது என்பது உளவியலாளர்களின் முடிவு. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி பதின்ம வயதினை எட்டிப்பிடிக்கும் பிள்ளைகளின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளில் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறைகள் அவர்கள் பிள்ளைகளோடு கொண்டுள்ள தொடர்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆளுமை நிறைந்தவர்களாகப் பிள்ளைகள் வளர்வதற்குப் பெற்றோரின் வளர்ப்புமுறை மிக அசியமாகும். பிள்ளைகள் உள, உடல் வலுமிக்கவர்களாக வளர்வதற்கு அவர்களுக்கு இயல்பாகவே தேவைப்படும் அடிப்படை உளவியற் தேவைகள் பூர்தி செய்யப்படவேண்டியது இன்றியமையாதது. காப்பு, அன்பு, அரவணைப்பு, மதிப்பு (கணிப்பு), போன்ற அடிப்படைத் தேவைகள் பிள்ளைகளுக்கு மிக அவசியமானவை. இவற்றை அவர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் தங்களை அற்பணித்துச் செயற்படவேண்டியவர்கள் வேறுயாருமல்லர். அது தாய், தந்தையரே.

குழந்தை ஆரம்பத்தில் தாயின் அணைப்பினிலேயே வளர்கின்றது. பெரும்பாலான உயிரினங்களின் தன்மைகளில் தாய்மையின் பங்கு அதிகமானதாகவே அமைகின்றது. கருத்தரித்து, பெற்று வளர்ப்பதில் தாயின் பங்கு அதிகம். அது பறவையானாலும் சரி விலங்குகளாக இருப்பினும் சரி தாயின் அணைப்பினிலேயே குழந்தைப் பருவம் தங்கியிருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக குரங்கின் பழக்கவழக்கத்தை நாம் எடுத்து நோக்கினால் அங்கு குழந்தைப்பருவத்தில் தாயே தனது குட்டியை கட்டி அணைத்துச் செல்வதைக் காணலாம் இதன் படி மனித வளர்ச்சிப் பருவங்களிலும் இத்தகைய பண்புகளை நாம் காணமுடிகின்றது.


மனித வளர்ச்சிப் பருவத்தில் பதின்மவயதுப் பருவம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இந்தக் காலத்தில் தாய் தந்தை இருவரதும் அணைப்பு, நெருக்கம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த அவசியமானதாகக் காணப்படுகின்றது. மனமுறிவுற்ற பிள்ளைகளை ஆராய்ந்ததில் தந்தையுடனான நெருக்கமான போக்கு பெண்பிள்ளைகளுக்கு மனமுறிவை, அல்லது மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் காணப்படுகின்றது என ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

பெற்றோர் பிள்ளைகளுடன் அன்பாகப் பழகுவதனால் பிள்ளைகள் சாந்தமுடையவர்களாக வளர்கின்றார்கள் எனவும், கூடியளவு கண்டிப்பும், தண்டனையும் வழங்கும் பெற்றோரின் பிள்ளைகள் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள் என்னும் கருத்துக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நம்பிக்கையும், விசுவாசமும் உடையவர்களாக உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதனால், நடத்தை மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை அவர்களே தவிர்த்துக் கொள்ளும் தன்மையைப் பெறுவார்கள். சிலர் கடவுளை அல்லது வேறொரு உயர்ந்ததொன்றை அல்லது சக்தியை நம்புகின்றார்கள். வேறுசிலர் தமது நம்பிக்கையினை நாட்டின்மீது, அல்லது வேறு மக்கள், பொருட்கள், அல்லது தம்மீது வைக்கின்றார்கள். நம்பிக்கை என்பது நம்புகின்றவை உங்களுக்காக வேலை செய்பவை. சித்தியடைவோம் என்று நம்பிக்கை வைத்தால் சித்தியடைவது சுலபம். இல்லை சித்தியடைய மாட்டேன் என்னும் அவநம்பிக்கை கொண்டால் சித்தியடையவே முடியாது.


எனவே இலக்கை எட்ட நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கும் போது வெற்றி பெறுவது இலகுவானதாகின்றது. தன்னம்பிக்கையும், தனது செயல்களில் விசுவாசமும் கொள்பவனே விடாமுயற்சி உடையவனாகவும் வளர்கின்றான். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் ஒருவனிடத்தில் குடிகொள்ளும் போது, அது வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்.


"பாரம்பரியமாக நம்பப்பட்டு வந்த மரபுவழிக் கதைகள் மறையும்போது, அதனோடு ஒட்டிய கனவுகளும் மறைந்துபோகின்றன. கனவுகள் மறைந்துபோகும் போது அங்கு எந்த மேன்மையும் இருக்காது" என யூட் இந்திய சமூகத்தினர் சொல்வதனையும் அவதானிக்கலாம்.

பிள்ளைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்த அல்லது நல்ல நடத்தை(நல்லொழுக்கம்) உடையவர்களாக, நல்ல பண்பாளர்களாக வளர்வதற்குப் பெற்றோரின் நல் உறவு, பாசம், அன்பான கலந்துரையாடல், தங்களை அர்ப்பணிக்கும் தன்மை என்பன உதவுவதாகக் கொள்ளப்படுகின்றது. இதனால் பிள்ளை வளர்ப்பு முறைகளில் பெற்றோர் தமது போக்கையும், நடத்தையைம், நோக்கத்தையும் மிகுந்த அவதானத்தோடு பின்பற்றவேண்டியது அவசியமாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பது போன்று பிள்ளைகளின் உளமோ மென்மையான மலரிலும் மென்மைவாய்ந்தது. அவர்களின் உளமாகிய மலர் வாட்டமடையாது என்றும் நறுமணம் வீசி இன்பகரமாக இங்கிதமான சூழலை ஏற்படுத்த அவர்களின் மனத்தில் மாசு படியாதபடி பெற்றோர் நடந்து கொள்ளுதல் இன்றியமையாததே.


***
thanks - த.சிவபாலு எம்.ஏ.
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகளின் ஆளுமையையே முடக்கிவிடுகிறது :(குழந்தைகள் சாப்பிட அடம் பிடித்தாலோ அல்லது அழுகையை நிறுத்துவதற்கோ, பயமுறுத்தி அவர்களின் அழுகையை நிறுத்த முயலாதீர்கள். குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்துகொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார். சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவ கூடாது.


இன்னும் சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுதல், ஆலவட்டம் சுற்றி விளையாடுதல் என்று விபரீதமாக கொஞ்சுவார்கள். இவைகளை குழந்தைகள் ரசிப்பதாக நினைத்துக் கொண்டு பலமுறை விளையாடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு திடீரென அழத் துவங்கி விடும்.


சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாய் கடிக்கும், பூனை கடிக்கும், மாடு முட்டும் எனச் சொல்லி பயம் காட்டி சாப்பிட வைக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை முடக்கி விடும் முட்புதர்கள் ஆவார்கள். இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவ மன பயங்கள், ஒருவரது ஆளுமையையே முடக்கி விடுகிறது என்பது உளவியல் உண்மையாகும்.


இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள்குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும்குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன.


அடிபட்டு, துன்புறுத்தப் பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவினர்களை வெறுத்து வளர்கின்றனர். குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரியவர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயாளிகளாகி விடுகின்றனர்.


குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும். அதிகமான பயம் காட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு உணர்வு, பிளவுபட்ட ஆளுமைக் கூறுகள், குறைபட்ட பழகும் பாங்கு என பல்வேறு அவலங்களுக்கு ஆளாகின்றனர்.


அன்புடன், பாசத்துடன், அரவணைப்புடன், தன்னம்பிக்கை வளரும் விதமாக குழந்தைகளை வளர்த்துங்கள். மன பயத்துடனே வளரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள்ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள். விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள்.


வாலிபப் பருவத்தில் ஊக்கப் படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள். கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர். இவர்களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும்.


அச்சம்தவிர் என்ற சொல்லுக்கேற்ப, தைரியமாக வளர குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும். "செய்யாதே" என தடை செய்வதே பயத்தின் முதல்படி. ஆனால் "ஜாக்கிரதையாக இதைச் செய்" என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.


ஆகவே குழந்தைகளை பய உணர்வு காட்டி வளர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு நல்ல நடத்தைப் பண்புகளை பக்குவமாக கற்றுத் தந்து, நல்ல சந்ததியை உருவாக்குங்கள்.-

- பா.ராமநாதன்***
நன்றி தினகரன்
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "