...

"வாழ்க வளமுடன்"

26 நவம்பர், 2010

பழங்களின் நிறமும் அதன் குணமும்

இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது.தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள்.

*

சிலர் சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது.

*

அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.


*

பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.***

சிவப்பு நிறப் பழங்கள்

கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.


1. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.

*

2· வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

*

3· இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.

*

4· மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

*

5· கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.


***

மஞ்சள் நிறப் பழங்கள்1. எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.

*

2· மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.

*

3· பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.

*

4. வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.

*

5. ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.***

பச்சை நிறப் பழங்கள்

1. பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .

*

2. இப்பழங்கள் காய்கறிகள ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.

*

3. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால்பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.


***

ஆரஞ்சு நிறப் பழங்கள்

1. மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும். உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன.

*

2. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது.

*

3. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.


***

நீல நிறப் பழங்கள்
1. நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும்.


*

2. துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.


*

3. தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.


***

மண் நிற பழங்கள்
1. சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.

*

2. இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும்.

*

3. குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்


***
thsnks நக்கீரன்
***


"வாழ்க வளமுடன்"

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?

நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ?நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன.


டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

*

50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது.

*

ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்கியமான காரணம் பெண்கள் மாற்றங்களை இலகுவாக ஏற்று அதற்கமைவாக வாழ்வதால் அவர்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கெனிங் கியக் தெரிவித்துள்ளார்.

*

நூறாண்டு காலத்தை எட்டித் தொடும் பிரதான மந்திரமாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நூறாண்டு வாழ மாற்றங்களை இயல்பாக ஏற்கப் பழகுங்கள்.

*

நூறு வயதை எட்டித் தொடும் முதியவர்களுடன் பேசுவது அவசியம். அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை, உணவு முறைகள் போன்றவற்றை கேட்டறிவது மற்றவர்களும் நீண்ட காலம் வாழுவதற்கு உதவும். ( இவர்கள் கிளம்ஸ்கள் என்று வயோதிபரை ஒதுக்கும் இளையோர் விரைவான சாவிற்கு வரவேற்புப் பாடுகிறார்கள் ) புவியில் வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு என்று நான்கு திசைகளை பிரதானமாகக் கூறுவோம். ஆனால் நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டே இரண்டு திசைகள் மட்டுமே உள்ளன.

*

நாம் செய்யும் செயல் நீண்ட கால உயிர்வாழ்தலுக்கு எதிரான திசையிலும், சரியான திசையிலும் மட்டுமே இருக்கும். குறுங்கால உயிர் வாழும் திசைக்குள் பிரவேசித்தால் உடன் அதை நிறுத்தி சரியான திசைக்குள் திரும்பிவிட வேண்டும்.

*

ஒவ்வொரு செயலிலும் இந்த இரு திசைகளையும் பிரதானமாகக் கருதி உடனுக்குடன் மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையேல் நீடித்த ஆயுளை எட்டித் தொட முடியாது. இதுதான் 100 வயதைத் தொடும் காந்த முள்ளாகும்.

***

மேலும் இளமையுடன் வாழ்வை நகர்த்த சில யோசனைகளையும், தந்துள்ளார்கள்:


1. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் உடன் நிறுத்தி சரியான திசைக்கு வாழ்வை திருப்புங்கள்.

*

2. தினசரி 30 நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்யுங்கள்.

*

3. உடன்பாடு காண முடியாதவர்களை கைவிட்டு புதியவர்களுடன் இணைந்து புதுவாழ்வு காணுங்கள். பழையதையே நினைத்து கண்ணீர் விட வேண்டாம்.

*

4. சிறு பிள்ளைகளுடன் பழகி குழந்தை மனதோடு வாழுங்கள்.

*

5. புதிய மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள், மூளை புதுமைகளை விரும்பும்.

*

6. புதினங்களை அறியுங்கள் ஆனால் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

*

7. ஆரோக்கிய வாழ்வு தொழில் போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட வேண்டும்.

*

தற்போது 867 ஆக இருக்கும் 100 வயதைத் தொட்ட மனிதர் எண்ணிக்கையை எதிர்வரும் 2050 ல் 20.000 ஆக உயர்த்திவிட இப்போதே அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. இப்போது பிறக்கும் பிள்ளைகளில் இருவருக்கு ஒருவர் 100 வயதைத் தொடுவார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

***

புலம் பெயர் தமிழருக்கான மேலதிக போனஸ் :

போர்கள் – கொடிய நோய் – வறுமை – சுகாதார சீர்கேடு – நல்ல உணவு இன்மை – தவறான அறிவு குறைந்த ஆட்சித்தலைமைகளும், அவர்களின் அடியாட்களும் அரசியலில் இருப்பது – தறவான இராணுவங்கள் – பிடிவாத குணம் கொண்ட மூர்க்க எண்ணங்கள் –


ஆயுத பாவனை – கொலை – கொள்ளை – கப்பம் – பேசித் தீர்க்க தெரியாத பாமரத்தனம் – கல்வியை இழந்த சமுதாயமாக இருப்பது – கல்வியை வாழ்விற்குள் கொண்டுவராமல் பணத்திற்காக வாழ்வது – சர்வாதிகாரத்திற்கு துணை போவது – தலைமை வழிபாடு – அறிவு குறைந்தோர் ஊடகங்களில் இருந்து வழிகாட்டுவது –


மக்களை கண்ணீர் வெள்ளத்தில் வைத்து பணம் பண்ணப் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களின் ஆயுளைக் குறைக்கும் திசைப்பக்கமாக இருப்பதை நீண்ட காலம் வாழ விரும்புவோர் கவனத்தில் கொள்வது அவசியம்.***
thanks அலைகள்
***"வாழ்க வளமுடன்"

வயதானவர்களுக்கான உணவு முறை!

உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வாழ்பவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.இதற்குக் காரணம் அவர்களது உணவு முறைதான். அப்படி என்னதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் நிறைய தானிய வகைகள், சோயா. ஆனால் பால் பொருட்களை அவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

*

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அதற்கேற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தாமதமாக ஏற்படும்

*

குறிப்பாக முதுமையில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது தள் ளிப் போட ஒவ் வொருவரின் உணவு முறையும் பெரும் காரண மாக அமைகிறது.

*

வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆர் வம் இருக்காது. இதற்கு பல் வேறு காரணங் கள் உள்ளன. ருசி மற்றும் வாச னை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவதும், கடிப்பதில் ஏற்படும் சிரமம், சீரணக் கோளாறுகள் போன்றவையும் பசியைக் குறைத்து விடுகின்றன

*

வயதான காலத்தில் மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையில், தமக்குத் தேவையான உணவை, தேவையான நேரத்தில் பெற முடியாத சூழலும் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவும் இவர்களது உடல்நலத்தை பாதிக்கும் சூழ்நிலைகளே.

***

மாறும் தேவைகள் :

1. வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அதிகமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

*

2. ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..... வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறது. எனினும் மல்டி - வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வது உணவை விட சிறந்ததாகாது. ஏனெனில் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்துகள், தாவர ரசாயனங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மல்டி வைட் டமினில் இருக்காது.

*

3. தினமும் 6 முதல் 8 டம் ளர்கள் தண் ணீர் அருந் துவது மிகச்சிறந்த மருத் துவமாகும். ஏனெனில் வயதானவர் களுக்கு தா கம்கூட குறைந்துவிடும். இதனால் களைப்பும், தலை வலியும் ஏற்படும். ஊட்டச்சத்துகள் போன்றே தண்ணீரும் முக்கியமா னதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும் உடலின் நச்சுப் பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலும் தண்ணீரின் பங்கு அபரிமித மானது.

*

4. இறைச்சி வகைகளைக் கைவிட்டு காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். காய்கறிகளை மென்று தின்ன முடியாத முதியவர்கள் காய்கறிகளை சூப் செய்தும் அருந்தலாம். கீரைகள், பழங்களையும் சீராக சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகைப் பழத்தை உண்ணலாம். அதுவும் நீரிழிவு நோயாளியாக இருப்பின் பழ வகைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து சாப்பிடலாம்.

*

5. பால், தயிர், மோர், போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நலம். அதற்காக அறவே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சரியல்ல.

*

6. சர்க்கரை, காரம், உப்பு போன்றவை குறைவாக உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவைகளை தேவையை விட பாதி பங்கு அளவிற்கு உங்கள் உணவில் நீங்களே குறைத்துக் கொள்ளுங்கள். இது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.

*

7. வாரத்திற்கு இரு முறை கசப்பான உணவுகளான பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம். வெந்தயம், மிளகு போன்றவற்றை தூள் செய்து வைத்துக்கொண்டு அதனை உணவுப் பொருட்களில் சிறிது கலந்து உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

*

8. கை, கால்களை சுத்தமாகவும், அடிபடாம லும் பார்த்துக்கொள்ளவேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் போவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

*

9. குளிர்ச்சியான பொருட்களை இரவு நேரங்களில் தவிர்த்துவிடுங்கள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்தப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம்.

*

10. எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்ளுங்கள். அதுபோல் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு தானியம் சேர்ந்த உணவுப் பொருளை உட்கொள்வதும், சிறிது தூரம் நடை செல்வதும் சிறந்தது.


*

நமது உடலை நாம் உண்ணும் உணவின் மூலமே சரியாக வைத்துக்கொள்ள முடியும். அதை விடுத்து மாத்திரைகளையே உணவாக உட்கொள்ளும் அவசியம் நமக்கு வேண்டாமே.
***
THANKS மருத்துவம் ஜனவரி 2010
***
"வாழ்க வளமுடன்"

குண்டு பெண்கள் மெலிய சைக்கிள் ஓட்ட வேண்டும்

வாஷிங்டன் : குண்டாக இருக்கும் 42 வயதுக்கு உட்பட்ட பெண்கள், வாரத்துக்கு 4 மணி நேரம் சைக்கிள் ஓட்டினால்எடை குறையும் அற்புதத்தை காணலாம் என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ளது ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்.

அதன் சார்பில் 1989 முதல் சில ஆண்டுகள் ஆய்வு நடந்தது. அதில் 18,414 பெண்கள் பங்கேற்றனர். அனைவரும் 25 முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள். அதன் தொடர்ச்சியாக 2வது கட்ட ஆய்வு 2005ல் தொடங்கி கடந்த மாதம் வரை நடந்தது. மொத்தம் 1.16 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

*

பங்கேற்றவர்களில் குண்டு பெண்கள் தனியாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் மெதுவாக நடக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும், சைக்கிள் ஓட்டி பழக்கம் இல்லாதவர்களாகவும் இருந்தனர்.

*

அவர்களில் ஒரு பிரிவை வாரத்துக்கு4 மணி நேரம் சைக்கிள் ஓட்ட கேட்டு கொள்ளப்பட்டது. இன்னொரு பிரிவை தினமும் அரை மணி நேர நடைபயிற்சி செய்ய வைக்கப்பட்டது.

*

இடையே அவர்களது எடையில் ஏற்படும் மாற்றங்கள் அவ்வப்போது சோதிக்கப்பட்டது. வாரத்துக்கு 4 மணி நேரம் சைக்கிள் ஓட்டிய பெண்கள் பிரிவினர் பிரமிக்கத்தக்க வகையில் எடை குறைந்திருந்தனர்.

*

வேகமான நடைபயிற்சி சென்றவர்களின் எடையும் கணிசமாக குறைந்தது. மெதுவாக நடந்ததாக கூறியவர்களின் எடையில் பெரிய மாற்றம் இல்லை.

*

வயதுக்கு ஏற்ற சரியான எடை இருந்த மற்ற பெண்கள் அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களில் 3ல் ஒருவர் சைக்கிள் ஓட்டுவதும், 25 சதவீதத்தினர் தினசரி உடற்பயிற்சி செய்வதும் தெரிய வந்தது. வேகமாக நடப்பதாக கூறியவர்களும் நார்மலான உடல் எடையுடன் இருந்தனர்.

*

இதையடுத்து, சைக்கிள் ஓட்டுவது, விரைவாக நடப்பது ஆகியவை பெண்களின் உடலில் கலோரிகளை வேகமாக இழக்கச் செய்துஎடையை குறைக்க உதவுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.


***
நன்றி - தினகரன்.
***


"வாழ்க வளமுடன்"

பதட்டத்தை வெல்லப் சில வழிகள் !

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.
சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம்.

*

சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும்.

*

இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

*

அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள்.

*

பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.


*

இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து,


விடுபட அதற்கு என்ன வழி?


***

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!


முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?1. நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும்.

*

2. எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

*

3. ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது.


*


4. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

*

5. உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள்.

*

6. 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

*

7. நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

*

8. காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

*

9. எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

*

10. தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.

*

11. முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள்.

*

12. உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதைப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

*

13. உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

*

14. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள்.

*

15. நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

*

16. அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள்.

*

17. நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

*

18. தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது.
*
19. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள்.
*
20. உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.


*

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்.***
THANKS eelanatio
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "