...

"வாழ்க வளமுடன்"

10 மார்ச், 2011

தேங்காய் எண்ணெயால் இதயத்துக்கு நல்லதா இல்லை கேட்டதா ?


தேங்காய் எண்ணெயால் இதயத்துக்குப் பாதகமில்லை:)
இந்திய போ~hக்கு நிபுணர் கருத்து :

தேங்காய் எண்ணெய் இதயநோய்களுக்கு காரணமான பொருள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. மாறாக மனித உடல் முழுமைக்கும் நல்ல போசாக்கு வழங்கும் ஒரு நல்ல உணவுப் பொருள்அது.

இவ்வாறு கூறியிருக்கிறார் போ~hக்குத் துறைவல்லுனரான இந்திய மருத்துவர் டாக்டர் ரி.வர்ஸ்மா. இந்தியாவில் இராமச்சந்திரா மருத்துவக் கல்லு}ரியின் முன்னாள் போ~hக்குத்துறை இணை ஆலோசகரான அவர் நியுூயோர்க் செல்லும் வழியில் கொழும்பில் தரித்திருந்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தேங்காய் எண்ணெய்க்கு எதிரான கருத்து மேற்குலகநாடுகளில் இருந்து தான் வந்தது. தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் வேறு உணவு எண்ணெய்களைப் பிரபலமாக்கும் நோக்கத்துடன் அவர்கள் இதைச் செய்திருக்கலாம்.ஆசியாவிலுள்ள நாங்கள் பல நு}ற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்ததால் இன்னமும் அந்த காலனித்துவ மனப்பான்மை யிலிருந்து விடுபடாமலிருக்கிறோம் - என்றார் டாக்டர்வர்ஸ்மா.

இந்தியாவிலும் இலங்கையிலு முள்ள நாம் பல காலமாக தேங்காய் எண்ணெய்யை எதுவித பக்க விளைவுமில்லாமல் சாப்பிட்டு வருகிறோம். மக்கள் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்துள்ளார்கள். என்ன நடக்கிறது என்றால், நாங்கள் மேற்குலகினர் போல வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து இந்தப் பொறிக்குள் சிக்கிக் கொண்டு விட்டோம் - என்று மேலும் கூறினார் டாக்டர்வர்ஸ்மா.


***
நன்றி : உதயன்
***


"வாழ்க வளமுடன்"


இதயத்தைப் பாதுகாக்க 20 வழிகள்..!

*

Doctor.K.நடராஜன்
''வேகமான இன்றைய உலகமும், படபடப்பான வாழ்க்கைச் சூழலுமே இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருதய பிரச்னைகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது'' என்கிறார் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் கே.நடராஜன். இருதயத்தை நாம் பாதுகாக்கவும் இருதயப் பிரச்னைகள் ஏதும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவும் இருபது வழிகளை அவர் சொல்கிறார். அவற்றைக் கடைப்பிடித்தால் நூறு சதவிகிதம் இருதயப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியுமாம்.

***

இதயத்தைப் பாதுகாக்க இருபது வழிகள் :

1.) முதலில் மனிதன் தான் வாழுகிற சூழ்நிலையை சுகாதாரமுள்ளதாக வைத்துக்கொள்ளவேண்டும். அது மாடி வீடாக இருக்கட்டும்; இல்லை குடிசையாக இருக்கட்டும். அதற்குள் நாம் வசிக்கிற சூழல் சாதாரணமாக உள்ளபடி தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்.


2.) வெளிச்சம் என்பது மன உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது என்பதால் நாம் வசிக்கிற வீடு உலர்ந்த, வெளிச்சமுள்ள இடமாக இருக்கவேண்டும். இருளடைந்த வீடுகளுக்குள் வசிப்பது மன இறுக்கத்தைத் தரும். மன இறுக்கம் இதயத்திற்கு பிரச்னை தரும் என்பதால் முடிந்தளவு வெளிச்சமுள்ள வீடுகளிலேயே வசிக்கவேண்டும்.


3.) காற்று மனிதனின் அத்தியாவசியத் தேவை என்பதால் நாம் வாழுகிற இடம், சூழலில் காற்றோட்டம் நன்கு இருக்கவேண்டும்.


4.) நாம் வாழுகிற சூழலுக்கும் வேலைகளிலும் வேகமான, படப்படப்பான நிம்மதியற்ற மன நிலைகளைக் கணிசமாக குறைத்துக் கொள்ளவேண்டும். அலைச்சல், பரபரப்பு என்கிற இயந்திரத்தனமான வேலை அமைப்புதான் இருதயப் பிரச்னையில் முதலிடம் வகிக்கிறது என்பதால் அமைதியான, நிம்மதியான மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு,..

ஒருவருக்கு ஒரு வேலையில் லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வேலை அளவுக்கதிகமான டென்ஷனையும் ட்ரஸ்சையும் தருகிறது என்றால் அதைத் தவிர்த்துவிட்டு அதைவிட குறைவாகவே கிடைத்தாலும் நிம்மதி கிடைக்கிறது என்கிற சூழலுள்ள வேலையை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் லட்சங்களைவிட, கோடியைவிட உங்கள் உடலுக்கு மதிப்பு அதிகம்.
அப்படி உங்களால் அந்த டென்ஷன் வேலையை விட முடியாது என்றால், அந்த வேலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு அதிலுள்ள டென்ஷனை எப்படிக் குறைத்து அமைதியான முறையில் வாழ்வது என்று முயற்சிக்க வேண்டும்.


5.) தினமும் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் ஏன் எல்லோருமே ஒரு மணி நேரமாவது மெடிடேஷன், யோகா, தியானம் எனக் கடைப்பிடிப்பது இருதயத்திற்கு நல்லது.


6.) உணவு முறைகளில் கட்டுப்பாடுள்ள உணவு முறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்திற்கு மிதமான உணவு சாப்பிடவேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிலும் பால், பழங்கள், கீரை காய்கறிகள் என சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.


7.) பாஸ்ட்ஃபுட் கலாசாரம் மிகுந்துவிட்ட இன்றைய சூழலில் கண்ட ஓட்டல்களில் கண்ட எண்ணெய்களில் பொரித்த வறுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை, சிறுநீரகங்கள் சாக்லெட், கொக்கோ, மாமிசக்கொழுப்பு போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.


8.) ஒரே நேரத்தில் வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து, சீரான இடைவெளி நேரங்கள் விட்டு ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறுமுறை சிறு அளவுகளில் சாப்பிடுவது வயிற்றிற்கும் இதயத்திற்கும் நல்லது.


9.) இரவில் படுக்கச் செல்லும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. சாப்பிட்டவுடன் சிறிது நேர நடைப்பயிற்சி செய்வது நல்லது.


10.) அடிக்கடி சளி பிடிக்காமலும், தொண்டையில் புண் ஏற்படாமலும் டான்சிலிடிஸ் பிரச்னைகள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் டான்சிலிடிஸ் பிரச்னைகளால் இதயத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.


11.) ஓய்வு ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது என்பதால் உடல் உழைப்புத் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும், வீட்டில் வேலை செய்பவர்களும் கூட சரியான விகிதத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரவு நாம் தூங்கும் இடத்தை மென்மையான அமைதியான தூக்கத்தைப் பெறும் விதமாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதிக நேரம் கண் விழித்திருப்பதும் கூடாது.


12.) உடற்பயிற்சி இதயத்திற்கு மிகவும் பயனளிக்கும். நீந்துதல், வாலிபால், டென்னிஸ், சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி என திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளும் பயிற்சியும் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.


13.) மலச்சிக்கல் என்பது உடலையும் மனதையும் பாதிக்கும். அதனால் கீரைகள் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


14.) தண்ணீர் என்பது மனித உடலுக்கு அவசியமான ஒன்று. அதனால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும்.


15.) குடிப்பழக்கம் இதயத்திற்கு தீங்கானது என்பதால் குடியை அறவே நிறுத்தவேண்டும். இக்கால இளைஞர்கள் பீர் என்கிற குடி போதைக்கு மிகவும் அடிமையாகியிருக்கிறார்கள். பீர் பெரிதாக போதையில்லை என்று அதை எல்லா கல்யாண விசேஷங்களிலும் பரிமாறப்படுகிற ஃபேஷன் பொருளாக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பீர் அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.


16.) இதயப் பிரச்னையில் இதய அடைப்பில் முதலிடம் வகிப்பது புகை பிடிக்கும் பழக்கும். சிகரெட், பீடி போன்ற பொருட்களின் புகையை உள்ளிழுக்கும் போது நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் இரத்த நாளங்களில் சென்று பெருமளவு அடைப்பை ஏற்படுத்துகிறது.

இன்று பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் பயிலும் பெரும்பாலான சிறுவர்களும், இளைஞர்களும்கூட 'ஸ்டைல்' என்கிற மனப்பான்மையில் புகைபிடிக்கும் பழக்கத்தைத் துவங்கியுள்ளனர். இதனால் முப்பது முப்பத்தைந்து வயதிலேயே இதயப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்குக் கேடு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டொழிப்பது நல்லது.


17.) உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது இதயப் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி என்பதால் உடல் எடை அதிகப்படியாக கூடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைச் சீராக வைத்திருக்கவேண்டும். அதாவது நம் உயரம் 170 செண்டிமீட்டர் என்றால் அதில் 105_ஐ கழித்து 65 கிலோ உடல் எடையை மெயின்டென் செய்யவேண்டும்.


18.) மணிக்கணக்கில் டி.வி. முன்பு உட்காருவதைத் தவிர்க்கவேண்டும். மன இறுக்கத்தைத் தரும் டி.வி. தொடர்கள் பார்ப்பதையும் டென்ஷனை ஏற்படுத்தும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதையும் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது.


19.) உயர் இரத்த அழுத்தம், சர்க்கரையும் இதயத்தைப் பாதிப்பவை என்பதால், அவை இரண்டும் அதிகரித்துவிடாமல் கட்டுப்பாடாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.


20.) எப்போதும் வேலை, படபடப்பு, டென்ஷன் என்கிற சூழலிலிருந்து விடுபட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தினரோடு கோவில்கள், சுற்றுலா என்று சென்றுவருவது நல்லது.

இதயத்தைப் பாதுகாக்க இந்த இருபது வழிகளைக் கடைப்பிடித்தாலே நூறு சதவிகித இதயப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியிலும் கல்லூரியிலும் எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

***


ஒருவருக்கு இதயத்தில் லேசாக அடைப்பிருப்பதை எப்படிக் கண்டறிவது?

இதயத்தில் அடைப்பிருப்பதற்கான அறிகுறிகள் என்று பார்த்தால் வேகமாக நடக்க முடியாது. அப்படி நடக்க முற்படும்போது மார்பில் வலி தோன்றும். அடுத்து சாப்பிட்டதும் நடக்க முடியாது. மார்பில் வலி எடுக்கும். படிகளில் ஏற முடியாது மூச்சுத்திணறும்.

இந்தப் பிரச்னையுள்ளவர்கள் மருத்துவரை அணுகினால் மருத்துவர்கள் ஈ.சி.ஜி. போன்ற டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்த்து எத்தகை சிகிச்சை தேவை என்ற முடிவுக்கு வருவார்.

*


ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறி என்ன? தீர்வு என்ன?

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதற்கான முதல் அறிகுறி அதிகப்படியான வியர்வையும், படபடப்பு நிலையும்தான். அடுத்து இடதுகையின் தோளிலிருந்து விரல்கள் வரை கடுமையான வலி இருக்கும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஆரம்பித்து கழுத்து, கன்னம் என வலி பரவ ஆரம்பிக்கும். இப்படியான அறிகுறி தெரிந்தவுடனே அருகிலிருக்கும் மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்லவேண்டும். இதில் முக்கியமான செய்தி. குடும்பத்திலுள்ளோர் அவரின் படபடப்பு அதிகரிக்கும் படியான கூச்சல், அழுகை என இல்லாமல் தன்னம்பிக்கை தரும்படியான வார்த்தைகளைக் கூறி டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுவது மிகவும் நல்லது.

*


இருதய அடைப்பிற்கான சிகிச்சைகள் என்னென்ன?

1. ஆன்ஜியோ பிளாய்ட்

2. பைபாஸ் சர்ஜரி

3. ஸ்டண்ட், என்று மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.


1. இருதயத்தின் ஒரு வால்வில் அடைப்பிருந்தால் ஆன்ஜியோ பிளாஸ்ட் என்கிற இரப்பர் குழாயினை தொடையிலுள்ள இரத்தக் குழாயின் வழியே செலுத்தி, இதயத்தின் அடைப்புள்ள பகுதிக்கு அனுப்பி, அங்கே அடைப்புள்ள பகுதியில் ரப்பரை விரிய வைத்து அடைப்பு சரிசெய்யப்படும்.


2. வால்வுகளில் அடைப்பிருந்தால் அதற்கு பைபாஸ் சர்ஜரி என்கிற அடைப்புள்ள பகுதிக்கு முன்பாகவும் பின்பாகவும் தொடையிலுள்ள நரம்பை எடுத்து பொருத்தி ரத்தம் செல்வதற்குப் புதிய பைபாஸ் பாதையை உருவாக்குவார்கள்.


3. இப்போது புதிதாக வந்திருக்கிற ஸ்டண்ட் சிகிச்சை என்கிற முறையில் அடைப்புள்ள இடத்தைக் குறுகலாக்கி அதன் இரண்டு பக்கங்களிலும் ரத்தம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருவார்கள்.


***
thanks kumudam.com
***


"வாழ்க வளமுடன்"

பேரீச்சை" பழத்தின் மகத்துவ குணங்கள்சில துளிகள் :)உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் “சத்துணவுப்பழமாக” உலக மக்களால் உண்ணப்பட்டு வருகின்றது.

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

என்றும் இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு !என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

முருங்கை கீரையின் மகத்துவம் :)


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.


முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.


முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.


முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.


முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.


முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.


இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.


மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.


முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.


கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படும் திருகுவலு,வயிற்றுப்போக்கு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

*

வைட்டமின்கள் :

முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்


***
thanks இணையம்
***"வாழ்க வளமுடன்"


முக்கனிகளின் மருத்துவ குணங்கள் !

மாம்பழம் :எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.


100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி-யும் உள்ளது.


தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.


மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம்.


இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.


மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது.


அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.


***

"பலா"முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.

கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.


இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.


அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும். பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது.

அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எனவே அடுத்த முறை பலாக்காயை எங்கு பார்த்தாலும் வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுங்கள்.


***

" வாழை "
வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.


வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.


வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.


எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.


மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.


வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "