...

"வாழ்க வளமுடன்"

03 செப்டம்பர், 2011

பெண்கள் இதை முக்கியமா தெரிஞ்சுக்கணும்..!



1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.

2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

4. பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

5. சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன.

6. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.

7. டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.

8. வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

9. குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிநீராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.

10. வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்க ளிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும்.

11. பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.

12. பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும்.

13. திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும்.

14. புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம்.

15. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.



***
படித்ததில் பிடித்தது
***



"வாழ்க வளமுடன்"


ஏலக்காயை பற்றிய சில துளிகள் !!!


வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்


***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"


பார்சல் சாப்பாட்டில் பல கிருமிகள்-அழிக்க காட்டு ஏலக்காய்




பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன.


பின் இவை, உணவு ஆறும்போதோ அல்லது புளிக்கும் போதோ, பல்கி, பெருகி, உண்பவரின் வயிற்றில், பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி சூடான உணவுகளை அடைப்பதால், பாலித்தீன் பைகளிலுள்ள எத்திலீன், வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துவதுடன், புற்றுநோய் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.


பார்சல் உணவுகளை வாங்குவதற்கு, பிளாஸ்டிக் அல்லாத நம் வீட்டில் அன்றாடம் சுத்தம் செய்யும் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.

சாதாரணமாக நமது உடலின் உட்பகுதியில், நுண்கிருமிகள் காணப்படுவதில்லை. ஆனால் வாயின் உட்புறம், குடல், தோல் போன்றவற்றில் பல்வேறு வகையான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இயற்கையாகவே காணப்படும் சில நுண்கிருமிகள், நன்மை செய்யக்கூடியவை.



ஆனால், பிறரிடமிருந்து தொற்றக்கூடிய அல்லது நோய்களை விளைவிக்கக்கூடிய ஆபத்தான நுண்கிருமிகளும், இந்தப் பகுதிகளில் நுழைந்து விடலாம். இவை பல்வேறு வகையான நோய்களை நமக்கு ஏற்படுத்துகின்றன. இவற்றில், வாய் மற்றும் உள்ளங்கைகளில் காணப்படும் கிருமிகளே, பலவிதமான தொற்றுநோய்களுக்கு காரணங்களாக இருக்கின்றன.

வாய் மற்றும் தொண்டையில் ஸ்டேப்பிலோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், நெய்செரியா, சூடோமோனாஸ், புரோட்டியஸ், ஹூமோபிலஸ், கிளோஸ்டெரிடியம், கார்னிபாக்டீரியம், மைக்ரோபாக்டீரியம், ஆக்டினோமைசிட்டஸ், ஸ்பைரோகேட்ஸ், மைக்கோபிளாஸ்மாஸ் போன்ற பலவகையான பாக்டீரியாக்கள் மற்றும் பல்வேறு வகையான நுண்கிருமிகள், வாய், தொண்டை, மூக்கு போன்ற உணவுப்பாதையில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி கைகளில் விரலின் நக இடுக்கு உட்புறம், நகத்தின் நுனி, உள்ளங்கை, புறங்கை, விரலிடுக்குகள் போன்ற பகுதிகளில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இவற்றில், விரலின் நக இடுக்குகளில், பிற பகுதிகளை விட, 75 மடங்கு அதிகமான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. உள்ளங்கையில், 4,200க்கு மேற்பட்ட நுண்கிருமிகள், நிரந்தரமாக குடி கொண்டிருக்கின்றன.

இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ, கூடவோ செய்கிறது. தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

காட்டு ஏலக்காய், கிருமிகளை அழிக்க வல்லது. அமோமம் சபுலேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜி பெரேசியே குடும்பத்தைச் சார்ந்த செடிகளின் உலர்ந்த பழங்களே காட்டு ஏலக்காய். பெரிய ஏலக்காய் அல்லது பேரேலம் என்று அழைக்கப்படுகின்றது.
சால்கோன் என்ற கார்டோமோனின், அல்பினிட்டின், சபுலின் மற்றும் சினியோல் என்ற நறுமணமுள்ள மருந்துசத்து ஆகியன காணப்படுகின்றன.


இவை, வயிற்றில் வளரும் தேவையற்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, செரிமான சக்தியை தூண்டி, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்று வலியை நீக்குகின்றன.

காட்டு ஏலக்காய் – 20 கிராம்,
இலவங்கப்பட்டை – 20 கிராம்,
சிறுநாகப்பூ – 20 கிராம்,
சுக்கு – 20 கிராம்,
மிளகு – 20 கிராம்,
திப்பிலி – 20 கிராம்,
வாய்விடங்கம் – 20 கிராம்,
மல்லிவிதை – 20 கிராம்,

ஆகியவற்றை சுத்தம் செய்து, இளவறுப்பாக வறுத்து, இடித்து, பொடித்து, சலித்து, 120 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர, நுண்கிருமிகளால் ஏற்பட்ட பல்வேறு வகையான வயிற்று உபாதைகள் நீங்கும்.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "