...

"வாழ்க வளமுடன்"

16 மே, 2011

கட்டுவிரியன்(KRAIT). இதனை எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன் பாம்பு !!!


நச்சுப்பாம்புகளில் நல்ல பாம்பின் விசம் பற்றிப்பார்த்தோம். நல்ல பாம்பின் விசமானது நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடியது என்பதையும் அதனால் தசைகள் செயலிழப்பு,மூச்சு விட முடியாமல் செயலிழந்து இறப்பு என்பதை அறிவோம்.


நல்ல பாம்பு போலவே நரம்புகளைத் தாக்கும் இன்னொரு வகைப்பாம்பு கட்டுவிரியன்(KRAIT). இதனை எண்ணெய் விரியன்,எட்டடிவிரியன் என்றும் சொல்லுவர். கட்டுவிரியன் உடலில் பொதுவாக வெண்ணிறப்பட்டைகள் காணப்படும்.
1.நல்ல பாம்பு, கட்டுவிரியன்-- நரம்புமண்டலத்தைத் தாக்குபவை.
2.கண்ணாடி விரியன்(RUSSELS VIPER), சுருட்டை விரியன்(SAWSCALED VIPER)-- இரண்டும் இரத்தத்தினை உறையவிடாமல் தடுப்பவை.


கண்ணாடி விரியன்,சுருட்டை விரியன்:

நல்ல பாம்பு போல் இவை அதிகம் ஆபத்துள்ளவை அல்ல.
1.கடிபட்டவர்களில் 50%க்கு சதவீதத்தினரை விசம் தாக்குவதில்லை.

2.25% த்தினருக்கு விசத்தின் அறிகுறிகள் தெரியும். ஆயினும் அனைவரும் இறப்பதில்லை.

3.கடிபட்ட 10 நிமிடத்தில் கடிவாய் சிவந்து வீங்கி விடும்.
15 நிமிடத்தில் கடிவாயில் இருந்து இரத்தம் கலந்த நீர் வடியத் துவங்கும். விசம் குறைவாக இருந்தால் வீக்கம் முழங்கை அல்லது முழங்காலுடன் நின்று விடும்.

4.விசம் குறிப்பிடத்தக்க அளவு உடலில் ஏறியிருப்பின் வலி,வாந்தி,வேர்வை,வயிற்றுவலி ஆகியவை இருக்கும். இரண்டு மணி நேரத்தில் மயக்கம் ஏற்படும். இவை அடுத்த 2 மணி நேரத்தில் சரியாகிவிடும்.இரு நாளில் வீக்கம் உடலில் பரவும். பொதுவாக நோயாளிகள் இரண்டு நாளில் குணமடைவர்.

5.கடி பலமாக இருந்தால் மயக்கம் அதிகம் இருக்கும். இரத்த சிவப்பணு, பிளேட்லெட்டுகள் குறையும். சிறு நீரில் இரத்தம்,சர்க்கரை, புரதம் வெளிப்படும். இரத்தம் உறையும் தனமை குறையும். பல் ஈறுகள், ஆசனவாய், கடிபட்ட இடம் ஆகியவற்றிலிருவ்து இரத்தக்கசிவு ஏற்படும்.சிறு நீரகம் செயலிழக்க ஆரம்பிக்கும். நுறையீரல் செயலிழத்தல், கண் பார்வை மங்குதல், தலைவலி, கடிவாய் புண் பொ¢தாகி, கடிபட்ட பகுதி பெரிதாக வீங்குதல் ஆகியவை இருக்கும். உடலுக்குள் இரத்தக்கசிவாலும், உடலுறுப்புகள் செயலிழப்பாலும் இறப்பு ஏற்படலாம்.


சிகிச்சைகள் முதல் பாகத்தில் தரப்பட்டுள்ளன. பாம்பு கடித்தால் என்ன ஏற்படும் என்று எளிமையாகத் தொ¢ந்து கொள்ளவே இந்தப்பதிவு. ஆகையினால் இதன் பயன் பற்றிக் கருத்துத் தெரிவிக்கவும்.

***
thanks தமிழ் துளி
***


"வாழ்க வளமுடன்"

பாம்பு கடித்தால் சரியான சிகிச்சை, உரியநேரத்தில் செய்யவேண்டியது அவசியம்பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரியநேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.


உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.


இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விசமுள்ளவை.


ஒவ்வொரு வருடமும் ஏற்க்குறைய இரண்டு லட்சம் நபர்கள் பாம்புகடிக்கு ஆளாகிறார்கள்.அவர்களில் 15000-20000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு(COBRA). இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில்( COBRA HOOD) இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும்.சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் ப்டத்தில் கண் இருக்காது.

இறந்த் பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம்.

நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்

நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

1.கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.

2.கடிவாயிலிருந்த் இரத்தத்துடன் நீர் கசியும்.

3.30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.

4.சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.

5. நடம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைகள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.

6.கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.

7.கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.

8.சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சுவிடுதல்( RESPIRATORY PARALYSIS) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.

9.அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.

10.சிகிச்சை:

முதலுதவி- கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிகளின் வழியாக விசம் பரவுவது குறையும்.
கடித்த கால் அல்லது கைப்பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.


மருந்துகள்:

விச முறிவு மருந்த் தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசதட்தையும் குணப்படுத்தும்.
விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள்(VENTILATOR) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.


நல்ல பாம்பு கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள்:

அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்,
கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.
உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.


***
thanks தமிழ் துளி
***


"வாழ்க வளமுடன்"

தண்ணீருக்குள் நிகழும் சுக பிரசவம்!


அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் தான் இந்த `தண்ணீருக்குள் பிரசவம்' பிரபலமாக இருக்கிறது.

பாதுகாப்பான தொட்டிக்குள் இதமான சூட்டில் நீரை நிரப்புவார்கள். அது நமது உடல் சூட்டின் அளவான 37 டிகிரி சென்டி கிரேடில் இருக்கும். பிரசவ வலி என்பது பொதுவாக 10 முதல் 12 மணிநேரம் வரை இருக்கும். அந்த வலி தொடங்கும் நேரத்தில் கர்ப்பிணியை உள்ளே இறக்குவார்கள். வயிறு முழுமையாக நீருக்குள் மூழ்கியிருக்கும். தோள்பட்டை வரை நீர் நிரம்பியிருக்கும். `பிரசவத்திற்குரிய நிலையில்' உட்கார வைப்பார்கள். தொட்டிக்குள் இருக்கும் நீர் வெளியேறிக்கொண்டும், புதிய நீர் வந்து கொண்டும் இருக்கும்.


தண்ணீர் பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கு என்ன பலன்?

பிரசவ வலியில் 60 சதவீதம் குறையும் வாய்ப்பிருக்கிறது. தசைகள் நன்றாக ரிலாக்ஸ் ஆகும். முதுகுதண்டு வடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். குழந்தையை வெளியேற்ற கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையும் சீராக இருக்கும்.

பிரசவ வலியை உருவாக்கி, பிரசவ செயல்பாட்டை முழுமைப்படுத்துவது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன். தண்ணீருக்குள் பிரசவம் நடக்கும்போது நீரின் சுழற்சி இதமாக, மிதமாக இருந்து கொண்டிருப்பதால் இந்த ஹார்மோன் சீராக வெளிப்பட்டு பிரசவ செயல்பாட்டுக்கு நன்றாக ஒத்துழைக்கும். கர்ப்பிணியின் யோனிக் குழாயின் தசைகள் நெகிழ்ந்து, குழந்தை எளிதாக வெளியே வரும் சூழலும் ஏற்படும்.

தண்ணீருக்குள் நடக்கும் பிரசவத்தில் குழந்தை வெளியே வரும்போது தண்ணீருக்குள் சிக்கிக் கொள்ளாதா?!

உன் வயிற்றுக்குள் இருக்கும் பனிக்குட நீரில் நீந்தியபடிதான் உன் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும். பிரசவத்தின்போது குழந்தை வெளியே வந்து அதன் மீது காற்று பட்டபின்பு தான் குழந்தை சுவாசம் எடுக்கும். அதனால் அது தண்ணீருக்குள் பிறந்தாலும், சுவாசம் எடுக்காது. தண்ணீரையும் குடிக்காது. தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தபின்பு தான் அதன் மீது காற்று படும். சுவாசம் எடுக்கும். இதில் பயப்படத் தேவையில்லை.

தண்ணீர் பிரசவத்தால் நிறைய பலன்கள் இருந்தாலும் பாதிப்புகளும் ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்யும்?!

சரிதான்! தொப்புள் கொடியின் நீளம் குழந்தைக்கு குழந்தை மாறும். குழந்தை பிறந்து வெளியே வரும்போது, அதன் தொப்புள் கொடி நீளம் குறைவாக இருந்து சரியாக கவனிக்காவிட்டால், அது கிழிந்து குழந்தையின் ரத்தம் வெளியேறி விடும். அதனால் தண்ணீரில் பிரசவம் நடக்கும்போது குழந்தையின் தொப்புள் கொடி அளவை கவனமாக கவனித்து பாதிப்பு ஏற்படாத அளவு கையாளவேண்டும்.

இன்னொரு விஷயம், பிரசவத்தின்போது தாயின் உதிரப்போக்கை தண்ணீருக்குள் சரியாக கணிக்க முடியாது. அதனால் அளவுக்குமீறி ரத்தம் வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியில் பயன்படுத்தும் நீர் சுத்தம் இல்லாததாக இருந்தால் தாய்க்கு `இன்பெக்ஷன்' ஏற்படலாம். பனிக்குடம் முன்னமே உடைந்து பிரசவம் தாமதித்தாலும் இன்பெக்ஷன் ஏற்படலாம். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தண்ணீருக்குள் உன் பிரசவத்தை அமைத்துக் கொள்ள விரும்பினால் நிறைமாதத்திற்கு வரும்போதிலிருந்து உன் ரத்த அழுத்தம் கவனிக்கப்பட வேண்டும். பிரசவத்தில் குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அங்கு உன்னை பரிசோதிக்கும் டாக்டர்கள் மூலம் ஆராய வேண்டும். ஒருவேளை உன் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தாலும் தண்ணீர் பிரசவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க வேறு எந்த நெருக்கடிகளும் இல்லாமல் இருந்தால் நீ தைரியமாக தண்ணீரில் பிரசவித்துக் கொள்ளலாம்.


***
thanks கூகுளே
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "