...

"வாழ்க வளமுடன்"

26 ஜூலை, 2011

பெண்களுக்கான அபாய அறிவிப்புகள்!

பெண்கள் பொதுவாகவே தமது வீட்டு வேலைகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகவும் மும்முரமாக ஈடுபடுபவர்கள். அவர்களுக்குத் தமது உடலைப் பற்றிக் கவனிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. குளிர்காலத்தில் கண்டிப்பாகப் பாவிக்க வேண்டிய மொய்சரைசர்களைப் பாவிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லை.உங்களுக்குத் தொடர்ச்சியாக முடி உதிர்கிறது என்றால் வழுக்கை ஏற்படுவதை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உங்கள் உடலை உடனடியாகக் கவனிக்க வேண்டிய நேரம் வருவதை சில அபாய அறிகுறிகள் கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.இந்தக் கட்டுரையில் நாம் உங்களுக்கு எளிதாக கையாளப்படக்கூடிய 4 அபாய எச்சரிக்கைக் குறிகளை அடையாளப்படுத்தியுள்ளோம். வயது அதிகரிக்கும்போது இந்த எச்சரிக்கைக் குறிகளும் தென்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை வாசித்துப் பாருங்கள்.1. முடி உதிர்தல்

அன்றாடம் முடி உதிர்வதை எதிர்கொள்கின்றீர்களா? அப்படியானால் அவதானமாக இருங்கள். இது வழுக்கை, போசாக்கின்மை ஏதாவது ஒருவகை சர்க்கரை வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சர்க்கரை வியாதிகள் அனட்ரோஜன் அல்லது ஹைப்பர்தைரோய்டிசத்துடன் தொடர்புபட்டிருக்கலாம். தைராய்டு அதிகரிப்பதன் காரணமாக ஏற்படக்கூடிய இந்த ஹைப்பர் தைரோய்டிசம் பெண்களில் 7 மடங்கு அதிகம் காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. தொடர்ச்சியான குளிர்

தொடர்ச்சியாக குளிரில் நடுங்குவது போன்ற உணர்வு ஆண்டு முழுவதும் தொடர்ந்தால் ஹைப்போதைராய்டிசம் காரணமாக இருக்கக்கூடும். இது பெண்களில் உடல் பருமன் அதிகரிப்பு, மலச்சிக்கல், முடி, தோல் மற்றும் நகம் வரட்சியடைதல் போன்றவற்றை ஏற்படுத்தும். இவை பொதுவாக பெண்களின் 50 வயதின் போது ஏற்படக்கூடியவை.
3. வரண்ட வாய் மற்றும் கண்கள்

குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கண்கள், தோல் மற்றும் வாய் வரட்சியடைதல் ஏற்படுகிறது. குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பமான அறைகளில் இருப்பதன் காரணமாகவே இவை பொதுவாக ஏற்படக் கூடும். ஆனால் 40 முதல் 50 வயதுடைய பெண்கள் மத்தியில் ஏற்படக்கூடிய ளுதழசபசநn நோய்த்தாக்கத்தின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். இதனைக் கவனிக்காமல் விடுவதால் கண் பிரச்சினைகள், பற்சிதைவு, பல்லீறு நோய்கள் போன்றவை ஏற்படுவதுடன் இனப்பெருக்க மற்றும் ஜீரணத் தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெறுவது தான் சிறந்த வழி.
4. அதிகமான வாயு


அதிகமான வாயுப் பிரச்சினை லக்டோஸ் சகிப்புத் தன்மையின்மை அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படக்கூடும். ஆனால், இது சிலவேளைகளில் உணவுப்பாதை வயிறு மற்றும் குடல்கள் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். சமிபாட்டுத் தொகுதியில் புற்றுநோய் ஏற்படவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், பெல்விக் மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படல், சாப்பிடக் கடினமாக உணர்தல் அல்லது விரைவாக நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படல் போன்றவையும் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள் தான்.


***

thanks vm

****

"வாழ்க வளமுடன்"

நீண்ட நாள் வாழ்க்கைக்கு – ஆரோக்கியப் பழக்கங்கள்ஒவ்வொரு நாளும் காலை உணவு உண்கின்றீர்களா?

எப்பொழுதும் படிக்கட்டைப் பயன்படுத்துகிறீர்களா?உங்களுடைய அன்றாட செயற்பாடுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.


நாம் அன்றாடம் செய்கின்ற செயல்கள் எம் வாழ்வில் ஒரு சிறிய விடயமாகத் தோன்றலாம், ஆனால் நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்வது உங்கள் வாழ்நாளைக் கூட்டும்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்தல்


தொழில்நுட்பங்கள் எமது வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், ஆரோக்கியமானதாக்கி விடவில்லை.அன்றாட உடற்பயிற்சி நிச்சயமாக எமக்கு ஒரு வரம் போன்றது. உண்மையில், ஆய்வுகள் உடற்பயிற்சியானது உங்கள் வாழ்நாளில் 3 ஆண்டுகளைக் கூட்டுகிறது என பரிந்துரைக்கின்றன.எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் வேலைத்தளத்திற்கு நடந்து செல்லங்கள்.நீண்ட தூரம் இல்லாவிட்டாலும் ஒரு குறுகிய தூரமாவது நடக்கலாம்.
பெரிய கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் நடப்பதற்குப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். இவை மிகவும் எளிதானவை தானே?


ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ளுங்கள்


காலை உணவை அன்றாடம் உட்கொள்வது நீண்ட நாள் வாழ்வதற்கான ஆரோக்கியமான பழக்கவழக்கமாகும்.


காலை உணவைத் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடுகையில் அன்றாடம் காலை உணவை நேரத்தோடு உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவது குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இதைவிட முக்கியமானது காலை உணவை உட்கொள்வது மனதிற்கும் உடலுக்கும் உற்சாகத்தை ஊட்டி இனியதொரு காலையைத் தொடங்க உகந்த வழியாகும்.


கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் சிறிய அளவு கொழுப்பு கலந்த உணவினை காலையில் உட்கொள்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளதுபோதுமான அளவு உறங்குங்கள்


போதிய தூக்கமின்மை உங்கள் வாழ்நாளைக் குறைக்கும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின் இறுதி முடிவு இதுதான்.நாம் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை என்றாலும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்காமலிருப்பது பெரிய வியாதிகளான புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் உடற்பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும்.தூக்கமின்மை மட்டுமல்ல ஓய்வின்மையும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.மன அழுத்தம், கோபம் என்பன மிகப்பெரிய கொலையாளிகள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எனவே ஓய்வெடுத்துக்கொள்வதும் வாழ்நாளை சேமிக்கும்.இசையை ரசிப்பது, மசாஜ் செய்துகொள்வது, தியானம் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் ஓய்வாக இருப்பது வாழ்நாளை நிச்சயம் அதிகரிக்கும்.இவை உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.பற்களை தூய்மையாக வைத்திருங்கள்பற்களைத் துலக்கி கொப்பளித்து தூய்மையாக வைத்திருப்பதும் உங்கள் வாழ்நாளில் 6.4 வருடங்களை அதிகரிக்கும்.


இந்த மதிப்பீடு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது தெரியவில்லை ஆனால் உண்மையில் வாய்த்தூய்மையின்மை அருவருப்பான பல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.


அன்றாடம் பல் துலக்கி கொப்பளிப்பது வாயில் உள்ள பக்டீரியாக்களை நீக்கி பற்களை பாதுகாப்பதுடன் எமது இதயத்தையும் நோய்களிலிருந்து ஓரளவு பாதுகாக்கும்.
நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்

சிகிச்சைகளை விட நண்பர்கள் மலிவாகக் கிடைப்பார்கள் என்று ஒரு பழைய வாசகம் உண்டு.


இதனை ஆய்வாளர்கள் உண்மையென நிருபிக்கின்றனர்.


இது நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல சமூக மட்டத்தில் கோவில், விளையாட்டு சங்கங்கள் அல்லது சமையல் வகுப்புகள் என்று உங்களுடன் தொடர்புடைய எல்லாவற்றிற்கும் பொருந்தும்.


இவை உங்கள் உடல் மற்றும் உள நலத்துடன் தொடர்புடையவை. இவை சிறிய விடயங்களாக இருந்தாலும் உங்கள் வாழ்நாளைக் கூட்ட உதவும்.
***
thanks vm
***

"வாழ்க வளமுடன்"

மிருகக் கடியினைப் போலவே மனிதக் கடியும் ஆபத்தானது
மனிதனின் வாயில் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதன் காரணமாக மிருகக் கடியினைப் போலவே மனிதக் கடியும் ஆபத்தானது. கடியினால் காயம் ஏற்பட்டால் உடனடியாக காயத்தை சுத்தமாக்கி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது மிக முக்கியமானது. கடியின் தன்மையைப் பொறுத்து உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது.மனிதக் கடிகள் எவ்வாறு ஏற்படுகின்றன?


மனிதக்கடி நேரடியாகவோ (உதாரணமாக ஒரு குழந்தை ஒருவரைக் கடித்தல்) அல்லது மறைமுகமாகவோ (சண்டைகளின் போது அல்லது விளையாட்டுக்களின் போது தற்செயலாக) வாயினால் ஒருவருடைய உடற்பாகங்களைக் கடிப்பதினால் ஏற்படுகிறது.


பொதுவாக மனிதக் கடி கைகளில் தான் ஏற்படுகிறது, ஆனால் நேரடியாகக் கடிப்பது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இடம்பெறலாம். தோலில் கடித்துக் காயப்படுத்துவது கன்றிப்போதல் அல்லது திசு சேதங்கள் மற்றும் தொற்றுக்கள் ஏற்படல் போன்றவற்றிற்கு காரணமாக அமையும். டெட்டனஸ் மற்றும் ஹெபாடைட்டிஸ் பி போன்ற தொற்றுக்களை மனிதக் கடி பரப்பும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காயத்தை ஏற்படுத்தும் கடி


காயங்கள், துளைகளை ஏற்படுத்தும் கடியினால் மேலோட்டமான அல்லது ஆழமான புண்கள் ஏற்பட்டு உதிரப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆழமாகக் கடிப்பது உதிரப்போக்கை ஏற்படுத்தும், இதற்கான முதலுதவியின் முதற் படி அந்தக் காயத்தை சோப் மற்றும் நீரினால் தூய்மைப்படுத்தி அதிலுள்ள பாக்டீரியாக்களை அகற்றுவது தான்.
ஆழமான கடி

ஆழமான கடிகளின் போது தசை நாண்கள் அல்லது மூட்டுக்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கணுக்களில் ஏற்படும் ஆழ்ந்த கடிகள் காரணமாக எலும்புகள் மற்றும் தசைநார்களில் சேதங்கள் ஏற்பட்டு அந்தக் காயம் ஒழுங்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் விடப்பட்டால் நீண்டகால வலிகளுக்கு வழிகோலும். எனவே இதனை எக்ஸ்ரே மூலம் மருத்துவர் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலோட்டமான கடி

மேலோட்டமான கடி காயங்களை ஏற்படுத்தாவிட்டாலும் திசுக்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடும். இவ்வாறான பெரும்பாலான கடிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும். குளிர்ந்த ஒத்தனம் வீக்கமடைவதிலிருந்து தடுக்கும். ஆழமான கடி இல்லாவிட்டாலும் அதைக் கழுவி சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களை நீக்குவது நல்லது.

***
thanks vanakkam
***

"வாழ்க வளமுடன்"

கவனியுங்கள்! உங்கள் பிள்ளைகளின் பற்சுகாதாரம் மிக முக்கியம்குழந்தைகள் சரியான வாய்ச் சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணுவதன் மூலம் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.தினமும் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல், வாய் சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்வதன் ஊடாக பல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.தமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டாயமாக பற் சுகாதாரம் பற்றி செய்முறையாகவும், உதாரணத்துடனும் செய்து காட்ட வேண்டும். குடும்பத்துடன் பல் துளக்கி குடும்பத்துடன் புன்னகையுங்கள்.அறிவுறுத்தல்கள்.1. குழந்தைகளுக்கானது,

உங்கள் குழந்தையின் பற்கள் வெளிவரும் போது பற்களை மெருதுவான சுத்தம் செய்யும் துணி கொண்டு தினசரி 2 முறை சுத்தம் செய்யுங்கள். குழந்தைகளின் பற்களிலுள்ள ‘எனாமல்’ எனும் பதார்த்தம் வயது வந்தவர்களின் ‘எனாமலை’ விட மிகவும் மெல்லியது.தொடர்ச்சியான சுத்தப்படுத்தல் பற் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும். இரண்டு வயது வரை சுத்தமான நீர் பயன்படுத்துங்கள். அல்லது சிறிய பயறளவு புளோரைட் அடங்கிய பற்பசையை பயன்படுத்துங்கள்.இது பற்களை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல பற்கள் வளரும் போது மென்மையான தன்மையை கொடுக்கும். மெருதுவான பற்கள் விரைவில் ஒன்றுடன் ஒன்று சேரும் போது, இரண்டு பற்களுக்குமிடையில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தும்.குழந்தைகளை அவர்களின் முதலாவது பிறந்த நாளுக்கு அண்மித்தாக அவர்களை அவர்களின் பல் தொடர்பான ஆலோசனையை பெற பல் வைத்தியரிடம் அழைத்துச் செல்லும் படி அமெரிக்காவின் பல் வைத்தியர் சங்கம் கூறுகிறது.இதனால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளை மதிப்பிட்டு அவற்றுக்கான மருத்துவ சேவையையும் வழங்க முடியும்.

2. 3-7 வயது


3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தமது பற்களை, குழந்தைகளுக்கான, மென்மையான பற் தூரிகை கொண்டு பல் துளக்க வேண்டும்.ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை பல் துளக்க கற்றுக் கொடுங்கள். நீர் கொண்டு வாயை கொப்பளித்து, சுத்தம் செய்யவும் பழக்கிக் கொடுங்கள்.6-7 வயதை அடையும் வரை அவர்கள் அவர்களின் பெற்றோர்களின் மேற்பார்வையில் பல் துளக்க வேண்டும். சிறுவர் பெரியோர்களை பார்த்து செய்வதில் ஆர்வம் காட்டுவர்.ஆகவே பெற்றோர், பல் துளக்கும் போதும் சரியா முறையை பின்பற்றுங்கள். உங்களை பார்த்து உங்கள் பிள்ளைகளும் சரியாக செய்வர்.6-12 வாரங்களுக்கு ஒரு முறை பற்தூரிகையை மாற்றுங்கள். பற்தூரிகையின் அளவு அவர்களின் வயது அதிகரிக்கும் போது மாறுபடும். புபற்தூரிகைகளை தெரிவு செய்யும் போது நடுத்தர தூரிகைகளை கொண்ட, சிறிய தலையை உடையதை தெரிவு செய்யுங்கள்.
3. ‘ப்ளேக்’ பரிசோதனை


‘ப்ளேக்’ பரிசோதனை மூலம் உங்கள் குழந்தையின் பற் சுகாதாரம் பற்றி சோதித்துப் பாருங்கள். வெள்ளை நிற பதார்த்தமான இந்த ‘ப்ளேக்’ பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவில் கலந்து வரும் பற்றீரியாவை விருத்தியடையச் செய்யும்.பல் துளக்கிய பின் ‘ப்ளேக்’ பற்களில் எந்தளவில் காணப்படுகிறது என்பதை அறிய, உணவிற்கு பயன்படுத்தப்படும் சிவப்பு நிறமூட்டியை 4 அல்லது 3 துளிகளை 2 மேசைக் கரண்டி நீருடன் ஒரு கடதாசி கோப்பையில் கலக்குங்கள்.10 நிமிடங்களுக்கு வாயிலிட்டு நன்றாக கொப்பளியுங்கள். தண்ணீர் தொட்டியினுள் அதனை துப்புங்கள். வாயை சிறிது நேரம் சுத்தம் செய்ய வேண்டாம். கண்ணாடியின் துணையுடன் உங்கள் பற்களில் சிவப்பு நிற புள்ளிகளாக தெரியும் ‘ப்ளேக்கை’ அடையாளம் காணுங்கள்.அதன் பின் பல்லை நன்றாக துளக்குங்கள். பற்களை துளக்கிய பின்னும் கண்ணாடியில் உங்கள் பற்களை நன்றாக கவனியுங்கள் எங்கெங்கு அந்த ‘ப்ளேக்’ காணப்படுகின்றன என்பதை.மீண்டும் பல் துளக்கி அவற்றை அகற்றுங்கள். நீங்கள் முதலில் பல் துளக்கிய போது நன்றாக துளக்குப்படவில்லை என்பதை உணருங்கள்.7 வயதின் பின் பெற்றோரின் நேரடியான கண்காணிப்பில் பல் துளக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் பெற்றோர் உங்கள் குழந்தைகள் சரியாக பல் துளக்குகின்றனரா என கண்காணிக்க தவற வேண்டாம்.ஓவ்வொரு 6 மாதங்களும் குடும்பத்தினருடன் சென்று பல் வைத்தியரிடம் பற்கள் தொடர்பான ஆலோசனை பெறுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
***
thanks google
***

"வாழ்க வளமுடன்"

முதலுதவிப் பெட்டியொன்றை இல்லத்தில் தயாரிப்பது எப்படி?முதலுதவி பெட்டி அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு அவசியமான பொருள். ஆனால் பெரும்பாலானோரின் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருப்பதில்லை. உண்மையைச் சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேரின் வீட்டில் இந்தப் பெட்டி இருக்கிறது?இன்றிலிருந்தாவது அனைவரது வீடுகளிலும் முதலுதவிப் பெட்டியை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு கடினமான விடயம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.மருந்துப் பொருட்களை வீட்டில் வைக்கும் போது குழந்தைகளின் கவனம் அவ்விடத்தில் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது அவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.தேவையான பொருட்கள் :• தண்ணீர் புகாத, சிறிய, உறுதியான பெட்டி அல்லது பை

• சிப் கொண்டு மூடப்படும் பைகள்

• காயங்களுக்கான மருந்துகள் :- (கிருமி நீக்கி, காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்ற மென்மையான துணி, மருந்து சேர்க்கப்பட்ட துணி, வலி நிவாரணி மற்றும் antibiotic )


• ஓரல் antihistamines


• மருத்துவ சாதனங்கள் (கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல்)


• அவசர தேவைக்கான மருந்துகள்


• மேலதிகமானவை, உங்கள் தேவைக்காக (அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து,ipecac, charcoal tablets )சிறிய பெட்டி அல்லது பையை தெரிவு செய்யுங்கள். அது கொண்டு செல்ல இலகுவானதாகவும், பாரமற்றதாகவும், சகல முதலுதவி பொருட்களையும் வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.அந்த பை அல்லது பெட்டி நீர் உட்செல்லாத வகையில் இருக்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் நேரங்களில் அதை எடுத்துச் செல்வீர்களானால் முதலுதவி பொருட்களை சிப் உள்ள பைக்குள் கவனமாக வையுங்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.உங்கள் முதலுதவி பை தேவையான சகல மருந்து உபகரணங்களையும் உள்ளடக்கியுள்ளதா என சரி பாருங்கள். ஒவ்வொரு பொருட்களின் எண்ணிக்கையும் உங்கள் குடும்ப அங்கத்தவரின் எண்ணிக்கைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்றன அதிகளவில் தேவைப்படுவன. மருந்து சேர்க்கப்பட்ட துணி, கிருமி நீக்கி, வலி நிவாரணி, 4 அங்குல பஞ்சு, வெவ்வேறு அளவுகளில் வலி நிவாரணி துணிகள், ஒட்டும் துணி, ஓரல் antihistamines கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல், antibiotic கிறீம் போன்றன உள்ளனவா என உறுதிப்படுத்துங்கள்.சில வேளைகளில் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒவ்வாமை ஏற்படுமானால் அதற்கான மருந்துகளையும் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து, ipecac, charcoal tablets என்பனவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். கட்டாயம் அவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் முதலுதவி பையை அல்லது பெட்டியை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதியில் அடிப்படை மருந்துப் பொருட்களும் உதாரணமாக மருந்து சேர்க்கப்பட்ட துணி, மருந்து நெய் போன்றனவும், இரண்டாவது பகுதியில் மருந்துகளையும் வையுங்கள். மீண்டும் ஒரு தடவை அனைத்துப் பொருட்களும் சிப் உள்ள பைகளில் போடப்பட்டுள்ளனவா என சரிபாருங்கள்.***
thanks vanakkam
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "