...

"வாழ்க வளமுடன்"

12 ஜனவரி, 2011

வேண்டாம் அசைவம்!

அசைவம் கூடாது என்று வலியுறுத்தியுள்ள வேதாத்திரி மகரிஷி, மாமிசம் உண்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார் : “மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறமை இல்லாததால்


அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன.

இதை குற்றம் என்று கூற முடியாது. விதை விதைத்து, தானே உணவை உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்ற ஆறறிவு மனிதர்களுக்கு இன்னொரு உயிரை உணவாக உட்கொள்ள வேண்டிய பழக்கம் தேவையில்லை. அதனால், மனிதன் பிற உயிரை உணவுக்காக கொல்வது நீதி ஆகாது. உணவுக்காக உயிர்க்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும். மாமிசமானது பிற உயிரினங்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பெறப்படுவதாகும்.அது, நம் உடல் அணுக்களில் கலந்தால் நம் எண்ணத்திலும் வன்முறை வளர வாய்ப்பை ஏற்படுத்தாதா? உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் புலால் உண்கின்ற சமுதாயங்களில் குற்றங்கள், போர்கள் அதிகமாக நிகழ்ந்தது தெரிய வரும். தாவர ஆகாரத்தை சாப்பிடுவதால் குடலுக்கு வலிமை ஏற்படும். சுலபமாக உடலுடன் கலந்து சத்தாக மாறிவிடும்.ஆனால், மாமிசம் உண்பதால் குடல் வலிமையும், ஜீரண பலமும் குறைந்து, உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைந்துவிடும். மாமிசம் உண்பவர்கள் ஒரே தாவலில் தாவர உணவுக்கு வந்துவிட தேவையில்லை. அப்படி முயன்றால், ரத்தத்தில் ரசாயன மாறுபாடு ஏற்பட்டு, நரம்புகளுக்கு பலவீனம் உண்டாகிவிடும்.சிலருக்கு நோய்களும் ஏற்படலாம். நீங்கள் சைவத்துக்கு மாற விரும்பினால் படிப்படியாகவே அந்த மாறுதலை மேற்கொள்ள வேண்டும்.உணவு மாற்றத்தை உடலும், மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில் மாமிச உணவை சிறிது சிறிதாக குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி, 2, 3 மாதங்கள் இவ்வாறு உட்கொண்டால் சாத்வீக உணவு முறையினை பழக்கமாக்கிக் கொள்ளலாம். குழந்தை முதலே தாவர உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டமே தோன்றாது” என்கிறார் வேதாத்திரி மகரிஷி.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

பொன்மொழிகள் :)பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

*

என்னால் முடியும் என்பது
தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது
அகம்பாவம்

*

கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!

*

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

*

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!

*ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

*

ஆசையில்லாத முயற்சியால்
பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

*

தோழர்களே!
பயணம் போவோம்!
நாட்களை நம்பியல்ல,
நம்மிரு தோள்களை நம்பி!

*

நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!

*

பத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா?
புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள்.

*

ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா?
இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

*

ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயைக் கேளுங்கள்.

*

ஒரு வாரத்தின் அருமை தெரிய வேண்டுமா?
வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

*

ஒரு மணியின் அருமை தெரிய வேண்டுமா?
காத்திருக்கும் காதலர்களைக் கேளுங்கள்.

*

ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களைக் கேளுங்கள்.

*

ஒரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

*

ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

*

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.
வெற்றிச் சிகரத்தில் கொடி நாட்டலாம்.
***
thanks படித்ததில் பிடித்தது
***


"வாழ்க வளமுடன்"

இயற்க்கை முறையில் அழகுக் குறிப்பு !

தற்போது பெரிய நகரங்களிலிருந்து,கிராமங்கள் வரை அழகு நிலையங்கள் இல்லாத ஊரே இல்லை எனலாம். தெருவுக்கு ஒன்று அல்லது இரண்டு ப்யூட்டி பார்லர்கள் இருக்கின்றன.இவற்றில் எத்தனை அங்கீகாரம் பெற்றவை என்பது வேறு விஷயம்.
முன்பு பார்லர் என்பது பணக்கார பெண்களுக்கும் நடிகைகளுக்கும் மட்டுமே உரியதாக இருந்து வந்தது. ஆனால் இன்று தினக்கூலி முதல் கவர்னர் வரை பார்லர் போகாத பெண்களே இல்லை எனலாம். அத்தகைய பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் செல்கின்றனர். அவர்களுக்கெனத் தனி பார்லர்களும் உள்ளன.

அந்த அளவிற்கு அழகு பற்றிய விழிப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும் செல்கின்றனர். இந்த அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட டிவி சேனல்கள், பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் உறுதுணையாக உள்ளன. நான் அழகுக்கலை நிபுணர் இல்லை என்றாலும் என் பங்குக்கு எனக்குத் தெரிந்த, படித்த அழகுக் குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


**

•காய்ச்சாத பாலை முகத்தில் பூசி,சில நிமிடம் கழித்துப் பஞ்சால் துடைத்தால் முகம் பளிச்சென்றும், மிருதுவாகவும் இருக்கும்,


•ஒரு டீஸ்பூன் பாலுடன் சில துளி கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்துப் பூசினால் முகம் பொலிவு பெறும்.


•பாசிப் பயறு மாவு அல்லது முல்தானிமட்டியுடன் ரோஸ்வாட்டர் கலந்துப் பூசினால் முகம் பொலிவுறும்.


•உருளைக்கிழங்கு சாறு அல்லது கேரட் சாறு எடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.


•கடலை மாவுடன் பால் ஏடு கலந்து பூசி வந்தால் பருக்கள் மறையும்.


•சோம்பைப் பவுடராக்கி ரோஸ்வாட்டர் கலந்துப் பூசினாலும் பருக்கள் குறையும்.


•புதினா இலையை அரைத்து பரு உள்ள இடங்களில் தடவலாம்.


•தேனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து தேய்த்து வந்தால் கழுத்தின் கருமை நிறம் நீங்கும்.


•அன்னாசிப் பழச்சாறுடன் முல்தானிமட்டி கலந்துப் பூசினால் கழுத்தில் கறுப்பு நிறம் மறையும்.


•புளித்தத் தயிரை முகம் மற்றும் கைகளில் தேய்த்து வந்தால் வெயிலினால் ஏற்படும் கருமை மாறும்.


***
thanks ஜிஜி
***

"வாழ்க வளமுடன்"

வாயை சுத்தமாக, துர்நாற்றமின்றி இருக்க சில வழிகள் :)

சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

*

ஃபிளாஸ் (குடடிளள) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால், உபயோகித்து முடித்தவுடன் ஃபிளாஸை முகர்ந்து பார்க்கவும்!!!

*

அதன்பிறகு ஒரு நாளும் ஃபிளாஸை மறக்க மாட்டீர்கள்.பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

*

அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது.

*

சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.மூக்கடைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். நறுமண மென்த்தால் மாத்திரைகள் இதற்கு உதவும்.

*

இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களாலும் இந்நிலை உருவாகலாம்.


***
thanks தசேஉ
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "