...

"வாழ்க வளமுடன்"

15 ஏப்ரல், 2010

பப்பாளி இலைச் சாறுகள்

பப்பாளி இலைச் சாறு புற்று நோய் ( கட்டி )செல்களை அழிக்கிறது.உலர்ந்த பப்பாளி இலை தூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்று கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வள்ர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாள்ர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

*

ஆய்வாள்ர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதியல் பொருள்கள்புற்று கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள் ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வென்னீரில் போட்டு இஅதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.
*
ஏற்கனவே ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செர்வைக்ஸ் மார்புப் புற்று, ஈரல் புற்று, நுறையீரல் புற்று, கனையப் புற்று போன்ற 10 வகை புற்றுக் கட்டிகள் மீது நான்கு திறனிலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வடி நீரை செலுத்தி சோதனை செய்தனர். எல்லா புற்று நோய்கட்டிகளின் வளர்ச்சி வேகமும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
*
வடி நீர் செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு புற்றுக் கட்டிகளை சோதிக்கும் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சி குறிஅந்ததை அறிந்தனர். எவ்வளவு வரி நீர் அதிகமாக ஒரு புற்று கட்டிக்கு தரப்பட்டதோ அந்த அளவுக்கு புற்று கட்டிகளின் வளர்ச்சி குறைவாக இருந்தது .
*
பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுகட்டிகளின் வளர்ச்ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமா வகை புற்றுக் கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.புற்றுக் கட்டிகள் வளரக் கரணமான செல்கள் தாமாகவே அளிய தேவையான தூன்டுதலை பப்பாளி இலை வடி நீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

*
நன்றி தமிழ்குடும்பம்.
நன்றி தின‌க‌ர‌ன்.

***
"வாழ்க வளமுடன் "

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காய் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம்.எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.


*

இந்த மலை தான் ( Cardamom Hill ) ஏலக்காய் மலை.மிகையான உற்பத்தியெய் இந்திய துணைகண்டம் அண்மைவரை தக்க வைந்துஇருந்தாலும் , ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை கட்டமலா (Guatemala) விடம் இழந்துள்ளது. இந்திய துனைகண்டத்தில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

*

மேலும்:

*
1. Guatemala- கட்டமால.

2. India- இந்தியா.

3. Tanzania- தன்சானியா.

4. Sri Lanka- இலங்கை.

5. El Salvador- எல் சல்வடோர்.

6. Vietnam- வியட்னாம்.

7. Laos- இலாசு.

8. Cambodia- கம்போடியா.

9. Papua New Guinea- பாபா புதிய கினியா.

10. Thailand- தாய்லாந்து.

11. Honduras- கோன்றாசு.

12. Nepal- நேபால்.

13. Bhutan- பூட்டான்.

***

மருத்துவ குணங்கள்:


1. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

*

2. . மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக ப‌ய‌ன் ப‌டுகிற‌து.

*

3. செரிமானத்தை தூண்டுவதாக, குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு.

*

4. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும். ஏலக்காய், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லது.

*

5. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

*

6. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

*

7. ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும், இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

*

8. ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.

*

9. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.


*

10. அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.


***

புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:

*


1. ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும்.

*

2. "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.

*

3. இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும்.

***

www.hi2web.com
http://www.alaikal.com/news/?m=200803&paged=25
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D


***

நன்றி அதிகாலை.
நன்றி hi2
நன்றி விக்கிபீடியா

***

"வாழ்க வளமுடன் "

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "