...

"வாழ்க வளமுடன்"

14 நவம்பர், 2010

எடை குறைய உணவைத் தவிர்க்கலாமா?

இன்றைய அவசர உலகில் மூன்று வயது குட்டி முதல் முதியவர் வரை அனைவருமே பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் சூழல்.ஆதலால், உணவு, உடை மற்றும் இத்யாதிகள் அனைத்திலுமே பாஸ்ட் கலாச்சாரத்துக்கு மாறிவருகிறோம். அதை போலவே உடலின் ஆரோக்கியமும் வேகமாக கெட்டு வருகிறது. இதன் முதல் படிதான் உடல் குண்டாவது. இப்படி உடம்பு குண்டாகும்போது அது நோய்த்தாக்குதலுக்கு ஏதுவாக அமைகிறது.

*

ஆனால் எல்லாருக்குமே ஒல்லியாக உடம்பு அமையவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பட்டினி கிடந்தால் குண்டு உடல் குறைந்து விடும் என்று நினைப்பது தவறு. இதனால் உடலில் வேறு ஏதாவது நோய் ஏற்படும். ஆதலால் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.

*

சரியான முறையான உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். மிகவும் கடினமான பயிற்சிகள் வேண்டாம். எளிமையான பயிற்சிகளை வீட்டில் இருந்தே பண்ணலாம். வீட்டுக்குள்ளேயே நடைப் பயிற்சி செய்யலாம். அதேபோல், வீட்டு வேலைகளுக்கு எவ்வித எந்திரத்தையும் பயன்படுத்தாமல் நீங்களாகவே செய்யலாம்.

*

துணி துவைப்பது, மாவாட்டுவது என உடலை இயக்கும் வேலைகளை செய்யுங்கள். உடற்பயிற்சியை முறையாகத் தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் வலியோ, வேறு விதமான பிரச்சினைகளோ ஏற்படுவதில்லை.

*

உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் போதும். இதய துடிப்பு உயரும். அதேபோல் சாப்பாட்டு விஷயத்தில் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.முதலில் நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுங்கள். தினமும் குறிப்பிட்ட அளவை சாப்பிடப் பழகுங்கள். அதாவது ஒருநாள் நன்றாக பசிக்குது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.

*

இடையில் பசி எடுக்கும்போது... வீணாக சிப்ஸ், பிட்சா என கண்டதையும் வாங்கி சாப்பிடாதீர்கள். பசி எடுக்கும்போதே பழங்கள், ஜூஸ் என்று சாப்பிடுங்கள்.அசைவ உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. அதாவது சிக்கன், மட்டன் வகை உணவுகளில் கொழுப்பு, எண்ணை தவிர்த்து, வேகவைத்து சாப்பிடலாம். மீன் வகையில் பொரித்த... வறுத்த ஐட்டங்களை தவிர்க்கலாம்.


*

தினமும் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து செல்லுங்கள். காலையில் நடப்பது நல்லது... முடியாவிட்டால் அந்தி சாய்ந்த மாலையிலும் நடக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகப்படுத்தலாம்.

*

எக்காரணம் கொண்டும் எண்ணை பொருட்களை சாப்பிடவேண்டாம். குறிப்பாக எண்ணையில் பொரிக்கும் அனைத்து வகைகளையும் தவிர்ப்பதே மிகவும் நல்லது.பால் வகை உணவுகளையும் தவிர்க்கலாம். ப்ரைடு, பப்ஸ், சமோசா போன்ற உணவுகளையும் தவிர்த்து தினமும் வாழைப் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.

*

உங்களுடைய வயது, உயரத்துக்கு தகுந்த எடை எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அடிக்கடி உங்களுடைய எடை என்ன என்பதை கவனியுங்கள். கொஞ்சம் கூடினாலும் உடனே குறைக்க முயற்சியுங்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களுடைய உடம்பை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏதாவது மாத்திரை, மருந்து சாப்பிடுவதாக இருந்தால் உங்களுடைய எடை அதிகமாகாமல் டாக்டரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

*

இரவு நேரத்தில் வேலை பார்க்கும் சில பெண்களுக்கு உணவு, உறக்கம் ஆகிய பழக்கம் மாறும். இவர்களுக்கு சீக்கிரமே உடலில் எடை கூடும். இவர்கள் உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.


***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"

அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'!

நியூயார்க், அக். 24: அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள்.

*

ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

*

அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

*

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்டநாள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையை கண்டறிந்திருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

*

எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

*

அவர்களது கண்டுபிடிப்பின்படி, அழுகிய முட்டையை வைத்து ரத்த அழுத்தத்துக்கு மருத்துவம் மேற்கொள்ளும் காலமும் வரலாம். அப்போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல், மயக்கத்துக்கும் மருந்து, மாத்திரைகளை நாம் தயாராக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.


***

thanks dinamani
***


"வாழ்க வளமுடன்"

ஆப்பிளும்... ஆரோக்கியமும்..!

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும்.இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.

*

இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

*

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

*

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.

*

வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.***
நன்றி - மாலை மலர்
***


"வாழ்க வளமுடன்"

தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

*

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,


மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


***

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

*

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

*

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

*

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)

*

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

*

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

*

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.


ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.


பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.


*

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?***
thanks adhikaalai 2008
***
"வாழ்க வளமுடன்"

கேன்சர், நீரழிவு தடுக்க சைவ உணவுகள்

மாரடைப்பு, கேன்சர், டயபடீஸ் (நீரழிவு) உடல் பருமன் ஆகியவற்றைத் தடுக்க சைவ உணவுகள் சிறப்பாக உதவுவதாக அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு சங்கத்தின் (ஏடிஏ) சார்பில் பால்டிமோர் வெஜிடேரியன் ரிசோர்ஸ் குரூப், ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் இணைந்து உணவுப் பழக்கமும் உயிரைப் பறிக்கும் நோய்களும் பற்றி விரிவான ஆய்வு நடத்தியது.

**

அதன் முடிவுகள் பற்றி உணவியல் துறை பேராசிரியர் வின்ஸ்டன் கிரெய்க் கூறியதாவது:சைவ உணவுகள் எப்போதுமே ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழியாக உள்ளன. ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கின்றன. அதன்மூலம், இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதன் மூலம் உயர் மனஅழுத்தம் தவிர்க்கப்பட்டு, 2ம் வகை டயபடீஸ் வருவது தடுக்கப்படுகிறது.

*

அத்துடன், ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான பல சத்துக்கள் சைவ உணவில் அதிகம் நிறைந்துள்ளன. நார் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் சி, இ, போலேட், கரோடனாய்ட், ப்ளேவனாய்ட் ஆகியவை சைவ உணவில் அதிகம். பாலன்சான சைவ உணவுப் பழக்கத்தை கொண்டவர்களுக்கும், வித்தியாசமான உணவுப் பழக்கத்தை கொண்டவர்களுக்கும் ஆரோக்கிய நன்மைகள் வேறுபடுகிறது.

*

குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தையின் ஆரோக்கியத்தில் சைவ உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதில் சைவ உணவுகள் அதிகம் உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள், சோயா, புரோட்டீன், கால்சியம், விட்டமின் டி, கே, பொட்டாசியம் ஆகியவை எலும்புகள் நலனில் அதிக நன்மை செய்கின்றன என்றார்.


***
thanks "லங்காசிறீ"

***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "