...

"வாழ்க வளமுடன்"

07 ஜூன், 2011

அம்மாக்களே... ஊட்டி வளர்க்காதீர்கள்!


இனிய நிலா பாரதி... பெயருக்கு ஏற்ப இனிமையான குழந்தை. ஒன்றரை வயதான அந்தக் குட்டி செல்லம் அடம் பிடிக்காமல் சாப்பிடும்; சரியான நேரத்தில் தூங்கும். அவளைப் பார்க்கிற எல்லாரும், 'இந்த வயசுல எப்படி சமர்த்தா இருக்கா பாருங்க...' என்று ஆச்சர்யப்படுவார்கள். அவளின் மாமா மகன்... அருண்மொழிவர்மன், எல்.கே.ஜி. படிக்கும் அழகுப் பையன். ஆனால் எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, நினைத்ததைச் சாதிக்கும் முரட்டுக் குழந்தை. 'இதைச் செய்யாதே' என்றால், அதைத்தான் சிரத்தையாக செய்வான்.


'ஏன் இப்படி குழந்தைகள் முரண்படுகிறார்கள் குணத்திலும், பண்பிலும்?'

ஒரு குழந்தையின் பண்பும், ஒழுக்கமும் அதன் ஒரு வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பது ஆச்சர்யம்தானே?! அந்த வயதிலேயே, 'எனக்கு சாக்லேட்தான் பிடிக்கும், பிஸ்கட் கொஞ்சம்கூட பிடிக்காது' என்பது போன்ற விருப்பங்களையும், விருப்ப மின்மைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 18 மாதங்களான ஒரு குழந்தை... இடம், பொருள், ஏவல் பார்த்து தன் குணத்தையும் செய்கைகளையும் தீர்மானித்துக் கொள்கிறது என்கிற உண்மையைப் பெற்றோர்கள் உணர்ந்தால், ஒப்புக் கொண்டால்... குழந்தையின் பண்புகளை வார்த்தெடுக்க முடியும்!

ஒரு குழந்தையின் நடத்தை இரண்டு வகைப்படும். ஒன்று... வீட்டுக்குள் உருவாக்கப்படும் நடத்தை. மற்றொன்று... சமூகத்தால் உருவாக்கப்படும் நடத்தை. ஒரு குழந்தை மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறது, பேசுகிறது, மற்றவர்களை எப்படி மதிக்கிறது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது... சமூக நடத்தை. முழுக்க முழுக்க அம்மா, அப்பா, உறவுகள் என அதன் சுற்றுப்புறத்தை சார்ந்தே அமைவது... வீட்டுக்குள்ளான நடத்தை. மரபணுக்களின் ஆதிக்கம்... குணம், நடத்தை போன்ற விஷயங்களில் அதீதமாக இருக்காது; சுற்றுப்புறம்தான் அதனை அதிகம் பாதிக்கிறது.

ஒரு குழந்தை.... சாப்பிடுதல், தூக்கம், இயற்கை கடன் கழித்தல், ஆடை உடுத்துதல் போன்ற அடிப்படை விஷயங்களில் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதற்கான அடிப்படை... அதன் வீட்டில்தான் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்; குழந்தையும் அங்குதான் கற்றுக்கொள்ளும்.

1 - 4 வயதில் குழந்தை வைத்திருக்கும் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பல்... 'எம்பொண்னு சாப்பிடவே மாட்டேன்றா' என்பதுதான். இதில் எத்தனை அம்மாக்கள், தாங்கள் குடும்பத்தோடு சாப்பிடும்போது, குழந்தைக்கும் ஒரு தட்டில் சாப்பாடு வைத்து, 'சாப்பிடும்மா...' என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?

மடியில் வைத்து ஊட்டிவிடுவதை பெரும் வேலையாகவே செய்துகொண்டு இருந்தால்... அக்குழந்தைக்கு சாப்பாட்டு விஷயத்தில் ஒழுங்குமுறை வராது. மாறாக, சாப்பாட்டின் மீது வெறுப்பு வரும்... சாப்பாட்டுத் தட்டையே தட்டிவிடவும் செய்யும். இதையெல்லாம், 'பேட்டல் ஓவர் பிளேட்' (ஙிணீttறீமீ ஷீஸ்மீக்ஷீ ஜீறீணீtமீ) என்கிறது மனவியல் மருத்துவம்.




அப்படியானால் இப்பிரச்னையை எப்படிக் கையாள்வது?

வெரி சிம்பிள்! நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது அதற்கும் ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்துச் சாப்பிடப் பழக்குங்கள். 'அய்யோ... அவளா சாப்பிட்டா, எல்லாத்தையும் தரையில கொட்டி, எனக்கு வேலை வைப்பா... சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுவா' என்று காரணங்களை சொல்லும் அம்மாக்கள்... தன் குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறீர்கள் என்பதே உண்மை.

அதன் ஒழுக்கத்துக்கும் பண்புக்கும் நீங்களே முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதைச் செய்ய வேண்டுமா அம்மாக்களே..?

இதேபோல்தான், டாய்லெட் போகும் விஷயத்திலும். சில குழந்தைகளுக்கு இயற்கையான மலச்சிக்கல் இருக்கும். கொஞ்ச நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், 'ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம்' என்று அதற்கு இயற்கை உபாதை வருகிறதோ, இல்லையோ... 'மாலி பாப்பு, டாய்லெட் போடா செல்லம், போடா செல்லம்...' என்று தொடர்ந்து வற்புறுத்தினால், அது குழந்தையின் மனதுக்குள் ஒரு மன அழுத்தமாக அமர்ந்துகொண்டு, இயல்பான நடவடிக்கையைப் பாதிக்கும்.

எனவே, எந்தச் செயலிலும் இம்மாதிரியான வற்புறுத்தல்கள், பிரச்னையை அதிகப்படுத்தி, குழந்தையின் இயல்பான செயல்பாட்டினைக் குறைக்கும். குழந்தையின் செயல்பாட்டினை குறைப்பதும்... இயல்பாக இருக்க விடுவதும் உங்கள் கையில். உங்களின் இந்த அணுகுமுறையில் தான் குழந்தையின் ஒழுக்கமும் பண்பும் ஒளிந்திருக்கிறது!


*

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

***
thanks டாக்டர்
***







"வாழ்க வளமுடன்"

பொண்களுக்கு கழுத்தில் தெரிகிறது, வயது...!



பொதுவாக ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் பேசும்போது அனேகமாக கழுத்தைப் பார்த்து...அவர் போட்டிருக்கும் நகைகளை பார்த்து பேசுவது வழக்கம். ஆனால் பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை.


சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறையஆபரணங்களைப் போட்டு கழுத்து கருத்து போயிருக்கும். இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும்.


முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக்கூடாது. கழுத்து பகுதியில் எண்ணை சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும். இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது.


கழுத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தூக்கலாக மேக்-அப் செய்துகொண்டால், முகத்திற்கு பொருத்தமற்றதாக கழுத்து காணப்படும்.


இதன் விளைவால், `என்னங்க முகத்துக்கு பெயிண்ட் அடிச்சிருக்கீங்க?!' என்று தோழிகள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.


***

தோழிகள் உங்களை கிண்டலடிக்காமல், பாராட்டும் படி உங்கள் கழுத்து பளிச்சிட இதோ டிப்ஸ்:

கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். சிலருக்கு ஜீவனே இல்லாமல் இருக்கும். அவர்கள் முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.


வெயில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். தலைமுடியில் இருக்கும் எண்ணை பசைகூட கழுத்தில்பட்டு கறுக்கவைத்துவிடும். இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம்.


வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.


கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும். கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும்.


சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும்.


சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். அவர்கள் கழுத்து மட்டும் நிறம் கம்மியாகி கருத்துப்போயிருக்கும். கழுத்து நிறைய செயின் போடுவதால் கழுத்தில் முடிச்சு முடிச்சாக காணப்படும். அதே போல் கவரிங் செயின் போடும் பெண்களுக்கும் கழுத்து கறுப்பாகிவிடும்.


இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும். முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கறுத்து போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும்.


முகத்துக்கு ஏற்ற அழகை கழுத்தும் பெற்றிருந்தால் மட்டுமே பெண்கள் முழு அழகுடன் திகழ முடியும்.


***
thanks tn
***




"வாழ்க வளமுடன்"

பாதாம் கேக் செஞ்சு சாப்பிட வாங்க!!!!



தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்

மைதா மா - 250 கிராம்

சீனி - 250 கிராம்

மாஜரீன் - 250 கிராம்

முட்டை - 4

வனிலா - 1 தே. கரண்டி

பேக்கிங்பவுடர் - 15 கிராம்

செய்முறை

பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது) முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும். மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.

பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.

கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும். பின்பு பேக்கிங் தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F ல்; 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.


***
thanks google
***





"வாழ்க வளமுடன்"

நீங்கள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க...


வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்


அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம்


நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.


நண்பரையோ, உறவனிர்களையோ கேட்டு எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.


உணவு உண்டபின் எந்தக் காரணத்தைக் கொண்டும் உட்கார்ந்து கொள்வதோ படுத்துக் கொள்வதோ உடலுக்குப் பின்புறம் பருமனை அதிகப்படுத்தும்.


உடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.


இரவில் நன்கு உறக்கம் வராவிட்டால் அதற்காக மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு அரை டம்ளர் சூடான பால் அருந்தினால் உறக்கம் நிச்சயம்.


மஞ்சளைக் சூடாக்கி, பவுடராகக் செய்து கொண்டு அதை உப்புடன் சேர்த்துத் தினமும் பற்களைக் துலக்கின் வாய் துர்நாற்றம் மறையும்.


உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் ‘டின்’னில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், உலர்ந்த வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட டிரிங்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.


உணவு உண்ணும்போது மெதுவாக, அவசரம் இல்லாமல் சாப்பிட்டால் நல்லது. உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பருமனையும் குறைக்க முடியும்.


காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை வேலைகளைத் தொடங்குவதற்கு முன், ஏதாவது காலை உணவு சாப்பிட்டால்தான் அன்று முழுவதும் வேலை செய்ய சக்தி உண்டாகும்.


வீட்டில் குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை வலியச் செய்யும்போது, உடலுக்கு வடிவம் கிடைக்கும்.


எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.


வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.


வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.


குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.


முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.


முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.


களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.


உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.


பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.


அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.



***
thanks பனிப்புலம்
***




"வாழ்க வளமுடன்"

`வல்க்ரோ’ எப்படி கண்டுபிடிக்க பட்டது தெரியுமா?



காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள `வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு பிடிப்புக்கு `வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் `வல்க்ரோ’வுக்கு உண்டு.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "