...

"வாழ்க வளமுடன்"

06 ஆகஸ்ட், 2010

அரக்கு ( பொது அறிவு )

அரக்கு ( நகைகள் ) ஆபரனங்களுக்கு உள்ளே ஊற்றப்படும் ஒரு திரவம் என்று அனைவரும் அறிந்த விஷயம். ( கீழோ விழுந்தாலும் அது சொட்டை ஆகக்கூடது என்று ஊற்றப்படுகிறது.)

*



*

அரக்கு நமக்கு இயற்க்கையிலேயே கிடைக்கும் திரவம். பட்டு புழுவின் வாயில் இருந்து சுரக்கும் ஒருவகை திரவம் தான்.

*


எப்படி பட்டு நூலாகிறதோ அதே போல் தான் அரக்கும் நமக்கு ஒரு பூச்சியின் ( லாக்கிப்பேர் லாக்கா) வாயில் சுரக்கும் திரவத்தில் இருந்துதான் கிடைக்கிறது.

*


இந்த பூச்சியை "வாக்ஸின் லாக்கர்" என்றும் கூறுவர்.

*


அரக்கு "வேக்ஸ்" என்ற சொல், இந்தப் பூச்சியின் பெயரில் இருந்து வந்ததுதான்.


***


"ஜன்னல்கள் திறக்கின்றன" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
திரு. ராஜேஷ்குமார்.

நன்றி. ராஜேஷ்குமார்.


***

"வாழ்க வளமுடன்"

துப்பாக்கி பற்றி பொது அறிவு!

துப்பாக்கி நாம் படத்திலும், டீவி, போரிலும் பார்க்கிறோம். அதனை பற்றி அறிந்துக் கொள்வோம்.

*
*

***


1. முதன் முதலில் துப்பாக்கியை கண்டுபிடிதவர் ஒரு இளைஞர். ( அவருக்கு வயது 21 ) அவர் பெயர்: " சாம்வேல் கோல்ட் ". இவை 1835ல் கண்டுபிடிக்கப் பட்டது.


*

இவர் கண்டுபிடித்த துப்பாக்கியில் ஒவ்வொரு தோட்டா போட்டுதான் சுட முடியும்.


***


2. அதற்க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து "பாஸ்பெர்ரி" என்பவர் தனியங்கி துப்பாக்கியை கண்டுபிடித்தார்.


* **

3. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு "ஹிரம் ஸ்டீவன்ஸ் மேக்ஸிம்" என்பவர் 1908ல் " சைலன்சர்" துப்பாக்கியைக் கண்டுபிடித்தார்.


***



"ஜன்னல்கள் திறக்கின்றன" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
திரு. ராஜேஷ்குமார்.


நன்றி. ராஜேஷ்குமார்.

***


"வாழ்க வளமுடன்"

கடுகின் மருத்துவ குணங்கள்

கடுகில் இரண்டு வகை உண்டு.

1) கருங்கடுகு
2) வெண்கடுகு
இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.


இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

***

செரிமானத்தைத் தூண்ட

செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

***

இருமல் நீங்க

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

***

வயிற்றுவலி குணமாக

அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

***

நஞ்சு உண்டவர்களுக்கு

சிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.


கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.

***

சிறுநீர் பெருக்கி

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

***

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

***

விக்கல் நீங்க

வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.


***


கடுகு நாம் சமைக்கும் அனைத்து சமையலிலும் சேர்க்கிறோம். அதில் அப்படி என்ன சத்து உள்ளது. அதனை ஏன் குறைவாக சேர்க்கிறோம் என்று இன்று பார்க்கலாமா?


*


*


கடுகு (Brassica juncea) ஒரு மருத்துவ மூலிகையாகும்.


*


கால்சியம், மங்கனீசியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற தாதுக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆனால் எந்த் ஒரு உணவில் காணப்படாத தாதுப்பொருள் கடுகில் உள்ளது.


*


அதுதான் " கந்தகம் (சல்பர் ) "


*


இந்த சல்பர் நம் உடலின் ஆரோகியத்துக்கு சிறிதளவே தேவைப்படுகிறது. அதனால் தான் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டால் அது வெடிப்பதற்க்கு காரணம்.( தீபாவளி பட்டாசும் வெடிக்க கந்தகம் தான் காரணம். )

*


கந்தம் மனித உடலுக்கு மிகச்சிறிய அளவுதான் தேவைப்படுவதால் இயற்க்கையும் அதனை கடுகுக்குள் வைத்து இருக்கிறது.

*


இனி கட்டாயம் கடுகு பார்க்கும் போது இந்த பதிவு உங்களுக்கு நினைவில் வரும் என்று நம்புகிறோன்.


*


இயற்க்கையில் எத்தனையோ வரம் இருக்கிறது. அதற்க்கு இந்த கடுகும் ஒர் உதாரணம்.


***

படம் விக்கிபீடியா

*

"ஜன்னல்கள் திறக்கின்றன" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
திரு. ராஜேஷ்குமார்.
*
நன்றி. ராஜேஷ்குமார்.


***



"வாழ்க வளமுடன்"


குழந்தைக்கு ரொம்ப நல்லது !

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !


***

காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.



*


தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.



*


தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


*


கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


*


121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது.


*

இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.


*


சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


*


தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


*


தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.


*



வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர் இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.




***

நன்றி அலசல்
http://sirippu.wordpress.com/2009/05/12/morning_sickness/



***

"வாழ்க வளமுடன்"

சமைக்காமலே சாப்பிடும் புதிய அரிசி

புதிய அரிசி



சமைக்காமலே சாப்பிடக்கூடிய கோமல் சாயல் எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


*



ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டைச் (சிஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.



*


இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக அரிசியை வெந்நீரில் வேகவைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.




*



இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையூடன் இருக்கும். இதனால் அரிசியை வேகவைத்து சாப்பிடவேண்டியுள்ளது.




*


ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே லேசான தன்மையூடன் இருக்கும்.



*


இவ்வகை அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அப்படியே சாதம்போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.



***


நன்றி தினகரன்.

http://kangalkanadhaathisayam.blogspot.com/2010/04/blog-post_11.html


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "