...

"வாழ்க வளமுடன்"

03 மார்ச், 2011

புற்றுநோயை எதிர்க்கும் காரட் ( 800 ௦௦ராவது பதிவு :)காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.


காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.


இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத் தெரிந்த ஆரஞ்சுநிற காரட்டுகள் பதினெட்டு வாரங்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவிற்கு falcarinol தேவையான அளவில் சேர்க்கப்பட்ட காரட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது குழுவிற்கு falcarinol ன் அளவு அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவில் புற்றுநோய்க்கட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது அறியப்பட்டது.


நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிர்ஸ்டன் ப்ராண்ட் என்பவர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த எவ்வளவு தேவை என்பதை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்டர் ப்ராண்ட் கூறுகிறார். மேலும் காய்கறிகளைப் பயிரிடும்போதே மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.


பச்சைக்காரட், சமைக்கப்பட்ட காரட், காரட்சாறு இவற்றை உணவில் சேர்க்கும்போது அவை புற்றுநோய்க்கட்டிகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் தொடருகின்றன.


Falcarinolன் அளவு அதிகரிக்கும்போது நச்சுத்தன்மையை விளைவிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால் ஒரே சமயத்தில் 400 கிலோ காரட்டை சாப்பிடுவதால் மட்டுமே ஆபத்தான அளவிற்கு நச்சுத்தன்மையை உண்டாக்கப்படுமாம். Falcarinol என்னும் நச்சு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குள் தூண்டிவிடுகிறது என்பதுமட்டுமே இதுவரையிலான கண்டுபிடிப்பு.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைக்கு தேள் கடித்தால் உடனடியாக சிகிச்சை தேவை !


குழந்தைக்கு தேள் கடித்தால்அது இருதயத்தை பாதிக்கும் . எனவே உடனடியாக சிகிச்சை தரவேண்டும் .

அறிகுறிகள் :

விடாமல் அழுதல்
அதிகபடியான வியர்வை
உடல் சில்லிட்டு போகுதல்
இருதய துடிப்பில் மாறுபாடு
ஆணுறுப்பு விறைத்து நிற்கும் (ஆண் குழந்தைக்கு )

*

முதல் உதவி:

கடி பட்டஇடத்தை சுத்தம் செய்ய வேண்டும்

வலி குறைய ஐஸ் வைக்கலாம்

விஷமுறிவு மருந்து :PRAZOCIN ஆகும்

இந்த மாத்திரையை சீக்கிரம் தருவதன் மூலம் உயிர் இழப்பை தடுக்க முடியும் . இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை பேரில் உடனே தரவேண்டும்

DOSE OF PRAZOSIN
30 MICROGM/ KG

FOR 10 KG BABY 300micro gm
FOR 30 KG BABY 900 microgm
tablet available in
1000microgm(one milli gm), 1500microgram(1.5 milligm), 2500microgm(2.5milligm)
(remember one mill gm=1000 micro gm )
trade name : PRASOPRESS, MINIPRESS,

எனவே 35 kilo குழந்தைக்கு 1000 microgm or 1 milligm மாத்திரை ஒன்று தரவேண்டும்

15 kilo குழந்தைக்கு 450 microgm or .45 mg அதாவது பாதி
தரவேண்டும்

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இதே அளவு மாத்திரை தரவேன்டும்

தேள் கடித்த 24 மணி நேரத்திற்கு மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்

***
thanks ரசிகன்
***"வாழ்க வளமுடன்"


நீங்கள் குண்டாக சில உணவு டிப்ஸ் :)

தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.
கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.


சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வ தற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.


நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.


உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்.


குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.


***
thanks google
***"வாழ்க வளமுடன்"


பகல் நேரத்தில் தூங்குவது மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது


பகல் நேரத்தில் தூங்குவது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பகலில் சிறிய தூக்கம் போட்டால் மூளையின் செயல்பாடு அதிகரித்து அறிவு திறன் வளரும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இதற்கான ஆய்வை பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தொடக்கத்தில் இவர்கள் 39 பேரிடம் ஆய்வை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் அவர்களை நன்றாக தூங்கவைத்து விட்டு காலையில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே வேளையில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிட நேரம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தனர்.


இவர்கள் இருதரப் பினரின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில், பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிக அளவில் இருந்தது.


இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் இதே முடிவுதான் கிடைத்தது. இந்த ஆய்வறிக்கை கலிபோர்னியாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.

***
thanks google
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "