...

"வாழ்க வளமுடன்"

20 பிப்ரவரி, 2010

அஜினோமோட்டா‏

தகவல் அறியும் உரிமைச் சட்டம்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூகப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் விழிப்புணர்வுகளுக்காக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.



-எம்.ஹெச்.ஜி.





உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உண்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும், பலவித செயற்கை நிறமிகளையும் சுவையூட்டிகளையும் உணவில் சேர்த்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சமீப காலத்தில் அஜினோமோட்டோ என்னும் நச்சுப் பொருளை ஒரு செயற்கைச் சுவையூட்டியாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.



*




''அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது'' என்று சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, அண்மையில் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு, எக்கச்சக்க பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



*




சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினமோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனம் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிற‌து.


எல்லா அஜினமோட்டோ பாக்கெட்களிலும், பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.



சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலிலுள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது.
கடைகளில், கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது.



*



இந்த அஜினோ மோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும், பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.




*




மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம் பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு 'சைனா உணவக நோய்' ( CHINA RESTAURANT SYNDROM) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது.




*



'சோடியம் குளுட்மேட் (அஜினமோட்டோ) பற்றி எழுதுவதற்காக நாம் ஆய்வில் இருந்தபோது 'ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்' பற்றிய தகவலும் நம்மை அதிர்ச்யில் ஆழ்த்தியது,





*



''இது பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் பொருட்கள் நம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்!'' என்ற அதிர்ச்சிதான் அது.




*




பெரிய உணவகங்களில் வழங்கப்படும் 'சூப்'களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் 'டேஸ்ட் பவுடர்' என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.


*



இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து 'added flavours' என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.


*



பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை.


*



குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.



*



சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர்.





*



பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டாவால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவை தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் குண்டர்களாக மாறி விடுகிறார்கள்.





*



பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.





*




கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, அஜினோமோட்டோ நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் 'MSG' அதாவது மோனோ சோடியம் கலந்துள்ளது என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்கள் கூட இன்று பொட்டலங்களில் இல்லாமலிருப்பது அந்த வியாபார நிறுவனங்களின் வெற்றியையும் அரசாங்கத்தின் அலட்சியத் தன்மையையுமே காட்டுகிறது.






*





ஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதே அஜினோமோட்டோ. இயற்கையாகவே சுவையில்லாத அஜினோ மோட்டோ பொரித்த, வறுத்த உணவுகளுடன் கலக்கும் போது புளிப்புச் சுவை ஏற்படுகிறது. ஆகவே, அஜினோ மோட்டோவை உணவுப் பொருட்களில் கலப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.


*


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நச்சுப் பொருள் கலந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது.




*







இதில் இவ்வளவு விசயம் இருக்கா அம்மா!!!! ஏன் அம்மா அப்ப எங்கலுக்கு சிப்ஸ், நூடுல்ஸ், மற்றதையும் வாங்கி குடுக்குரிங்க?


*


நன்றி திரு. எம். முஹம்மது ஹுசைன் கனி.
http://www.chittarkottai.com/kaayaa_pazhamaa/aji_no_moto.html

இதயம் சில உண்மைகள்!



இதயம் தான் மனிதனின் மூல ஆதாரம். இதயம் இல்லையேனில் நாம் வாழ்வு ? தான். இதயம் பற்றி ஒருசிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அவற்கலுக்கா இதோ....
1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்.

(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
***
2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
***
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
***
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
***
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
***
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
***
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
***
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
***
9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
***
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.
*
நன்றி.

சிறுநீரக செயலிழப்பை கண்டறிய‌..






சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?



அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.





சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.



***



ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.




ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.




***


1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?



நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?





இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.





2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?


*


திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.




உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.






***




3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?






அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.


*



ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.



*



அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.



*



இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.





***






4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?





மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.



*


(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)







***





5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.







வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.






இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.





***





6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?





சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.





1.ஆரம்ப கட்டம் (நிலை-1)



சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.



***



2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2):




இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.



***



3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)-





இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.






***





4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4)




இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.



நன்றி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "