...

"வாழ்க வளமுடன்"

28 பிப்ரவரி, 2010

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்


நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.


***



நீரிழிவு நோய் :

*


நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும், படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

***
ரத்தப்போக்கு :
*

பெண்களுக்கு மாதவிடாய் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கவேண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
***
சிறுநீர் எரிச்சல் :
*

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும் சிறுநீரில் எரிச்சல் தீர்ந்துவிடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.
***
பேதி :
*

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
***
தொண்டைப்புண், தொண்டை அழற்சி :
*

10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ளவேண்டும். இதை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரை டீ லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வரவேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.
***
பிற பயன்கள் :
*

1. நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
*

2. தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
*

3. நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.
*

4. நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
*

5. இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
***
நன்றி கீற்று.
(நன்றி: மாற்று மருத்துவம் அக்டோபர் 2009)

27 பிப்ரவரி, 2010

நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்



சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!
***
சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.
***
1.கால்கள்:
*
சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.
***
2.சிறுநீரகம்:
*
சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
***
3.வயிறு, குடல்:
*
அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.
***
4.மூக்கு:
*
சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.
***
5.பல்,ஈறுகள்:
*
பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.
***
6.கண்கள்:
*
கண்களில் கட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.
***
7.காது:
*
காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.
***

தொற்றுக்களை தடுக்க:
*
1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
*
2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.
*
3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.
*
4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி
*
5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.
*
6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.
*
7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.
*
8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.
*
9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
*
10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
*
11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.
*
12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.
*
13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
*
14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.
***
நன்றி ஈகரை தமிழ் களஞ்சியம்.

நீரிழிவு நோய் - 2

மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?



ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.



***


1. காய்கறிகள்
2. கார்போஹைட்ரேட்ஸ்.
3. பழங்கள்
4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்
5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்
6. தானியங்கள்
7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.


***




2. உடற்பயிற்சி.

*


நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,

*

1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

*
2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
*
3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
*
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.


***



உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.

*


உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.
*
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்
மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.
*
காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
*
இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
*
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
*
நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.



***

3. மாத்திரைகள்

*


சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது.

*

சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.

*

சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது.

*

மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

*

சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது.

*

சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

***

4.இன்சுலின்

*


நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.



*


இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?

*


இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.



***



இன்சுலினின் வகைகள்

*


இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

*

இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது.

*

போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

*

இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.



***


இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?

*
முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

*

உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ்.

*

நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.

*

இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.

*

தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.

*

ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.

*

இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.

*

தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்

***


நினைவில் வைத்திருக்க வேண்டியவை.


*



நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.

*

உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.

*

நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.


*

சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.


*


தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.

*

ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.

*

உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

*

சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.


***

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வர கூடும்.

*
இதய நோய், பக்கவாதம் (Heart disease, stroke):


*


நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இ தய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இ தய நோய், பக்கவாதம் வந்தபின் 65% இறந்து போகிறார்கள்.அதேபோல ஸ்ட்ரோக் வரக்கூடிய வாய்ப்பும் 4 மடங்கு அதிகமாகிறது.இரத்த அழுத்தம்: 75% நீரிழிவு நோய் உள்ளவர்கள் 130/90 க்கு மேல் இரத்த அழுத்தம் கொண்டு மருந்து உட்கொள்கிறார்கள்.



***



கண்பார்வை போதல்:

*

20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு 24000 பேர் புதிதாக கண் பார்வையை இழப்பதாக சொல்கிறார்கள்.சிறுநீரக கோளாறு: நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு வர முதல் காரணம் ஆகிறது. ஆண்டொன்றுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.2002 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் உள்ளவர்களில் 150000க்கும் அதிகமானோர் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டையாலிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்க பாட்டிருந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.




***



நரம்பு சம்பந்தமான நோய்கள்:

*

60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்க்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்று போதல், உணவு செரிமான சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன.மிக அதிக பட்சம் சிலருக்கு கால்கள் நீக்க படவேண்டிய நிலைகூட வருகிறது.விபத்து இல்லாமல் கால்களை நீக்குதல் நீரிழிவு நோயால் மட்டுமே வருகிறது.

*

பற்களும் அதிக அளவு பாதிக்க படுகிறது. இதையும் தவிர அமில கார தன்மையை சீர்குலைக்க செய்து, கீட்டோன்களின் அளவை அதிகரித்து கோமா உண்டாக்கவும் வல்லது. பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம். இந்த மாதம் நீரிழிவு நோய் தடுப்பு மாதம் என்பதால், குறைந்த பட்சம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது நடக்கவோ செய்ய ஆரம்பிப்பது நமக்கு நல்லது.

***





நீரிழிவு நோய் குணமாக முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

*

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.

*

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

*

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

*

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

***


மேலும் இது பற்றி அறிய கீழே கிளிக் பன்னவும்.

http://www.muthukamalam.com/muthukamalam_maruthuvam3.htm

tamil.webdunia.com/miscellaneous/health/.../0912/23/1091223052_1.htm - 13k -

நீரிழிவு நோய்


நமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (யவாநசழளஉடநசழளளை) இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் (உழசழயெசல யசவநசல னளைநயளந) மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.



***




நீரிழிவில் மூன்று வகைகள்:


*


முதலாவதுவகை:

*


முதலாவதுவகை (Type I Diabetes) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. முதலாவதுவகை நீரிழிவு hதாரணமாக 10 விகிதத்தினருக்கு ஏற்படுகின்றது.



***




இரண்டாவது வகை:

*

இரண்டாவது வகை நீரிழிவு (Type II) இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலின் தகுந்த முறயில் செயல்பட முடியாத தன்மையாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 விகித்ததினரில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைவதாலும் சாப்பாட்டுக கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.



***



மூன்றாவது வகை:

*

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.



***




நீரிழிவு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?


பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது.
*
சில பொதுவான அறிகுறிகள்:

*

1. அடிக்கடி சிறுநீர் கழிப்பது
2. அடிக்கடி தாகம்
3. அதிக பசி
4. மிக வேகமாக எடை குறைதல்
5. அதிகமாக சோர்வடைவது
6. கண்பார்வை மங்குதல்
7. வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
8. திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
***
நீரிழிவை கவனிக்காததால் விளைவுகள் என்னென்ன?
*
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும்.
*

பார்வை இழப்பு
மாரடைப்பு
சிறுநீரகக் கோளாறு
பக்கவாதம்
கால்களை இழத்தல்
கோமா மற்றும் இறப்பு


***
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
*
நீரிழிவு நோயின் சிகிச்சையில்:
*
1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்
*
மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்
***
நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?
*
நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.
நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.
***
1. உணவு முறை:

*


1. சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்..


***


2. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.



***



3. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.



***



4. சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.




***




5. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.



***



6. சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.



***


7. மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

***

நீரிழிவு பற்றி இன்னும் தெரிந்து கொள்ளுவோம்.

26 பிப்ரவரி, 2010

டாக்டர் மரம் அத்தி


மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.



***

யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.






***


அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.


***



அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.





*****



மருத்துவ குணம்;

*

அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.



***



இலை:


*


அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

***
பட்டை:
*

அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.

***
பழம்:
*

நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.
***
பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.
***
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.
***
பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.
***
அத்தியின் விஞ்ஞான ஆய்வு:
*
ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.
*
இலைகளிலும், பழங்களிலும் குளுயாக்கல், தாவரஸ் பீரால்கள், ஹைட்ரோகார்பன்கள், ஸ்பீரால், ப்ரைடெலின் ஆகிய வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
***
இப்பழத்தை மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரைச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இருமபுச்சத்து அதிகளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப் பழத்தில் இந்தச் சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி.டி ஆகியவையும் குைற்நத அளவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
***
அத்திப்பழத்தைப் பொதுவான உடல் பலவீனத்திலும், ஜுரத்திலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப் பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இதற்கச் “சீமை அத்திப்பழம்” என்று பெயர். இதுதான் இறைவனும், அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ள அத்திப்பழங்கள் ஆகும். அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவையான அளவிற்கு நம் நாட்டில் இவை “சீமை அத்திப்பழம்” என்ற பெயரில் எளிதில் கிடைக்கின்றது.
***
காட்டு அத்திப்பழம்:
*
நம் நாட்டில் “காட்டு அத்திப்பழம்” என்ற பெயரிலும், “காற்றாடிப்பழம்” என்ற பெயரிலும் ஒரு வகையான அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இது வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தைத தினமம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதைத் தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் “சபூப் பர்ஸ்” என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
******
நன்றி தினமணி.
ந‌ன்றி த‌மிழ்வாண‌ன்.காம்.

இரும்பு, செம்பு, துத்தநாகம் தரும் பயன்கள்.



என்ன‌ங்க‌ ப‌யந்துட்டிங்க‌லா?

***


இந்து மூன்றும் இருந்தால் குண்டூசி முத‌ல் பீர‌ங்கி வ‌ரை செய்ய‌லாம்.






***


அதே போல் உலோக‌ங்க‌ள் ந‌ம்ம‌ உட‌ல் ஆரோகிய‌த்துக்கு தொட‌ர்பு இருக்காம்.




***


ச‌ரி இனி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம்!


***


இரும்பு:

*


இது நம் உடலிலுள்ள சிவப்பு ரத்த அணுக்களில் ( RedBloodCorpuscles-RBC )ஹீமோகுளோபினாக இரும்பு உள்ளது. 120 நாட்கள் வரைதான் இந்த சிவப்பணுக்கள் உயிரோடு இருக்கும். அதன் ஆயுள் முடிந்தவுடன் அதில் உள்ள இரும்பு பிரிந்து எலும்பு மஜ்ஜைகளுக்கு அனுப்பப்படும். அங்கு புதிய சிவப்பு ரத்த அணுக்களை உற்ப்பதி செய்ய அவை பயன்படுகின்றன.


*



தசைகளில் மையோகுளோபினாக அமர்ந்திருக்கும் இரும்புச் சத்து, செல்களில் ஆக்ஸிஜன் தேவையை உடனடியாக நிறைவேற்றி வைப்பதில் உதவியாக இருக்கிறது. மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறாமல் தடுப்பது உட்பட இன்னும் பல முகியமான வேலைகளுக்கு இரும்புச் சத்து பின்புலமாகச் செயல்படுகிறது.


*




இரும்புச்சத்து உணவுப் பொருட்கள்:

*

கேழ்வரகு, பச்சிலைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், அத்திப்பழம், பேரிச்சம் பழம், வெல்லம், ஈரல், மீன், மாமிசம், முட்டை.




***************************************


துத்த நாகம்:

*


நாம் உணவின் உர்சியை உணர்ந்து சுவைப்பதற்க்குக் காரணாம் துத்தநாகம் தான். நம் உடலில் இது பரவலாகக் காணப்படுகிறது.நம்து உடலில் இந்தன் மொத்த அளவு 2.3 கிராம்.


***


1. தோல், எலும்புகள், முடி ஆகியவற்றின் ஆரோகியத்திற்கு இவை மிக முக்கியம்.



*



2. அஜீரணம் மற்றும் மூச்சு விடுதலில் பங்கேற்கும் என்சைம்களில் பெரும்பாலானவை இதில் உள்ளது.



*




3. செல்களின் செயல் பாடுகளுக்குப் பக்கபலமாக விளங்கும் இந்த தாது உப்பு உதவுகிறது.




*




4. நமது உடலில் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்துக்கும் தேவைப்படுகிறது.



*



5. இன்சுலின் செயல் பாட்டுக்கும் உதவி செய்கிற துத்தநாகம், நோய் எதிர்ப்புச் சக்தியைத தூண்டுவதிலும் பங்கேற்கிறது.



*



உணவுப் பொருட்கள்:



*


மாமிசம், முழு தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், பால், முட்டை, தயிர் போன்றவற்றிலிருந்து துத்த நாகம் கிடைக்கிறது. பெரியவர்களுக்கு 8 முதல் 15.5 மி.கி வரை ஒரு நாளுக்குத் தேவைப்படுகிறது.



********************************

செம்பு, செலீனியம்,ஃபுளோரின்:

*

இது போன்ற தாது உப்புகளும் நமது உடலுக்கு குறைந்த அளவே தேவைப்படுகிறது.

*

1. பற்கள் சொத்தை ( DentalCaries) போன்றவை ஏற்படாமல் இருக்க ஃபுளோரின் கணிசமான அளவு தேவைப்படுவதாக தெரிய வந்துள்ளது

*

2. ஈரல் செல்களின் ஆரோக்கியத்துக்கு செலீனியம் அவசியம்.

*

3. செம்பானது இரும்புச் சத்து உறிஞ்சப்படுவத‌ற்குத் தேவைப்படுகிறது.

*

4. மேலும் ரத்திதில் உள்ள சிவப்பு செல்களும், நரம்புகளும் சீராக தங்கள் வேலைகளைச் செய்ய துணைபுரிகிறது.

*

5. செலீனியம் பலவிதமான கேன்சர்கள் உண்டாவதைத் தடுக்கும் சக்தியைக் கொண்டதாக ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.


நன்றி தி டயட் ஃபுட்.

படித்ததில் பிடித்த தத்துவங்கள்



When I Asked God for Peace
He Showed Me How to Help Others
God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed.”
- Swami VIVEKANANDA
***
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
***
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
***
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
***
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
***
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ்
***
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
***
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
***
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
***
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
***
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
***
எல்லாம் சில காலமே
- ரமண மகரிஷி
***
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
***
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
***
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
***
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
***
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது.
- பாரதியார்
***
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
***
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
***
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.ஆனால்,
அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.
***
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
***
ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!
***
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
***
இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
*
LIFE IS NO WHERE என்றா?
*
LIFE IS NOW HERE என்றா?
*
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
***
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
*
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!

25 பிப்ரவரி, 2010

ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?



இந்த கேள்விக்கு பொதுவான பதிலை யாரும் எளதில் கூற முடியாது. பெரும்பாலான மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் குடிக்கும் நீரின் அளவு ஒருவரின் உடல் ஆரோக்கியம், வியர்வையயின் அளவு, வெயில் காலமா? மழைக்காலமா? வேலலை பார்க்கும் இடச்சுழ்நிலை, எந்த பகுதியில் வசிக்கின்றோம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.







***




உடல் 60% நீல் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர் வியர்வை மூலம் நீக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீர் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.




***


சிறுநீர், வேர்வை,சுவாசம், மலம், மூலமாக நம் உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன.12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1 1/2 லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர்.



***




இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவ கழகம் ஆண்கள் குறைந்த பட்சம் 3 விட்டர் நீரும் பெண்கள் 2 1/2 லிட்டர் நீரும் அருந்த வேண்டும். என்று பரிந்துறைக்கின்றது. ஆனால் அது குளிர் தட்ப வெப்பம் உள்ள நாடுகளுக்குதான் பொருந்தும்.






***






சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம். அடர் மஞ்சள் அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற் சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்திலும் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக் நீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் சாதாரண அளவு நீர் போதுமானது.





***






காய்ச்சல், வாந்தி பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.

பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2 1/2½லிட்டர், தாய்பால் கொடுக்கும் போது 3 லிட்டர் குறைந்த பட்சம் நீர் அருந்துமாறு அறிவுறித்தப்படுகின்றனர்.
***
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் இவைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.
*




***
நீர் குறைவாக எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் பிரச்சினைகள்.
*
1. உடல் எடை, சத்து குறையும்.
*
2. சோர்வு.
*
3. தாகம் வாய் உலர்தல் . ½ மயக்கம், தலைவலி.
*
4. சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், சிறுநீரகங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம்.
*
5. சிறுநீரகங்களில் கற்கள்.
***



இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் இருப்பவர்கள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்
அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
***
குடிநீர் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம். அடடா எல்லாரும் எங்கே போயிட்டிங்க? ஓ தண்ணீர் பருகவா!!!! ஓக்கே ஓக்கே...
*

நீறைய நீர் ( குடி நீர் ) குடித்து நோய் இன்றி வாழ்வோம்!



***


Dr. V. கண்ணன் M.D., D.M (Nephro)
சிறுநீரக மருத்துவ நிபுணர்,
பத்மா கிட்னி சென்டர்,
ஈரோடு.

***
நன்றி டாக்டர். கண்ணான்

24 பிப்ரவரி, 2010

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:

குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோற்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கனும்.



*****



சாப்பிடும் பொழுது:











1. நீங்கள் சாப்பிடும் பொழுது குழந்தையும் ஒன்றாக உட்கார வைத்து அவங்களுக்கு ஒரு தட்டு வைத்து கையால் சாப்பிட சொல்லிக்கொடுங்க.







***







2. சாப்பிடும் முன்பு கைகளை கழுவனும் என்று கைகளை கழுவி விடுங்க.







***





3. இந்த உணவுகளை தந்த இறைவனை நினைக்க சொல்லுங்க. பின்பு சாப்பிட சொல்லுங்க.









***







4. அப்பா இந்த உணவுக்காக தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க நீ கீழே சிந்தாமல் சாப்பிடுமா என்று சொல்லுங்க.



*



(முதலில் சிந்தி தான் சாப்பிடும் போக போக பழகிவிடுவாங்க)காய்கறிகள், கூட்டு சேர்த்து சாப்பிடுமா என்று சொல்லுங்கள்.





***







5. சாப்பிட்டு முடிந்த பின்பு கைகளை அலசி விட்டு கை துடைக்கும் துண்டில் துடைக்க பழகி கொடுங்க. (சில குழந்தைகள் அவங்க டிரெஸில் துடைத்துக்கொள்கிறார்கள்)







***







6. அவங்களையே பல் துலக்க சொல்லிக்கொடுங்க. 3 வயதுக்கு மேல் தனியாக குளிக்க சொல்லிக்கொடுங்க.





********



டி.வீ பார்க்கும் பொழுது:







சின்ன குழந்தைகள் டீ.வீயில் கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே தான் பார்ப்பாங்க. நாம் ரிமோட் கேட்டால் தரமாட்டாங்க. அப்படியே விடாமல் அவர்களிடம் செல்லமே இவ்வளவு நேரம் நீ டீ.வீ பார்த்த இப்ப அம்மாவுக்கு பிடித்த ப்ரோகிரம் வருது கொஞ்ச நேரம் பார்க்கிறேன் என்று அன்பாய் சொல்லி வாங்குங்கள்.







*





வீண்ணாக லைட் ,ஃபேன், டீ.வீ ஓடுவைதை ஆஃப் பண்ணச்சொல்லுங்க.



***




வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.விருந்தினர் வரும் பொழுது வாங்க, எப்படியிருக்கிங்க என்று கேட்க்க சொல்லிக் கொடுங்க.சில குழந்தைகள் கூச்ச சுகபாவமாக இருப்பாங்க அவங்களை சகஜமாக மற்றவர்கள் முன்பு பேச பழக வைக்கவும்.உறவுமுறைகள் சொல்லி அழைக்க சொல்லுங்க.




***




உங்கள் செல்ல குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள், ரைமிஸ் ராகத்துடன் சொல்லிக்கொடுங்க.. நல்ல விசயங்களை வீட்டில் இருக்கும் நாம் தான் ஆசிரியராக இருந்துச் சொல்லிக் கொடுக்கனும். அப்பறம் தான் பள்ளி படிப்பு.



****************


இவைகளை ஒவ்வெரு குழந்தைகளுக்கும் நாம் கற்றுக் கொடுத்தால் அவர்களின் வாழ்வு மிகவும் மகிழ்ச்சியாகவும், செழுமையாகவும் இருக்கும்.

*
வெற்றியும் நிச்சயம்.


*
by Mrs.Faizakader
நன்றி Mrs.Faizakader

வெறும் காலுடன் ஓடுவதே நல்ல பலன்தரும்!


ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு "ஷூ"(காலணி) முக்கியமான விஷயமாகத் தெரியும். பலர் "ஷூ"இல்லாமல் ஓடுவது தவறு என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் "வெறும் காலுடன் ஓடுவதே நல்லது.
***
"ஷூ"அணிந்து ஓட்டப் பயிற்சி செய்வது உடலைப் பாதிக்கும்'' என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகம், தடகள வீரர்கள் ஓட்டப் பயிற்சியால் பெறும் சாதக, பாதகங்கள் பற்றி ஆராய்ந்தது. இதில் மேற்கண்ட முடிவு கிடைத்துள்ளது.
***
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடகள வீரர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். உயர்ந்த குதிகால் (ஹீல்ஸ்) உடைய `ஷு', மற்றும் `ஹீல்ஸ்' இல்லாத "ஷூ"அணிந்து இரு பிரிவினரும். "ஷூ"இல்லாமல் வெற்றுக் காலுடன் ஒரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.
***
அவர்கள் சராசரியாக ஒரு மைல் தூரம் ஓட விடப்பட்டனர். இதில் அனைவரது கால்களும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் மேலும் கீழுமாகப் போய் வந்தன. இதனால் ஹீல்ஸ் கொண்ட ஷுக்களை அணிந்தவர்களுக்கு தரையுடன் ஏற்பட்ட உராய்வால் அதிர்வலைகள் முட்டு மற்றும் உடல்பகுதிக்கு அதிகமாக கடத்தப்பட்டது. இதனால் உடல் வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹீல்ஸ் இல்லாத "ஷூ"அணிந்தவர்களுக்கும் அடிப்பாதத்தின் நடுப்பகுதி வழியாக குறைவான அதிர்வுகள் கடத்தப்பட்டன. "ஷூ"இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
***
"நமது கால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளது. எனவே அதுவே இயற்கையான `ஷு'. உண்மையில் வெறும் காலுடன் பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. மலைப்பாதை போன்ற கரடு முரடான பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வெற்றுக் காலில் பயிற்சி செய்யலாம்'' என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.
***
நன்றி மாலைமலர்.

புஜங்காசனம் & அர்த்த மத்ச்யேந்திராசனம்

புஜங்காசனம்

குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும்.


***


சாதாரண மூச்சு. பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும்.ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் எனப் பெயர் பெற்றது.



***



பலன்கள்:

*

வயிற்றறையில் தசைகள் இழுக்கப்படுவதால் அங்கு ரத்த ஓட்டம் ஏற்படும். முதுகெலும்பு பலம் பெறும். மார்பு விரிந்து விலாவில் பலமடையும். ஆஸ்துமா நோய்க்கு முக்கிய ஆசனம்.



*************


அர்த்த மத்ச்யேந்திராசனம்





உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது கையைப் பின்னால் வீசி மூச்சை வெளியேவிட்டு வலது விரல்களால் வலது காலில் மாட்டிக் கொக்கி போல் உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும். ஆசனத்தைக் கலைத்து இடது பக்கம் மறுபடியும் அம்மாதிரி மாற்றிச் செய்யவும்.
****
பலன்கள்:
*
முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும். நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.இளமை மேலிடும், முகக்கவர்ச்சி உண்டாகும். விலா எலும்பு பலப்படும். தொந்தி கரையும்.
***
நன்றி தினகரன் ஹெல்த்.

ஹலாசனம் & மகாமுத்ரா

ஹலாசனம்
சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும்.அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில் வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்க வேண்டும் கால்களை நேராக ஒட்டியவாறு இருக்க வேண்டும்.


***


மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுப்பிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி சரீரத்தின் மேல் வளைத்து சுவாசத்தை வெளியே விட்டு கட்டை விரல்களை தலைக்குப் பின் கொண்டு வந்து தரையைத் தொட முயற்சிக்கவும். நாடி நெஞ்சைத் தொட வேண்டும்.ஒரு முறைக்கு ஒரு நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சு.



***



பலன்கள்:


*


முதுகுத் தண்டுவடம் பலம் பெறும். நாடி மண்டலங்கள் அனைத்தும் நன்கு வேலை செய்யும். முதுமை ஒழிந்து இளமை மேலிடும். சோம்பல் ஒழியும். இடுப்பு, முதுகு, கழுத்து பலம் பெறும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையின்றி வாலிபத்தில் ஆண்குறியைத் தவறாகப் பயன்படுத்தி வீரியம் பெற்று இளமை பெற இவ்வாசனம் மிகவும் பயன்படும். பெண்கள் கருவுற்ற இரண்டு மாதம் வரை செய்யலாம். பின் செய்யக்கூடாது. நீரிழிவு நோய் வெகு விரைவில் குணமாகும்.





***********

மகாமுத்ரா


உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம், வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும்.

***


பலன்கள்:

*

வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.

உசர்ட்டாசனம் & சுப்தவஜிராசனம் & விபரீத கரணி & மத்ச்யாசனம் (மச்சாசனம்)

உசர்ட்டாசனம்


உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப் பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.



***



பலன்கள்:

*

முதுகெலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக் கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும். மூச்சுத் திணறல், பலகீனம் ஒழியும்.

***


போலீஸ், மலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும். ஆஸ்துமாவுக்கு மிக முக்கியமான ஆசனம். தரையில் கையை வைத்தே முதலில் பழக வேண்டும். பின் 15 நாள், ஒரு மாதம் சென்றபின் கால்களில் கைகளை வைத்து செய்யலாம்.



*********

சுப்தவஜிராசனம்

முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும்.
***
பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்து படுக்க வைக்க வேண்டும். அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.
***
பலன்கள்:
*
ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளக்கிறது. தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது. கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும் மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது. மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.
************
விபரீத கரணி


விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இளக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் முதுகையும் உயரக் கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட பாகத்தைத் தூக்கி நிறுத்திச் செய்யலாம்.
***
காலை விறைப்பாக வைக்காமல் சாதாரணமாக வைக்கவும்.ஒரு முறைக்கு 2 நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். சாதாரண மூச்சு.கீழே இறங்கும் போது காலை மடக்கிக் கைகளால் பிருஷ்ட பாகத்தை வழுக்கி இறக்க வேண்டும்.
***
பலன்கள்:
*
சர்வாங்காசனத்தின் 80 சதவீதப் பலன்கள் இந்த ஆசனத்திற்குக் கிடைக்கும்.
***
குறிப்பு:
*
நேரம் கிடைக்காதபோது 2 நிமிடம் இவ்வாசனத்தை மட்டும் செய்தால் நல்ல உடல் நலம் சுறுசுறுப்புக் கிடைக்கும்.

********
மத்ச்யாசனம் (மச்சாசனம்)

பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.
***
பலன்கள்:
*
சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு விரிந்து நுரையீரல் நன்றாக வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். மார்புக்கூடு, ஷயம், காசம், இருமல், கக்குவான், மார்புச்சளி நீங்கும்.

பஸ்சிமோத்தாசனம் & நாவாசனம் & சலபாசனம்

பஸ்சிமோத்தாசனம்


விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் & இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்து ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை இறுக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியேவிட்ட நிலையில் எக்கவும். கைகளின் இரு மூட்டுக்களும் படத்தில் காட்டியவாறு தரையைத் தொட முயற்சிக்கவும். ஒரு முறைக்கு 10 வினாடிகள் செய்யவும். 2 முதல் 4 முறை முயற்சிக்கவும். தலை கொஞ்சம் கொஞ்சமாய் குனியச் செய்யவும். ஒவ்வொறு முறைக்கும் சற்று இளைப்பாறி மீண்டும் செய்யவும்.

***


பலன்கள்:

*

வயிற்றுப் பகுதித் தசைகள் பலம் பெறும். கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, கணையம், மூத்திரக்காய் இவைகள் புத்துணர்ச்சி பெற்று தமது கடமைகளைச் சரிவரச் செய்வதோடு, இவ்வுறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும். பசியின்மை நீங்கும். நீரழிவு நோய் முற்றிலும் நீங்கும். இளமை மேலிடும். பெண்கள் இவ்வாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்து வந்தால் மாதாவிடாயின்போது உண்டாகும் இடுப்பு வலி, வயிற்று வலி, மலட்டுத்தனம் முதலியன நீங்கும்.



************

நாவாசனம்


நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்க வேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு.
***
பலன்கள்:
*
இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம் நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல் ஒழியும். பெண்கள் குழந்தை பெற்ற பின் இவ்வாசனத்தைச் செய்தால் வயிறு பெரிதாகாது.
**********
சலபாசனம்

குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும்.
***
பலன்கள்:
*
வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும். கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். அஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு, இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பெற்று தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.

உத்தித பத்மாசனம் & உத்தானபாத ஆசனம் & ஜானு சீராசனம்

உத்தித பத்மாசனம்



பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்க வாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது. பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் சௌகரியம் போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும்.




***


பலன்கள்

*

தொந்தி கரையும். ஜுரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். புஜம், தோள் பட்டை பலம் பெறும். அஜுரணம், மலச்சிக்கல் தீரும். "பாங்கரியாஸ்" உறுப்பு நன்கு வேலை செய்யும்.


***


நீரழிவு நோய்க்குச் சிறந்த ஆசனம்.ஆஸ்துமாக்காரர்களுக்கு நெஞ்சு விரிவடைந்து நுரையீரலில் அதிக சுவாசம் இழுக்கும் தன்மை ஏற்படும்.நெஞ்சக்கூடு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்தால் மார்பு விரியும். புஜபலம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாயின் போது வரும் வலிகள் நீங்கும்.



**********


உத்தானபாத ஆசனம்
நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் (விறைப்பாக இல்லாமல்) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப்பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.




***



பலன்கள்:

*

அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப் பின் இவ்வாசனம் செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.

***



குறிப்பு:

*

உத்தானபாத ஆசனம் முதல் நிலை 3, 4 நாட்கள் செய்த பின் 2&ம் நிலைக்கு வரவும். முதல் நிலை & கால் தரையிலிருந்து 1 அடி முதல் 2 அடி உயரலாம். 2 &ம் நிலை & 4 முதல் 6 அங்குலம்தான் கால் தரையிலிருந்து உயரலாம்.


***********


ஜானு சீராசனம்

நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்க வேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச் செய்தால் போதுமானது.



***


பலன்கள்


*


விலாப்புறம் பலப்படும், விந்து கட்டிப்படும். அஜீரணம், வாயுத் தொந்தரவு நீங்கும். உடல் நல்ல இளக்கம் கொடுக்கும். வயிற்றுப் பகுதியில் அதிகமான ரத்த ஓட்டம் ஏற்படும். நடு உடல் பகுதி பலப்படும்.பெருங்குடல், சிறுகுடல் இளக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். வயிற்றுவலி தீரும். முதுகு, இடுப்புவலி நீங்கும்,அடிவயிறு இழுக்கப் பெற்று தொந்தி கரையும்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "