...
"வாழ்க வளமுடன்"
10 ஆகஸ்ட், 2011
சிறுநீரில் சீழ் வெள்ளை ( மூலிகை மருத்துவம் )
மது இனப்பெருக்க பாதையும், சிறுநீர்ப்பாதையும் ஒன்றாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தோ காணப்படுகின்றன. சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமின்றி, இனப்பெருக்கத்திற்கும் உதவும் இந்த பாதையில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிலக்கு திரவம் வெளியேறுவதும், ஆண்களுக்கு ஆணுறுப்பில் முன் தோலில் தோன்றும் ஒருவகையான கசிவு வெளியேறுவதும், அவ்வப்போது இயல்பாக நடைபெறுவது தான்.
ஆனால் இனப்பெருக்க பாதையை சுத்தமாக, சுகாதாரமாக வைக்கவில்லையெனில் இந்த பாதையில் எளிதாக கிருமித் தொற்று தோன்றிவிடும். இதனால் இனப்பெருக்க பாதையில் கசிவு அதிகம் ஏற்படுவதும், அந்த இடங்களில் ஒருவித கசகசப்பு மற்றும் துர்நாற்றமும் உண்டாகும். சிறுநீர் எந்தவிதமான கலப்புமின்றி வெளியேற வேண்டும்.
ஆனால் சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரில் புரதங்கள் அதிகமாக வெளியேறினாலோ இனப்பெருக்க பாதையில் வெள்ளை நிற கசிவும், நுரைத்துப் போன சிறுநீரும், தயிரைப் போன்ற கசடும் சிறுநீர் மற்றும் இனப்பெருக்க பாதையிலோ அல்லது உள்ளாடைகளிலோ ஒட்டி காணப் படும்.
இந்த கசடானது தோன்றி உடனே மறைந்துவிடும் இயல்புடையது. போதுமான அளவு நீர் அருந்தி, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் இது போன்ற தொல்லைகள் அதிகரிக்காது. ஆனால் சிறுநீர் பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது இனப்பெருக்க உறுப்பு மற்றும் சிறுநீர் பாதையை சுகாதாரமாக பராமரிக்காமல் விட்டாலோ கசிவானது அதிகரித்து, இனப்பெருக்க உறுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கடும் புண்ணையும், அரிப்பையும் உண்டாக்கி விடும். அத்துடன் சிறுநீரில் சீழும் வெளியேறி, சுரம் உண்டாகும்.
சிறுநீர்ப்பாதை மற்றும் இனப்பெருக்க பாதையில் தொற்று ஏற்பட்டு, அதனால் சிறுநீர் செல்லும் பொழுது வெள்ளை நிறமாக பால் போன்றோ, தயிர் போன்றோ, நூல் போன்றோ திரவம் வெளியேறுதலை சிறுநீரீல் சீழ் வெள்ளை என்றும், வெள்ளை என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண்ணுக்கு தோன்றும் பால்வினை நோய்கள், சாதாரண கிருமித்தொற்றுகள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், வீரியமிக்க வலி நிவாரணிகள், கடுமையான எதிர்உயிரி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்துதலால் மென்மையான இனப்பெருக்க மற்றும் சிறுநீர் பாதை திசுக்கள் பாதிக்கப்பட்டு, வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
ஆண், பெண் என இருபாலருக்கும் வெள்ளை படுதல் உண்டாகிறது. இயல்பான வெள்ளைப்படுதல் சில நாட்களிலேயே மறைந்து விடுவதுடன், அரிப்போ, நாற்றமோ ஏற்படுவதில்லை. ஆனால் தொற்றினால் ஏற்பட்ட வெள்ளையினால் துர்நாற்றம், நிறமாற்றம் உண்டாவதுடன் தேவையற்ற பன்கிருமித்தொற்றும் ஏற்படுகிறது. இதற்கு முறையான ரத்தப்பரிசோதனையும், திசு பரிசோதனையும் அவசியமாகும். இனப்பெருக்க உறுப்புகளை கடுக்காய்ப் பொடி அல்லது படிகாரத் தண்ணீரால் அவ்வப்போது கழுவி, சுத்தம் செய்வது நல்லது.
கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. நெர்விலியா அரோகோயானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆர்கிடேசியே குடும்பத்தை சார்ந்த தரைப்படர் கொடிகளின் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன. பிரŒவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன.
5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்து வர பிரŒவத்திற்கு பின் தோன்றும் பல்வேறு வகையான கிருமித் தொற்றுகள் நீங்கி, உடல் சூடு தணியும். அதிக உடல் சூடு, கை, கால் எரிச்சல், அதனால் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புண்கள், சிறுநீர் அடைப்பு, சொட்டு நீர் மற்றும் மூத்திர கிரிச்சரம் ஆகியன நீங்க ஓரிலை தாமரை, நெருஞ்சிமுள், நீர்முள்ளித் தண்டு, வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5 கிராமளவு தினமும் 2 வேளை இளநீர் அல்லது மோருடன் கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தொல்லை நீங்கும். ஓரிலைத் தாமரை இலைச்சாறு, பாதாம்பிசின் பொடி இரண்டையும் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வர உடல் உஷ்ணம் குறைந்து, பல வகைப்பட்ட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
அயோடின் சத்து குறைபாடு உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். சைவ உணவுகளில் அயோடின் உள்ளதா?
வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், பச்சை, மஞ்சள் நிறமுடைய இலச்சகட்டை கீரை, கருஞ்சிவப்பு நிறமுடைய பசலை கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி மற்றும் லெட்டூஸ் கீரையில் அயோடின் உள்ளது.
வைட்டமின்கள் நமக்கு பலவித நன்மைகளை பயக்கின்றன. ஆனால் வைட்டமின்களைப் போன்றே சில வேதிப்பொருட்கள் நம் உடலில் இருக்கின்றன. இவை வைட்டமின்கள் என்ற பெயரில் அழைக்கப்படா விட்டாலும், தங்கள் செயல்களிலும், தேவையிலும் வைட்டமின்களைப் போன்றே செயல் படுகின்றன.
நீரில் கரையக்கூடிய கோலின் பெரும்பாலான உணவுகளில் காணப்படுகிறது. டாரின் என்னும் அமினோ அமிலம் மாமிசம் மற்றும் கடல் உணவுகளில் காணப்படுகிறது. தசை வீக்கம், இதய வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கார்னிட்டின் என்னும் பொருளும் மாமிசம் மற்றும் பசும்பால், தாய்ப்பாலில் அதிகம் காணப்படுகிறது.
செல் பிரிதலை ஊக்குவிக்கும் மயோஜனோசிட்டால் என்னும் பொருள் சாராய வகையை சார்ந்த பொருள் தானியங்களில் மற்றும் குளுக்கோஸ் செல்களில் அதிகம் காணப்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் பயோபிளேவனாய்டுகள் புளிப்பான பழங்கள் மற்றும் தேநீரில் காணப்படுகிறது. வைட்டமின் ஈ போன்றே செயல்படும் கோஎன்சைம் கியு இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
இவைகள் நமக்கு பெருமளவு தேவைப் படாவிட்டாலும், குறைந்தளவிலாவது உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்
படுகின்றது. இது போன்ற சத்துகள் சமைக்காத கீரை, காய்கறி மற்றும் உணவுகளில் ஏராளமான இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
***
thanks டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்கை வைத்தியமும்,
உடல்நலம்,
பெண்கள் நலன்
இரத்ததானம் பற்றிய சில தகவல்கள்
முதன் முதலில் 1667 - ஆம் ஆண்டு டெனிஸ் என்ற மருத்துவர் 15 வயது சிறுவனுக்கு இரத்தத்தைச் செலுத்தினார். ஆனால், பின்னர் 18 - ஆம் நூற்றாண்டு வரை இரத்ததானம் செய்யப்படவில்லை.
காரணம், இரத்தம் சிறிது நேரத்தில் உறைவதாகும். 1907 - ஆம் ஆண்டு ‘கிரில்’ என்ற மருத்துவர் Operation முறையில் இரத்தம் செலுத்தினார். பின்னர் ‘ஆகோட்’ என்பவர் இரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் சேர்த்தால் உறையாது எனக் கண்டறிந்தார்.
இறுதியாக, 1923 - ஆம் ஆண்டு ‘ஸ்டோரெர்’ ‘சோடியம் சிட்ரேட்’ சேர்க்காமல், பைப்ரினை நீக்கி இரத்தம் உறைதலைத் தடுக்கலாம் எனக் கண்டறிந்தார்.
இன்று, அறுவைசிகிச்சையின் போதும், விபத்துகளினால் ஏற்படும் அதிகபடியான இரத்தக் கசிவின் போதும் ஈடு செய்ய இரத்தம் செலுத்தப்படுகிறது.
&lsquoA’ இரத்த வகை மனிதனுக்கு, &lsquoB’ இரத்த வகையைத் தவறாக செலுத்தினால் &lsquoA’ இரத்தவகை மனிதனின் இரத்த செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இரத்தம் கட்டியாகி மரணம் ஏற்படும். இதற்கு ‘அக்ளூடினேஷன்’ என்று பெயர்.
&lsquoO’ இரத்த வகையில் A,B ஆன்டிஜென்கள் இல்லை. அதனால், எவ்வகை இரத்த குரூப்பைச் சார்ந்த உடலில் செலுத்தினாலும், இரத்தச் செல்கள் ஒட்டிக் கொள்வதில்லை.
எனவே &lsquoO’ வகை இரத்தத்தை உடையோர் ‘யுனிவெர்செல்டோனர் (Universal Donor) எனப்படுகின்றனர். இவர்கள் எந்தவகை இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் இரத்ததானம் செய்யலாம்.
&lsquoAB’ வகையில் ஆன்டிபாடிகள் கிடையாது. எனவே, அவர்கள் பெறும் இரத்தவகையிலுள்ள ஆன்டிஜென்களுடன் வினைபுரிவதில்லை என்பதால் அவர்கள் ‘யுனிவெர்சல் ரெசிப்பியன்ட்ஸ்’ (Universal Receipients) எனப்படுகின்றனர். இவர்கள் எந்த வகை இரத்தம் உடையவர்களிடமிருந்தும் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.
இரத்தத்தானம் செய்யக் கூடாதவர்கள்:
- &lsquoAIDS’ நோயாளிகள் (HIV)
- மரபியல் நோயாளிகள் (ஹீமோபிலியா, நிறகுருடு)
- கர்ப்பிணிப் பெண்கள்
- பாலூட்டும் தாய்மார்கள்
- பால்வினை நோயுடையவர்கள் (கொனீரியா, சிஃபினிஸ்)
பொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரத்ததானம் செய்யக்கூடாது. உடல் ஆரோக்கியம் உள்ளவரே தானம் செய்யலாம்!
***
thanks amudamtamil
***
"வாழ்க வளமுடன்"
காரணம், இரத்தம் சிறிது நேரத்தில் உறைவதாகும். 1907 - ஆம் ஆண்டு ‘கிரில்’ என்ற மருத்துவர் Operation முறையில் இரத்தம் செலுத்தினார். பின்னர் ‘ஆகோட்’ என்பவர் இரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் சேர்த்தால் உறையாது எனக் கண்டறிந்தார்.
இறுதியாக, 1923 - ஆம் ஆண்டு ‘ஸ்டோரெர்’ ‘சோடியம் சிட்ரேட்’ சேர்க்காமல், பைப்ரினை நீக்கி இரத்தம் உறைதலைத் தடுக்கலாம் எனக் கண்டறிந்தார்.
இன்று, அறுவைசிகிச்சையின் போதும், விபத்துகளினால் ஏற்படும் அதிகபடியான இரத்தக் கசிவின் போதும் ஈடு செய்ய இரத்தம் செலுத்தப்படுகிறது.
&lsquoA’ இரத்த வகை மனிதனுக்கு, &lsquoB’ இரத்த வகையைத் தவறாக செலுத்தினால் &lsquoA’ இரத்தவகை மனிதனின் இரத்த செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இரத்தம் கட்டியாகி மரணம் ஏற்படும். இதற்கு ‘அக்ளூடினேஷன்’ என்று பெயர்.
&lsquoO’ இரத்த வகையில் A,B ஆன்டிஜென்கள் இல்லை. அதனால், எவ்வகை இரத்த குரூப்பைச் சார்ந்த உடலில் செலுத்தினாலும், இரத்தச் செல்கள் ஒட்டிக் கொள்வதில்லை.
எனவே &lsquoO’ வகை இரத்தத்தை உடையோர் ‘யுனிவெர்செல்டோனர் (Universal Donor) எனப்படுகின்றனர். இவர்கள் எந்தவகை இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் இரத்ததானம் செய்யலாம்.
&lsquoAB’ வகையில் ஆன்டிபாடிகள் கிடையாது. எனவே, அவர்கள் பெறும் இரத்தவகையிலுள்ள ஆன்டிஜென்களுடன் வினைபுரிவதில்லை என்பதால் அவர்கள் ‘யுனிவெர்சல் ரெசிப்பியன்ட்ஸ்’ (Universal Receipients) எனப்படுகின்றனர். இவர்கள் எந்த வகை இரத்தம் உடையவர்களிடமிருந்தும் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.
இரத்தத்தானம் செய்யக் கூடாதவர்கள்:
- &lsquoAIDS’ நோயாளிகள் (HIV)
- மரபியல் நோயாளிகள் (ஹீமோபிலியா, நிறகுருடு)
- கர்ப்பிணிப் பெண்கள்
- பாலூட்டும் தாய்மார்கள்
- பால்வினை நோயுடையவர்கள் (கொனீரியா, சிஃபினிஸ்)
பொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரத்ததானம் செய்யக்கூடாது. உடல் ஆரோக்கியம் உள்ளவரே தானம் செய்யலாம்!
***
thanks amudamtamil
***
"வாழ்க வளமுடன்"
Labels:
படித்ததில் பிடித்தது,
பொது அறிவு,
மருத்துவம்
முள்ளம்பன்றியின் ஆங்கில பெயர் மற்றும் சில தகவல்கள்
முள்ளம்பன்றிகள் (Porcupine) தாவர உண்ணி வகையைச் சார்ந்த உடலில் நீண்ட முட்களையுடைய விலங்குகளாகும். முள்ளம்பன்றிகளுள் பல வகைகள் உள்ளன. இவற்றுள் இரண்டு பிரிவுகள் உள்ளன.
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ட்ரிசைடே (Hystricidae) என்ற விலங்கு குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முள்ளம்பன்றி இனங்கள் எரிதிசோன்றிடே (Erethizontidae) என்ற விலங்கு குடும்பத்தைச் சார்ந்தவை.
இந்திய முள்ளம்பன்றி (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும் இனம் ஹிஸ்றரிக்ஸ் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தை சார்ந்தவை.
இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை சிலவகை தாவரங்கள், கிழங்குகள், தானியங்கள் போன்றவற்றை உண்ணுகின்றன. அத்தோடு, தமது முட்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளைப் பெறுவதற்காக இவை எலும்புகளையும், நத்தை ஓடுகளையும் உண்ணுகின்றன.
இந்திய முள்ளம்பன்றிகளின் கர்ப்பக்காலம் 240 நாட்கள் ஆகும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் போடுகின்றன.
இவை 70 செ.மீ. வரை நீளமும், 11 முதல் 18 கிலோகிராம் வரை வளரக்கூடியது. முள்ளம்பன்றியின் தோலில் நீண்ட கொத்து கொத்தாக கூர்முனையுடைய முட்கள் உள்ளன. நீண்ட மெல்லிய முட்களுக்குக் கீழாக குட்டையான, தடித்த முட்கள் அமைந்துள்ளன.
இவற்றுக்கிடையில் ஒலி ஏற்படுத்தக்கூடிய நீண்ட, உட்குடைவான முட்கள் காணப்படும். இந்த ஒலி எதிரிகளை எச்சரிப்பதற்கு உதவுகிறது.
முள்ளம்பன்றிகள் இரவிலேயே நடமாடித் திரிகின்றன. பகல்நேரங்களில் பாறைகளுக்கிடையிலுள்ள குகைகளில் அல்லது நிலத்தில் தாமே தோண்டிக் கொண்ட வளைகளில் காலத்தைக் கழிக்கின்றன.
இவற்றின் வளைகள் நீண்ட சுரங்கப் பாதையன்றையும் பெரிய உள்ளறை ஒன்றையும் கொண்டிருக்கும். இவ்வறையில் இருந்து வெளியேறுவதற்குப் பல சுரங்க வழிகள் காணப்படும். இவை விவசாயிகளின் தோட்டங்களையும், வீட்டுத் தோட்டங்களையும் தோண்டி நாசம் செய்கின்றன.
முள்ளம்பன்றிகள் தொந்தரவு செய்யப்பட்டால் அல்லது அச்சமுற்றால் விரைவாக பின்னோக்கி சென்று எதிரியை தன் பின்புற முட்களால் தாக்கும்.
அப்போது அதன் முட்கள் எதிரி விலங்கின் உடலினுள் ஆழமாக அமிழ்ந்து கடும் காயத்தை அல்லது மரணத்தை விளைவிக்கலாம். இவை மனிதர்களாலும், புலி, சிறுத்தை, காட்டுப்பூனை போன்ற பெரிய விலங்குகளாலும் வேட்டையாடப்படுகின்றன.
அமெரிக்க நாடுகளில் காணப்படும் முள்ளம்பன்றிகள் மரம் ஏறுவதிலும், நீந்துவதிலும் திறன்மிக்கவை. பெரும்பான்மையான நேரத்தை மரங்களில் செலவிடுகின்றன.
இவற்றின் உடலில் கறுப்பு கலந்த ப்ரௌன் மற்றும் மஞ்சள் நிறத்திலான முட்கள் காணப்படுகின்றன. இவை, பச்சை இலைகளையும், தாவரங்களையும் உண்கின்றன. அமெரிக்க முள்ளம்பன்றிகள் ஒரு தடவைக்கு ஒரு குட்டியையே ஈணுகின்றன. இதன் கர்ப்பகாலம் 7 மாதங்கள் ஆகும்.
***
thanks அமுதம் தமிழ்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
படித்ததில் பிடித்தது,
பொது அறிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "