இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.
****
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
***
மேலும் பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.
டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களை அழிக்காது என்பதால் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று சிகிச்சைப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் புரதச்சத்து குறைவாகவே இருந்தாலும் இப்புரதச்சத்தின் தரம், பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
***
இதில் புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்துகள் அடங்கிய உணவு நமக்கு இன்றியமையாதவை ஆகும். பசுமையான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றில் சத்துகள் நிறைந்திருந்தாலும் இயற்கையில் வளரும் தென்னைமரங்கள் தரும் இளநீரின் மகத்துவமே தனிச்சிறப்பு கொண்டதாகும்.
***
குளுகோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரை இளநீரில் காணப்படுவதோடு, சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் காணப்படுவது பொட்டாசியம் தான். தென்னைக்கு இடப்படும் பொட்டர் (சாம்பல் சத்து) உரங்களின் அளவைப் பொறுத்து பொட்டாசியத்தின் அளவு மாறுபடுகிறது.
***
கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும், குறைந்த அளவில் உள்ளன. வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்ட கனிமப் பொருட்களும் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள சர்க்கரைச் சத்தின் அளவு 1.5 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக அதிகரித்து விடுகிறது. இளநீரிலுள்ள குளுகோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சி அடையும்போது சுக்ரோசாக மாறிவிடுகிறது. முற்றின தேங்காய் நீரில் காணப்படும் மொத்த சர்க்கரை சத்தில் 90 சதவீதம் சுக்ரோஸ் ஆகும்.
***
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
***
விந்துவை அதிகரித்து தாம்பத்யத்தை தூண்டும் என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. ஜீரணக் கோளாறினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். இளநீர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் தொல்லையே இருக்காது. அடியோடு அழித்துவிடும். இது தவிர உடலில் ஏற்படும் நீர் வீக்கத்தையும் இளநீர் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.முக்கியமாக உடல் சூட்டை தணிப்பதில் இதற்கு நிகரானது ஏதும் இல்லை எனக் கூறலாம். மேலும் வேர்க்குரு, வேனல்கட்டி, பெரியம்மை, தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றிற்கும், தடிப்புகளை நீக்கும் குணமும் இளநீருக்கு உண்டு.
***
இளநீரில் சோடியம் குளோரைட், பொற்றாசியம், நீர், கல்சியம் உட்பட பல விற்றமின்கள் காணப்படுகின்றன. இளநீர் எப்போதும் மனிதர்களை இளமை யாக வைத்திருப்பதற்கு உதவுகின்றது. குறிப்பாக கோடைக் காலங்களில் உப் புச் சத்தும் நீரும் வியர்வை மூலமாக உடலிலிருந்து வெளி யேறிவிடுவதால் மயக்கம், நாடித்துடிப்பு, தசைகள் இறுகுதல் போன்றன நிகழும். எனவே, இள நீரை அருந்துவதன் மூலம் எம் உடலின் வெப்பநிலை சமச்சீராக பாதுகாக்கப் படுவதோடு உப்புச் சத்தும் கிடைக்கின்றது.
***
இளநீரில் உப்புத் தன்மை, வழுவழுப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு தொடர்ந்து பருகச் செய்து, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்து விடும். சிறுநீர் பெருக்கியான இளநீர் சிறுநீர் கிருமிநாசினியாக செயல்பட்டு சிறுநீரகச் கற்களை கரைப்பதோடு, சிறுநீரக வியாதிகளையும் தடுத்து குணப்படுத்தக் கூடியது.
***
இளநீரை உடனடியாகக் குடிப்பதே பயன்மிக்கதாகும். சில மணி நேரங்கள் வைத்திருப்பதோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்துவதோ இளநீரின் இயற்கையான மருத்துவக் குணங்களை பாதிப்படையச் செய்ய லாம். இளநீருடன் வேறெதனையும் கலந்து குடிக்கக் கூடாது.
***
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
***
இவ்வளவு சத்து உள்ள இயற்க்கை பானத்தை விட்டு நாம் ஏன் குளிர்பானங்களையும், பனிக்கூழையும் விரும்பு சாப்பிடனும். யோசிப்போமா!!!!!!
ஒரு சில குளிபானத்தில் கலப்படம் இருக்கிறது. கலப்படம் இல்லாமல் நமக்கு கிடைக்கும் இயற்க்கை பானமான இளநீர் சாலச்சிறந்தது.