...

"வாழ்க வளமுடன்"

24 ஆகஸ்ட், 2015

இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

Mohandass Samuel's photo.
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் ...எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.

இறாலில் உள்ள சத்துக்கள்

கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.

இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

செலினியம்(Selenium), புரம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள்
அடங்கியுள்ளன.


கொலஸ்ட்ரால் – 43 Mg
சோடியம் – 49 Mg
புரதம் – 4.6 Mg
கால்சியம் – 8.6 Mg
பொட்டாசியம் – 40 Mg


நன்மைகள்


செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது.
வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால், இதில் உள்ள இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் உள்ள மக்னீசியம் சத்து இரண்டாவது நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.

இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.


***
fb
***

"வாழ்க வளமுடன்"

மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா?மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா? மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்குகின்றதா?


உங்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்க...ள் பெண்களாய் இருந்தால் இது மிகவும் அவசியம். இரும்பு சத்தே ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.
ரத்த சிவப்பணுவில் உள்ள முக்கியமான பொருள் இதுவே. ரத்த சிவப்பணு எண்ணிக்கை குறையும் பொழுது இரும்பு சத்து குறைவது ரத்த சோகை எனப்படும். தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாவிட்டால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காது. தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது உடல் சோர்வாகும். 

 மூளை சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் ரத்த சோகை அதிகமாகும். இதனால் குழந்தை சிறிய அளவிலோ அல்லது உரிய காலத்திற்கு முன்பாகவோ பிறக்கலாம். இரும்பு சத்து திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சருமம், முடி, நகம் இவை நன்கு பராமரிக்கப்படுவதற்கும் அவசியமானது.


 வயது மற்றும் ஆண், பெண், ஒருவரது உடல்நிலையை பொறுத்து இரும்பு சத்து தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்பு சத்து தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வேகமாக வளரும் பருவத்தில் இருக்கின்றனர். 4, 8 வயது வரை 10 மி.கி. இரும்பு சத்து அன்றாடம் அவசியம்.


 9 முதல் 13 வயது வரை 8 மி.கி. அளவாவது தேவை. பெண்களுக்கு 19-50 வயது வரை தினம் 18 மி.கி. இரும்பு சத்து தேவை. ஏனெனில் மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த வயதில் தினம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு அன்றாடம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. உணவிலிருந்தோ அல்லது ஊட்டசத்திலிருந்தோ ஒருவர் இரும்பு சத்தை பெற முடியும். கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுவது எப்போது?
* கர்ப்பகாலம்.

* தாய் பால் கொடுக்கும் காலம்.

* வயிற்றில் புண் (ரத்த இழப்பு ஏற்படுத்தினால்).


* வயிறு, உணவுப் பாதையில் பிரச்சினை. அதனால் தேவையான அளவு இரும்பு சத்தினை உறிஞ்ச முடியாமல் போகுதல்.


 * அதிக நெஞ்செரிச்சல் மாத்திரைகளை சாப்பிடுவது குடல் இரும்பு சத்து எடுத்துக் கொள்வதை தடுக்கும்.

* ஏதோ காரணத்தினால் (உ.ம். ஆபரேஷன்) எடை குறைந்த பிறகு.

 * மிக அதிக உடற்பயிற்சி சிவப்பணுக்களை அழிக்கும்.

* சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு தாவர வகை இரும்பு சத்தினை உடலால் நன்கு எடுத்துக் கொள்ள முடிவதில்லை.


இரும்பு சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:

* மூச்சுவாங்கும்.

* படபடப்பு இருக்கும்.

* கை, கால்கள் ‘ஜில்’லென இருக்கும்.

* குழந்தைகள் பல்பம், மண் சாப்பிடுவர்.

* வளைந்த உடையும் நகம், முடி கொட்டுதல்.

* வாய் ஓரங்களில் வறட்சி புண் காணப்படும்.


இரும்பு சத்தை மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் பொழுது...

 * வயிறு பாதிப்பு

* கறுத்த வெளிப்போக்கு

* வாந்தி, பிரட்டல்

 * மலச்சிக்கல்

* வயிற்றுப் போக்கு

போன்றவை ஏற்படலாம். நார்சத்தை கூட்டிக் கொண்டால் இப்பிரச்சினைகள் தீரும். உடலுக்கு ஆக்ஸிஜன் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாது உப்புக்களும் முக்கியம். உடலின் 5 சதவீத எடை இந்த தாது உப்புக்களே. இவை உடல் செயல்பாட்டுக்கும், மூளை செயல்பாட்டுக்கும் அவசியமானது.


பல், எலும்பு, திசுக்கள், ரத்தம், தசை, நரம்பு இவை அனைத்திற்கும் தாது உப்புக்கள் அவசியமாகின்றது. உடலில் பல செயல்களில் தாது உப்புக்கள் கிரியா ஊக்கி போல் வேலை செய்கின்றது.

நரம்பின் மூலம் செய்திகள் பரவ, செரிமானம் நடைபெற வைட்டமின்கள் சீராக வேலை செய்ய தாது உப்புக்களே அவசியம். வைட்டமின் ‘சி’ சத்து உடலுக்கு நன்கு கிடைக்க கால்ஷியம் தேவை. வைட்டமின் ‘ஏ’ சத்து நன்கு உடலில் உறிஞ்சப்பட ‘ஸிங்க்’ தேவை.


பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் கிடைக்க ‘மக்னீஷியம்‘ தேவை. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘ஹீம்’ எனப்படும் இரும்பு சத்து அசைவ உணவிலிருந்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. என்றாலும், தாவர வகை இரும்பு சத்தே சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இரும்பு சத்து உடைய சைவ உணவுகள்:


* உலர் திராட்சை - இதை நாள் ஒன்றுக்கு 4 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம். பழங்களுடன் கலந்து உண்ணும் பொழுது இதில் உள்ள இரும்பு சத்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.


* பயிறு வகைகள்

* பரங்கி, பூசணி விதைகள்

* சோயா பீன்ஸ்

* கீரை வகைகள்

* எள்

* கை குத்தல் அரிசி

* ஓட்ஸ்

* உருளைக்கிழங்கு

* சோயா பன்னீர்

* முழு கோதுமை

* பச்சை காலிப்ளவர்

* சூரிய காந்தி விதை

* பச்சை பட்டாணி

 * அடர்ந்த சாக்லெட்.

ஒரு தாது உப்பு செயல்பட மற்ற தாது உப்புகளும் உடலில் தேவையான அளவு இருக்க வேண்டும். இவைகளை ‘எலக்ட்ரலைட்ஸ்’ என்பர். இவை நம் உடலில் மின்சாரத்தை தாங்கிச் செல்பவை. பச்சை கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் இவைகளில் தாது உப்புக்கள் கிடைக்கின்றன.


 தாது உப்புகள் விவரம்:

 கால்ஷியம் க்ரோபியம் காப்பர் புளோரைட் அயோடின் இரும்பு மக்னீசியம் மங்கனீஸ் பாஸ்பரஸ் செலினியம் ஸிங்க் மேஸிமிடனம் என பிரிவுபடும்.

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

சளிக்கு ஐந்து மருந்து பொடி!!!


Baskar Jayaraman's photo.

இயற்க்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.
இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.
...
நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


சளிக்கு ஐந்து மருந்து பொடி: சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.


உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!!


Baskar Jayaraman's photo.


அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம்.


 * இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும்....


* இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும்.


* கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம்.* பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம்.
வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய் கொண்டு மிகவும் சுலபமான முறையில் அனைவரையும் அவதிப்படுத்தும் இருமலில் இருந்து விடுபடலாம்.
***
tu  fb
***"வாழ்க வளமுடன்"
      

A + B + C பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம் !!!

Baskar Jayaraman's photo.


A + B + C …….ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும்...
.விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .


இந்த பானம் அருந்துவதால் பயன்கள் ::

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ்

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

 உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது
இரத்தத்தை சுத்தபடுதுகின்றது


 பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு


 உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு

***
tu   velichaveedu
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "