...
"வாழ்க வளமுடன்"
24 பிப்ரவரி, 2011
காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு !
சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.
”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள்.
இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட்.
குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம். காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம்.
*
சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு.
“காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”
பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.
“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது.
அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள்.
முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.
டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும்.
தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது!
காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும். பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான்.
காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும்.
பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.
காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.
காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.
காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்!
***
thanks ஜவஹர்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
படித்ததில் பிடித்தது,
பொது அறிவு,
மருத்துவம்
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
**
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, "தலை வலிக்கிறது' என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்
**
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம்.
வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
**
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.
**
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, "ஆன்டாசிட்' மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
**
கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
**
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
***
thanks வார மலர்.
by - டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்கை வைத்தியமும்,
உடல்நலம்,
மருத்துவ ஆலோசனைகள்
நடை பயிற்சி (Walking) உண்டாகும் நன்மைகள் !
நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
விஞ்ஞான யுகத்தில் வெகுதூரம் சென்ற மேலை நாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் சித்தர்கள் சொன்னதை இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள். சித்தர்களின் அறிவாற்றல் மேலைநாட்டு மக்களுக்கு புரிய ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்தர்கள் வழிவந்த நம் மக்கள், அறிவு ஜீவிகளாக தன்னைக் காட்டிக்கொண்ட மேலை நாட்டு மக்களின் அறியாமையை நாகரிகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வந்தோம். விளைவு மேற்கண்ட நோய்கள்தான். ஆயுளையும் குறைத்து ஆரோக்கியத்தையும் இழந்து பேதை மனிதனாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அறிவிலும்,ஆன்மீகத்திலும் மருத்துவத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் அவசியம் பயிற்சி தேவை என்பதை சொல்லவே தியானம், யோகா மற்றும் மலை ஏறுதல், பாதையாத்திரை என பல வழிமுறைகளைச் செல்லிவைத்தனர். அவர்களும் அதைக் கடைப் பிடித்து நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர்,
திடகாத்திரமான 100 இளைஞர்கள் ஒரு நாட்டின் சரித்திரத்தை மாற்றலாம் என்று கூவி அழைத்த சுவாமி விவேகானந்தர் அவதரித்த தேசமும் இதுதான். அந்த இளைஞர்கள் இன்று இல்லை.மேலை நாட்டு மது வகையில் சிக்கி ஆரோக்கியத்தை இழந்து நிற்கும் இளைஞர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.
பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் இல்லை. விளையாட அனுமதிப்பதும், சொல்லிக் கொடுப்பதும் இல்லை. விளையாட்டு, உடற்பயிற்சி என்பது ஏதோ ஒரு தேவையற்றது என்று பெற்றோர் நினைக்கின்றனர்.
படிப்பு ஒன்றே எல்லாவற்றையும் தந்து விடாது. நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால்தானே நன்றாக படிக்கவும் முடியும். நோய்களின் தாக்கம் வந்த 45 வயதை கடந்தவர்கள்தான் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்கிறார்கள்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு.
குழந்தைகளுக்கு படிப்புடன் உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். பாரதி கூறிய படி மாலையில் விளையாட அனுமதியுங்கள். அப்போதுதான் திடகாத்திரமான பலமான இளைஞனாக உங்கள்குழந்தை வளருவார்கள்.
உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், என பலவகை உண்டு. இந்த இதழில் நடைப்பயிற்சி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள veNtiya பயிற்சியாகும்.
பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.
நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும்,அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.
நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
***
நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்:
1· உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
*
2· உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். வியர்வை நன்கு வெளியேறும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.
*
3· காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.
*
4· நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது, மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
*
5· எலும்புகள், பலப்படும். தசைகள் சுருங்கி விரியும்.
*
6· உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
*
7· நல்ல உறக்கம் கிட்டும்.
*
8· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*
9· முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.
*
10· கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*
11· செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.
*
12· முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
*
13· தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.
*
14. நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும்.
*
15. ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி.
தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம் :)
***
நன்றி:- நக்கீரன்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடற்பயிற்சி,
சுகமாக வாழ,
படித்ததில் பிடித்தது
19 பிப்ரவரி, 2011
அமர்ந்தபடியே வேலை செய்பவர்களுக்கு
பெரும்பாலும், கடின உழைப்பில் ஈடுபடுபவர்களை விட, அமர்ந்தபடியே வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகமான பிரச்சினைகள் வருகின்றன.
**
முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்களைப் பார்க்கலாம்.
நமது முதுகெலும்பானது கேள்விக்குறியைப் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஆனால், கூன் போட்டு அமர்ந்தபடியே வேலை செய்வதால் நமது முதுகெலும்பு ஆங்கில எழுத்தான சி- யைப் போன்று ஆகிவிடுகிறது.
முதுகெலும்பில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதால், முதுகெலும்பின் ஒரு சில தட்டுகளில் இருக்கும் திரவம் அழுத்தத்தின் காரணமாக வெளியேறுகிறது. இதனால் முதுகுவலி ஏற்படுகிறது.
மேலும், கால்களை ஒரே மாதிரியான நிலையில் வைத்து பணியாற்றுவதும் தவறு. அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கால்கள் ஒரே அழுத்தமான நிலையில் இருப்பதால், உடலில் வாயுவின் இயக்கம் ஓரிடத்தில் தடைபட்டு அங்கு வலி ஏற்படுகிறது. எனவே உடலை அவ்வப்போது தளர்வாக வைத்துக் கொள்வதும், கை, கால்களின் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.
எந்த ஒரு செயலுக்கும் எதிர்மறையான ஒரு செயலை நாம் செய்தால் அது நல்ல பலனை அளிக்கும். அதாவது கூன் போட்டு அமர்ந்தபடியே இருக்கும் நாம், அவ்வப்போது, பேக் ஸ்ட்ரிச் எனப்படும் பின்பக்கமாக வளைவதை செய்யலாம்.
அதுபோலவே குவிந்தபடி நம் கைகளை வைத்திருப்பதை மாற்றி, விரல்களை பின்பக்கமாக வளைக்கும் எளிய பயிற்சிகளை செய்யலாம்.
அவ்வப்போது எழுந்து நடந்து சென்றுவிட்டு வரலாம். தண்ணீர் குடிக்கவோ, மற்றவர்களிடம் அலுவலக சந்தேகம் கேட்கவோ 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடந்து செல்வது நல்லது.
மேலும், கணினியை நாம் குனிந்தபடி பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது கூட நமது தலை நிமிர்ந்தபடி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், எளிதில் நமது கழுத்தின் நரம்புகளில் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஒரே இடத்தில் நிற்கும்போது இரண்டு கால்களையும் ஊனி நிற்கக் கூடாது. ஒரு காலில் ஊனி மற்றொரு காலை தளர்வாக விட்டு நின்றால், உடலில் இருக்கும் வாயுவானது சரியான இயக்கத்தில் இருக்கும். எனவே இடுப்புப் பகுதியில் வாயுப் பிடிப்பு என்பது ஏற்படாது.
வரவிருக்கும் அனைத்து வியாதிகளுக்கும் யோகத்தில் பயிற்சி உள்ளது. சரியான முறையில் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.
***
thanks webdunia
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
படித்ததில் பிடித்தது,
யோகாசனம்
கருவிலே குறையிருந்தால் திருத்திக் கொள்ளலாம்!
ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
‘‘மருத்துவத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. முன்பெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இப்போது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சைகளை செய்துவிட முடியும். அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் என்கிற கருவி. இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட மிக முக்கியமான சாதனம் எது என்று கேட்டால் அல்ட்ரா ஸ்கேன் என்றுதான் சொல்வேன். அதனால் ஏற்படும் நன்மைகளை நினைத்து நினைத்து தினமும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் மகப்பேறு மருத்துவர் மட்டுமல்ல. அல்ட்ரா ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் நிபுணர். அல்ட்ரா ஸ்கேன் சாதனத்தினால் ஏற்படும் பலன்கள் பற்றி அவர் விளக்கமாகச் சொல்கிறார்.
‘‘ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்கப் போகிற குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியத்தான் ஸ்கேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து. குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்வது ஸ்கேன் இயந்திரத்தின் ஒரேயரு செயல்பாடுதான். ஸ்கேனின் மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணா, பெண்ணா என்று அறிவது மிக மிகச் சாதாரண விஷயம்தான்.
கருத்தரித்த பெண்கள் கட்டாயமாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று நினைப்பதேயில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
முதலில், ஸ்கேன் செய்து பார்ப்பதையே தேவையில்லாத ஒரு விஷயமாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெண்களிடம் ஸ்கேன் சாதனம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.
வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். சில நாட்களுக்கு முன்பு பிரசவ காலத்தை நெருங்கிவிட்ட ஒரு பெண் என்னிடம் ஸ்கேன் செய்துகொள்ள வந்தார்.
அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி! கிட்டத்தட்ட ஒன்பது மாதத்தைத் தாண்டிவிட்ட அந்தக் குழந்தை கபாலம் இல்லாமலே வளர்ந்திருந்தது. ‘அனன்கேபாலி’ என்று அதற்குப் பெயர். மண்டையோடு இல்லாமலே வளர்ந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
தலையில்லாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, தனக்கும் ஒரு அழகான குழந்தை பிறக்கப்போகிறது என்று அந்தத் தாய் எவ்வளவு கனவு கண்டிருப்பாள்? கருத்தரித்த ஒன்பது வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்திருந்தாலே குழந்தையின் நிலை என்ன என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த அளவுக்கு குறைபாடுகளோடு ஒரு குழந்தை வயிற்றில் வளர்வதை விட, கருக்கலைப்புச் செய்திருக்கலாம்.
ஆனால் ஸ்கேன் செய்து பார்க்காமல் விட்டதன் தவறு, மண்டையோடு இல்லாமல் குழந்தை ஒன்பது மாதங்களுக்கு வளர்ந்துவிட்டது. இந்தக் குழந்தை வெகு நாட்களுக்கு வாழ முடியாது என்பதால் வயிற்றிலேயே இறந்துவிட்டது. எனவே, கஷ்டப்பட்டு சிசேரியன் செய்துதான் அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்தோம். இத்தனை சிரமம் நமக்குத் தேவைதானா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
*
இரண்டாவது காரணம், பெரியவர்களின் ஆதரவின்மை. ‘ஸ்கேனெல்லாம் எதற்கு? எங்கள் காலத்தில் நாங்கள் ஸ்கேனெல்லாம் செய்துகொண்டோமா என்ன? அஞ்சாறு குழந்தையை நாங்க பெத்துக்கலையா?’ என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்கிறார்கள்.
அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற வாதம் இது. முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. முக்கியமாக, நம்முடைய உணவுமுறை மாறியிருக்கிறது. முன்பு இயற்கையாக விளைந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது பல்வேறு இரசாயனப் பொடிகளைத் தூவி வளர்க்கப்பட்ட காய்கறிகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். எனவே, அதன் பாதிப்பு வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் ஏற்படும். இதை நம்முடைய பெரியவர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தக் காலத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருக்கலாம். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் இப்போது நம்மிடம் இல்லை என்பதால் அந்தக் காலத்தில் இது போன்ற பிரச்சினை இல்லை என்று சொல்லமுடியாது.
ஸ்கேன் செய்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் பணத்தை வசூல் செய்கிறார்கள். இதில் உள்ள வேறுபாடுகளை கவனிக்கும் மக்கள் ஸ்கேன் சாதனத்தின் மீதே சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். 125 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை ஸ்கேனுக்காக வசூல் செய்கிறார்கள். சிலர் அளவுக்கதிகமாக லாபம் சம்பாதிக்க நினைப்பதால் ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் அதிகமாகியிருக்கிறது. இதற்காக ஸ்கேன் செய்வதையே வெறுத்தால் அது சரியாக இருக்குமா? எனவே, கருத்தரித்த ஒவ்வொரு பெண்ணும் அவசியம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் அதை அப்போதே சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு மருத்துவமுறை முன்னேறிவிட்டது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்போதே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்போதே செய்துவிடலாம். அல்லது குழந்தை பிறந்த பிறகு செய்யலாம் என்கிற நிலையில் இருந்தால், பிறகு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவோம்.
உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் வயிற்றுக்குள் இருக்கிறபோதே சில குழந்தைகளுக்கு கடுமையான உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது முக்கியமான உறுப்புகள் வளராமலே போயிருக்கும். அந்தக் குறைகளை வயிற்றுக்குள்ளேயே சரிசெய்தால்தான் குழந்தை பிழைக்கும். இல்லாவிட்டால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடும்.
உதாரணமாக, சில குழந்தைகளுக்கு இருதயத்தில் ஓட்டை விழுந்திருக்கும். இந்த ஓட்டைகளைச் சரி செய்யக் கூடிய அளவுக்கு இருந்தால் உடனே ஆபரேஷன் மூலம் சரி செய்துவிடலாம். அல்ட்ரா ஸ்கேன் கருவின் உதவியோடு தாயின் வயிற்றின் மேலிருந்து கருவிகளைச் செலுத்தி குழந்தையின் இருதயத்தில் நுழைத்து ஆபரேஷன் செய்து விடலாம்.
இன்னும் சில குழந்தைகளுக்கு சிறுநீரில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இந்தக் குறையை அந்த நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரைச் சுற்றியுள்ள திசுக்கள் அழுகி, மொத்த சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, குழந்தை இறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, ஸ்கேன் மூலம் குழந்தையின் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பைப் போக்கிவிடுவோம்.
மேற்சொன்ன இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் நம் ஊரிலேயே அடிக்கடி நடக்கும் விஷயங்களாகி விட்டன. ஆனால் வெளிநாட்டில் நடக்கும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தாயின் ரத்தம் ஒரு பிரிவாகவும், குழந்தையின் ரத்தம் வேறு ஒரு பிரிவாகவும் இருக்கும். இந்தக் குளறுபடியினால் குழந்தையின் உயிர் பிரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே, குழந்தையின் ரத்தத்தை எடுத்து முதலில் பரிசோதனை செய்கிறார்கள். அதில் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால் குழந்தைகளுக்கே புதிய ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவது என்பது வியக்கத்தக்க நிகழ்ச்சிதானே!
மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல குழந்தைகளுக்குக்கூட குளுக்கோஸ் ஏற்றலாம். இதுபோன்று நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களெல்லாம் இப்போது நடந்து வருகிறது.
சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் இருதயத்தையும், வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் முக்கியமான ஜவ்வு இருக்காது. இதனால் குடல் பகுதி இருதயத்துக்கு அருகே சென்று அதை செயலிழக்கச் செய்யும். அல்லது இருதயம், மூளைப் பகுதியை நெருங்கி வந்து அதன் செயல்பாட்டைச் செய்ய மறந்துவிடும். இதனால் குழந்தை உயிருக்கு உடனே ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தைத் தடுக்க குழந்தை பிறந்தவுடன் குடல் பகுதியையும், இருதயப் பகுதியையும் பிரிக்கிற மாதிரி செயற்கையாக ஒரு தடுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது. குழந்தை வயிற்றுக்குள் இருக்கிறபோது இப்படிப்பட்ட பிரச்சினையோடு இருக்கிறது என்பது தெரிந்தால்தானே பிறந்தவுடன் ஆபிரேஷன் செய்யமுடியும்?
முன்பை விட இப்போது உடல் ஊனத்தோடு நிறைய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, காலம் கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. முன்பு அதிகபட்சமாக இருபத்துநான்கு வயதிற்குள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது பெண்கள் படித்து, வேலைக்குப் போய் செட்டிலான பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட மேலை நாட்டவர்கள் இப்போதெல்லாம் காலக்கிரமத்தில் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள். தப்பித் தவறி காலம் கடந்து திருமணமாகி, பிள்ளைப்பேறு ஏற்பட்டிருந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கிறபோதே ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்திருக்கிறார்கள். தொப்புள் கொடி மூலமாக ரத்தத்தை எடுத்து, அந்த ரத்தத்தில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்து அப்போதோ அல்லது குழந்தை பிறந்த உடனேயோ சரி செய்துவிடுகிறார்கள்.
நெருங்கிய உறவில் திருமணம் புரிந்து கொள்வதாலும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, குரலில் குறைபாடுடையவர்கள் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.
சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
இத்தனை வளர்ச்சிக்குக் காரணமான அல்ட்ரா ஸ்கேன் மெஷினை மிகச் சிறந்த சாதனம் என்று நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லையே?’’ சிரித்துக் கொண்டே முடித்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
***
சந்திப்பு : ஏ.ஆர். குமார்
nantri- Kumutham
***
"வாழ்க வளமுடன்"
Labels:
குழந்தைகள் நலன்,
படித்ததில் பிடித்தது,
பெற்றோர்கள்
18 பிப்ரவரி, 2011
விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம் :(
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக,
இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
***
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன? என்பதை இனி நாம் பார்ப்போம்.
ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.
எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும். உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும்.
நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது
. பல நோய்கள் உருவாகின்றது.
****
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?
வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்;லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.
இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.
***
விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?
விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?
இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?
விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!
இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.
**
நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை கிட்னி சீராக சுத்தம் செய்துவிடும், ஆனால் மாத்திரைகளால் வரும் சத்துக்கள் அதிகமானால் அதை கிட்னியால் சுத்தம் செய்ய முடியாது. இதனால் கிட்னி சம்மந்தமான பிரச்சிகைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது
யோசிப்போம் :)
***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
மருத்துவ ஆலோசனைகள்,
மருத்துவம்
தக்காளியின் மருத்துவ குணங்கள் !
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அரிய பழம் இது. தக்காளியில் உள்ள சிட்ரிக், பாஸ்போரிக், மாலிக் ஆகிய அமிலங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன.
புற்று நோயைத் தவிர்க்கும் பி1 (P1) என்ற பொருளும், உடலுக்கு நிறத்தையும் மனதிற்குத் துடிப்பையும் வழங்கும் 'லைகோபென்' என்ற பொருளும் தக்காளியில் உள்ளன.
கலோரி குறைவாக உள்ள பழம் இது. உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். தினமும் 5 பழங்கள் சாப்பிட்டுவந்தால் உடல் எடை இரண்டே மாதத்தில் குறைந்து விடும்.
இத்துடன் உடலின் எந்தப் பகுதியில் எந்தவிதமான நோய்க்கிருமி இருந்தாலும் அந்த விஷக்கிருமிகளை அப்புறப்படுத்தி, சிறுநீரை நன்கு வெளியேறச் செய்து, அதன் மூலம் நோய்க்கிருமிகள் அனைத்தையும் உடலிலிருந்து வெளியேறச் செய்துவிடும். இதனால் கச்சிதமான தோற்றத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்
தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவு உள்ளன. எனவே, தக்காளிச்சாறை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு அருந்தினால் சாப்பாடு குறைவாகச் சாப்பிடலாம். போதிய சத்துணவும் தக்காளிச் சாறு மூலம் கிடைத்துவிடுவதால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
நடுத்தர மக்களின் அரிய பழம் இது. ஆப்பிள், பப்பாளி, திராட்சையை விட விலை குறைவு என்பதால் தக்காளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு இளமையை எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால், யூரிக் அமிலம் என்ற விஷ அமிலம் அப்புறப்படுத்தப்படுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது தக்காளிச் சாறு.
தக்காளிச் சாறுடன் காரட் அல்லது பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது. முதுமையிலும் கண்பார்வை தெளிவாக இருக்க வைட்டமின் A நிறைந்த தக்காளிச் சாறு அதிகம் உதவும்.
***
thanks சாரா
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
இயற்கை வைத்தியமும்,
சுகமாக வாழ
நெல்லிக்கனியின் மகத்துவம்
வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்...
* உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.
* சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
* சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.
* பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
* விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.
* சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
* தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக்
கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
* தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லை களைப் போக்குகிறது. இந்தியப் பெண்கள் பொதுவாக நெல்லிக்கனி அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.
* காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப் போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
* ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
* உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
***
நன்றி தினதந்தி.
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
சுகமாக வாழ,
படித்ததில் பிடித்தது
கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்கள் !
கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.
இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.
கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும்.
இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.
***
குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க
சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.
கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .
கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.
***
thanks மோகன்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
குழந்தைகள் நலன்,
சுகமாக வாழ
கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள் :)
உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:
*
மஞ்சள்:
மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
*
ஏலக்காய்:
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.
*
மிளகாய்:
மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.
*
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.
*
பூண்டு:
கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.
*
கடுகு எண்ணெய்:
மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.
*
உளுந்தம் பருப்பு:
உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
*
தேன்:
உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.
*
மோர்:
உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.
*
சிறு தானியங்கள்:
சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.
*
பட்டை, கிராம்பு:
இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
***
thanks இணையம்
Labels:
இயற்க்கையின் வரம்,
உடல்நலம்,
மருத்துவ ஆலோசனைகள்
16 பிப்ரவரி, 2011
குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாது :)
குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை அவளின் கால்களை கட்டிக்கொண்டு விளையாடத்தான் செய்யும். குழந்தைகளின் விளையாட்டில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி உண்டு.
***
6 மாதக் குழந்தை :
6 மாதக் குழந்தை கை, கால்களை மட்டுமே ஆட்டி விளையாடும். ஆனாலும் பேசத்தெரியாத அந்தக் குழந்தையிடம் தன்னையே மறந்து பேசிக் கொண்டு மற்ற எல்லாக் கவலைகளையும் மணிக்கணக்கில் மறந்துவிடும் பெற்றோர்தானே எல்லோருமே!
***
தவழும் குழந்தை :
புன்சிரிப்புடன் கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள். விளையாட்டின் மூலம்தான் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டால் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கைகளையும், கால்களையும் ஊன்றி தவழ்ந்து வரும் குழந்தையை பெற்றோர்கள் கைதட்டி `வா…வா…’ என்று உற்சாகமாக அழைப்பார்கள். சிரித்துக் கொண்டே வேகமாகத் தவழத்தொடங்கும் குழந்தை வெகுசீக்கிரமே எழுந்து நடக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கையிலும் இப்படித்தான் விளையாட்டு உங்கள் குழந்தையை வேகமாக உயரச் செய்யும்.
***
பிறந்த 3 மாதத்திலேயே குழந்தைகள்:
விளையாடத் தொடங்கிவிடும். 6 மாதம் வரை ஒலியெழுப்பும் பொம்மைகள், அசையும் பொருட்களே இவைகளின் விளையாட்டுத் தோழன். இந்த வயதுக்கு குழந்தைகள் விளையாட்டுச் சாமான்களை பற்றிப்பிடிக்க முயற்சி செய்யும். சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்க்கும். பொருட்களை பின்பக்கமாக வைத்துவிட்டால் உருண்டோ, திரும்பியோ பொருளை பார்க்கும். இந்த விளையாட்டுகளால் குழந்தைகள் சுற்றுச்சூழலை கவனிக்கத் தொடங்குகின்றன. மூளைவளர்ச்சி அதிகமாகும். ஒளிரும் செல்போன்கள் இந்தக்கால குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.
***
6 முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள்:
புதிய புதிய பொம்மைகளைகளுடன் விளையாட பிரியப்படும். விசை கொடுப்பது, பட்டன் அழுத்துவதன் மூலம் இயங்கும் பொம்மைகளிடம் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பொம்மைகளுடன் விளையாட விரும்பும். அவற்றை தானே இயக்கிவிடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இது தவழும் பருவம் என்பதால் இயங்கும் பொம்மைகளை பின்தொடர முயற்சிப்பார்கள். இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை முந்தைய நிலையைவிட வேகப்படுத்தும்.
***
ஒன்றேகால் வயது வரையுள்ள குழந்தைகள்:
நகரும் பொம்மைகளைப் பின்தொடர்ந்து செல்வார்கள். தள்ளுவண்டியின் மூலம் நடை பழகுவார்கள். மற்ற குழந்தைகளின் பின்னால் செல்லத் தொடங்குவார்கள். டப்பாக்களில் மணல் சேகரித்தல், சிதறிய பொருட் களை அடுக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வயதில்தான் கதைகேட்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்போது கதை சொல்லி வளர்க்கத் தொடங்கினால் உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வளருவார்கள். இது அறிவு, உடல்வளர்ச்சியின் முக்கியமான பருவம். இதற்கு விளையாட்டு மிக மிக அவசியம்.
***
2 வயது வரையுள்ள குழந்தைகள்:
அறிவுத்திறன் விளையாட்டுகளை கற்றுக் கொள்ளும். பல நிறங்களை அடையாளம் காட்டும், புகைப்படங்களில் இருக்கும் நபர்களைக் கேட்டாலும் காட்டிவிடும். பொம்மைகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும். பந்து எறிவது, குழாயைத் திருப்புவது போன்ற சிறு பணி சார்ந்த விஷயங்களையும் செய்யும். ஓடி ஆடி விளையாடுவதால் கால்களும், உடலும் பலம் பெறும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வார்கள்.
***
2-3 வயது குழந்தைகள்:
விளையாடச் சென்றுவிட்டு சரியாக வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பந்தை உதைப்பார்கள், பிடிப்பார்கள். தடுமாறாமல் ஓடிவிளையாடுவார்கள். மணலில் வீடுகட்டி விளையாடுவது, டயரை உருட்டி விளையாடுதல், சுவர்கள், பெஞ்சுகளில் ஏறி விளையாடுவது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த விளையாட்டுகளால் உடல் பலம் பெறும். பல குழந்தைகளுடன் விளையாடுவதால் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும். போட்டோவில் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும்.
***
குழந்தைகள் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் ஏராளம். அவர்களின் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்கிறார்கள். அறிவுத்திறன் வளர்கிறது. நண்பர்கள், பாசம், பிரிவு, வெற்றி, தோல்விகளை அறிந்து கொள்கிறார்கள். சமூகத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் சமூக அக்கறை வளர்கிறது. அதிகம் அடாவடி செய்வதாக நினைத்து பெற்றோர் குழந்தைகளின் விளையாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது. அவர்களின் சிறுசிறு வெற்றிகளையும் ஊக்குவித்து பாராட்டினால் அவர்கள் வெற்றியாளர்களாக வளருவார்கள்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
Labels:
குழந்தைகள் நலன்,
சுகமாக வாழ,
பெற்றோர்கள்
கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.
***
மருத்துவ குணங்கள்
1. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
2. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.
3. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
4. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
5. கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
6. கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
***
thanks மாற்று மருத்துவம்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
உடல்நலம்
மீன் சாப்பிடுவதால் நமக்கு என்னபயன் உள்ளது பார்க்கலாம் வாங்க !
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.
மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.
அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.
***
எந்த நோய் வராது?
ஆஸ்துமா:
மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.
*
கண் பாதிப்பு:
மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.
*
கேன்சர்:
பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.
*
இருதய நோய்:
கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.
***
எப்படி சாப்பிடணும்?
மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.
வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.
உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.
பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.
மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.
***
குறிப்பு:-
மீன் சாப்பிடும் போழுத்து மோர் சாதம் தவிர்ப்பது நல்லது.மீன்னுக்கு மோர், தயிர் போன்றவை எதிரானது [விஷமாக்கும் தன்மையுள்ளது
***
thanks தினமலர்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
இயற்கை வைத்தியமும்,
சுகமாக வாழ
மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்!
மலச்சிக்கலில் தொடங்கி மருத்துவமனை வரை:
மனிதனின் உடல் உறுப்புகள் வெவ்வேறு விதமான கழிவுகளை உண்டாக்கினாலும், ஆபத்தான கழிவுப்பொருள் மலம் மட்டுமே.
வியாதிகளின் தொடக்கம் மலச்சிக்கல் என்பதில் சந்தேகமே இல்லை. மலம் கெட்டிப்பட்டு உள்ளேயே தங்கிவிட்டால் மலம் நஞ்சாக மாறிவிடுகிறது.
சிக்கல் இல்லாதவருடைய மலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அவற்றை நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். ஓரிரு நிமிட வேலையாக அது முடிந்துவிட வேண்டும். பெரும் முயற்சி இருத்தல் கூடாது.
மலம் உடம்பில் இருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் சுழன்று வந்து விழவேண்டும். வெளித்தள்ளுவதற்கு அதிக அழுத்தமோ, முயற்சியோ இருத்தல் கூடாது. மலத்தின்மீது சளிபோன்ற ஒரு படலம் இருத்தல் வேண்டும். மாட்டுச்சாணத்தில் இதுபோன்ற சளிப்படலத்தை பார்க்கலாம்.
மலத்தில் துர்நாற்றம் இருத்தல் கூடாது. மலம் நீங்கும்போது உண்ட உணவிற்கு இருந்த மணம் உணரப்படுவது சிறந்தது. மூன்று வேளைகளும் பழங்களையே உண்டு வாழ்வோருக்கு இந்த அனுபவம் கிட்டும். எத்தனை வேளை உணவு உண்கிறோமோ, அத்தனை முறைகள் மலம் கழிய வேண்டும். மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வும், சோம்பல் நீங்கிய சுறுசுறுப்பும், வேலை செய்ய தகுதியான உடல்நிலையும் அனுபவப்படவேண்டும்.
மலம் கழித்த சிறிது நேரங்கழித்து மீண்டும் வரும்படியாக உள்ளே தங்கி இருத்தல் கூடாது. மலத்தின் நுனி கூராக வந்து முடிந்தால் இனி மலம் இல்லையென்று பொருள். கால் கழுவ வேண்டிய அவசியம் இல்லாமலும், பசைபோல் ஒட்டும் தன்மை இல்லாமலும் இருத்தல் வேண்டும். மலம் கழிக்கும்போதோ, முன்போ, பின்போ, வயிறு வலிக்கக்கூடாது. மலத்துவாரத்தில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடாது.
by -மு.குருமூர்த்தி
***
தீர்வுகள் :
1.நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
*
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
*
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
*
4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.
*
5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.
*
6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
*
7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது.
உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம்.
இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.
***
***
thanlks google & குருமூர்த்தி
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
மருத்துவ ஆலோசனைகள்,
வயதனவர்களுக்கான
சூரியன் ஒரு முழுக்கோளம் தானா ?
சூரியன் ஒரு முழுக்கோளம் என்கிற நம்பிக்கை அண்மையில் தகர்க்கப்பட்டிருக்கிறது.
சூரியனின் கோளத்தன்மையை நாசா விஞ்ஞானிகள் அண்மையில் துல்லியமாக அளந்துள்ளனர். இப்படி அளவீடு செய்வதற்கு Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி பயன்பட்டுள்ளது. சூரியப் புள்ளிகள் தீவிரமாக இயங்கும் நாட்களில் சூரிய நடுக்கோட்டின் ஆரம், துருவ அச்சின் ஆரத்தைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக இருக்கிறதாம்.
சூரியனைச் சுற்றிலும் பழத்தோல் போன்ற ஒரு பொருள் உருவாவதால் துருவப் பகுதிகளில் நசுங்கிப்போன கோளமாக சூரியன் தோற்றமளிக்கிறதாம். சூரியனின் இடுப்பு சற்று பருத்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
இந்த "பழத்தோல் பிதுக்கம்" காரணமாக சூரியன் ஒரு முழுமையான கோளம் இல்லை என்கிற கருத்து உறுதிப்படுகிறது. சூரியனின் தீப்பிழம்புகளை ஆராய்வதற்காக 2002ல் Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி ஏவப்பட்டது. எக்ஸ் கதிர்களையும், காமா கதிர்களையும் பயன்படுத்தி இந்த விண்தொலைநோக்கி அளவீடுகளை செய்துள்ளது.
விண்மீன்களில் சூரியன் மட்டுமே மிக அதிகமான ஈர்ப்புவிசையைப் பெற்றிருக்கிறது. சூரியனின் கோள வடிவம் 0.001 சதவீதம் என்று இது நாள் வரையில் நம்பப்பட்டு வந்தது. நிமிடத்திற்கு 15 சுற்றுகள் வீதம் சுழலக்கூடிய விண்தொலைநோக்கியின் பொருளருகு துளை வழியாக சூரிய வட்டத்தையும், தீப்பிழம்புகளையும் கண்காணித்தபோது, சூரியன் முழுமையான கோளம் இல்லை என்கிற உண்மை தற்செயலாக அறியப்பட்டுள்ளது.
இந்த பழத்தோல் பிதுக்கம் காந்தப்பண்புகளைக் கொண்டதாம். சூரியப்பரப்பில் குமிழ்களாகப் படரும் இந்த மேற்பரப்பிற்கு supergranules என்று பெயரிட்டுள்ளனர். பானையில் கொதிக்கும் நீர்க்குமிழ்களைப் போன்று பிறப்பெடுக்கும் இந்த supergranules மெள்ள மெள்ள விண்மீன்களின் அளவிற்கு உருப்பெருக்கம் அடைகின்றனவாம். supergranules ன் அளவு பூமியைப்போல் இருமடங்கு என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இவை முழுக்க முழுக்க காந்தப்புல பிளாஸ்மாவால் ஆனவையாம்.
supergranules ன் மையத்தில் தோன்றும் காந்தப்புலம் மெதுவாக மேற்பரப்பை அடைகிறது. சூரியனில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்களால் g-mode எனப்படும் சூரிய ஈர்ப்பு விசையில் அலைவுகள் ஏற்படுகின்றன. சூரியனின் காந்தப்புல ஏற்றத்தாழ்வுகள், பூமியின் காந்தப்புலத்தை நிச்சயமாக பாதிக்கக்கூடியவை.
***
thanks மு.குருமூர்த்தி
***
"வாழ்க வளமுடன்"
Labels:
படித்ததில் பிடித்தது,
பொது அறிவு,
விஞ்ஞானம்
15 பிப்ரவரி, 2011
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது.
எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.
பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!
***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
படித்ததில் பிடித்தது,
பெண்கள் நலன்,
பொது அறிவு
நீச்சல் பயிற்சியின் நன்மைகளும் அதன் பயன்களும் :)
எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல்.
நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை:
1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.
3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
***
ஆரோக்கியமான நீச்சல் பயிற்சிக்கு...
* நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும்.
* நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
* நீச்சல் குளத்திற்கு விடப்படும் நீர் சுத்தமான நீர்நிலையிலிருந்து வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
* நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம்.
* நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசித் தொடர்பு அவசியம் இருத்தல் வேண்டும்.
* வலிப்பு நோய், இழுப்புநோய், ஆஸ்துமா மற்றும் தோல்வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.
***
சில எளிய நீச்சல் பயிற்சிகள்:
மூன்று வகை எளிய நீச்சல் பயிற்சிகள் இதோ!
1. இடுப்பளவு ஆழமுள்ள நீரில் உங்கள் கால்களை நீரில் அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடைகளுக்கு நல்ல வலிமை தரும்.
2. கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும்.
3. கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும்.
***
thanks eeg
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
சுகமாக வாழ,
படித்ததில் பிடித்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "