...
"வாழ்க வளமுடன்"
16 ஏப்ரல், 2011
குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள். * “என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள். * என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு. * நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. * அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது. அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார். * 3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன. * பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை. * மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும். * நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது. * ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள். * ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும். *** நன்றி: சமூகநீதி *** "வாழ்க வளமுடன்"
Labels:
குழந்தைகள் நலன்,
பெற்றோர்கள்,
வயதனவர்களுக்கான
விண்மீன்களின் பிறப்பும், இறப்பும் !!!
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு துகளும் அதற்க்கு அருகிலுள்ள துகளை ஒரு குறிப்பிட்ட விசையுடன் ஈர்க்கின்றன. இந்த விசை ஈர்ப்பு விசை எனப்படுகிறது. இவ்வாறே பிரபஞ்சத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால் அவை அருகில் வருகின்றன. இவ்வாறு பல ஹைட்ரஜென் அணுக்கள் சேர்ந்து ஹைட்ரஜென் வாயு மண்டலத்தை ஏற்படுத்துகின்றது.தன் சொந்த ஈர்ப்பு விசையால் வாயு மண்டலம் சுருங்குகிறது. இதனால் அழுத்தம் அதிகமாகி அதன் வெப்பம் உயர்கிறது. * சூரியனுக்கு பத்தில் ஒரு பங்கு நிறையுடைய விண்மீன்கள் ஒரு கட்டம் வரை தன் சுருங்கும். பின் தன் சொந்த வெப்ப ஆற்றலால் ஒரு வாயு பந்தாக தன் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை தானாக பெருமளவு ஒளியை உமிழாது . இவற்றை பழுப்பு குள்ளர் என்று அழைக்கின்றனர். * இவ்வாறு வான் முகில்கள் பல லட்சம் வருடங்கள் தன்னுள்ளே சுருங்கும் போது மையத்தில் வெப்பமும் அழுத்தமும் அதிகரித்து ஹைட்ரஜன் அணுக்களிடையே அணுக்கரு பிணைவு ஏற்ப்பட்டு ஹீலியமாக மாறுகிறது. (அணுக்கரு பிணைவு என்பது ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றலில் ஹைட்ரஜன் போன்ற லேசான தனிமங்கள் பிணைத்து கனமான தனிமங்கள் உருவாகும் நிகழ்வு ஆகும் . இந்நிகழ்வின் போது பெருமளவு வெப்ப ஆற்றலும் ஒளியும் வெளியிடப்படுகின்றன .) இந்த அணுக்கரு பினைவினால் ஆற்றல் வெளிப்பட்டு விண்மீன் பிரகாசிக்கிறது. மையத்தில் 10 கோடி டிகிரி வரை வெப்பம் உயரும் போது இவ்வாறு பிணைவு நிகழ்கிறது. இச்சமயத்தில் மெலிதாக மங்கலாக விண்மீன் ஒளிர்கிறது. இதையே விண்மீனின் பிறப்பு என்கிறோம். * விண்மீனில் கருப்பிணைவு நிகழ்ந்து வெப்ப ஆற்றல் வெளிவர துவங்கியதும் விண்மீனில் இரண்டு எதிரும் புதிருமான சக்திகள் மொத துவங்குகின்றன. விண்மீனின் நிறையினால் மையத்தை நோக்கிய ஈர்ப்பு விசை பொருட்களி இழுக்கும். மேலும் மேலும் விண்மீன் சுருங்க முயற்சிக்கும். மறுபுறத்திலோ மையத்தில் கருப்பிணைவு நிகழ்ந்து மேலும் மேலும் வெப்ப ஆற்றல் வெளிவரும். வெப்ப ஆற்றல் மைய விளக்கு விசை உடையது. இவ்வாறு எத்திறம் புதிருமான மாற்றங்களுக்கு பிறகு 2000 வருடங்களுக்கு பிறகு ஒரு வகையான சம நிலையை விண்மீன் அடைகிறது. * இந்த சம நிலையில் விண்மீன்கள் அமைதியாக ஒளிர்கின்றன. இந்த சம நிலை விண்மீனின் எடையை பொறுத்து நீடித்திருக்கும். சூரியனை போன்ற எடையுடைய விண்மீன்களில் சுமார் 1000 கோடி வருடங்கள் இச்சமநிலை இருக்கும். சூரியனை விட எடை குறைவான விண்மீன்களில் இச்சமநிலை இன்னும் அதிக வருடங்கள் நீடித்திருக்கும். சூரியனை விட அதிக எடையுடைய விண்மீன்களில் இச்சமநிலை குறைவான வருடங்களே நீடித்திருக்கும். * மையத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகின்றன. இதனால் மையக்கருவில் ஹைட்ரஜன் அடர்த்தி குறைகிறது. சுமார் 12 % ஹைட்ரஜன் , ஹீலியமாக மாறியதும் இச்சமநிலை சமசீரற்ற நிலையாக மாறுகிறது . மையத்தில் ஹீலியம் அதிகம் இருப்பதால் கருப்பிணைவு குறைந்து போகிறது. இந்நிலையால் வெப்பம் குறைவதால் விண்மீன் மேலும் சுருங்குகிறது. இவ்வாறு சுருங்குகையில் மையக்கருவை சுற்றியுள்ள மேலடுக்கில் வெப்பமும் அழுத்தமும் அதிகமாகி மேலடுக்கிலேயே அணுக்கருபினைவு நிகழ்கிறது . இப்போது வெளிப்படும் வெப்ப ஆற்றலானது மேலடுக்குகளை வெளிநோக்கி உந்தும். * விண்மீன் பலூன் போல் விரியும். முன்பு இருந்தது போல் ஆயிரம் மடங்கு பெரிதாக காணப்படும். தன் மேற்பரப்பு வெப்பம் 3000 டிகிரி வரை குறைவதால் விண்மீன் சிவப்பாக தெரியும். எனவே இது சிவப்பு அரக்கன் நிலை எனப்படுகிறது. நமது சூரியன் இன்னும் 500 கோடி வருடங்களில் இந்த நிலையை அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. அப்போது புதன், வெள்ளி, பூமியை விழுங்கி அந்த அளவு பெரிதாக காணப்படும். * மையக்கரு மேலும் மேலும் சுருங்கி வெப்ப நிலை 10 கோடிக்கு மேல் உயரும் போது ஹீலியமும் கருப்பினைவில் ஈடுபடும். மையக்கருவில் ஹீலியம் கார்பனாக மாறியதும் மேலடுக்கில் கருப்பிணைவு தொடங்கும். விண்மீன் மறுபடி விரியும். சூரியனி விட 3 மடங்கு நிறை குறைவான விண்மீன்களில் ஒரு நிலையில் மேலடுக்கு காற்றினால் வீசப்படுவது போல் விண்ணில் வீசப்படும். மேலடுக்கு ஒரு வளையம் போல் வானவெளியில் விரியும். மையக்கரு வெள்ளை குள்ளன் என்ற வகை விண்மீனாக மாறும். பின் இந்த வெள்ளை குள்ள வின்மீனிலும் மேலும் பல வெடிப்புகள் ஏற்பட்டு விண்மீன் அழிந்துவிடும். இத்தகைய வெடிப்புகள் நோவக்கள் எனப்படும்., * சூரிய எடைக்கு பத்து மடங்குக்கு மேல் நிறையுடைய விண்மீனின் சரித்திரம் வேறு விதமானது. இவற்றில் மையத்தில் ஹீலியமும் கார்பனும் இணைந்து ஆக்சிஜன அணுக்கள் உருவாகிறது. பின்னர் ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து மேக்னிசியம் உருவாகிறது. தொடர்ந்து பல தனிமங்கள் உருவாகி கடைசியில் இரும்பு உருவாகிறது. * இரும்பு மற்றும் அதற்க்கு அதிகமான அணு எண் உடைய தனிமங்களில் அணுக்கரு பினைவிற்கு தேவையான சக்தி தேவைக்கு குறைவாக இருப்பதால் மையத்தில் இரும்பு அணுக்கள் பிணைந்து புதிய தனிமங்களை உருவாக்க முடியாது. திடீரென மையத்தில் கருப்பிணைவு நிற்பதால் மேலடுக்குகள் மையத்தில் பாயும். இந்நிலையில் விண்மீன் பெரும் ஒளியுடன் வெடிக்கும். இதுவே சூப்பர் நோவா எனப்படும். * சூரியனை விட பத்தில்லிருந்து இருபது மடங்கு அதிக நிறையுடைய விண்மீன்களின் கருவில் இக்கட்டத்தில் புதிய விண்மீன் பிறக்கும். மையத்தில் 500 கோடிக்கு மேல் அதிக வெப்பம் உருவாகும் போது நுட்ரிநோக்கள் எனப்படும் அனுத்துகல்களாக இரும்பு மையம் மாறும்.ஒரே நாளில் நுட்ரிநோக்கள் மூலம் ஆற்றல் அனைத்தும் உமிழப்படும். வெப்பம் 600 கோடிக்கு மேல் உயரும் போது இவ்வேப்பத்தில் இரும்பு அணு உருமாறி புரோடானாகவும் , நுட்ரானாகவும் மாறும். இது நியூட்ரன் விண்மீன் எனப்படும். நியூட்ரன் விண்மீன்கள் ஒளிர்வதில்லை ரேடியோ அலைநீலங்களில் ஒளியை உமிழ்கின்றன . இந்தன் நியூடரன் விண்மீன்கள் பல்சார்கள் எனப்படுகின்றன. * சூரியனை விட 30 லிருந்து 50 மடங்கு நிறையுடைய விண்மீன்களில் நியூடரன் விண்மீனும் சுருங்கி கருந்துளையாக மாறுகின்றன. இந்த கருந்துளைகள் அதிக ஈர்ப்பு சக்தி வாய்ந்தவை . இவற்றிலிருந்து ஒளி கூட வெளியேற முடியாது. * பெரும் நோவக்களில் ஏற்படும் பெரும் வெப்பத்தினால் அனைத்து தனிமங்களும் உருவாகின்றன. இவை புதிய முகில்களில் சேருகின்றன.பின் அந்த முகில்கள் புதிய விண்மீனாக பரிணமிக்கின்றன. சுமார் 510 கோடி வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த பெரும் நோவா விலிருந்துதான் சூரியன் உருவானதாக கருதப்படுகிறது. எனவே இது இரண்டாம் தலைமுறை விண்மீன் எனப்படுகிறது. *** thanks ஆத்மசூரியன் *** "வாழ்க வளமுடன்"
Labels:
படித்ததில் பிடித்தது,
பொது அறிவு,
விஞ்ஞானம்
10 நிமிஷ தியானம் நாள் பயிற்சிக்குச் சமம்!''
இது ஜோஷ்னா ரகசியம் உலக அளவிலான ஸ்குவாஷ் தர வரிசைப் பட்டியலில் எந்த நேரத்திலும் முதல் ரேங்க்கை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ள இந்தியர் - ஜோஷ்னா சின்னப்பா! கனவு நனவாகும் நாளுக்காக இரவு பகலாகப் பயிற்சியில் இருக்கிறார் ஜோஷ். ''ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயிற்சி. ஆனா, ஒவ்வொரு நாளும் விதவிதமா பிராக்டீஸ் பண்ணுவேன். வாரத்தில் மூணு நாள் ஜிம், மத்த நாட்களில் சைக்கிளிங், ஜாக்கிங்னு உடலை ரிலாக்ஸ் ஆக்கும் பயிற்சிகள் செய்வேன். தினமும் மூணு மணி நேரம் ஸ்குவாஷ் பயிற்சி. அதிலும் சும்மா நெட் பிராக்டீஸ் பண்ணாம, பிராக்டீஸ் கேம் ஆடுவேன். அதில்தான் கவனத்தைச் சிதற விடாம பிரஷர் சிச்சுவேஷன்களைச் சமாளிக்கும் பயிற்சி கிடைக்கும். 'எப்படா இவ ரெஸ்ட் கொடுப்பா?’னு என் உடம்பு ஏங்கும் அளவுக்குப் பாதி நாள் இந்தப் பயிற்சிகளிலேயே போயிடும். கேப் கிடைச்சா... நல்லா ரெஸ்ட் எடுப்பேன். இதுக்கு நடுவில், அப்பப்போ ஸ்விம்மிங்... செம ஜாலியான எக்சர்சைஸ். மத்த பயிற்சிகளால் சோர்ந்துபோய் இருக்கும் உடம்புக்கு, ஸ்விம்மிங்தான் நல்ல ரிலாக்சேஷன்!'' எனும் ஜோஷ்னாவுக்கு யோகா மீதும் ஆர்வம் அதிகம். ''உணவு விஷயத்தில் எப்படி?'' என்றால், ''ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடுவேன்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார். ''வழக்கமான மூணு வேளை உணவைப் பிரித்து, ஆறு வேளைகளாகச் சாப்பிடுவேன். பசிக்கப் பசிக்கச் சாப்பிடுவேன். மற்றபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிடுவேன். வாரத்துக்கு இரண்டு நாட்கள் கீரை சாப்பிட வெச்சிருவாங்க. சாப்பாட்டுக்கு ஏற்றபடி பயிற்சிகளில் தீவிரம் காட்டுவேன். ஜூஸ் நிறையக் குடிப்பேன். அது உடம்பின் எனர்ஜி குறையாமல் பார்த்துக்கொள்ளும். நிறையத் தண்ணீர் குடிப்பேன். உடம்போட நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதில் நான் ரொம்ப சமர்த்து!'' என்கிற ஜோஷ்னா, தீவிரமான சாக்லேட் பைத்தியம். ''அது என்னவோ இன்னமும் சின்னக் குழந்தை மாதிரி சாக்லேட் மேல் அவ்வளவு ஆசையா இருக்கு. தோல்வியால் மனசு துவண்டுபோகாமல் இருக்க, சாக்லேட்தான் எனக்கு உதவுது!'' என்கிறார் குழந்தையாக. உடலை உற்சாகப்படுத்தும் பயிற்சிகள் போக, போட்டிக்கு முந்தைய சில மணி நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்தும் தியானத்தில் ஈடுபடுவது ஜோஷ்னா வழக்கம். ''போட்டி ஆரம்பிக்க சில மணி நேரங்கள் இருக்கும்போது, அமைதியான இடத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவேன். 10 நிமிஷ ஆழ்ந்த தியானம், 10 நாள் தீவிரப் பயிற்சிக்குச் சமம். என்னதான் தீவிரமான பயிற்சிகள் மூலம் உடம்பை ஃப்ளெக்ஸிபிளா வெச்சுக்கிட்டாலும், ஸ்குவாஷ் விளையாடுறப்போ... மிகச் சில நொடிகளில் எதிராளிக்கு எதிரான வியூகங்கள் வகுப்பதற்கு மனசு நம்ம கன்ட்ரோல்ல இருக்கணும். ஒரே ஒரு கணம் நிதானம் தவறிப் பதற்றப்பட்டாலும், கேம் நம் கையைவிட்டு நழுவிடும். அதனால், பிராக்டீஸ் பண்ண மறந்தாலும், போட்டிக்கு முன் தியானத்தை மட்டும் தவறவிடவே மாட்டேன்!'' தன் வெற்றி ரகசியம் சொல்லும் ஜோஷ்னாவின் இறுதி பஞ்ச் இது... ''எப்பவும் மனசு சந்தோஷமா இருக்கணும். ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் தூங்கினா, அதைவிட உடம்புக்கு வேற பெரிய ரீ-சார்ஜ் கிடையாது. நாம தூங்கிட்டு இருந்தாலும், நம்ம உடம்பு சும்மா இருக்காது. அடுத்த நாள் நாம் இயங்குவதற்காக, நம் உடம்பு ரீ-சார்ஜ் ஆகிட்டேதான் இருக்கும். அதை எப்பவும் மிஸ் பண்ணவே கூடாது!'' *** நன்றி விகடன் *** "வாழ்க வளமுடன்"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "