...

"வாழ்க வளமுடன்"

04 அக்டோபர், 2010

அசைவம்-கார உணவால் உருவாகும் அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள்

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா?





நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.

அவர் மேலும் கூறியதாவது:-

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.

*

இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

*


மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

***

புண் எதனால் ஏற்படுகிறது?

புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

*


குடல் புண் வகைகள்:-


குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண். 2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

*


குடல்புண்:


காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.


இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண் டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

*


நெஞ்சு எரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாëந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.


வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.


இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

*


ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.

ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.


இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.


ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

*


செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.


1. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.


*

2. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.


*

3. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.


*

4. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*


5. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம்.

*

6. யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.

*

7. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

*


8. புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

***


நவீன சிகிச்சைகள்:


செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன.

அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.


நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.

***

நன்றி மாலைமலர்.

***

"வாழ்க வளமுடன்"

நெய்யின் பயன்கள்

நெய்யில் நல்ல கொலாஸ்ற்றால் உண்டு. அளவோடு உண்டால் நெய் அமுதம்.





பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.

மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.

மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும்.

சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.

***
நன்றி மாலைமலர்.
***

"வாழ்க வளமுடன்"

ஏன் தலையில நீர் கோத்துக்குது

பாட்டியின் சபை களைகட்டி யிருந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறு பிள்ளைகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.



( இதில் இருந்த கதைகளை ஓரளவுக்கு நீக்கி விட்டேன் )

“சித்த வைத்தியம் படிக்கப்போறேன் பாட்டி...”

“பலே.. பலே... பரவால்லயே... என்னப்போல கிழங்கட்டைக இருக்குற வரைக்குந்தான் இந்தமாதிரி அனுபவ வைத்தியங்க இருக்கும்.. எங்க காலத்துக்கப்புறம் எல்லாரும் இங்கிலீசு மருந்துக்கு போயிடுவாங்கன்னு மனசுக்கு வேதனையா இருந்துச்சு.. ஒங்களமாதிரி ஒரு சில புள்ளைக இந்த சித்த வைத்தியத்த படிச்சி காப்பாத்துறத நெனச்சா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடியம்மா...”

“நல்லது பாட்டி.. நீங்க அனுபவத்துல செய்யறீங்க.. நாங்க இனிதான் படிச்சி.. அனுபவப்பட்டு செய்யணும். ஆனாலும் ஒங்ககூட போட்டி போட முடியுமா.. கிண்டல் செய்தாள் அந்த பெண்..”

“ஆமாண்டி... அப்படின்னா பேசாம எங்கிட்ட வந்து தினமும் படிச்சிக்கிட்டுப் போ..

“கண்டிப்பா பாட்டி.. நா உங்கக்கிட்ட நெரையா தெரிஞ்சிக்கணும்... கண்டிப்பா வந்து சந்தேகம் கேப்பேன்.. நீங்க சொல்லணும்..”

“கண்டிப்பா செல்றேன் தாயி.. ஆமா உம் முகமெல்லாம் என்ன இப்படி பளபளன்னு நீர்க்கோத்த மாதிரி இருக்கு..”

“அட.. கண்டுபுடிச்சிட்டீங்களே.. பாட்டின்னா சும்மாவா...”

“ம்.. நான் எப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குது பாட்டி.. ஏன்னு தெரியல...”

“அதுசரி...

டாக்டருக்கு படிக்கப்போறவ இப்படி நோஞ்சானா இருக்கலாமா... நீ ஆரோக்கியமா இருந்தாத்தானே உன்கிட்ட வைத்தியம் பண்ணிக்க நாலு பேரு வருவாக...”

“பாட்டி.... கிண்டல் பண்ணாம ஏன்னு சொல்லுங்க பாட்டி..”

“ம்.. சொல்றேன் கேட்டுக்க...”

“...தலையில நீர் கோத்துக்குறதுக்கு தலை ஈரம் காயாம இருக்குறது மட்டும்தான்னு ரொம்ப பேரு தப்பா நெனச்சிக்கிட்டு இருக்காங்க.. நிச்சயமா அது இல்ல.. குடல் புண்தான் முக்கியக் காரணம். நேரத்துக்கு சாப்பிடாம இருந்துட்டு, நேரம் தவறி சாப்பிடுறது.. இதுனால குடல்ல புண் உண்டாயி .. அது ரணமாயி உஷ்ணத்த உண்டாக்கும்... இந்த உஷ்ணத்தால நீரு சிரசுக்கு ஏறிக்கும்.. அதுக்கப்புறம் நீ எப்போ தலை குளிச்சாலும் உள்ளே இருக்கும் நீரோட சேந்துக்கும்..”

“இதுக்காகத்தான்

மூலத்தில் சூடிருந்தால் மூக்குதனில் நீர்

வடியும் -னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..”

“அதுக்கு மொதல்ல சாப்பாட்டு முறைய ஒழுங்கா வச்சிக்கணும்.. நேரத்துக்கு சரியா சாப்பிட்டாலே இந்த மாதிரி பிரச்சன வராது.. மலச்சிக்கல் இல்லாம பாத்துக்கணும்..”

“நீங்க சொல்றது சரிதான் பாட்டி.. பப்ளிக் எக்ஸாம் ங்கறதால சீக்கிரம் சீக்கிரமா பள்ளிக்கூடம் போக வேண்டியிருக்கு.. அதுனால காலயில சாப்பிட முடியல.... மத்தியானமும் டெஸ்டு, பிராக்டிகல்னு லேட்டாயி சாப்பிடறேன்.. இப்பதான் புரியுது பாட்டி...”

“இதுக்கு எதாச்சும் மருந்துசொல்லுங்க பாட்டி..”

“ம்... ம்... இப்ப புரியுதா.. எதுக்காக சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு தலமூச்சா அடிச்சுக்கிறாங்கன்னு.. சரி சரி.. மருந்து சொல்றேன்.. கவனமா கேட்டுக்கடியம்மா...”

“துளசி, கறிவேப்பிலை, நன்னாரி வேர், கொத்தமல்லி கீரை, சீரகம் இது எல்லாத்தையும் 1 கைப்பிடி அளவு எடுத்து நல்லா காயவச்சி லேசா எண்ணெய் போடாம வறுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு தெனமும் காலைலயும், சாயந்திரமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா இந்த மாதிரி பிரச்சன வராது...”

“வாரம் ரெண்டு தடவ எண்ணெ தேச்சி குளிக்கணும்..”

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்ட அந்த பெண் உற்சாகத்துடன் பாட்டியைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு..

“வரேன் பாட்டி.. இனிமே அடிக்கடி வருவேன்.. நா கேக்குற சந்தேகத்துக்கெல்லாம் நீங்க சரியா எனக்கு சொல்லிக்கொடுக்கணும்...” என்று ஓடிப்போனாள்.

தானும் ஒரு வாத்தியாராகப் போவதை நினைத்து மனதுக்குள் பெருமிதம் கொண்டாள் பாட்டி.

***
நன்றி ஹெத்து சாய்ஸ்.
***

"வாழ்க வளமுடன்"

உணவு கூம்பகம்/பிரமிட்

இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.


*

கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்.




நாம் உடலுக்கு ஏற்ற உணவு:


1. நீர்
1. முக்கோணத்தின் அடிப்பரப்பானது நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ நீர் உள்ளெடுத்தல் மிக அடிப்படையானது என்பதை இது காட்டுகிறது.

2. ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும்

3. பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும்.

***

ஏன் நீர் அருந்தவேண்டும் அல்லது நீரின் முக்கியத்துவம் என்ன?

1. மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஒரு வளர்ந்த மனிதனின் உடல் நிறையில் 60% நீராகும்.


*

2. உடலின் அனைத்து தொழிற்பாட்டுக்கும் சமிபாடு, அகத்துறிஞ்சல் கடத்துதல், உடலின் அனுசேபம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

*

3. உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது.

*

4. நீரில் எந்த சக்தி பெறுமானமும் இல்லை. நீரிழப்பால் வரும் தலைவலி, அசதி என்பவற்றை போக்குகிறது.

*

5. சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை குறைப்பதில் உதவுகிறது.

*

6. குடல், சிறிநீரகம், சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது.

நீரிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுபவை


***

பழங்களும் மரக்கறிகளும்:

ஒரு நாளுக்கு ஒரு சுகதேகி மனிதனால 5 தடவைகள் மரக்கறிகளும், 2-3 தடவைகள் பழங்களும் உள்ளெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


ஏன் பழங்களையும் மரக்கறிகளை உண்ணவேண்டும்.?

1. மிகச்சிறந்த நார்ப்பொருளுக்கான மூலங்களாகும்.
*
2. விற்றமின், கனியுப்புக்களுக்கான சிறந்த ஆதாரம்.
*
3. சக்தி பெறுமானம் குறைந்ததும் கொழுப்பற்றவை.
*
4. ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
*
5. அதிகளவில் உட்கொள்வதால் புற்றுநோய், நிறை அதிகரிப்பு, இதய நோய்கள், ஆஸ்துமா, ஆகியவற்றை குறைப்பதில்/ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை குறைக்கிறன.

***

தானியங்களும், மாபொருள் உள்ள மரக்கறிகளும்:

ஏன் முக்கியத்துவமானது?

1. கொழுப்பு குறைவானது.
*
2. விற்றமின்கள் குறிப்பாக B கூட்ட விற்றமின்கள், விற்றமின் E , கனியுப்புக்களான , இரும்பு, செலனியம், நாகம் என்பவற்றை அதிகள்வில் கொண்டவை.
*
3. ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
*
4. உடல் நலத்துக்கன உணவை வழங்குகிறது.
*
5. பலவேறு வகையாக இருப்பதால் தெரிவுகள் அதிகம்.
*
6. புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல் என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

***

அவரை இன உணவுகள்:

1. மிகக்குறைந்த் கொழுபை கொண்டவை
*
2. அதிகளவு புரத்ததை கொண்டவை
*
3. கனியுப்புக்களான நாகம், இரும்பு, செலனியத்தையும், போலிக்கமிலம் எனும் விற்றமினையும் அதிகளவு கொண்டவை
*
4.. புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல், மன அழுத்தம், நீரிழிவு என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

***

அடுத்த படிநிலையில் இருப்பவை வாசனைப்பொருட்களும் பாதகமற்ற கொழுப்பு உணவுகளுமாகும்.


நல்லின கொழுப்புணவுகள் ( HDL):


1. நல்லின கொழுப்புணவுகள் எனும் போது அவை தாவர எண்ணெய் வகைகள் குறிப்பக அதிகளவான தனி நிரம்பாத கொழுப்பமிலங்களை (MonoUnsaturated fatty acid), Omega 3 fatty acid ஐ கொண்டவையாகும். இவை உடல் நலனுக்கு உகந்தவை.

உதாரணமன எண்ணெய் வகை :

ஒலிவ், நல்லெணெய், நிலக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோய எண்ணெய் போன்றவை

1. உடலுக்கு சக்தியை வழங்குவதல்
*
2. இதய நோய்கள், தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் , குருதி அழுத்ததை குறைத்தல்
*
3. விற்றமின் அகத்துறுஞ்சல் , ஒட்சியேற்ற எதிரிகளை வழங்கல் குறிப்பக விற்றமின் E
*
4. மன நலம்/ மூளையின் நலனுக்கு அவசியமானவை.

***

வாசனைப்பொருட்கள்:

1. மூலிகைகளும், வெங்காயம், லீக்ஸ் போன்றவையும், வாசனைப்பொருட்களும்,
முக்கியத்துவம்
*

2. தொற்றுக்களை குறைத்தல்
*
3. குருதிஅழுத்ததை குறைத்தல் போன்றன

***

பாலும் முட்டையும்:

1. முட்டை நாளுக்கு ஒன்று வீதமும், பால் நாளுக்கு 1-3 தரமும் உள்ளெடுக்க வேண்டும்

*

2. புரதம், விற்றமின்களான A,D,E, K, B12 என்பவற்றை அதிகளவு கொண்டவை.

*

3. மனிதருக்கு தேவையான எல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

***

அடுத்த வகை உணவுகள் வாரத்தில் சில நாட்கள் உள்ளெடுத்தால் போதுமானது

மீனும் கடலுணவுகளும்:

1. வாரத்தில் 2-4 முறை எடுத்தல் போதுமானது. (ஒரு தடவை 4-6 அவுன்ஸ் )

*

2. 8 இறைச்சிகள் வாரத்தில் 1-3 முறை எடுக்கவேண்டும்.

***

இவை அத்தியாவசியமான உணவுகள் அல்ல, விரும்பினால் உள்ளெடுக்கலாம், மிக குறைந்த அளவில்:

1. சொக்லேட்- அதிகளவு 1 அவுன்ஸ் / நாள்

2. அற்ககொல் - 1-2 தடவை/ நாள் இது வயது, சுகநலன் என்பவற்றை பொறுத்தது.

3. ஒரு பரிமாறல் என்பது 300 மில்லி லீடடர் ஆகும்

*

தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.

***

நன்றி யாழ்.

***

"வாழ்க வளமுடன்"

உயிர் உள்ள மரம் நமக்கு என்ன தருகிறது?


மலர்கள், காய், கனிகள் தருகிறது
*
நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
*
காற்றை சுத்தப்படுத்துகிறது
*
நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
*
கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
*
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
*
மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. *
காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.


***

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.


ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.


ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.


ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.


ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.


***

மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது ஒவ்வொரு மரமும் ஒரு வரம் மரங்கள், காடுகள் நமக்குத் தரும்.



மேலும் சில நன்மைகள்:


1. மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

*

2. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

*

3. மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.


*

4. மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

*

5. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

*

6. கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.


*

7. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

*

8. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

*

9. மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

*

10. நமக்கா இவ்வளவு தரும் மரத்திற்க்கும், இயற்க்கைக்கும் நாம் திரும்பி என்ன உபகாரம் செய்கிறோம். யோசியிங்கள் நண்பர்களே!


***

நன்றி பூ உலகின் நண்பர்கள்
www.poovulagu.org

***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "