...

"வாழ்க வளமுடன்"

13 ஜனவரி, 2011

குழந்தைகளுக்கு தனி பெட்ரூம் தேவையா?

அவர்களுக்கு தாய்-தந்தை, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் என்ற கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்பு இருக்கிறது என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.தவிர, குழந்தைகளை தைரியசாலிகளாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் வளர்க்க வேண்டியதும் அவசியம். அதற்கு அவர்களை குழந்தைப் பருவத்திலேயே தயார்படுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் 4 அல்லது 5 வயதாகி விட்டாலே, அவர்களுக்கென்று தனி அறை, தூங்குவதற்கு தனி பெட், படிப்பதற்கு, டி.வி பார்ப்பதற்கு சுதந்திரம் என சுயமாக அவர்கள் வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்ள வழிவகை செய்கிறார்கள்.குழந்தைகளுக்கென்று தனி பெட்ரூம் கொடுப்பதால், தன்னிச்சையாக அவர்களால் செயல்படக்கூடிய மனோநிலை ஏற்படுகிறது. அச்சமின்றி அவர்கள் தூங்கக்கூடிய சூழல் காரணமாக, வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதேநேரத்தில் அதிக சுதந்திரம் காரணமாக பெற்றோரின் கண்காணிப்பில்லாத நிலையும் ஏற்படுகிறது.அதுவே ஒரு குறிப்பிட்ட வயதில், அறியாப் பருவத்தில் தவறிழைக்கவும் தூண்டுவதாக அந்த தகவல் கூறுகிறது. குழந்தைகளை தனி அறையில் விடுவதன் மூலம் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருப்பதை மறுக்க முடியாது. அமெரிக்காவைப் பொருத்தவரை 13 வயதை எட்டிய பதினெண் பருவத்தினர் (இருபாலரும்) தங்களுக்கென்று துணையைத் தேடிக் கொள்ளும் நிலை உள்ளது. டேட்டிங் போன்ற நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்கும் அந்த சுதந்திரம் வித்திடுகிறது.அங்குள்ள வசதி, வாய்ப்புகளும், சட்ட- திட்டங்களும் அப்படி இருப்பதால் மிகச்சிறிய வயதிலேயே அதாவது 20 வயதை எட்டுவதற்குள்ளாகவே பாலுறவு வைத்துக் கொள்ள நேரிடுவதாகத் தெரியவந்துள்ளது. சரியான நபரைத் துணையாகத் தேர்வு செய்தல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்நாட்டு கலாச்சாரம் எல்லாம் அமெரிக்காவில் காற்றில் பறக்கவிட்ட கதைதான் என்பது பலருக்கும் தெரியும்.இப்படியிருக்க, நம்மூரில் குழந்தைகளுக்கு தனி அறை என்பது பற்றி எப்படி யோசிக்க முடியும்? சென்னை போன்ற பெருநகரங்களில், புறநகர்ப் பகுதிகளை நோக்கி மக்கள் குடிபெயர்ந்து விட்ட நிலையில், தங்களின் மகன்-மகள்களை கல்லூரிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் கவலைப்பட வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

மிளகாய் பஜ்ஜி… சமோசா!சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் :(

சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் கொலஸ்ட்ரால்யாருக்கு தான் பிடிக்காது, மிளகாய் பஜ்ஜி, சமோசா. ஆனால், தரமானது தானா என்று பார்த்துச் சாப்பிட் டால் உடலுக்கு நல்லது தானே. இல்லாவிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் பூதம் பாடாய்ப்படுத்தி விடும்.


அப்புறம் என்ன…? ரத்தத்தில் கொழுப்பு ஏறி, மார்பை பிடித்துக்கொள்ள வேண்டியது தான். அதற்கு பின் தான் பலருக்கே ஞானோதயம் வரும். கண்ட கண்ட எண்ணெய், காயவைத்த எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் பஜ்ஜி சமாச்சாரங்கள் மூலம் நம் உடலில் புகுந்து கொள்ளும் கொழுப்பு தான் “டிரான்ஸ் பேட்’ என்ற புது வகை கொழுப்பு.

***

புதுக் கொழுப்பு இது

எந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் “நான் – சாச்சுரேட்டட்’ கொழுப்பு உள்ளதாக தான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக ,சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டது தான் “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு.


சாச்சுரேட்டட் கொழுப்பு தான் கெட்ட கொழுப்பை, ரத்தத்தில் சேர்க்கி றது. அதுபோல, “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு சேர்ந்தால் அதை விட 15 மடங்கு கெட்ட கொழுப்பு சேருமாம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த வகை கொழுப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.


***

யப்பா… 30 சதவீதமா?

“டிரான்ஸ் பேட்’ கொழுப்பு, அதிக பட்சம் இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என்று சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் சமீப காலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளில், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் 10 முதல் 23 சதவீதம் வரை “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு உள்ளது ‘ என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சில எண்ணெய்களில் 30 சதவீதம் வரை கூட இந்த மோசமான கொழுப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. “டிரான்ஸ் பேட்’ கொழுப்பு நமக்கு புதிது; அதை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வந்தால் தான் நல்லது; இல்லாவிட்டால் தயாரிப் பாளர்கள் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்’ என்று மருத்துவ தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

***

உஷாருங்க உஷாரு

எண்ணெயில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றுக்கு நம்மில் பலரும் அடிமையாகி விட்டனர். எண்ணெய் இல்லாமல் செய்து தரப்படும் உணவுகளில் நாட்டம் இல்லை. சாலையோர கடைகளில் கூட, பஜ்ஜி, சமோசா விற்பனை கன ஜோர் தான்.எந்த எண்ணெயில் பொரித்தது, தரமானது தானா என்று எத்தனை பேர் பார்க்கின்றனர்? “ஒரு நாளைக்கு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் வந்துடுமா… என்ன?’ என்று தத்துவம் பேசியே பல நாள் சாப்பிடுவோர் பலரும் உள்ளனர்.நாற்பது வயதை தாண்டியபின் தான் , ஒரு முறை டாக்டரிடம் போய் பி.பி.,செக்கப் செய்யும் போது இந்த “டிரான்ஸ் பேட்’பூதம் எந்த அளவுக்கு வேலை காட்டிவிட்டது என்று புரியும். அதற்கு பதில் இப்போதே காத்துக்கொள்ளலாமே!


***

சர்க்கரை நோய்க்கும்…

இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால் தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் , ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போது தான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட, “டிரான்ஸ் பேட்’ மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், “சி – சியாக்டிவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இது தான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது.


இதயத்தை தான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க “டிரான்ஸ் பேட்’ துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

***

எது தான் நல்லது?

பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். “பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் (புபா) உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் பிளவர், ஆகியவற்றுடன், “மோனோ அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்’ (முபா) கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால், விலையும் கையை கடிப்பது தான்.


***

ஈசியான வழி இதோ

இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே. இதோ சில வழிகள்:


* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக்கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.


* காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன் படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.


* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.


* கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும்.


* காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாமே.


***
thanks தினமலர்
***"வாழ்க வளமுடன்"

சிறுமிகள் சீக்கிரமே வயதுக்கு வருவது ஏன்?

சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.மஞ்சள் நீராட்டு விழா ஒவ்வொரு சிறுமியின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. 12 முதல் 14 வயதுக்குள்தான் பெண்கள் பருவமடைந்து வந்தனர். இந்த நிலை மாறி தற்போது 7 அல்லது 8 வயதுக்கு உள்ளாகவே பூப்படைகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் உள்ளது. பருவத்தை அடையும் முன்பு சிறுமிகளிடம் ஏற்படும் முதல் மாற்றம் என்ன? மிகச் சிறிய வயதில் சிறுமிகள் ஏன் பூப்படைகின்றனர்?என்ற கேள்விகளுக்கு விடை தேடும் வகையிலும் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவப் பள்ளி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து சமீபத்தில் புதிதாக ஒரு ஆய்வு நடத்தின. ஆய்வுக்காக 6 வயது முதல் 8 வயது வரை உள்ள ஆரோக்கியமான உடல் தகுதி, சரியான உடல் எடை, அதிக பருமன் உள்ளவர்கள், நிற பேதங்கள் உள்ளவர்கள், என பலதரப்பை சேர்ந்த 1,239 சிறுமிகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ஆய்வு முடிவு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: சிறுமிகளின் உடல்எடை, அவர்களின் உணவு மற்றும் இதரப் பழக்கங்கள், நிறம், மனஅழுத்தம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பூப்படைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதிக உடல் எடையால் உடலில் உள்ள கொழுப்பு சத்து செக்ஸ் ஹார்மோன்களை விரைவில் தூண்டி அதிக அளவு சுரக்கச் செய்கின்றன. சிறு வயதிலேயே சிறுமிகள் வயதுக்கு வர இது முக்கிய காரணம்.அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக வளர்ச்சியை தூண்டுகின்றன. அதனால், பூப்படையும் முன்பே மார்பகங்கள் வளர்ச்சி பெருகின்றன. உடலின் நிறத்துக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. சிவப்பு நிறத்தில் உள்ள சிறுமிகள் முன்கூட்டியே பூப்படையும் வாய்ப்பு குறைவு. கருப்பு நிற சிறுமிகள் முன்கூட்டியே பூப்பெய்துகின்றனர். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி குறித்து வெளியாகும் சிறப்பு மருத்துவ இதழில் இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளது.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

பர்கரா? ஆஸ்துமா ஆபத்து!

பரவி வரும் மேலை நாட்டுக் கலாச்சாரம் காரணமாக நம்மூரிலும் சர்வ சாதாரணமாக பீட்சா, பர்கர் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் குழந்தைகள் இவற்றை விரும்பி விழுங்குகிறார்கள். உங்கள் வீட்டிலும் அப்படித்தானா?அப்படியானால் கொஞ்சம் கவனம்! வாரம் மூன்று அல்லது அதற்கு மேல் பர்கர் சாப்பிடும் குழந்தைக்கு ஆஸ்துமா அல்லது மூச்சிரைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்தனர். அப்போதுதான் பர்கர்களுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதிலும் பணக்கார நாடுகளில் அந்தப் பாதிப்பு அதிகமாகவே இருப்பது தெரிந்தது. அங்குதான் `ஜங் புட்’ எனப்படும் துரித உணவுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உணவில் அதிகம் இறைச்சி எடுத்துக்கொள்வது கூட ஆஸ்துமாவுக்கான அபாயத்தை ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மாறாக, அடிக்கடி பர்கர் சாப்பிடுவது ஆஸ்துமா அபாயத்தை உண்டாக்கும் காரணிகளை ஊக்குவிக்கக் கூடும் என்கிறார்கள் அவர்கள்.

“ஆஸ்துமாவுக்கும் பர்கருக்குமான இணைப்பு நேரடியாகப் பலம் வாய்ந்தது என்று கூடக் கூற முடியாது. ஆனால் உடல் பருமன், தொந்தி போன்ற மறைமுக வழிகள் மூலம் அது ஆஸ்துமாவுக்கு வழி ஏற்படுத்தி விடுகிறது” என்று ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்தவரான ஜெர்மனி உல்ம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் கேப்ரியல் நெகல் கூறுகிறார்.

அதேநேரம் அவர் ஆறுதலாகத் தெரிவிக்கையில், பழங்கள், காய்கறிகள், மீன் ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுவது ஆஸ்துமாவுக்குத் தடை போடும் என்கிறார். பழங்கள், காய்கறிகளில் காணப்படும் `ஆன்டி ஆக்சிடன்ட்கள்’, மீனில் உள்ள `ஒமேகா 3 பாலிஅன்சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்ஸ்’ ஆகியவை ஆஸ்துமாவுக்கு எதிராகச் செயல்பட வல்லவை என்கிறார் கேப்ரியல்.


***
thanks news
***


"வாழ்க வளமுடன்"

மாரடைப்பு, திடீர் மரணத்தை முன்கூட்டியே அறிய செய்யும் கரோனரி ஆஞ்ஜியோகிராம்

மனிதனுக்கு உயிர்வாழ இதயத்துடிப்பு தேவை. இதயம் துடிக்கச் சக்தி தேவை; இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த சக்தி, இதயத் தின் இடது கீழறையிலிருந்து வெளியேறி, அயோட்டா என்ற மகா தமனி மூலம் வெளியேற்றப்படுகிறது. அப்போது, அயோட்டா ஆரம்ப பகுதியிலுள்ள கரோனரி சைனஸ் என்ற பகுதியிலிருந்து ஆரம்பமாகும் மூன்று கரோனரி ரத்தக்குழாய்கள் மூலம் இதயம், வேண்டிய ரத்தத்தை பெறுகிறது.
இதயத்துடிப்பு

இதயம் துடித்து, அதன் வேலையை செய்ய, அதாவது இடது அறையிலிருந்து ஐந்து லிட்டர் ரத்தம் நிமிடத்திற்கு வெளியேற்றப்படுகிறது. இந்த துடிப்புக்கு ரத்தம் தேவை. இந்த ரத்த ஓட்டம் குறைந்தாலோ? நின்றாலோ? வேதனையும், துயரமும் தான் வரும். சோதனைக் காலம் துவங்கி விட்டது.


மாரடைப்பு, திடீர் மரணம் என்று மனிதனை அழித்து விடுகிறது. இதனால், 25 வயது முதல் 60 வரை, குடும்பத் தலைவன் உயிர் எவ்வளவு முக்கியத் தேவை. குடும்பத்தின் வாழ்வாதாரமே, அந்த வருவாய் ஈட்டும் ஜீவனால் தானே. அப்படிப்பட்ட இளம், நடுத்தர, மேல் வயது குடும்பத் தலைவர்களை காப்பாற்றி, அந்த குடும்பத்தை சோதனையிலும், துயரத்திலும், துன்பத்திலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு, இதய நோய் நிபுணருக்குள்ளது. குடும்பத் தலைவனின் நலனில், அவளுடைய மனைவி, மக்கள் நாட்டம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர் வருமானம் தான் தங்களை காப்பாற்றுகிறது என்ற நினைவு இருக்கட்டும்.

*

உயிர் வாழ துடிப்பு

அரசியல்வாதிகள், தனது உடலை மாதம் மாதம் பரிசோதித்து, இதயத்தைப் பாதுகாக் கின் றனர். தான் லஞ்ச ஊழலில் கொள்ளையடித்தப் பணத்தை அனுபவிக்க சர்க்கரை, ரத்த கொதிப்புடன் போராடி உயிர் வாழ துடிக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவன், குடும்ப உறுப்பினர்கள் நலத்திற்காக, வருடம் ஒருமுறையாவது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

*

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது. இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது. அதன்பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது. இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

*

மவுனமான மாரடைப்பு:

இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. இவைகள் செய்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.


இதை முடிவு செய்வது இதயநோய் நிபுணர் அல்லது அவர் ஆலோசனையில் சேர்ந்து, அவரது ஆலோசனைப்படி மருத்துவம் பார்க்க வேண்டும். காரணம், தேவையில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுபவமில்லாத மருத்துவர்கள் சேர்க்கப்பட்டால், பணம் விரயம், நல்ல மருத்துவ சேவையும் கிடைக்காது. இதயநோய் நிபுணர், குறிப்பாக, ஊருருவல் வல்லுனர்களால் மாரடைப்பு, மார்பு வலிக்கு காரணமான கரோனரி குழாய் அடைப்பை சரி செய்ய இவர்களால் தான் முடியும். அதாவது, முழுமையான சிகிச்சை கொடுக்க முடியும்.


மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லையென்றால், தேவையில்லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என்று பல ஆயிரம் செலவழிக்க வேண்டி வரும். அடைப்புக்கு காரணமான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.


***

வேறுபாடு என்ன?

ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழாய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி கண்டறியலாம். அனுமானமாக அடைப்பை காட்டும்.


எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.


கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம்.


மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.

**

யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச்சை (ICC)

1) மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை.

2) மூச்சுத் திணறல், இதய பம்பிங் குறைவினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.

3) படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.

4) மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.

5) ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைதல்.

மேற்கூறியவைகள் தான் முக்கிய ஐ.சி.யு., அனுமதிக்கு காரணமாகிறது. இந்நிலையில், நல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும். சில நேரங்களில், மேற்கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரைக் காப்பாற்ற ரெய்டு (Rescue Angyogram plasty) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும்.


அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்பவர், அதிக எடை உள்ளவர்கள்.


ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்புள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.


இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதினர்.


வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலைவர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண்டறிய வேண்டும்.

***

திடீர் மரணம்

குடும்பத்தினரை வேதனையும், சோதனையுமாக்கி, குடும்பத்தினர் மீது கல்லை போடுவதற்கு சமம். தினம் தினம் பொய் பேசி, மனைவிகளுக்கு பிள்ளைகளின் நலத்திற்காக தனது இதயத்தை மாதா மாதம் பரிசோதனை செய்து, மக்கள் தலையில் கல்லைப் போட்டு கொடுமைப்படுத்துகிற அரசியல்வாதிகளை பார்த்தாவது நடுத்தர மக்கள், குறிப்பாக உணரப் பட்டவர்களே இந்த பரிசோதனைகள் செய்து, மாரடைப்பு திடீர் மரணத்தை தடுக்க பாருங்கள்.

யோக, தியானம், நடைபயிற்சி, தனிமனித ஒழுக்கம், உணவு ஒழுக்கம், இவைகள் இருந்தால் இதய நோயை தடுக்கலாம். இனிய தமிழ் மக்களுக்கு வரும் விரோத புத்தாண்டில், நலமுடன் வாழ, உங்களுடன் மறைந்து தாக்கும் ரத்த விரோதியான, மாரடைப்பு மரணத்தை தடுத்து வாழ எனது வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்.

***

மக்கள் கவனத்திற்கு புத்தாண்டு ஆலோசனைகள்

கடந்த 40 ஆண்டுகால, அரிய பல முன்னேற்றங்கள் கொண்ட துறை இதயநோய் துறை. காரணம், திடீர் மரணம் என்ற பயம். இ.சி.ஜி., எக்கோவில் ஆரம்பித்த பரிசோதனைகள் இன்று டி.எம்.டி., எக்கோ, லிபிட் ப்ரொபைல், கரோனரி ஆஞ்ஜியோகிராம், பை-பாஸ் சர்ஜரி ப்ரோபைல் இதய மாற்று ஆபரேஷன், 64, 120 சிலைஸ் ஆஞ்சியோ இதய நியூக்ளியர் பரிசோதனை தானியம் ஸ்டெசி எலக்லோ பிசியலாஸ்கள் பரிசோதனை என்று வளர்ந்து, மாரடைப் புக்கு பை-பாஸ் சர்ஜரிக்கு பதிலாக இன்று இரண்டு மூன்று ஸ்டென்ட் சிகிச்சை முறை பரவலாகி விட்டது. இந்த சிகிச்சை, பல ஸ்டென்ட் சிகிச்சை செய்ய பல லட்சங்கள். இதை கடன் வாங்கி, நகைகள், வீடு விற்று, ஏழைகள், நடுத்தர மக்கள் செய்ய வரும்போது வேதனை அளிக்கிறது. இவ்வளவு பணமும் ஸ்டென் கம்பெனி, மருத்துவமனைக்கு செல்கிறது. இதனால், இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்வதை நிறுத்தலாமா என்று தோன்றுகிறது. தனிமனித ஒழுக்கம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி தியானம், யோகா, சுத்தமான சிந்தனை. இவைகள் இதய நோயைத் தடுக்கும்.

*

பேராசிரியர் டாக்டர். அர்த்தநாரி
இதய ஊடுருவல் சிகிச்சை நிபுணர்.

மொபைல்: 98401 60433.
email:drarthanarisubbu54@gmail.com.


***
thanks டாக்டர்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "