...

"வாழ்க வளமுடன்"

27 ஆகஸ்ட், 2010

புதினாவும் அதன் மருத்துவ குணங்களும்


கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.


புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை
தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.


புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.


பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.


ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.


புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு
இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.



புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.


வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.


புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட ஔடதமாக இருந்து வருகிறது.


புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல்
சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.


இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.


எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய
வைக்க வேண்டும்.


சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த
இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.


தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.


இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.


***

நன்றி ஈகரை.

***


"வாழ்க வளமுடன்"

தலைமுடி‌க்கு நா‌ம்தா‌ன் எ‌தி‌ரி


தலைமுடி கொ‌ட்டு‌‌கிறது, தலை‌யி‌ல் அ‌திகமான பொடுகு என கவலை‌ப்படு‌ம் பெ‌ண்களே இ‌ல்லை. கவலை‌ப்ப‌ட்டு ப‌ட்டு அ‌திகமாக முடி கொ‌ட்டுவத‌ற்கு வ‌ழிவகு‌ப்பா‌ர்களே‌த் த‌விர, அத‌ற்கு எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.



நா‌ம் செ‌ய்வதெ‌ல்லா‌ம் கூ‌ந்தலு‌க்கு எ‌திரான ‌விஷய‌ங்க‌ள். அ‌ப்படி இரு‌க்க கூ‌ந்த‌ல் ‌மீது நா‌ம் ப‌ழிபோடுவோ‌ம்.



முத‌லி‌ல் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.



குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.



அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.



இதுவரை நா‌ம் பா‌ர்‌த்தது நமது ஆரோ‌க்‌கிய‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டது.

***

இ‌னி கூ‌ந்தலு‌க்கு நா‌ம் செ‌ய்யு‌ம் தொ‌ந்தரவுக‌ள் எ‌ன்னவெ‌ன்பதை‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.



குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்‌றினா‌ல் கு‌ளி‌த்த ‌பிறகு கூ‌ந்த‌லி‌ல் அ‌திக ‌சி‌க்கு ஏ‌ற்படாம‌ல் இரு‌க்கு‌ம். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அலசவும்.




தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.



மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.




குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும்.




ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.



உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலை‌க்கு கு‌ளி‌த்தது‌ம் உடனடியாக உ‌ங்க‌ள் ‌சீ‌ப்புகளையு‌ம் ந‌ன்கு கழுவுவது ந‌ல்லது. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது.




சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை ந‌ல்ல முறை‌யி‌ல் பராம‌ரி‌த்தா‌ல் அழ‌கிய கூ‌ந்தலை‌ப் பெறலா‌ம். பெரு‌ம்பாலு‌ம் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.



உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.



இரவில் எண்ணைய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்குக் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். (தலையணை எண்ணையாவதற்கு நான் பொறுப்பல்ல!!!) ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே, ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணையை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணைய்) எடுத்துக் கொண்டு சூடுபடுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.



பல‌ரு‌ம் தலை‌‌க்கு எ‌ண்ணெ‌ய் வை‌க்கு‌ம் பழ‌க்கமே இ‌ல்லாம‌ல் இரு‌க்‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தலை‌க்கு‌ம் பா‌தி‌ப்பு, அவ‌ர்களது உட‌ல்‌நிலை‌க்கு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. எனவே, வார‌த்‌தி‌ல் ஒரு முறையாவது தலை‌க்கு தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் வை‌‌ப்பதை பழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். தலை முடியையு‌ம், சரும‌த்தையு‌ம் பாதுகா‌ப்போ‌ம்.

***


நன்றி ஈகரை.

***

"வாழ்க வளமுடன்"

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்




இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.


ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.



உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.






குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.



இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.



எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.



அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.






நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.


அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.


அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.



எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.



எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.



நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.



அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.



பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.



இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.



ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.



***


நன்றி பதிவு.காம்.


***


"வாழ்க வளமுடன்"

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளையைப் பாதுகாக்க...


பார்கின்ஸôனிஸம் என்ற மூளை பாதிப்பு நோய் தாக்கியவர்களது செயல்பாடுகள் மிகவும் ஆமை வேகத்தில் இருக்கும். இந்த நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளனவா? இந்த நோய் தாக்குவதற்கான காரணங்கள் எவை?

*


மனிதர்களுடைய மூளைப் பகுதியை "பிராணன்' என்ற வாயுவும், "தர்ப்பகம்' என்ற கபமும் தம் செயல்களின் மூலம் அறிவு, புலன்கள், நாடிகள் எனப்படும் நரம்பு மண்டலங்கள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கின்றன.


இந்த இரு தோஷங்களின் சீற்றம், மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரவக் கசிவுகளையும் பாதிப்படையும் வகையில் தாக்குவதால், உடல் அசைவுகள் மந்தமாகுதல், விரைப்பு, தன்னிச்சையாக கைகள் நடுங்குதல், கைகளில் வலுவற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும் முகத்தைச் சார்ந்த தசைகள் அசைவற்று, கண்களை மூட முடியாமல், வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்கும் உபாதைகளும் காணத் தொடங்கும். நடக்கும்போது உடல் முன்னோக்கி வளைவதும், குறுகிய தள்ளாட்டத்துடன் கூடிய தடுமாற்றங்களும் ஏற்படும்.



சிலருக்குத் தரையில் ஒரு குச்சி அல்லது கம்பு ஒன்றைப் போட்டுத் தாண்டச் சொன்னால், அதைத் தாண்டியவுடன் நடை சீராக, தடுமாற்றம் குறைந்து சிறிது தூரம் வேகமாகவும் நடப்பார்கள். வாதத்திற்கும் கபத்திற்கும் சமமான குணம் "சீதம்' எனப்படும் குளிர்ச்சி மட்டும்தான்.


மற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேராதவை. அதனால் குளிர்ச்சி எனும் குணத்தைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் பருவ காலத்தினாலும் இந்த நோயின் தாக்கம் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


***



வாத - கப தோஷங்கள்:


1. தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல்,


2. அப்படி குளித்தபிறகு தலையைச் சரியாக துடைத்துக் கொள்ளாமல் தலைமுடியை வாரிக் கொள்ளுதல்,


3. தேங்காய் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டு, காலையில் இளம் வெயில் அல்லது விடிகாலையில் நடைப்பயிற்சி செய்தல்,


4. தூங்கும்போது அதிக அளவில் ஏசியை வைத்துக் கொள்ளுதல்,


5. தலைப்பகுதியில் டேபிள் மின்விசிறியின் காற்று படும்படி படுத்துக் கொள்ளுதல்,


6. இரவில் படுக்கும் முன் குளிர்ந்த நீரைப் பருகுதல்,


7. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சில்லிட்டுப் போன பழங்கள், பழ ரசங்கள், பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்து அடிக்கடி சாப்பிடுதல்,


8. சில்லிட்டுள்ள தரையில் கால் பாதங்களை வைத்திருத்தல்,


9. உடல் வியர்த்துள்ள நிலையில், ஐஸ் தண்ணீரைப் பருகுதல்,


10. உணவில் குளிர்ச்சியான வீர்யத்தைக் கொண்ட வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுதல்,


11. தவறான விதத்தில் யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்ற சில காரணங்களால் தலையைச் சார்ந்த வாத - கப தோஷங்கள் சீற்றமடைந்து நரம்புகளை வலுவிழக்கச் செய்கின்றன.


***



இந்நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் பல:




மூக்கினுள் மூலிகைத் தைலத்தை விடுதல், காதுகளில் எண்ணெய் நிரப்புதல், முகத்தில் மூலிகைத் தைலத்தைத் தடவி, பூண்டு வேகவைத்த சூடான பாலிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்தல், தலையில் எண்ணைய்யை நிரப்பி ஊறவிடுதல், குடலுக்கு நெய்ப்புத் தரும் விளக்கெண்ணெயைப் பருகச் செய்து மலம் கழிக்க வைத்து அதன் பிறகு ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களைச் செலுத்தி குடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுதல், உடல் சுத்தி முறைகள் அனைத்தையும் செய்த பிறகு, மூளைத் திசுக்கள், நரம்புகள் வலுப்படும் வகையில் மூலிகைக் கஷாயங்களைப் பாலுடன் கலந்து பருகுதல் போன்றவை சிகிச்சை முறைகளாகும்.


விதார்யாதி கிருதம், தசமூல ரசாயனம், அஸ்வகந்தாரிஷ்டம், தலைக்கு க்ஷீரபலா தைலம் போன்ற சிறப்பான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக, பார்கின்ஸôனிஸம் எனும் கடுமையான உடல் உபாதையின் தாக்கத்தை நன்றாகக் குறைக்க முடியும்.




***



பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771


***


நன்றி தினமணி.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Kadhir&artid=70762&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=


***



"வாழ்க வளமுடன்"


உணவு தானிய வகைகளின் குணங்கள்:


நமது தேசிய உணவே தானியங்கள் தான். அதன் பயன் பற்றியும் அதன் தன்மைப் பற்றியும் அறிவோமா!



1. கார் அரிசி: இது நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதி நிலையடையும். தசைகள் நல்ல முறையில் வளச்சியடையும். உடல் தோற்றத்தில் கவர்ச்சி ஏற்ப்படும். சருமம் மென்மையடையும்.



2. குண்டு சம்பா அரிசி: நா வறட்சியை தீர்க்கும். ஆனால் பசியை குறைக்கும்.



3. குன்று மணி சம்பா அரிசி- வாதக் குறைபாடுகள் நீக்கும் சத்து உண்டு. விந்தை பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.



4. சீரகச் சம்பா- சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கும்.



5. கோடைச் சம்பா அரிசி- வாதப் பித்த சிலேட்டும் நோய்களைக் குணப்படுத்தும். உடலுக்கு நல்ல குளிச்சி இயல்பைத் தரும்.



6. ஈர்க்கு சம்பா- சுவையானது. கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. பித்த எரிச்சலை விலக்கும்.



7. புழுங்கலரிசி- அரிசியின் முழுச்சத்தும் வீணாகாமல் தரும். எல்லா வயதினருக்கும் எல்லா தரத்தினருக்கும் உகந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது.



8. கோதுமை- உடலுக்கு வளமையும் அளிக்கும். விந்தினை அதிகப்படுத்தும்.



9. சோளம்- பசியை மந்தப்படுத்தும். உடல் வன்மையைப் பெருக்கும்.



10. கம்பு- வீரிய விருத்தி அளிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஆனால் உடலில் நமைச்சல் ஏற்ப்படுத்தும்.



11. கேழ்வரகு- உடல் உழைப்பாளிக்கு ஏற்ற தானியம். உடலுக்கு வேண்டிய புரதச்சத்துகளை பெருமளவில் தருகிறது.



12. சவ்வரிசி- சத்து நிறைந்த இவ்வணவு நோய்வாய்ப்படிருப்பவர்களின் உடல் பலவீனத்தை அகற்றும்.



13. சாமை அரிசி- காய்ச்சல் காரணமாக ஏற்படும் நா வற்ச்சியைப் போக்கும். உடலை வலிமை உடையதாக ஆக்கும் ஆற்றல் உள்ளது.



14. தைனை அரிசி- சளித்தொல்லையை அகற்றும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும்.



15. திப்பிலி அரிசி- விந்தினை வளக்கும். மேக நோயைக் குணமாக்கும். வாத கோளாறுகளை அகற்றும்.



***




சோற்றை தயார் செய்வதில் குறைப்படு ஏற்ப்பால் உடலுக்கு தீங்கு:



1. மிகவும் குழைவான உணவு- உடலில் வெப்ப நிலையில் உள்ள சமத்தன்மை கெடக்கூடும்.



2. உலர்ந்த நிலையில் உள்ள சோறு- அஜீரணக் குறைப்பாடுகளை உண்டாக்கும்.



3. ஊசிப்போன நிலையில் - சீத- பித்தக் கோளாறுகளை ஏற்ப்படுத்தும்.



4. காந்தல் ஆகிவிட்ட சோறு-ஜீரண உறுப்புகளை பலவீனப்படுத்துதல்.



5. நறுக்கரிசி- சரியாக வேகாத உணவு மந்தத்தை உண்டாக்கும்.




***




இது உங்கள் உணவு உலகம் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்த தகவல்.

இதன் ஆசிரியர் இராம. மெய்யப்பன்.



***

அலுவலக முகவரி:

உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்,
24/37 கிருஷ்ணாபுரம் தெரு,
லால்சந்த் பள்ளி எதிரில்,
சூளைமேடு,
சென்னை - 600 094.


*

போன் - 24816074.
செல்- 9940481276



***

"வாழ்க வளமுடன்"

உணவு பற்றிய பொது அறிவு;


1. அன்னாச்சியின் தாயகம் தென் அமெரிக்கா.

2. வாழைப்பத்தைக் பனானா என்ற சொல் இந்தோ மலேசியா மூல சொல் ஆகும். இதே சொல் வட ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இதை பனேமா என்பார்கள். அந்த சொல்லின் திருபுதான் பனானா என்று ஆனாது.


3. உலகிலுள்ள பங்கு சந்தைகளின் அதிகம் விற்று வாங்கப்பும் பொருள் பெட்ரோலியம், இரண்டாவது காபி.


4. உலகில் தண்ணீருக்கு அடுத்தப்படியாக தேநீர்தான் அதிகமான மக்களால் விரும்பப்படுவது. அதன் பிறகுதான் காபி, சோட, மதுபானம், பால் , சாக்லெட் பானங்கள்.


5. உலகில் பழங்களின் உற்ப்பதி அதிகமா வெப்ப மண்டல நாடுகளில் தான் அதிகம் விளைகிறது.


6. நம்க்கு இயற்க்கையில் கிடைக்கும் மூலிகைகள் மித வெப்பப் பகுதிகளில் அதிகம் விளைகிறன்.


7. நாம் உபயோகிக்கும் நறுமண பொருட்கள் அதிக அளவில் வெப்ப மண்டல பகுதியில் தான் விளைகிறது.


8. இத்தாலியர்களுக்கு பிடித்தமான பானம் எக்ஸ்பிரஸோ காபி.


9. பாரிஸ் நகரில் அதிகம் பருகப்படும் பானம் காபி.

10. பாரிஸ் நகரில் கfபே ஸொர்ரே என்று கேட்டால் அதிகம் தண்ணீர் சேர்க்கப்படாத காபி கிடைக்கும்.


11. கfபே அலாஞ்ஜி என்று பாரிஸ் நகரில் கேட்டால் காபியில் அதிக தண்ணீர் சேர்க்கும் முறை இது.


12. கfபே லெஜர் என்று பாரிஸ் நகரில் கேட்டால் காபி விதைகளிலிருந்து டிகாக்ஷனைச் சேகரித்த பிறகு வெந்நீரைச் சேர்த்து தயாரிக்கப்படும் காபி. பெரும்பாலானவர்கள் இதை விரும்புவது இல்லை.


***


மற்ற நாட்டின் உணவுப்பழக்கங்கள்:

1. சீனர்கள் சாப்பிடும்போது பேசவே மாட்டார்கள்.

2. பிரிட்டனில் உணவருந்தும் போது உரையாடல் மிகவும் முக்கியம்.

3. ஆங்கிலேயர்கள் ஒரு கையில் கத்தியையும், மற்றொரு கையில் fபோக்கையும் பிடித்துக் கொண்டு கத்தியால் வெட்டி fபோக்கினால் குத்தி எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள்.

4. அமெரிக்கர்கள் கத்தியால் வெட்டி அதைத் தட்டில் வைத்துவிட்டு fபோர்க்கினால் எடுத்து வாயிலிட்டுக் கொள்வார்கள்.

5. இஸ்ரேலில் இறைச்சியை சிவப்புத்தட்டிலும், பாலை நீலக் கோப்பையிலும் தான் வழங்குவார்கள். இரண்டையும் சேர்ந்தாற் போல பரிமாற மாட்டார்கள்.


***

இது உங்கள் உணவு உலகம் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்த தகவல்.

இதன் ஆசிரியர் இராம. மெய்யப்பன்.

***


"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "