...

"வாழ்க வளமுடன்"

28 ஏப்ரல், 2011

ஜிஞ்சர் ஸ்லாப் கேக் & கோதுமை பழ கேக் !!!


ஜிஞ்சர் ஸ்லாப் கேக்தேவையானவை:

சுக்குப் பொடி- 25 கிராம், வெண்ணெய் - 130 கிராம், பால் - 150 மில்லி, மைதா மாவு - 500 கிராம், சமையல் சோடா - 2 தேக்கரண்டி, பொடி செய்த சர்க்கரை - 150 கிராம், காரமல் கலர் - 2 மேஜைக் கரண்டி, பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் - 100 கிராம், பதப்படுத்தப்பட்ட இஞ்சி - 8 மேஜைக் கரண்டி, முட்டை 2.


செய்முறை:

ஆரஞ்சுத் தோலையும் பதப்படுத்திய இஞ்சி இரண்டையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சர்க்கரை, சுக்குப் பொடி சலித்த மாவு இவற்றில் வெண்ணெயைச் சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்கவேண்டும். இதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, ஆரஞ்சுத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் காரமல் கலரையும் சேர்க்க வேண்டும். பாலை இளஞ்சூடாக்கிக் கொண்டு சமையல் சோடாவை அதில் கரைக்க வேண்டும். ரொட்டித் தூள் போல் செய்து மாவுடன் அடித்த முட்டையையும் பாலையும் கலந்து மரக்கரண்டியினால் நன்றாக அடிக்க வேண்டும். எட்டு அங்குல அகலமும் பத்து அங்குல நீளமும் உள்ள நீண்ட சதுரத் தட்டில் இக்கலவையைப் போட்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை சூட்டில் வைத்து எடுக்கவேண்டும். சூடு ஆறிய

பிறகு துண்டங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.


***


கோதுமை பழ கேக்தேவையானவை:

கோதுமை மாவு - 450 கிராம், டால்டா - 450 கிராம், சர்க்கரை பவுடர் - 450 கிராம், ட்யூட்டி ப்ரூட்டி - 200 கிராம், திராட்சை - 200 கிராம், செர்ரி - 200 கிராம், முட்டை - 8, பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, பன்னீர் - 2 தேக்கரண்டி.

செய்முறை:

கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். டால்டாவையும் சர்க்கரையையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவேண்டும். முட்டையை நுரை பொங்க அடித்துக் கொள்ள வேண்டும்.

டால்டாவோடு கோதுமை மாவைக் கொட்டி கலக்க வேண்டும். பின் முட்டைக் கலவையையும் சேர்த்துக் கலவையிட வேண்டும். பின்பு வெனிலா, பன்னீர் பழத்துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி இட்லி மாவு பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தகர ட்ரேயில் டால்டா தடவி அதில் கேக் கலவையைக் கொட்டி அதை அடுப்பில் வைத்து ஒருமணி நேரம் இளம் தீயில் வேகவிட்டு இறக்கவேண்டும். பின் அதைத் தேவையான அளவுக்கு துண்டுகள் போட்டுக்கொள்ள கோதுமை பழ கேக் தயார்!*

by - ஆர். மீனாட்சி
***
thanks கதிர் புத்தகம்
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "