...

"வாழ்க வளமுடன்"

14 ஏப்ரல், 2011

கொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ்

கொளுத்தும் வெயிலுடன் கோடை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போதே வெயிலின் உக்கிரம் தொடங்கி விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிகமாகும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலின் சக்திகள் உறிஞ்சப்பட்டு விடுவதால், உடல் எளிதில் சோர்வடையும். வெப்பத்தால் தோல் பாதிப்பு, சூட்டால் வருகிற தொல்லைகள் தலை தூக்கி பாடாய் படுத்தும். காட்டன் உடை, சீரகத் தண்ணீர், நோ டென்ஷன், அப்பப்போ ஜூஸ் போன்றவற்றை கடைபிடித்தால் போதும். கோடையிலும் எந்த தொல்லையுமின்றி ஜொலிக்கலாம் என்கிறார் டாக்டர் சசிகுமார். அவர் கூறுவது: நம் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை 3 மில்லியன் வியர்வை சுரப்பிகள் எல்லா காலத்திலும் வேலை செய்கின்றன. வெளியே இருக்கும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப நம் உடலின் வெப்பத்தை தகவமைத்துக் கொள்ளவே இந்த சிஸ்டம். சாதாரணமாக 600 மில்லி முதல் 800 மில்லி வரை வியர்வை வெளியேறுகிறது. உள்ளங்கால், உள்ளங்கை பகுதியில் சிறிய அளவில் வியர்வை சுரப்பிகள் உள்ளன. தலை முடிப்பகுதி, முகம், நெற்றி, கழுத்து, முதுகு, அக்குள் மற்றும் உறுப்பு பகுதிகளில் பெரிய அளவிலான வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன. வியர்வையில் உப்பு சத்து, சர்க்கரை, அமினோ அமிலம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களுக்கு 28 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் இருக்கும் பொது வியர்வை வெளிப்படும். பெண்களுக்கு 31 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வியர்வை வரும். உழைக்கும் போதும், உடற்பயிற்சி, பய உணர்வு, மனரீதியான பதற்றம் இருக்கும் போதும் வெளிப்படும். வழக்கமான வியர்வை நாற்றம் மெல்லியதாக இருக்கும். அப்படி இல்லாமல் முட்டை, வெங்காயம், கற்றாழை, மீன் போன்ற நாற்றம் உடல் வியர்வையில் இருந்து வெளிப்பட்டால் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டியது அவசியம். வெயில் காலத்தில் காட்டன் தவிர மற்ற உடைகளை அணியும் போது வியர்வை உடலில் தேங்கி வியர்க்குருவை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை அணிவதன் மூலம் இதை தடுக்கலாம். வியர்வை வெளியேறும் இடங்களில் பவுடரை பயன்படுத்துவதன் மூலம் அரிப்பை தடுக்க முடியும். சுத்தமான குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம். வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம். குறைவாக தண்ணீர் குடிக்கும் குழந்தைகளுக்கு Ôசம்மர் டயரியாÕ வரவும் வாய்ப்புள்ளது. எனவே கோடை செய்யும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க ஒரே மருந்து தண்ணீர் தான். இவ்வாறு கூறுகிறார் டாக்டர் சசிக்குமார். *** பாதுகாப்பு முறைகள் வெயில் காலத்தில் தலையில் அதிக வியர்வை மற்றும் அழுக்கு படிவதன் காரணமாக பொடுகு தொல்லைகள் ஏற்படும். இதை தவிர்க்க அடிக்கடி தலைக்கு குளித்து சுத்தமாக வைத்து கொள்ளவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் புழுதி, அழுக்கால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் தோல் பிரச்னைகள் உருவாகும். இவற்றைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவலாம். அஜீரணம் மற்றும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்தால் தண்ணீரில் சீரகம் போட்டு குடிக்கலாம். சீரகம் மற்றும் வெந்தயம் சிறிது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் குடிப்பதன் மூலம் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். *** ரெசிபி எல்லோ ஸ்குவாஷ் மாம்பழத்தின் சதைப் பகுதியை பிரித்து எடுத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சர்க்கரையில் தண் ணீர் சேர்த்து சுகர் சிரப் செய்து கொள்ளவும். வேக வைத்த மாம்பழத்தை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சுகர் சிரப்புடன் சேர்த்து கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் டம்ளர் மாம்பழ கலவை சேர்த்து ஜூசாக அருந்தலாம். * ரெட் டேஸ்ட்டி தக்காளியில் இருந்து நமக்கு அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தக்காளியை வேக வைத்து தோல் உரித்து பின் விதைகளை நீக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். இதை அப்படியே பிரஷ் ஜூசாக குடிக்கலாம். கலர் புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும். வைட்டமின் சி சத்து இதில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. இதில் பால் சேர்ப்பதை தவிர்க்கவும். * கிரீன் சிரப்: பெரிய நெல்லிக் காயை வேக வைத் துக் கொள்ளவும். கொட்டையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். இக்கலவையை பாட்டிலில் சேகரித்து ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் டம்ளர் கிரீன் சிரப் கலந்து குடிக்கலாம். நெல்லிக்காயை வேக வைப்பதால் அதில் உள்ள கசப்பு நீங்கி விடும். வெயில் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் இந்த கிரீன் சிரப். **** டயட் காலையும் மாலையும் கஷ்டம் பார்க்காமல் குளித்து விட வேண்டும். காட்டன் டிரஸ் கொஞ்சம் லூசாக இருக்கும்படி அணியவும். மைல்டான பெர்ப்யூம் துணையுடன் சத்தான உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அகிலா. கோடையில் உடல் இழக்கும் எனர்ஜியை மீட்க அவர் தரும் டிப்ஸ்.. உணவு தயாரிக்கும் போது உப்பு காரம் குறைக்கவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிட்ரஸ் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது நல்லது. கோடை வெயிலின் காரணமாக அதிகளவு தண்ணீர் உடலில் இருந்து வெளியேறும். இதனால் வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும். குழந்தைகளைப் பொருத்தவரை போதுமான எனர்ஜிக்கு ஜூஸ் வகைகளுடன் காய்கறி சூப் தரவேண்டியதும் அவசியம். *** பாட்டி வைத்தியம் 1. வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும். * 2. வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும். * 3. விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும். * 4. முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது. * 5. மஞ்சள், ஆவாரம்பூ இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும். * 6. மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும். * 7. புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம். * 8. நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும். * 9. கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும். * 10. திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். *** thanks தமிழ் முரசு *** "வாழ்க வளமுடன்"

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும். * இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல், அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம் போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல் நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். *** மனரீதியான ஆறுதல்: இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களை சத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம். ஒவ்வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம். நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதை தடுக்க முடியும். **** பாட்டி வைத்தியம் 1. அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். * 2. அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். * 3. அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். * 4. ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும். * 5. இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும். * 6. ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும். * 7 எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் தொந்தரவுகள் குறையும். * 8. கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும். * 9. கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும். * 10. செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும். * 11. செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். * 12. சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும். *** ரெசிபி எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாக கலந்து தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்த எனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும். உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும். ** பேரீச்சை பால்: பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில் இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்து உட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது. இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும். **** கொள்ளு கூட்டு: மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்து சீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது. *** டயட் பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால் உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத் தரும். இந்த நேரத்தில் பெண்களின் எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா. *** thanks டாக்டர்ஸ் *** "வாழ்க வளமுடன்"

பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகள்!

பிரசவம், பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பெரும்பாலான பெண்கள் முதல் குழந்தை பிறந்ததுமே தங்களது உடலை கவனிக்க மறந்து விடுகிறார்கள். அதுவரை ஸ்லிம் டயட், ஆரோக்கியத்தில் முழுகவனம் செலுத்தும் அவர்கள், குழந்தைபேறுக்கு பின்னர் அவற்றை காற்றில் பறக்க விடுவதால் பிரச்னை ஆரம்பமாகி விடுகிறது. ஒபிசிடி, ரத்தசோகை, மன உளைச்சல் போன்ற உடல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் தாம்பத்தியத்திலும் விரிசல் விழுகிறது. * முதல் பிரசவத்துக்கு பின் பெண்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹெல்த், டயட் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவ நிபுணர் கல்பனா சம்பத். ‘‘முதல் பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் உடல் பலம் இழக்கிறது. பிரசவத்தின் போது சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் பிபீ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த பின், உணவு முறைகளில் கவனம் செலுத்தாமல் விட்டால் ரத்தசோகை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் வரும். உடற்பயிற்சி இல்லாததால் வயிறு லூசாகி தொங்கிய நிலையில் காணப்படும். இதனை கவனிக்காமல் விட்டால் குடல் இறக்கம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. * பிரசவத்துக்குப் பின்னர் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சோதிப்பது அவசியம். பாதிப்பு ஏதேனும் இருப்பின் சிகிச்கை எடுக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உரிய மருந்துகள் எடுத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை, பிபீ ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் போது அடுத்து உருவாகும் குழந்தைதான், இந்தப் பிரச்னைகளுக்கு இலக்காகும். தைராய்டு பிரச்னையால் அடிக்கடி சோர்வு, வேலையில் ஆர்வமின்மை என உடலுக்குள் ஒரு போர்க்களமே உருவாகி விடும். எனவே பிரசவத்துக்குப் பின்னர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்” என்கிறார் டாக்டர் கல்பனா. * பிரசவத்துக்குப் பின்னர் தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். அப்போது கொழுப்பு சத்து உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள பச்சை கீரைகள், அவரை, பீர்க்கன், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த எந்த உணவுகளையும் சாப்பிடக் கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம். * தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் டயட்டில் முழுகவனம் செலுத்த வேண்டும். அந்த காலக்கட்டத்தில் உடல் எடையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறி, கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிகரித்தும் அரிசி மற்றும் கொழுப்பு உணவு வகைகளைக் குறைத்தும் சாப்பிட வேண்டும். பிரசவத்தின் போது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரத்தம் இழப்பு. உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறுவதால் ரத்த சோகை உருவாகிறது. இதைத்தடுக்க முழு பருப்பு வகைகள், முளை கட்டிய தானியம், முழு கோதுமை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் கட்டாயம் உணவில் இருக்க வேண்டும். கீரை வகைகளில் முளைக்கீரை மற்றும் தண்டுக் கீரையிலும் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இவற்றை சாப்பிடுவது ரத்த விருத்திக்கு வழிவகுக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. *** உடற்பயிற்சி: குழந்தை பிறந்த பின்னர் பெண்கள் தொடர்ந்து சில மணி நேரம் கூட அயர்ந்து தூங்க முடியாது. அப்போது வீட்டில் உள்ள மற்றவர்கள் அவர்களது வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தை தூங்கும் நேரத்தில் தாயும் தூங்கி ஓய்வெடுப்பது முக்கியம். குழந்தை சுகப்பிரசவமாக இருந்தால் ஒரு வாரத்திலும், அறுவை சிகிச்சையாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படியும் வயிற்றைக் குறைப்பதற்கான பயிற்சியை செய்யலாம். தற்போது பெல்ட் போடும் வழக்கம் உள்ளது. இவற்றால் வயிற்றுப் பகுதியை முழுமையாக சுருங்க வைக்க முடியாது. உடற்பயிற்சி தான் அவசியம். தோல் இறுக்கம் அடைந்து பழைய நிலைக்கு திரும்ப உடற்பயிற்சி மட்டுமே முழுமையாகக் கை கொடுக்கும். பின்பக்கத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கவும் இந்தப் பயிற்சி அவசியம். காலை படுக்கையை விட்டு எழும் போது, மதியம், இரவு தூங்கும் முன்னர் உடற்பயிற்சி செய்தால் போதும். மல்லாந்து காலை நீட்டி உடலை லேசாக உணரும் படி படுத்துக் கொள்ளவும். வயிற்றை உள் இழுத்து மூச்சை நன்றாக இழுத்து விடவும். இதே போல் பத்து முறை செய்யவும். பின்னர் படுத்த நிலையில் முதுகு நன்றாக தரையில் படும் படி வைத்து, ஒரு காலை நேராக மேலே தூக்கவும். இதே போல் ஐந்து முறை செய்து விட்டு அடுத்த காலுக்கும் இதே பயிற்சியை செய்ய வேண்டும். பின்னர் படுத்த நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கவும். படுத்த நிலையில் காலையும், தலையையும் தரையில் படாமல் தூக்கவும். இவ்விதம் குறைந்த பட்சம் பத்து முறை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பின் பக்கத்தில் உள்ள கொழுப்பு கரையும், முன்வயிற்று சதை இறுக்கம் அடையும். ** ரெசிபி கிரீன் கிரேவி: பச்சைப் பயறை 50 கிராம் அளவுக்கு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். தண்டுக் கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் நான்கு, சீரகம் ஆகியவற்றை எடுத்து ஊற வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து வேக வைக்கவும். இறக்கிய பின் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பருப்பில் உள்ள புரதம் மற்றும் கீரையில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து ஆகியவை சேர்வதால் இது ஒரு முழுமையான சத்துணவாக அமையும். ** பிரவுன் மில்கி: ரத்த சோகைக்கு மிகவும் உகந்தது பேரீச்சை. அதனுடன் பாலும் சேரும் போது இரும்பு சத்து மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் உடலுக்குக் கிடைக்கிறது. பொடியாக நறுக்கிய பேரீச்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சூடான பாலில் சேர்த்து வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். இந்த பிரவுன் மில்கி கலவை எலும்புக்கு வலிமை தரும். ** கலர்புல் பீட்ஸ் மிக்ஸ்: பழங்கள், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து மினுமினுப்பை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து சாப்பிடும் போது தோல் சுருக்கங்கள் நீங்கி வனப்பு பெறும். மாதுளை, ஆப்பிள், கருப்பு திராட்சை, சப்போட்டா ஆகிய பழங்களை உரித்து, துண்டுகளாக்கிக் கொண்டு பாலில் கலந்து சாப்பிடலாம். இந்த பீட்ஸ் மிக்ஸ் ஆரோக்கியத்துக்கு உகந்தது. ** பாட்டி வைத்தியம் 1. வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். * 2. பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். * 3. வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும். * 4. வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும். * 5. வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். * 6. வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். * 7. lavangka பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். * 8. ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். * 9. உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும். *** thanks தமிழ் முரசு *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "