...

"வாழ்க வளமுடன்"

05 மே, 2011

ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கலாமா ?



கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது.

பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும். அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள்.


அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.


சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை.


ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.)

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள்.


எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம்.


கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.


தற்பொழுது 'பெர்மனென்ட்' டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும்.


ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.


ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.


மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

***

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா - 250 கிராம்
ஒரு முட்டை - வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் - 2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் - 2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
தயிர் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - 5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.

***

ஹேர் டை எச்சரிக்கை

-டென்ஷன், சத்தில்லாத ஆகாரம், சரியான பாராமரிப்பின்மை, தண்ணீர், பாராம்பரியம் என இள நரைப் பிரச்சினைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நம்மில் அறுபது சதவிகிதத்தினருக்கு இப்பிரச்சினை இருக்கிறது. வயதாக, ஆக நம் உட லில் உள்ள மெலனினின் அளவு குறைவதே நரைக் கான காரணம். இளநரை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்கள் அவசியம். நரையை மறைக்க ஹேர் டை உபயோகிக்கலாம். ஆனால் அவற்றை உபயோகிப்பதற்கு முன்பாக, அது நம் சருமத்திற்கோ, கூந்தலுக்கோ ஏதேனும் அலர்ஜியை ஏற்படுத்துமா என்று தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும்.


கூந்தல் சாயங்கள் பெரும்பாலும் இரசாயனங்கள் கலந்தே செய்யப்படுவதால் சிலருக்கு அவை அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே டை டெஸ்ட் அல்லது பாட்ச் டெஸ்ட் செய்து பார்த்து குறைந்தது இருபத்தி நான்கு மணி நேரமாவது காத்திருந்து, எந்த அலர்ஜியும் ஏற்படாமலிருந்தால் உபயோ கிக்கலாம்.


பெண்களுக்கு 30 வயதுக்குப் பிறகும், ஆண் களுக்கு 35 வயதுக்குப் பிறகும் கூந்தல் நரைக்கத் தொடங்கும். முடி நரைக்கத் தொடங்கியதுமே தாழ்வு மனப்பான்மை காரணமாக அதை மறைக்க ஏதேனும் ஹேர் டையை உபயோகிப்பது ஆபத்தானது.


ஹேர் டை லோஷன், கிரீம், பவுடர் மற்றும் ஜெல் வடிவங்களில் கிடைக்கிறது. லோஷன்களில் கலரண்ட் மற்றும் டெவலப்பர் என இரண்டு விதங்கள் கிடைக்கின்றன. இவற்றை சமமாகக் கலந்து, கூந் தலில் ஒரு பிரஷினால் தடவினால் டை தானாகப் பரவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு கூந்தலை அலசலாம்.


பவுடர் டையை நீரில் குழைத்துப் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் டைகள் அனைத்தையுமே கூந்தலில் தடவி, அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். கெமிக்கல் டையை விட ஹெர்பல் டை மிகவும் பாதுகாப்பானது. இது மருதாணியால் தயாரிக்கப் படுவதால் எந்தவிதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் இதைத் தடவிய பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும்.


வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய மூலிகை டை ஒன்றைப் பார்ப்போம்.

மருதாணி இலைத் தூள்-250 கிராம்
நெல்லிக்காய் பொடி-50 கிராம்
டீ டிகாக்ஷன்- 50 மி.லி
காபி டிகாக்ஷன்-50 மி.லி
எலுமிச்சம்பழச் சாறு-1 டீஸ்பூன்

மேற்கூறிய அனைத்தையும் கலந்து ஒரு இரும்புப் பாத்திரத்தில் போட்டு இரண்டு நாட்களுக்கு ஊற வைத்து விடுங்கள். மூன்றாவது நாள் அதைத் தலையில் தடவிக் கொள்வதற்கு முன்பாக அதில் ஒரு முட்டையைக் கலந்து அடித்துத் தடவ வேண்டும். கூந்தலை நன்றாகப் பிரித்து நரை உள்ள பகுதிகளில் நன்றாகத் தடவி ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் ஊறலாம். பிறகு நிறைய தண்ணீர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதை மாதம் இரண்டு முறைகள் செய்து வந்தாலே போதும். அடிக்கடி செய்ய வேண்டாம். தொடர்ந்து செய்து வர கூந்தல் நல்ல கருமையும், அடர்த்தியும் பெறும்.


***
நன்றி சிவா
நன்றி google
***



"வாழ்க வளமுடன்"

குழந்தை வளர்ப்பு ஒரு பொதுவான டிப்ஸ்



எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"


எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி.


வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது.


பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....


வீட்டில் குழந்தைகள்:

* எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

* சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

* குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.

* எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.

* குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.

* எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.

* குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.

* பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.

* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.

* ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.

***

பள்ளியில் பிள்ளைகள்:

* குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்" என்று கூறக் கூடாது.


அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும். அதற்குப் பதில் "நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க.


குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்" என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும்.


* பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது.


* பிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும்.


* பிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.


* பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


* குழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும்.


* பெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.


* பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது.


* பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


* சக மாணவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டும்படி செய்ய வேண்டும்.

***

குழந்தைகளும் கல்வியும்:

* பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.


* பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும்.


* பிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.


* கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே, பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம்.


* "காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும்.


* அழகான ரோஜாவில் முட்களா? என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா? என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.


* பிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், "சீ எங்கே பாக்ஸ்" என்று பதட்டப்படத் தேவையில்லை.


* மனிதாபிமானம், அடுத்தவருக்கு உத்தவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.


* நம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது.


* குழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம்.

***


குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்:

* சுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.


* பிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.


* சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம்.

* ஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏ, பி, சி போன்ற வடிவங்களில் தோசை வார்த்துத் தரலாம்.


* பாதாம்பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட்டைத் துருவி தேனில் கலந்து கொடுத்தாலும் புத்திக்கூர்மை ஏற்படும்.


* தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.


* கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது.


* தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது.


* உணவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். உண்ண மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும்.


* குழந்தைகளுக்கு எந்த விதமான உடல்-மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

***

குழந்தைகளும் சேமிப்புப்பழக்கமும்:

* பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.

* பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.


* குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.


* செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.

***

குழந்தைகளின் வெற்றி-தோல்வி:

* பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள்.

* பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள்.

* பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள்.

* வெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள்.

* பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* பிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள்.

* குழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும்.

* ஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது.

* நாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

* குழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டும்.


***
தேங்க்ஸ் google
***



"வாழ்க வளமுடன்"


நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்!!!



ஊட்டச்சத்துக்களில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன. ஒன்று, கொழுப்புச் சத்துக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்கள் அடங்கிய பெரிய பிரிவாகும். இரண்டாவது வைட்டமின்கள், கனிச்சத்துகள் அடங்கிய சிறிய பிரிவாகும்.


நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு.


ஒரு குறிப்பிட்ட வைட்டமினை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம் ஆரோக்கியம் சீர்குலைகிறது. உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும். அவை:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - 13,

நீரில் கரையும் வைட்டமின்கள் - 27.

வைட்டமின் -"ஏ", "டி", "இ" மற்றும் வைட்டமின் "கே" ஆகியவை நம் உடலின் ஜீரண சக்திக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாக மாற்றுகிறது.

பி-காம்ப்ளெக்ஸீம், வைட்டமின் - "சி" யும் நீரில் கரையும் வைட்டமின்களாகும்.

இந்த வைட்டமின் தன்னுடைய தூய்மையான வடிவத்தில் வெளிர் மஞ்சள் நிற கலவையாக இருக்கும்.

நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெரும் பகுதி "கெரோடின்" என்ற வைட்டமின் "ஏ" ஊட்டச்சத்துக்களை வைட்டமின் "ஏ" வாக மாற்றும் சக்தி கொண்டது நம் உடல்.

*

நம் உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியமான ஒரு உறுப்பாக திகழும் இந்த வைட்டமின்கள் எதற்காக இவ்வளவு முக்கியமானது என்பதை கீழே காணலாம்:-

எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

உடலின் சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இரவு நேரங்களிலும், மங்கலான வெளிச்சத்திலும், சாதாரணமாக பார்க்க வைட்டமின் உதவுகிறது.

என்று மேலும் பல குணங்களைக் கொண்டது இந்த வைட்டமின்கள்.


***

வைட்டமினின் வகைகள் மற்றும் அவற்றின் ஆற்றல்கள்:-

முட்டை, பால் - புரதச் சத்துக்கள், பச்சைக் காய்கறிகள், மஞ்சள் - ஆரஞ்சு நிறப்பழங்கள், மாம்பழம், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் "ஏ" சத்து அதிகம் கிடைக்கும்.

*

"தியாமைன்" என்று அழைக்கப்படும் வைட்டமின்களின் மிகப்பெரும் பிரிவு வைட்டமின் "பி"-காம்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

*

வைட்டமின் "பி1" என்பது வைட்டமின் "பி" பிரிவுகளிலேயே மிகவும் முக்கியமானது. சரியான அளவு வைட்டமின் "பி-1" எடுத்துக் கொண்டால் நம் உடலின் அனைத்துப் பகுதிகளும் சரியாக இயங்கும். ரொட்டி உள்ளிட்ட அனைத்து கோதுமை உணவுகள், கோதுமை சாதம், மீன் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் "பி" சத்துக்கள் ஏராளம்.

*

"பி-2" என்ற "ரிபோஃப்ளேவின்" வாய், நாக்கு மற்றும் நம் உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*

நம் உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்க மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களிலிருந்து சக்தியை வெளியிட, பல்வேறு என்சைம்களுடன் கூட்டு சேர்ந்து, சக்தி உற்பத்தியில் செல்கள் ஆக்சிஜனை பயன்படுத்த, இந்த வைட்டமின் "பி" பெரிதும் உதவுகிறது.


பால், வெண்ணை, முட்டை, பச்சைக்காய்கறிகள், கோதுமை, தானியத்திலிருந்து பெறப்பட்ட மாவு வகைகள், ஆகியவற்றில் இந்த "பி-2" சத்து அதிகம்.


அடுத்ததாக வைட்டமின் "பி" பிரிவில் முக்கியமானது "நியாசின்" என்ற "பி" வைட்டமின். இது ஜீரண மற்றும், நரம்பு அமைப்புகளை பாதுகாக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமப் பாதுகாப்பிற்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது. மேலும் பெருங்குடல், சிறுகுடல், வாய், நாக்கு இவற்றின் "சளிச்சவ்வில்" ஏற்படும் வீக்கத்திலிருந்து இந்த வைட்டமின் "பி-நியாசின்" பாதுகாப்பு அளிக்கிறது. மீன், காய்ந்த பீன்ஸ்களில் "நியாசின்" அதிகமாகக் கிடைக்கிறது. வைட்டமின் "பி-2" செல்களின் மரபியல் சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் வைட்டமின். எலும்பின் உள்ளே இருக்கும் மெல்லிய கொழுப்பில் சிவப்பணு செல்களின் வளர்ச்சியை ஏற்படுத்த இது பெரிதும் உதவும் வைட்டமினாகும்.

*

ரத்தத்தில் இருக்கும் வைட்டமின் "பி" ரத்த சோகையை தடுக்கிறது வைட்டமின் "பி-12". இது இறைச்சி, மீன், முட்டை, ஈஸ்ட் மற்றும் பால் புரதப் பொருட்களில் பெரிதும் காணப்படுகிறது.


வைட்டமின் "டி" தவிர மற்றவை எல்லாமே தாவர உணவிலிருந்தே நமக்கு கிடைக்கும்.



***
thanks news
***



"வாழ்க வளமுடன்"

மென்மையான சருமத்துக்கு உணவே முக்கியம்!



மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.


ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.


பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம்.


அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது.


பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் மற்றும் ஆளிவிதை போன்றவற்றில் இந்த அத்தியாவசிய கொழுப்புக்களான, ஒமேகா-3 கொழுப்பு சத்துக்கள் காணப்படுகின்றன.



மிளிரும் சருமம் பெற விரும்புபவர்கள், காபின் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதோ ஒருவரின் சரும வகைகளுக்கு ஏற்பட சில ஆரோக்கிய டிப்ஸ் :

சென்சிடிவ் சருமத்தினர்:

* உணவு முறைகளை திட்டமிட்டுக் கொள்வதோடு, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* சென்சிடிவ் சருமத்தினருக்கு தோலில் எரிச்சல் மற்றும் வைட்டமின் பி பற்றாக்குறையால், வறட்சி, செதில்கள் உதிர்தல் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

***

எண்ணெய் பசை சருமத்தினர்:

* எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.


* பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

* எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி2 மற்றும் பி5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* புரோக்கோளி, முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகள், அதிகளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது.

* மாசுமருவற்ற சருமம் பெற, அதிகளவு “சிங்க்’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளானில் அதிகளவு “சிங்க்’ சத்துக்கள் நிறைந் துள்ளன.

* பிளாஸ்டிக் கன்டெய் னர்களில் உணவுப் பொருட்களை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால், செனஸ்ட்ரோஜென் எனும் ரசாயனம் உருவாகி, அவை ஹார்மோன் மாற்றங்கள் நிகழ வழி வகுத்துவிடும்.

* உணவுப் பட்டியலில் இருந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை நீக்கிவிடுங்கள்.

***

வறண்ட சருமத்தினர்:


* சருமம் நெகிழ்வு தன்மையுடனும், ஈரப்பதத்துடனும், இருக்க உதவுவது, வைட்டமின் இ சத்து. பாதாம் பருப்பு, முட்டை, பச்சை காய்கறிகள், பருப்புகள், கோதுமை ஆகியவற்றில் வைட்டமின் இ சத்து அதிகளவு நிறைந்துள்ளது.


* சருமம் எப்போதும் இளமையுடன் வைத்திருக்க உதவும் சல்பர் நிறைந்த உணவுகளான முட்டை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


***
thanks தாளம்
***




"வாழ்க வளமுடன்"

புரோக்கோளி அதன் மருத்துவ குணம் !!!



நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்பு கதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரி நிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி.....


என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும் இருக்கும்..


இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம் (brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் தந்தையர் நாட்டுக்காரர்கள்..


சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது. 1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,


கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து
89.30 கிராம்,
கொழுப்புச்சத்து
0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்? அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.


புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.


ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.


புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.


தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.


விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.


சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.


இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.


பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.


சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.


ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. ஒன்றும் பெரிதாக இல்லை. காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம். அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில் வேகவைப்பது சரியான சமையல் முறை.


சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள்.


ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க.. இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.


கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....


***
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "