...

"வாழ்க வளமுடன்"

09 பிப்ரவரி, 2011

யோகாவும் பெண்களும் :)யோகாவின் அருமை பெருமைகளின் அகிலமெல்லாம் பரவி வருகின்ற காலம் இது. நம்மை விட வெளிநாட்டினர் யோகாவில் ஈடுபாடு செலுத்தி பயின்று வருகின்றனர். நாமே இனி யோகா கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கலிஃபோர்னியா சென்றால் தான் நல்ல ஆசிரியரிடம் பயில முடியுமென்னும் நிலைமை இப்போது நிலவி வருகிறது.


பெண்கள் இயற்கையாக நளினமானவர்கள் என்றாலும், அவர்கள் வாழ்க்கையில் சுமக்க வேண்டிய சுமைகள் எளிதானவை அல்ல. குழந்தை பேறு ஒரு பெரிய பொறுப்பு. மாதவிடாய் சுழற்சிகள், பேறுகால உபாதைகள், கூட குடும்பப் பொறுப்பு, வயதானவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய கடமை இவைகளை தாங்கும் சுமைதாங்கிகள் பெண்கள்.

*

இவர்கள் உடலை வளைத்து, நிமிர்த்தி செய்யப்படும் யோகாசனங்களை செய்யலாமா? மாதவிடாய் காலத்தின் போது செய்யலாமா? பாதியில் நிறுத்தி விட்டால் என்ன ஆகும்? இந்த மாதிரியான கவலைகளும், பயங்களும் இருப்பதால் பெண்கள் அதிக அளவில் யோகாவை பயில்வதில்லை. இந்த நிலைமை இப்போது மாறிவருகிறது.


பெண்கள் யோகாசனங்கள் கற்றுக் கொள்வதில் எந்த விதமான தடையும் இல்லை. பெண்களுக்கு, மேற்சொன்ன சுமைகளை சுமக்க நல்ல ஆரோக்கியம் அவசியம். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது குடும்பத்திற்கு, சந்ததிகளுக்கு நல்லது என்று நாத முனி யோக ரஹஷ்யத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி, திறமையான குருவிடம் பயில்வது அவசியம். அதுவும் பெண்கள் ஆசிரியர் இல்லாமல் யோகா ஆரம்பிக்கவே கூடாது. பெண் யோகா ஆசிரியராக இருந்தால் நல்லது. பெண்களின் இயல்பான கூச்சம், ஆசிரியர்களாக இருந்தால், கற்றுக் கொள்வதை தடை செய்யலாம்.


யோகாசனங்கள் மெதுவாக செய்யப்படுவதால், உடலில் வலிகள், காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. பெண்களை அதிகம் தாக்கும், முதுகு வலி, சோகை, ஆர்த்தரைடீஸ், தலை வலி, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், போன்றவற்றுக்கு ஆசனங்கள் பயனளிக்கின்றன. மாதவிடாய் சமயத்தில் சில ஆசனங்களை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றில் வலி, கோபம், எரிச்சல், பலவீனம் தோன்றும்.இதற்கு யோகாசனங்கள் சிறந்தவை. யோகா டென்ஷனை குறைக்கிறது. இதனால் வேலைக்கு போகும் பெண்கள் அவசியம் யோகா கற்க வேண்டும். பருமனான பெண்கள் யோகாவால் எடையை குறைக்க முடியும். ஆனால் நிறுத்திவிட்டால் மறுபடியும் எடை கூடலாம்.


கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாமா?

செய்யலாம். ஆனால் முதல் மூன்று மாதங்களில் யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு குருவின் அனுமதியுடன் கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான ஆசனங்களை செய்யலாம். தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை நல்ல ஆசனங்கள். மகாமுத்திரா, குறிப்பாக, கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு நல்லது.

ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும். ஆசனங்களால் கருவுக்கும் நல்லது. பெண்கள் யோகாசனங்கள் செய்வது பற்றிய குறிப்புகள் நமது இதிகாசங்களில் உள்ளன.

பரமசிவன் பார்வதிக்கு யோகாசனம் பற்றி விவரிப்பது “சிவ சம்ஹிதை”யில் காணலாம். யாக்ஞவல்க முனிவர் தன் மனைவிக்கு தனியாக யோகா கற்றுத் தந்ததாக, இவர் எழுதிய நூலில் சொல்லுகிறார். நாதமுனி பெண்கள் எந்த ஆசனங்களை செய்யலாம். எவற்றை செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

பிராணாயமம் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏற்றது. ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கழுத்து வலி (ஸ்பான்டிலோஸிஸ்) இவற்றுக்கு பிராணாயமம் சிகிச்சை அமைதிப்படுத்தி குணமாக்கும். பெண்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாதுகாப்புகள்.
ஆசனங்களை சரியான எண்ணிக்கையில் செய்யுங்கள். தவறாக அதிக நேரம் அல்லது அதிக தடவை செய்யக் கூடாது. இரவு சாப்பாட்டுக்குப் பின் செய்யக் கூடாது. இலகுவான, எளிய ஆசனங்களை செய்யவும். குறிப்பாக ஆரம்ப நிலையில்.

குரு இல்லாமல் ஆசனங்களை பயிலக் கூடாது. ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆசனங்கள் மிக நல்லது.பெண்களின் ஹார்மோன் கோளாறுகளை யோகா களைகிறது.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பின்பும் ஆசனங்களை தொடரலாம்.
வயிறு திரும்பி இயல்பான நிலையை அடையும். கர்ப்பிணி பெண்கள் சிரசாசனம், பஸ்சிமோத்தாசனம் இவற்றை செய்யக் கூடாது.
சூர்ய நமஸ்காரம் பெண்களும் செய்யலாம்.


**

பெண்களுக்கேற்ற யோகா

1. மாதவிடாய் கோளாறுகள் – வலியுடன் கூடிய உதிரப்போக்கு, அடிவயிற்றில் வலி, தசை இசிவு, வாந்தி, எரிச்சல் முதலிய பிரச்சனைகளுக்கு (ஞிஹ்sனீமீஸீஷீக்ஷீக்ஷீலீஷீமீணீ) மாதவிடாயின் போது – வஜ்ராசனா, சசாங்காசனா.

இதர நாட்களில் – சூர்ய நமஸ்காரம், ஹாலாசனா, மத்ஸ்யாசனா, புஜங்காசனா, பத்தகோனாசனா, சலபாசனா, தனுராசனா, பஸ்சிமோத்தாசனா மற்றும் பிராணயாமம். யோகாசனங்களுடன் பிராணாயமம் (பஸ்திரிகா, கபால பூதி முதலியன செய்யலாம்). பந்தங்கள், யோகமுத்திரைகள் – மூல பந்தம், வஜ்ரோலி முத்திரை.


2. கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்களை நல்ல யோகா குருவிடமும், உங்கள் டாக்டரையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளவும்.


3. லிமீuநீஷீக்ஷீக்ஷீலீஷீமீணீ : இது மாதவிடாயின் போது ஏற்படும் அதீத போக்கு. இதற்கு உடல் உறுப்புக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆசனங்கள் – சூர்ய நமஸ்காரம், வஜ்ராசனம், உஷ்ட்ராசனம், சசாங்கசனம், விபரீத கரணி ஆசனம், சவாசனம்.

பிராணாயாமம் – பஸ்திரிகா, உஜ்ஜையி, நாடிசோதன்
பந்தம் – மூல பந்தம், யோகநித்ரா.


4. பெண்களின் அதீத உடல் பருமனுக்கு (ளிதீமீsவீtஹ்) – உடலுழைப்பும், நடமாட்டமும் குறைந்து விட்ட இந்த கால சூழ்நிலையில் பெண்களில் பலர் அதிக குண்டாகி விடுவது சகஜம். சுற்றுப்புற சூழ்நிலை மாசுகளும், ஹார்மோன் கோளாறுகளும் காரணமாகும்.


ஆசனங்கள்

ஆசனங்களால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இதர கொழுப்புகள் குறைக்கப்படும். தொய்வைடைந்த சதைகள் வலுப்படுத்தப்படும். ஹார்மோன் கோளாறுகள் சீராககும். எடை குறைப்பு உடல் முழுவதும் சீராக ஏற்படும். செய்ய வேண்டிய ஆசனங்கள் – தடாசனம், சக்கராசனம், சூரிய நமஸ்காரம், புஜங்காசனம், சஸாங்காசனம், சவாசனம்
பிராணாயாமம் – பஸ்திரிகா, நாடி சுத்தி
உணவு – நிறைய தண்ணீர் குடிக்கவும், சூப்புகள் நல்லது, காய்கறிகளும், பழங்களும் அதிகம் சாப்பிடவும். இனிப்பு, கொழுப்பு, நெய், எண்ணெய், வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்கவும்.


**

பெண்களின் மனச்சோர்வு

பெண்களுக்கு ஏற்படும் மனக்கோளாறுகளில் சகஜமானது ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ எனும் மனச்சோர்வு இந்த மனக்கோளாறு முதுகு வலி, தலைசுற்றல், பசியின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல் முதலிய உடல் ரீதியான பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் பெண்களின் இயல்பு வாழ்க்கை எளிதாக பாதிக்கப்படுகிறது. மனச்சோர்வுக்கு மருந்துடன் யோகா சேர்ந்தால் சிறந்த பலனளிக்கும்.

ஆசனங்கள்

சூர்ய நமஸ்காரம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், சர்வங்காசனம் முதலியன.

பிராணாயாமம் – கபால பூதி, வஸ்திரிகா, நாடி சுத்தம்
பந்தங்கள் – மகா பந்தம்
மெனோபாஸ் (பெண்களின் நிரந்தரமாக மாதவிடாய் நிற்பது) – சாதாரணமாக நாற்பத்தைந்து வயதிலிருந்து ஐம்பத்தைந்து வயது வரை பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது. இது பெண்களின் ஆரோக்கிய வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம். இதனால் சிலருக்கு மனநல பாதிப்புகளும், உடல் நல பாதிப்புகளும் உண்டாகலாம். இந்த பாதிப்புகளை யோகாவால் குணப்படுத்திக் கொள்ள முடியும்.


ஆசனங்கள்
பாவன்முத்தாசனம், புஜங்காசனம், தனுராசனம், சசாங்காசனம், மஸ்த்யேந்ராசனம், பஸ்சிமோத்தாசனம், விபரீத கரணி ஆசனம், ஹலாசனம், சர்வங்காசனம், வஜ்ராசனம், பத்மாசனம், சவாசனம் முதலியன.
பிராணாயாமம் – வஸ்தி, கபால பதி, நாடி சுத்தம், உஜ்ஜையினி,
யோக முத்திரை
பந்தம் – இருதய முத்திரை, பிராண முத்திரை, மகா பந்தம்.
தியானம் மற்றும் ஜெபம் செய்வது மெனோபாஸ்ஸால் உண்டாகும் மன உளைச்சலை போக்கும்.


***
thanks worldyogasuda
***"வாழ்க வளமுடன்"

பசிட்டிவ் & நெகடிவ் எண்ணங்கள் நல்லதுதான் ( எல்லாம் நன்மைக்கே )


பொதுவா ஏதாவதொரு விசயம் நடக்கணும்னு நெனச்சு, ரொம்ப நம்பிக்கையா அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கும்போது, அந்த விசயம் நடக்காதுங்குற மாதிரி யாராவது பேசினா நமக்கு எவ்ளோ கோவம் வரும்???


“ஏய்.. அபசகுனமாப் பேசாதே“னு அவங்கள திட்டுவோம். சகுனம் பாக்குற பழக்கம் தவறுங்குறது பலருடைய கருத்து. ஆனா அப்டி நெனைக்கிறவங்க கூட, அபசகுனமா பேசுறத விரும்புறதில்லை. ஆனா நா இங்க சொல்ல வர்றது என்னனா.. அபசகுனமான எண்ணங்களும் நமக்குள்ள வேணும்குறது தான்.


நமக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் இருப்பது நல்லதுதான், ஆனா எப்போதும் அதுவே பழக்கமாகிவிடும் பட்சத்துல, நெகடிவ்வாக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பது கிடையாது. “ஓவர் கான்ஃபிடன்ட், உடம்புக்கு ஆகாது“னு சொல்வாங்க.. அது கிண்டலுக்கு சொல்றதுனு தோணலாம். ஆனா அதுதான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு வைக்கும்போது, ஒருவேளை அது ஏமாற்றம் குடுத்துவிட்டால், அதைத் தாங்கும் மன வலிமை நமக்கு ஏற்படுவதில்லை.


அதுக்காக தன்னம்பிக்கை இருக்கக் கூடாதுனு சொல்ல வரல. எந்த விதமான மாற்றத்துக்கும் மனதைப் பழக்கப்படுத்திக்கணும்னு சொல்ல வர்றேன். நமக்குப் பிடிச்சமாதிரியான சூழல்கள்ல மட்டுமே நம்மள பொருத்திப் பாக்குறது தான் மனித நடைமுறை. நமக்குப் பிடிக்காத அல்லது நமக்கு எதிரான ஏதாவது சம்பவம் நடந்துருச்சுனா உடனே.. “எனக்கு மட்டும் ஏன் தான் இப்டி நடக்குதோ“னு நொந்துக்குறது தான் மனுஷங்களோட இயல்பு.


உதாரணத்துக்கு ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, அந்த வேலை கட்டாயம் தனக்கு கிடைக்கும்னு அபாரமான நம்பிக்கைல, முதல் மாசம் வாங்கப்போற சம்பளத்துல என்னென்ன செலவு பண்ணலாம்குறது வரைக்கும் திட்டம் போட்டு வச்சிருப்பாங்க. சட்டுனு அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காதுங்குற சூழ்நிலை வரும்போது, அந்த ஏமாற்றத்த அவங்களால தாங்கிக்க முடியிறதில்ல. தனக்கு இனிமே வேலையே கிடைக்கப் போறதில்லையோங்குற மாதிரியான விரக்தி நிலைக்குப் போயிட்றாங்க.


ஒரு விசயம் நடக்கணும்னு நெனைக்கலாம்.. ஆனா அதே விசயம் நடக்கலனா மேற்கொண்டு என்ன பண்றதுன்னும் முன்கூட்டியே யோசிக்கணும். நேர்மறையாவே யூகம் பண்ணிட்டு, ஒருவேளை எதிர்மறையா நடக்கும்போது அந்த நேரத்துல என்ன செய்றதுனு தெரியாம முழிக்க கூடாது.


ஆனா.. அடுத்தவன் ஏதாவது காரியத்துக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கும்போது லூசு மாதிரி “இதெல்லாம் நடக்காதுடா, விட்டுடு“னு சொல்லி அடி வாங்கிடாதீங்க.. நா சொல்றது உங்களோட தனிப்பட்ட உணர்வுகளப் பத்தி மட்டும் தான்.


இன்னும் தெளிவா சொல்லணும்னா... உதாரணத்துக்கு காதல் விசயத்த எடுத்துக்கலாம். (இப்ப படிப்பீங்களே..). ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணும்போது ரொம்பவே நம்பிக்கையோட அவகிட்ட சொல்லலாம். ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.


மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். (லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).காதல், வேலை வாய்ப்புனு மட்டுமில்ல.. நம்மளோட சின்னச் சின்ன விசயத்துல கூட ஏதாவதொரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டு தான் இருக்கும். குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்னு நாம எந்தளவு நம்புறோமோ.. அதே அளவு, அந்த சம்பவம் நடக்காமலும் போகலாம்.. அப்ப அடுத்தகட்ட நடவடிக்கையா என்ன பண்றதுணும் யோசிச்சு வைக்கணும். அப்படி எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும்.அதுக்காக எப்ப பாத்தாலும், தோத்துடுவோம்னு நெனச்சுகிட்டே எந்த முயற்சியும் பண்ணாம இருக்குறது முட்டாள் தனம். நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணணும். அது நடக்காத பட்சத்துல அந்த முடிவ ஏத்துகிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுக்கணும். அந்த ஏமாற்றத்தோட பாதிப்புலயே மூழ்கிடக் கூடாது.
ஆல் த பெஸ்ட்.


***
நன்றி இந்திரா
***


"வாழ்க வளமுடன்"

இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்கல் கவனம் தேவை !


இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.


ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.


1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.


***
thanks lindoj
***


"வாழ்க வளமுடன்"

கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்களா? ( எச்சரிக்கை )


எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.


வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும், பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர். மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.


ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம்.


ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை. மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர். வேலைக்காக விண்ணப்பித்தவ‌ர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி, புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான். இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம்.


கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவ‌லாகி வருகிறது. இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும். பேஸ்புக்கில் பகிர்ந்தவை, வலைப்பதிவில் உள்ளவை, வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை, இணைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்த‌வை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம்.


அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம், பாதகமானவையும் இருக்கலாம். உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம். இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் பட்சத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும். உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரக்கூடும் அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.


எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம். ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைத்தாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிற‌து. இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது. இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.


அதாவது இந்த தள‌த்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடம், உங்கள் கல்வித்தத்குதி போன்ற விவரங்களை பதிவேற்றலாம். அதன் பிறகு கூகுலில் உங்களைப்பற்றி தேடும் போது இந்த பெட்டியே முதலில் வரும். அது சரியான அறிமுகத்தை தரும். ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம்.


**

இணையதள முகவரி

http://vizibility.com/


***
thanks inoj
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "