...

"வாழ்க வளமுடன்"

15 ஜூலை, 2011

இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன்



என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தையும் பணத்தையும் விரயம் செய்பவர்கள் பலர்.



கிராமங்களில்கூட பியூட்டி பார்லர்கள் பெருகி வருவதே இதற்கு சாட்சி. பணத்தை தண்ணீராய் செலவு செய்து முதுமையை மறைக்க படாதபாடு படுகின்றனர். மக்களின் மனநிலையை உணர்ந்து முதுமையை மறைக்கும் ஆரோக்கியமான வழிகள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.



பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது.



இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது.



எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும்.



மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.



இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.



சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை
கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும்.



சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப்ஸ்....



***
thanks sorna
***





"வாழ்க வளமுடன்"

பல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்



மருத்துவர். மு. சங்கர்


மலச்சிக்கல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. இதை ஒரு நோய் என்று கருத முடியாது. எனினும் பலர் இந்த மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.


நாம் உண்ணும் உணவு 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மலமாகி வெளிப்படும். உணவுக்குத் தகுந்தப்படி மலமும் இருக்கும், தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிய வேண்டும். அப்படி இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தங்கி மலம் வெளியானால் அதை மலச்சிக்கல் என்கிறோம்.


வெளியாக வேண்டிய மலம் அதிக நேரம் மலக்குடலில் தங்கிவிட்டால் உடலில் சேரக்கூடாதவையும், நோய் களை உண்டு பண்ணக்கூடிய, பலவித விஷ தன்மையுள்ள விஷங்கள் இரத்தத் தில் சேர்ந்துவிடுகின்றன.




மேலும் மலம் பெருங்குடலில் தங்கி இறுகி கட்டியாகி விட்டால் உடலில் பலவித உடல் உபாதைகளும், நோய்களும் உண்டாக காரணமாகி விடுகிறது.




மருத்துவம்:


முக்கியமாக உணவை மாற்றுவதாலும், பழக்க வழக்கங்களை மாற்றுவதாலும் தான் இந்த நோயில் இருந்து விடுபடமுடியும். மலம் கழியும் நேரம் குறிப்பிட்டக் காலத்தில் இருக்க வேண்டும். மலத்தை அடக்கும் பழக்கம் உடலுக்கு கெடுதியை விளைவிக்கும்.



எக்காரணத்தைக் கொண்டும் மலத்தை அடக்கக்கூடாது. ஒரு சிலர் பணிக்காரண மாகவும், தொலைதூர பயணம் காரணமாகவும், முக்கிய அலுவல் காரணமாகவும் மலத்தை அடக்குவார்கள். இதுபோல் செய்வது பல நோய்கள் வர அடித்தளம் இடுவது போல் ஆகிவிடும்.



சரியானப்படி மலம் கழிய வேண்டும் என்றால் மலம் அதிகமாக இறுகாமல் இருக்க வேண்டும். மரக்கறி, கீரை, பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம். மலமும் அதிகம் இறுகாது.


தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். உடலுழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக வேர்வை வெளியேறும். அப்போது உடலுக்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும்.


அப்போது தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும். வில்வ பழம், பேரீச்சம்பழம் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டால், மலத்தை இறுகச் செய்யாமல், இளகச் செய்து மலம் சுலபமாக வெளியே வரும்படி செய்யும். மலச்சிக்கல் தீர ஆரம்பத்தில் கொஞ்ச நாளைக்கு விளக்கெண்ணெய் (ஆமணக் கெண்ணய்) சிறிது உட்கொண்டு வந்தாலும், கடுக்காய்த்தூள் சாப்பி¢ட்டு வந்தாலும் மலச்சிக்கல் நாளடைவில் முழுமையாக குணமாகும்.



மலச்சிக்கல் பிரச்சினை தீர சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளது. அவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் உடலில் ஏற்படும் பல நோய்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.



மலச்சிக்கலுக்கான காரணங்கள்:


மலச்சிக்கல் உண்டாக பல காரணங்கள் உண்டு அனேகமாக உணவுக் கோளாறுகளால்தான் மலச்சிக்கல் உண்டாகிறது. சுலபமாக செரிக்கப்பட்டு மலம் அதிகம் உண்டாக்காத உணவு, அளவுக்கு மிஞ்சி அதிகமாக மலத்தை உண்டாக்கக்கூடிய உணவு, உயிர் சத்துக்கள் குறைவான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நரம்பு மண் டலத்தை சேர்ந்த நோய்கள், இதுபோன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் உண்டாகலாம்.



பெருங்குடலில் மலம் சேர்ந்து குறிப்பிட்ட காலத்தில் நம் கவனத் தையும் உதவியையும் கொண்டு வெளிவருகிறது. சேர்ந்திருக்கும் மலத்தை வெளியே தள்ளுவதற்கு நாம் முயல்வதோடு பெருங்குடலின் தசைகளும் உள்ளிருந்து குடல் குழாயை சுருக்கி மலம் வெளியே வரும்படி செய்ய வேண்டும். அதுபோல் செய்யும் போது குடல் தசைக்கும் பலவீனம் ஏற்பட்டால் மலத்தை வெளியே தள்ளும் சக்தி குறைகிறது.



மலச்சிக்கல் பல நோய்களை உண்டு பண்ணக்கூடியது. ஆனால் மலச்சிக்கலால் உண்டாகக் கூடிய சிலநோய்கள் வேறுசில காரணங் களாலும் உண்டாகிறது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பிரச்சினைகள் மலச்சிக்கலால் உண்டாகிறது. வயிற்று சங்கடங்கள், தலைவலி, நாக்கு தடிப்பு, சுறுசுறுப்பின்மை, வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்றவை மலச்சிக் கலால் உண்டாகிறது.



மேலும் மலச்சிக்கல் உண¢டாவதால் அபானவாயுவானது உடலில் சேர்ந்து வாயு கோளாறு ஏற்படுகிறது. இதுபோல் உள்ளவர்களுக்கு உடலில் மிகுதியாவதலால் மூட்டுவலி, கை கால் விரைப்பு, உடல் கணத்தல் போன்றவை உண்டாகும்.




***
thanks மருத்துவர்
***





"வாழ்க வளமுடன்"

ஒரு வரியில் பலவகை மருத்துவம்



1. மாம்பழம்:

முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.


2. வாழைப்பழம்:

தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.



3. முகம் வழுவழுப்பாக இருக்க:

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.



4. இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.


5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.



6. குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.



7. உடல் சக்தி பெற:

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.



8. வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.



9. சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.



10. உடல் அரிப்பு குணம் பெற:

வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.



11. காதில் சீழ்வடிதல் குணமாக:

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.



12. நெஞ்சுவலி குணமாக:

அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.



13. சிலந்தி கடிக்கு மருந்து:

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.




14. சீதபேதி குணமாக:

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.



15. வயிற்று நோய் குணமாக:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.



16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.



17. நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.



18. பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.



19. வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.



20. மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.



21. மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.




22. நீரழிவு நோய் குணமாக: மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.



23. இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.




24. மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.



25. நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.



26. பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.



27. சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.




28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.



29. வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.



30. வயிற்று பூச்சிகள் ஒழிய: வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.




31. மலச்சிக்கல் தீர: பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்



32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.



33. இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.



34. கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.



35. இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.



36. சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.



37. சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.



38. தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.



39. இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.



40. கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.



41. தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.



42. குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.



43. கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.



44. இரத்தம் சுத்தமாக: தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்



45. முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.



46. செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.



47. கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.



48. தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.



49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக: ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.



50. சதை போடுவது குறைக்க: வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.



51. தூக்கம் வர: வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.



52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற: உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி: கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.



54. வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.



55. பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.



56. வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.



57. மந்தம் அஜீரணம் குணமாக: கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.



58. சிறு நீர் எரிச்சல் குணமாக: அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.



59. வாய் நாற்றம் போக: நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க: கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.



61. தோல் வளம் பெற: ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.



62. வரட்டு இருமல் தனிய: எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.



63. கருப்பை கோளாறு நீங்க: அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.


64. தலைவலி : ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.




65. தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.



66. நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.



67. தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.



68. வாய் நாற்றம்: சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.



69. உதட்டு வெடிப்பு: கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.



70. அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.



71. குடல்புண்: மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.



72. வாயுத் தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.



73. வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.



74. மலச்சிக்கல்: செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.



75. சீதபேதி: மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.



76. பித்த வெடிப்பு: கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.



77. மூச்சுப்பிடிப்பு: சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.


78. சரும நோய்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.



79. தேமல்: வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.



80. மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.



81. தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.



82. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.



83. வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.





***
நன்றி: பிரபு முருகன் & thamizharthanthi
***





"வாழ்க வளமுடன்"

இனிய இல்லறம் சிறக்க :)



இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..


பெண்களுக்கு நான் சொல்லுவது:


உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.


அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.


பிடிவாத குணம் இருக்க கூடாது.


வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..


எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும்.


மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது


எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது


எல்லா நேரங்களிளும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிபார்க்காதிங்க.



முதலில் நம்பிக்கைக்கு இலக்கணமாக நடந்து கொள்ளவேண்டும்.


கணவரின் குடும்பத்தாரை நம் குடும்பம் போல் பார்க்க வேண்டும்.


கணவருக்கு பணிவிடைகள் செய்வதை மகிழ்ச்சியாக என்ன வேண்டும்.



இஸ்திரி செய்தல்,ஷூ பாலிஷ் செய்தல் போன்ற கணவரின் வேலைகளை விருப்பமுடன் நாம் செய்ய வேண்டும்.


அலுவல் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை எதிர்நோக்க வேண்டும்.


கணவருக்கு பிடித்தமான உடைஹளை தேர்வு செய்ய வேண்டும்.


நம் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள வேண்டும்.


அவ்வபோது சிறு சிறு பரிசுகள் கொடுக்கலாம்.


டிவி தொடர்கள் பார்ப்பதை தவிர்த்து கணவரோடு அமர்ந்து கிரிகெட் பார்க்கலாம்.


பஹளில் நய்டி அணிவதை தவிர்த்து அவருக்கு பிடித்தமான சேலையில் இருக்கலாம்.



மேற்கண்டவற்றை செய்து வந்தாலே கணவன்மார்கள் நம் வசம் ஆவது உறுதி.





***


ஆண்களுக்கு:


உங்களின் விடுமுறை நாட்களில் சந்தோஷமாக வெளியே அழைத்து போங்க.


விடுமுறை நாட்களில் மனைவியுடன் கிச்சன் வேலைகளை பகிர்ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை.


சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.


உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன்பாக சொல்லும் மனைவியிடம் கோபபடாமல் சிறு சிறு உதவி செய்யுங்கள்...


கணவர்மார்கள் மனைவி செய்யும் சமையலை பாராட்டவேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க.


சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க


மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிங்க

**

இருவருக்கும்:


இருவருக்குள்ளும் எந்த ஒரு சந்தேக பேயிம் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள்ளுங்க.



எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகிர்ந்துக்கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.



ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடுங்க.



இருவிட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவணிக்க வேண்டும்.



இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர்ந்துக்கொள்ளனும்..



ஹனிமூன் போனது.. உங்கள் இருவருக்கும் அதிகம் சந்தோஷம் கொடுக்கும் பழைய நிகழ்ச்சியினை பகிர்ந்துக்கொள்ளவும்.



விடுமுறை நாட்களில் சந்தோஷமாக செலவிடுங்க..



சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல்.. பேச பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.



கணவர் மனைவியினை பிரிந்து வெளியூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்கள்.




***
thanks Sakina siddiq & புதைனா.
***







"வாழ்க வளமுடன்"

நாம் எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை?



நம்மில் பலருக்கு நம் குழந்தைகளை பற்றிய கவலை கனவிலும் நினைவிலும் வாட்டி வதைக்கும். சரியாக சாப்பிட மாட்டேங்கறானே, சரியா படிக்க மாட்டேங்கறானே, எந்த நேரமும் டி.வி முன்னாடியே இருக்கானே, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்கறானே, வீட்டுக்கு வர்றவங்க கிட்ட நல்லபடியா பேச மாட்டேங்கறானே,


அக்கா தங்கச்சி கிட்டே சண்டை போடறானே, யார் கிட்டேயும் தன்னோட பொருட்களை ஷேர் பண்ண மாட்டேங்கறானே, கீரை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட மாட்டேங்கறானே, சில காய்கறிதான் உள்ளே இறங்குது, மத்தது எல்லாம் சாப்பிடலை என்றால் எப்படி நல்லா வளருவான்?



எந்த நேரமும் ஸ்நாக்ஸ் என கடையில் விற்கும் பண்டங்களை தின்னால் வயிறு என்ன ஆவது?, அப்புறம் எந்த கிளாஸுக்கும் போக மாட்டேங்கிறானே, பாட்டு கத்துக்க வேண்டாமா, டான்ஸ் கிளாஸ் போக வேண்டாமா, விளையாட்டு பொருட்களை பத்திரமாக எடுத்து வை என்று நூறு தரம் சொன்னாலும் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறானே, ஒரு நிமிஷம் கூட கண்ணை எடுக்க முடியலையே, எதையாவது உடைத்து விடுகிறான், கொட்டி விடுகிறான், சில்மிஷம் செய்து விடுகிறானே என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலைகள் இதில்.



இதில் பாதி எங்க அம்மாவின் புலம்பல் கூட. நல்ல பழக்கத்தை சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அதனுடன் போராடி நாமும் டென்ஷன் ஆகி குழந்தையையும் டென்ஷன் ஆக்கி விடுவோம்.



நல்ல விஷயங்களை சொல்லித்தருவது நல்லதுதான் ஆனால் அதை எப்படி சொல்லுகிறோம் என்பது கூட ரொம்ப முக்கியம் என நான் நினைக்கிறேன். அகில் டி.வி. பார்க்கும், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் - சாப்பிட்டு முடிக்கும் வரை, பின்னர் தூக்கம், எழுந்தால் திரும்ப கொஞ்ச நேரம் - இந்த கொஞ்ச நேரம் என்பது ஒரு இரண்டு மணி நேரம் வரை நீளும்.




நான் ஆபிஸில் இருந்து வரும் வரை அதற்க்கு செய்வதற்க்கு வேறு வேலை இல்லை, வீட்டின் அருகே நண்பர்கள் யாரும் இல்லை விளையாடுவதற்க்கு. பல நாட்களில் என் அம்மாவுடன் பீச் அல்லது பார்க் செல்லும், அது முடியாத போது மேலே சொன்னது போல டி.வி பார்க்கும்.



எனக்கு ஒரு பக்கம் பதட்டமாக இருக்கும், என்னடா இவன் இவ்வளவு டி.வி. பார்க்கிறானே, டி.வியின் அடிமை ஆகிவிடுவானோ என, டி.வி பார்க்காதே என்று தடை சொல்லவில்லை என்றாலும், அவ்வப்போது சொல்லுவேன் - அகில் டி.வி நிறைய பார்த்தால் மூளை மழுங்கி விடும், கண்கள் கெட்டு போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று.



அதற்க்கென்று எப்போதும் டி.வியின் முன்னாடி இருக்க விடமாட்டேன், அவன் பார்த்தாலும் முடிந்த வரை கூட இருக்க பார்ப்பேன். சோட்டா பீம், ஹனுமான், டாம் அன்ட் ஜெர்ரி, ஒசோ, ஹாண்டி மேனி என என்ன பார்ப்பான் என்பதும் நான் சொல்லுவதுதான்.



இப்போது இன்னொரு பாப்பா வந்த பிறகு டி.வி பார்ப்பது இன்னும் கொஞ்சம் கூடிதான் இருக்கின்றது. அதிலும் நான் ரொம்ப கண்ட்ரோல் செய்வதில்லை. ஏனென்றால், என்னுடைய அம்மா என்னை விட புதிதாக வந்திருக்கும் பாப்பாவுடன் நிறைய நேரம் செலவிடுகிறான், என்னுடைய அம்மாவை என்னிடம் இருந்து பிரித்து விட்டாள் என்ற எண்ணங்களை விட ஒரு மணி நேரம் டி.வி. அதிகமாக பார்ப்பது எவ்வளவோ தேவலை தானே?




சாப்பிடும் போது டி.வி இருந்தால் சீக்கிரம் வேலை ஆகும் எனக்கும் சரி அவனுக்கும் சரி. அதுவும் கூட ஒரு சவுகர்யம் தானே, பார்க்கின்ற மும்மரத்தில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவான், அவனுக்கு புதிதாக கொடுக்கும் காய்கறிகளை எல்லாம் இந்த சமயத்தில் ஊட்டி விட்டால் இரட்டிப்பு நன்மை.



எனக்கு இவ்வளவு நாள் ஆன பிறகு கூட ஒரு புத்தகம் கையில் இல்லை என்றால் சாப்பாடு இறங்காது. சாப்பிடுவதற்க்கு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுகிறேனோ இல்லையோ, புத்தகத்தை தேடி வைத்துக் கொள்ளுவேன், அப்படி இருக்கும் போது இவனை சாப்பிடும் போது டி.வி பார்க்காதே என்று எப்படி அதட்ட முடியும்? எனக்கு புக் என்றால் இவனுக்கு டி.வி...



சில கட்டுப்பாடுகள் அவனுக்கே தெரியும், அம்மா வீட்டுக்கு வந்த பிறகு டி.வி பார்க்க முடியாது, தூங்கும் நேரம் வந்தால் என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் டி.வி நிறுத்தப்படும், ஜெட்டெக்ஸ் மற்றும் வன்முறை நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாது, தமிழ் சேனல் மெகாசீரியல் அல்லது பாட்டு என எதுவுமே நாங்கள் வைப்பதில்லை அவன் முன்னால். கொஞ்ச நாட்களாகவே நானாக சென்று டிவி யை அணைக்க சொல்லும் முன்னர் அவனே அணைத்து விடுகின்றான்,



இதுவே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்கு தோன்றியது. இன்றைக்கு மான்ஸ்டர் இன்க் படம் போட்டுக் கொண்டு இருந்தான், பாதியில் அகில் வந்து சொன்னது, "அம்மா கொஞ்சம் அதிக நேரமாதான் டி.வி பார்த்துக் கிட்டு இருக்கேன், ஆனாலும் இந்த படம் பார்த்து முடிச்சுடறேனே..." ரொம்பவே சந்தோஷமாக இருந்தது கேட்க,



இதுதானே நமக்கு தேவை, குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது அதுவே நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுகிறது, நாமே ஒரு வட்டத்தை இட்டு அதனுள்ளே இருக்க வைக்கும் போதுதான் அதனை மீறும் எண்ணம் வலுப்படுகிறது.



அப்படி சொல்லி விட்டு தூங்கும் வரை பார்த்தது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனாலும் அந்த எண்ணம் வந்ததையே ஒரு பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். இன்றைக்கு எண்ணம் வந்து இருக்கின்றது, நாளைக்கு அடுத்த படியாக அதனை செயல்படுத்தும் என நம்புகிறேன்.


பல சமயம் நாம் நம் குழந்தைகள் எந்த குறையும் இல்லாத குழந்தையாக வளர வேண்டும் என நினைக்கின்றோம். சாப்பிடும் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எல்லா காய்கறிகளையும் சாப்பிடவேண்டும், கீரை இஷ்டமாக சாப்பிட வேண்டும் என்று விரும்பிகிறோம், எனக்கு நினைவு தெரிந்து, சிறுமியாக சாப்பிட காய்கறிகளை விரல் விட்டு எண்ணி விடலாம், விவரம் தெரிந்து நான் சாப்பிட்ட காய்கறிகளே அதிகம் -



ஃப்ரண்ட் வீட்டில் சாப்பிட்டது, புத்தகத்தில் நல்லது என படித்து சாப்பிட பழகியது, திடீரென தோன்றியது என பல காய்கறிகளை அப்புறம் தான் சாப்பிட ஆரம்பித்தேன். இன்னும் கூட சில காய்கறிகள் பிடிப்பதில்லை, அதை சாப்பிடுவதில்லை, அப்படி இருக்கும் போது என் குழந்தை மட்டும் எல்லா காய்கறிகளையும் இப்போதே சாப்பிடனும் என்று எதிர்பார்த்தால் என்ன நியாயம்?




அதிலும் எல்லா சத்துள்ள காய்கறிகளும் மண்ணு மாதிரி இருக்கும் சாப்பிட... அதற்க்காக அந்த முயற்ச்சியை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை - அன்றொருநாள் வீட்டில் கோவைக்காய் சமைத்திருந்தோம், அகிலுக்கு அதை கொஞ்சம் வைத்தேன், சாப்பிட்டு விட்டு ரொம்ப நல்லா இருக்கு அம்மா இந்த காய், அடிக்கடி செய்யறியா என்று கேட்டு சாப்பிட்டது, அதே போல வெண்டைக்காய் ஒரு நாள் சாப்பிட்டது. ஒரு சிலது சாப்பிடுகிறது, பல பிடிப்பதில்லை,



நானும் போட்டு திணிப்பதில்லை. நம் எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே குழந்தைக்கும் சரி நமக்கும் சரி மனநிம்மதி அதிகமாக இருக்கும் என்பது என் வாதம்.


அப்படியே நம பல புலம்பல்களுக்கு பதில் கொஞ்சம் நம்முடைய இளமைகாலத்தையும், ப்ராக்ட்டிகலாகவும் யோசித்து பார்த்தாலே தெரிந்துவிடும்.


பழக்கவழக்களை பொறுத்த வரை என்னுடைய நிலைப்பாடு இதுதான்:


ஒரு பழக்கத்தை எப்படி பழக்கிக் கொள்ளுவது, ஒரு பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் போதும், அப்புறம் அது என்ன பழக்கத்தை கற்றுக் கொண்டால் என்ன?



டி.வி அதிகமாக பார்க்கட்டுமே, எப்போது நிறுத்த வேண்டும் என தெரிந்தால் போதும், விதவிதமான சிற்றுண்டிகளை டேஸ்ட் செய்து பார்க்கும் பழக்கத்தை பழகிக் கொள்ள குழந்தைக்கு தெரிந்தால் போதுமே, அது எல்லா உணவையும் சாப்பிட ஆரம்பித்து விடுமே அதுதானே நம் தேவை...



சிறு வயதில் இருக்கும் விதமாகதான் ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் இருக்குமா என்ன? நான் சின்ன வயதில் அவ்வளவு நன்றாக யாரிடமும் பேசமாட்டேன், இப்போது அப்படியா இருக்கின்றேன்?


வாயை திறந்தால் தயவு செய்து மூடேன் என்று கெஞ்சுகிறார்கள். இன்றைக்கு ஒரு டிரீட்டில் வெளுத்து வாங்கும் பையன் சின்ன வயசில் ஒரு சின்ன தட்டு சாதத்தை ஒரு மணி நேரம் வைத்து சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டு இருந்திருப்பான்.



நிஜமான அறிவு இருக்கின்றவன் பெரியவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுப்பான், ஒரே ரூம்மில் ஹாஸ்டலில் படிக்கும் பையன் தன்னுடைய அன்டர்வேர் வரை அடுத்தவனுடன் ஷேர் செய்து கொள்வான் அப்படி எல்லாம் மாறும் போது எதற்க்கு நாம் நம் குழந்தைகளைப் போட்டு கொடுமை படுத்த வேண்டும்?


நல்ல பழக்ககளை சொல்லி கொடுப்பது ரொம்ப முக்கியம் - இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதை எப்படி சொல்லிக் கொடுக்கின்றோம், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், அதற்க்காக குழந்தையை எந்த அளவிற்க்கு தொந்தரவு படுத்திகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.


தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என நீங்கள் நினைக்கிறீர்களா? சுதந்தரம் கொடுப்பதால் குழந்தைகள் நம் கையை விட்டு போய் விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.



***
thanks Mrs. Shufia
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "