...

"வாழ்க வளமுடன்"

04 செப்டம்பர், 2010

ஆரோக்கியமான கர்ப்பகால வாழ்விற்கு 10 வழிகள்

நீங்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்ப காலத்திலும், மகப்பேற்றின் போதும் பிரச்னைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.


1. உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்திற்காக ஆரம்பத்திலேயே திட்டமிடுங்கள்


கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே திட்டமிடுவது என்பதன் அர்த்தம் உங்கள் டாக்டருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதுடன் குழந்தை பேற்றிற்கு தயராவதும் ஆகும்.

*


2. நன்றாக சாப்பிடுங்கள்


நல்ல ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். சத்தான உணவு வகைகள் பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் போது சில ஆகாரங்கள் உங்களுக்கு சாப்பிட பிடிக்காமல் போகலாம். அதைப் பற்றியும் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
*

3. நீங்கள் உண்ணும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும்


சில ஆகாரங்களை கர்ப்ப காலத்தின் போது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு நல்லதல்ல.

உதாரணமாக:

• சீஸ் (பாஸ்ட்ரைஸ் செய்யப்படாத அதாவது நன்கு சுத்திகரிக்கப்படாத பால் பொருட்கள்)
• சரியாக வேகாத மாமிசம்
• நன்கு கழுவப்படாத காய்கறிகள்
• நன்கு வேகாத கோழிக்கறி மற்றும் வேகாத முட்டைகள்

கர்ப்பமாக இருக்கும் போது உண்பதற்கான நல்ல உணவுகள் பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


4. போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் மீன் வகைகள் சாப்பிடுங்கள்



கர்ப்பத்தின் போது போலிக் ஆசிட் (போலேட் என்றும் இது அழைக்கப்படுகிறது) மிகவும் அவசியம். இது குழந்தைகளின் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாட்டையும் அதனால் உருவாகும் பிற ஊனங்களையும் தவிர்க்க உதவுகிறது. கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது காய்கறிகளிலும், சில தானியங்களிலும் இருக்கிறது.

எண்ணை சத்து மிகுந்த மீன்கள் உங்கள் குழந்தைக்கு நல்லது. ஆனால் வாரத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மீன் சாப்பிடக்க் கூடாது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது. ஆனாலும் மற்ற வகை மீன்களை நீங்கள் விரும்பும் அளவிற்கு உண்ணலாம். உங்களுக்கு மீன் பிடிக்கவில்லை என்றால் மீன் எண்ணை மாத்திரைகள் கிடைக்கிறது. ஆனால் அது எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் அது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உகந்ததா என்பதை கவனித்து வாங்குங்கள்.

*

5. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்


கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் எடை அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை சமாளிக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறந்த பிறகு உங்களது பழைய உடற்கட்டை மீண்டும் பெற இந்த உடற்பயிற்சி உதவும். உற்சாகமான மனநிலையுடன் இருக்கவும் கர்ப்பத்தின் போது ஏற்படும் மனத்தொய்வை தவிர்க்கவும் உடற்பயிற்சி உதவும். நடப்பது, நீச்சல் மற்றும் யோகா போன்ற எளிதான, மென்மையான உடற்பயிற்சிகளை செய்யவும்.

*

6. இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் தும்மும் போதோ, சிரிக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ சிறிய அளவில் சிறுநீர் கசிவு ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை கர்ப்பமாகும் முன்பே செய்யத் துவங்கி கர்ப்ப காலத்தின் போதும் தொடர்ந்து செய்து வந்தால் இதை தடுக்கலாம். இதைப் பற்றி மேலும் அறிய உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

*

7. மது அருந்துவதை குறையுங்கள்


நீங்கள் அருந்தும் மது உடனடியாக உங்கள் ரத்தத்தில் கலந்து உங்கள் குழந்தையைச் சென்றடையும். ஆகவே மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. மீறி அருந்த விரும்பினால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிறிய அளவில் அருந்தலாம். அனுமதிக்கப்பட்ட அளவு தோராயமாக:

• அரை கிளாஸ் அளவு பீர்
• சிறிய கிளாஸ் அளவு ஒயின்

கர்ப்பமாக இருக்கும் போது அதிக அளவு மது அருந்தும் பெண்களுக்கு (தினமும் ஆறு கிளாஸ்) பிறக்கும் குழந்தைகள் கல்வி கற்பதில் மிகவும் மந்தமாக இருப்பார்கள். மேலும் பலவிதமான உடற் குறைபாடுகளும் பிறப்பிலேயே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

*

8. கேஃபைன் அளவைக் குறையுங்கள்


காபி, டீ, கோலா போன்ற பானங்களில் கேஃபைன் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் அதிகமானால் இரும்புச் சத்தை உடல் ஏற்பது குறையும். கேஃபைன் அளவு மிகவும் அதிகரிப்பது குழந்தையின் எடை குறைவிற்கும், கர்ப்பம் கலைவதற்கும் காரணமாகிறது. ஆனால் நான்கு கப் காப்பி அல்லது ஆறு கப் டீ அருந்துவது உங்கள் குழந்தையை பாதிக்காது. ஆனாலும் இதை குறைத்துக் கொள்வது நல்லது. கேஃபைன் நீக்கப்பட்ட காபி, டீ அல்லது பழரசங்கள், சில துளி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் ஆகியவற்றை குடியுங்கள்.

*

9. சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள்


புகைப் பழக்கம் உள்ள பெண்களுக்கு கர்ப்பம் கலைவதற்கான, குறைப்பிரசவம் நடப்பதற்கான, குழந்தை இறந்தே பிறப்பதற்கான ஆபத்துகள் அதிகம். சில சமயங்களில் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விவரிக்க முடியாத சில காரணங்களால் திடீரென இறந்துவிடுவதும் உண்டு. கர்ப்பமாகும் முன்னரே புகைப்பதை நிறுத்துவது நல்லது. புகைப்பதை எவ்வளவிற்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் குழந்தைக்கு நல்லது.

*

10. ஓய்வெடுங்கள்


கர்ப்பத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காலங்களில் உங்களுக்கு ஏற்படும் களைப்பின் அர்த்தம் வேலை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும். மதிய நேரத்தில் சிறிது தூங்குவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. தூக்கம் வரவில்லையென்றால் கால்களை சற்றே உயர்த்தி வைத்து அரை மணி நேரமாவது ஓய்வெடுங்கள்.


***

http://www.babycentre.co.uk/

***


"வாழ்க வளமுடன்"

நாமும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி?



உடல் பருமன் :

நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.




உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு இதைதாங்க எழுதியிருக்கேன் படியுங்க எனக்கு தெரிந்த அளவு நான் படித்த அளவு எழுதியிருக்கிறேன் பின்னூட்டத்தில் உங்க விமர்ச்சனத்தை சொல்லுங்க. கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது




. இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.




* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் ( HDL) கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் ( LDL) கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் (LDL) கொலஸ்டிராலைவிட எச்டிஎல் (HDL)கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.




* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.




* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.


***


கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :






* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.

*மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.




* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.




* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.




* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.




* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது.

*உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.




* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.




* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.




* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.




* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.




* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது




* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.




* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.




* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.




* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.




* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.




* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.




* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.




* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து காய்கறிகள்:

*நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.




* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.




* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது .




உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :




* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)




* வெண்ணெய் -250 (mg /100gm)




* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)




* இறால் (Shrimp)-170 (mg /100gm)




* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)




* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)




* கோழியிறைச்சி-62 (mg /100gm)




* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)




* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)




* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)




* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)




* பிரெட்-1 (mg /100gm)




* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)




* சாக்லேட் பால்-90 (mg /100gm)




நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே......


***

நன்றி http://srvijay79.blogspot.com/


***


"வாழ்க வளமுடன்"

20 வயதினருக்கும் கிட்னி ஸ்டோன் பிரச்னை!

இருபது வயதினருக்கும்… கிட்னி ஸ்டோன் பிரச்னை- உணவை மாற்றினால் தப்பலாம் :)




இருபது வயதினருக்கும்… கிட்னி ஸ்டோன் பிரச்னை உணவை மாற்றினால் தப்பலாம் அறுபது வயதினருக்கு ஏற்படும் பல உடல் கோளாறுகள் இப்போது, இருபது வயதினருக்கு கூட வருகிறது. காரணம், உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் தான்.





பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் புட் பழக்கம் தான் இதற்கு காரணம். இந்த வகையில், நாற்பது வயதில் இருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த “கிட்னி ஸ்டோன்’பிரச்னை, இருபது வயதினருக்கு சகஜமாக வருகிறது. ஒபிசிட்டி, அதிக உப்பு, காரமுள்ள உணவு வகைகள், கால்சியம் மாத்திரைகள் ஆகியவை தான் காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.





கிட்னி ஸ்டோன் என்பது, ஆண்களுக்கு தான் வரும்; பெண் களுக்கு மிக அரிது; ஆனால், சமீப காலத்தில், 20 -30 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. வருவது ஏன் கிட்னியில் கற்கள் சேர்ந்து தொந்தரவு செய்ய காரணம் பல இருந்தாலும், அது ஏற்படுவதற்கு காரணம், சிறுநீர் போகும் போது, அதில் உள்ள துகள்கள், திடமாகி கற்களாக மாறுகிறது. இதில் 75 சதவீத கற்கள், கால்சியம் மற்றும் ஆக் சலேட் தொடர்பான கற்கள் தான்.





உப்பு சார்ந்த உணவுகளால் சிறுநீரில் உள்ள உப்புச்சத்துக்கள், கற் களாகின்றன. அதுபோல உணவுகளில் உள்ள கழிவுகளில் ஆக்சலேட் என்ற கழிவு பிரிகிறது. அதுவும் கால்சியத்துடன் சேர்ந்து கற்களை உருவாக்குகிறது. இரண்டும் சிறுநீருடன் வெளியேறாமல் திடமாகி விடுகின்றன. இது தவிர, கால்சியம் பாஸ் பேட் கற்களும் சேர்கின்றன.





சில சமயம், சிறுநீரில் உள்ள அமிலச்சத்து, திடமாகி கற்களாகின்றன. இப்படி பலவகையில் கற்கள் ஏற்படுகின்றன. ஆரம்பம் எப்படி சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணம், போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் என்று முன்பு சொல்வதுண்டு. உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை. அது வறண்டுபோகக்கூடாது. அதனால், நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வர்.





தண்ணீராகவோ, பழ ரசமாகவோ , திரவ உணவாகவோ உடலுக்குள் போக வேண்டும். அப் போது தான் இப்படிப்பட்ட சிறுநீரக கற்கள் சேராது. உப்பு சார்ந்த பிஸ்கட், உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்த பிரச்னை எளிதில் ஏற்படும்.அதனால், உணவிலும் உப்பைக் குறைப்பது மிக நல்லது. இதுபோல, அதிக சர்க்கரையும் ருசிக்கக்கூடாது.





என்ன சாப்பிடலாம்:

கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீரும், ஜூஸ் களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. உடல் வற்றிப் போகக் கூடாது என்பதற்கு இந்த இரண்டும் முக்கியம். ஆனால், இளம் வயதினருக்கு இரண்டுமே எதிரிகள். டப்பாவிலும், பாட்டிலிலும் அடைக்கப்பட்ட கோலா ஜூஸ்கள் தான் பிடித்தமானது;


அதுபோல, பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள் சாப்பிடுவதில் தான் அதிக அக்கறை டீன் ஏஜினருக்கு.அதை மாற்றி, காய்கறி மற்றும் புரூட் சாலட்களை சாப்பிடலாம்; தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், தோலிலும் பளபளப்பு அதிகரிக்கும்.



கால்சியம் குறைக்கலாமா :


கிட்னி ஸ்டோனில் கால்சியம் கற்கள் தானே இருக்கிறது; அதனால், கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடலாம்; பால் போன்ற பொருட்களை விட்டுவிடலாம் என்று சிலர் தவறான யோசனை சொல்வர். அது தவறு. கால்சியம் கற்கள் என்பதால், அது தொடர் பான உணவுகளை கைவிட்டுவிட்டால் வேறு வகையில் பாதிப்பு வரும். கால்சியம் மாத்திரைகளை விழுங்குவோர் மட்டும், அதை தவிர்க்கலாம். இதற்கு டாக்டரின் யோசனை கேட்க வேண்டும்.


சிகிச்சை என்ன:


சிறுநீரக கற்கள் என்பது சிலருக்கு சிறிய அளவில் இருக்கும். அவற்றை சில பயிற்சிகள், மருந் தால் சரி செய்து விட முடியும். சிலருக்கு பெரிதாக இருக்கும். அதை அகற்ற அறுவை சிகிச் சை தான் ஒரே வழி. இப் போது இந்த வகை கோளாறுகளை சரி செய்ய நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன. ஒலியை கிளப்பிக்கூட கற்களை கரையச்செய்யும் “லித் தோட்ரிப்சி’ முறையும் உள்ளது. லேசர் கருவி மூலமும் கற்களை கரைக்கலாம். ஆனால், இவற்றால், சிறுநீரக திசுக்கள் பாதிக்கப்படாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். சிலருக்கு “கோல்ப்’ பந்து அளவுக்கு கூட சிறுநீரக கல் இருக்கலாம். அதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை.


ஒபிசிட்டி உள்ளவர்கள்… :

சிறுநீரக கற்கள் யாருக்கு வரும் என்றெல்லாம் சரியாக சொல்ல முடியாது; இருபது வயதை தாண்டியவர்களுக்கும் வருவதால், அவர்கள் உஷாராக இருக்க வேண்டும். குண்டாக (ஒபிசிட்டி) இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியாக சிறுநீர் போகாமல் இருந்தால், டாக்டரிடம் காட்டலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், இதெல் லாம் வராமல் பார்த்துக்கொள்ள உணவு முறையில் இளம் வயதினர் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்லது.



***

நன்றி http://srvijay79.blogspot.com/

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "