...

"வாழ்க வளமுடன்"

08 செப்டம்பர், 2015

வாழை இலையின் பயன்கள்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.


2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

...
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.


4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.


5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.


6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.


தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.


இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.


இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.


இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.


 வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.


***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

உடலை வலுவாக்கும் மூங்கில் அரிசி (Bamboo Rice)

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.


மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம் அல்லது அந்தவருடம் வெள்ளாமை சரியாக ...இருக்கது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது.


உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடி பெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும் வரை அங்கேயே குடும்பத்தைப் பெருக்கும்.


மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பல மடங்காக பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குத்தான் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த வருட விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தைத்தான் சந்திக்கும். இதுதான் மூங்கில்பூத்தால் ஆகாது என்ற வழக்கு.

***
fb
***



"வாழ்க வளமுடன்"
      

சில எண்ணெய்களின் மருத்துவக் குணங்கள்


 


எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடு ருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு மத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல் லது.


பழங்குடியினரால் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு ...வரும் எண்ணை... நீலகிரித் தைலம். காயங்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் சீழ்வடிதலைத் தடுக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை நீக்கும்.


விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.


தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.


உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ' சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.


ஆலிவ் எண்ணை சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

நிறமும், மணமும் அற்ற திரவம் கிளிசரின். சருமத்தின் ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுவான தன்மையை அளிக்கக் கூடியது. காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் கிளிசரின் சினிமா, தொலைக் காட்சிகளில் வரும் அழுகை காட்சிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.


கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணை போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருளே கோக்கோ பட்டர். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. புரதச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சரு மத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.


வேப்ப எண்ணை சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப ணீஎண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.


கடுகு எண்ணை சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது.



"வாழ்க வளமுடன்"

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருதாணி!




ருதாணி தெரியும். அதற்கு மருதோன்றி, அழவணம் என்ற பெயர்களும் இருக்கின்றன. கண் எரிச்சல், உடல்சூடு உள்ளவர்கள், மருதாணியை அரைத்து மாதம் ஒருமுறை கை - கால்களில் பூசி வந்தால், மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டியிருக்காது. மருதாணி இலையை மையாக அரைத்து சொத்தை பிடித்த நகங்களின் மேல் தொடர்ந்து சில நாட்கள் கட்டி வந்தால் பலன் கிடைக்கும்.


 வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், 20 கிராம் அளவுக்கு மருதாணி இலையை அரைத்து பாலில் கலந்து 3 நாட்கள் காலை நேரங்களில் சாப்பிடுவதோடு... அன்றைய நாட்களில் பால் சோறு மட்டும் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
மருதாணியை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்புளித்தால்... வாய்ப்புண், வாயில் அடிபட்டதால் உண்டாகும் சிறுகாயம், சிராய்ப்பு போன்றவை சரியாகும். இதேபோல் மருதாணி இலைகளை நீரில் ஊறவைத்து, வாய் கொப்புளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.


 மருதாணி செடியின் பட்டையை ஊறவைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் போன்றவை மேலும் பரவாமல் தடுக்கும்.


அம்மை போட்ட காலங்களில் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலிருக்க, இரண்டு கால் பாதங்களிலும் மருதாணி இலையை அரைத்து கட்டி வரலாம். தூக்கம் வரவில்லை என்பதற்காக கண்ட கண்ட மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோர் மருதாணிப்பூவை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், நல்ல உறக்கம் வரும். பெண்கள் தலையில் மருதாணிப்பூவை சூடினாலும் நற்பயன்கள் கிடைக்கும்.


***
fb
***


"வாழ்க வளமுடன்"

வெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!


Baskar Jayaraman's photo.

வெண்பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது....

பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.


வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்

வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு நோய் ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் போக்கவல்லது.


வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.


வெண்பூசணி வேரை, மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் கீழ்பகுதியில் அடைப்போ அல்லது எரிச்சலோ ஏற்பட்டு கடுமையான வலியையும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிற நிலையில் உபயோகப்படுத்துகின்றனர்.


வெண்பூசணிக் கொடியின் தண்டு, வெந்நீரினாலோ நீரின் ஆவியினாலோ ஏற்பட்ட கொப்புளங்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது.


இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.


உடல் எடையை குறைக்கும் வெண்பூசணி சாறு

தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - அரை கிலோ
தேன் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 300 மி.லி

செய்முறை

வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.
அதில் தேன் கலந்து பருக வேண்டும்.


பயன்கள்

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.
இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி வெண்பூசணி சாறு பருகலாம்.

புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும். உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும்.

சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும்.

***
fb
***



"வாழ்க வளமுடன்"
      

ஒரு வேளை முளைதானிய உணவை சாப்பிடுங்க!!


Baskar Jayaraman's photo.



இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள்.
...
அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.


இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.


இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.
இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.


முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும்.
முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும்,
கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம்.
காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.


முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும் எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

***

"வாழ்க வளமுடன்"

உணவுகுழாய் புண்களை சரிசெய்யும் ஜூஸ்!


 
தேவையானவை:

வெள்ளரிக்காய் - 1,
இஞ்சி - சிறிதளவு,
கற்றாழை - 3-4 துண்டுகள்,
இந்துப்பு - தேவையான அளவு.


செய்முறை:

வெள்ளரி, இஞ்சி, கற்றாழை ஆகியவற்றைத் தோல் நீக்கிக்கொள்ள வேண்டும். கற்றாழையை 10 முறைகளாவது, குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால், அதன் கசப்புச் சுவை நீங்கும். மூன்றையும் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதில், சிறிதளவு இந்துப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்:

வெறும் வயிற்றில் இந்த ஜூஸைப் பருகிவர, உணவுக்குழாய் புண், அல்சர், நெஞ்சு எரிச்சல் ஆகியவை குணமாகும். காலையில் இஞ்சி சேர்ப்பதால், வயோதிகம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும்.

மூப்படைதலைத் தாமதப்படுத்தும். செரிமான சக்தி மேம்படும். சாதாரண உப்பு, புண்களை மேலும் தீவிரப்படுத்தலாம். ஆகையால், இந்துப்பு எனும் ‘ஹிமாலயன் சால்ட்’ சேர்ப்பது, புண்கள் குணமாக உதவும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என, செரிமான மண்டலத்தில் வாய் முதல் ஆசனவாய் பகுதி வரை உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யும் திறன் இதற்கு உள்ளது.

***
fb
***


"வாழ்க வளமுடன்"

அத்திப்பழம் மலட்டுத்தன்மைக்கு ஒரு எளிய வீட்டு மருந்து



உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும்.


ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
 
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
அத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.
 

குணமாகும் நோய்கள்:

🌰மலட்டுத்தன்மை
🌰மூலம்
🌰வயிற்றில் தோன்றும் நோய்கள்
🌰இரத்தசோகை
🌰மலச்சிக்கல்
🌰இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு
🌰மூச்சுக்குழாய்/நுரையீரல் அழற்சி
🌰ஆஸ்த்துமா

 இத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.
இப்பொழுது ஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
 
தேவையானவை:40 உலர்ந்த அத்திப்பழங்கள்
1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்

 செய்முறை:

ஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்
உலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.
 

புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.
உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
 

அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.
 
வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
 

செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும்.
 
 
இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.
 
சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்


***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

புற்றுநோயைத் துரத்தும் அஞ்சறைப்பெட்டியும் அசத்தல் பொருட்களும்!







புற்றுநோய் செல்களை அழிக்கும் மசாலா பொருட்கள்...
 
நாள்தோறும் சமையலில் ஒரு சிட்டிகை, அரை டீஸ்பூன் என்ற அளவிற்கு இந்த மணமூட்டிகளை சேர்த்தால் போதும். உடல் ஆரோக்கியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



வீன வாழ்வியல்முறை நம்மிடையே நிகழ்த்தி இருக்கும் மாற்றங்களும் தவறான உணவுப் பழக்கமும் நமக்குத் தந்த துயரப் பரிசு, புற்றுநோய். ‘பிளாஸ்டிக் தவிர்ப்போம், மது, புகை வேண்டாம், ஆர்கானிக் ஃபுட்ஸ் நல்லது’ என புற்றுநோயைத் தடுப்பதற்கான அறிவுரைகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.


புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வு அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் பயமும் அதிகமாகிறது. ‘நமக்கும் வந்துவிடுமோ எனும் பய உணர்வே நோயாளியாக மாற்றிவிடும். தேவையற்ற பயத்தைக் கைவிட்டு, ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.


இதற்காகப் பிரத்யேக உணவுமுறையைத் தேடி அலைய வேண்டியது இல்லை. நமது அஞ்சறைப் பெட்டியில் உள்ள லவங்கம், பட்டை, சீரகம், தனியா, மஞ்சள் போன்றவை வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல; புற்றுநோயைத் தடுக்கும் போர்வீரர்கள். ஆரோக்கியம் பேணும் அருமருந்துகள்.



மஞ்சள்... மகிமைமஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ என்ற பாலிபினால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். தினசரி உணவில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்துக்
கொள்பவர்களுக்கு, சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.



தனித்துவம் மிக்க தனியாஉடலில் இருக்கும் கிருமிகளை அழித்து, உணவால் உருவாகும் நோய்களைத் தடுக்கிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, பித்தநீர் வெளியேறத் தூண்டுகிறது. இதனால், பெருங்குடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கப்படுகிறது.


பலே லவங்கம்நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் லவங்கத்துக்கு உண்டு. தொடக்க நிலை எனில், புற்றுநோய் செல்களை மேலும் பரவாமல் அழிக்கும். இதை, ‘கீமோ ப்ரிவென்டிவ்’ என்றே சொல்வதுண்டு.



சீரகம்... சிறப்பு செரிமானத்தைச் சீராக்குவதுடன் புற்று நோயையும் தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதில் உள்ள கியூமினால் டிஹைட் எனும் சத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.


மிளகு... மிரட்டல்மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) புற்றுநோய் செல்களைத் தடுக்கும். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். இது, மஞ்சளோடு சேரும்போது பலன் இரட்டிப்பாகும். பைப்பரின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும் ஆன்டிஇன்ஃபிளாமேட்டரியாகவும் செயல்படுகிறது.


சபாஷ் திப்பிலி இதனை ‘நீட்டு மிளகு’ எனச் சொல்வார்கள். எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்; கிருமிகளை அழிக்கும்; ரத்தத்தைப் பெருக்கும். தொற்று, கட்டி உருவாகு தல் போன்ற பிரச்னை
களைச் சரிசெய்யும்.


சுக்கு அல்ல... மருந்து
பெருங்குடல், மலக்குடலில் புற்றுநோய் செல்கள் தோன்றுவதையும் பரவுவதையும் தடுக்கிறது. சினைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.


அதிசய அதிமதுரம்
அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகளைத் தீர்க்கும். ப்ராஸ்டேட், மற்றும் சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.


மாசிக்காய்... மகத்துவம்வாய்ப் புண்களைச் சரிசெய்யும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும். கிருமிகளை அண்டவிடாது.


ஜமாய்க்கும் ஜாதிக்காய் வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ்,சி, ஃபோலிக் ஆசிட், பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஒரு சிட்டிகை அளவு சேர்த்தாலே போதும்.
நெல்லி... சக்தி எதிர்ப்பாற்றலைக் கூட்டும். தொற்றுக்களைக் குணமாக்கும். பாதிக்கப்பட்ட செல்களையும் சரிசெய்யும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.



கலக்கல் கறிவேப்பிலைஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள ‘ஃபீனால்ஸ்’ எனும் ரசாயனம் ரத்தம், ப்ராஸ்டேட், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும். மேலும், இதில் உள்ள கார்பஸோல் ஆல்கலாய்ட்ஸ் (Carbazole alkaloids) புற்றுநோயை எதிர்க்கக்கூடியது.



கருஞ்சீரகம் காக்கும்ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள திமோக்யுனான் (Thymoquinone) ரத்தப் புற்றுநோய் செல்களை அழிக்கும். மார்பகம், மூளை, கணையம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும்.



நித்யகல்யாணி காப்புரத்த அணுக்கள் குறைபாட்டைச் சரிசெய்யும். சிறுநீர் போக்கைச் சீராக்கும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் ரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகின்றன.



தான்றிக்காய் தடுப்புவயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும். எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.


பட்டை... பலம்பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.



கச்சிதக் கடுக்காய்செரிமான சக்திக்கு உதவும். குடல் நோய்கள் வராமல் காக்கும். புண்கள் சரியாகும். எரிச்சல், வீக்கம் போன்றவை குணமாகும்.



ஜாதிபத்திரி... ஜோர்
செரிமான சக்திக்கு உதவும். வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும். வாய், நுரையீரல் தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.



துளசி... துன்பம் தீர்க்கும்புற்றுநோய் செல்களை எதிர்க்கும் மிகச்சிறந்த மூலிகை. மார்பகம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும்.



கற்றாழை காப்பாற்றும்
உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்றும். எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். கர்ப்பப்பை தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும். கர்ப்பப்பையில் உருவான புற்றுநோய் செல்களை அழிக்கும்.



சோம்பு... சூப்பர்
கல்லீரலைச் சுத்தப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கி, நச்சுகளை வெளியேற்றும். வயிறு, குடல் தொடர்பான தொற்றுக்களைச் சரிசெய்யும்.



பிரம்மி... பிரமாதம் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும். உடல் புத்துணர்வுடன் இருக்க உதவும். மூளை செல்களை ஆரோக்கியப்படுத்தும்.


***
ts dr
***

"வாழ்க வளமுடன்"

ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும் கருஞ்சீரகம்!!

Baskar Jayaraman's photo.


கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம்நீங்கும்....


கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.


கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.


மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.


கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.


5 கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.


கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது.
கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.


கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.


கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு,
கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும்.


 வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக
செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.



* கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.


* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.


* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.


* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.


* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.


* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.


* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.


* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.


* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.


* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.


* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில்
கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.


***
t bay
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "