...

"வாழ்க வளமுடன்"

23 பிப்ரவரி, 2012

மாணவர்களுக்கு வேர்க்கடலை அவசியம்!




வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.



படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள், உணவு ஆய்வாளர்கள்.



மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு. வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

இதில் புரதம் அதிகம். வேர்க்கடலையில் மேல் இருக்கும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.



நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள். இது வேர்க்கடலையில் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.



மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.


அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.



கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.



இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.


***
thanks luxinfonew
***


"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2012

உங்கள் பி.எம்.ஜ (உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் ) ?



ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.



இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவ குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு சொல்லும் தகவல்கள் வருமாறு: உடல் எடையை உயரத்தின் இரு மடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ(பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப்படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


25-30 இருப்பது அதிக எடை என்றும், 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு, 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ அதிகமாக இருந்தது. பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.







***
thanks google
***

"வாழ்க வளமுடன்"

ஊட்டச்சத்தும் உணவு கட்டுப்பாடும்





உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவையில் ஒன்றாகும். அவை மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் அடங்கிய சத்துக்களை கொண்டதாகும்.




மேலும் இவை கர்பிணி, தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மற்றும் நோயாளிகளை நோயிலிருந்து விடுவிக்க பெரிதும் உதவுகிறது. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முக்கிய பங்கு வகிக்கிறது.




உணவுகளின் வெயல்கூறுகள்:



உடலில் நடக்கும் செயல்கூறுகளை அடிப்டையாகக் கொண்டு பத்திய உணவுகள் வகைப்படுத்தப்படுகிறது.



அ) உடற்செயலியல் அடிப்டையில் உணவு வகைகள்:


1. சக்தி அளிக்கும் உணவுகள்:


1.  மாவு மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்களி உணவு வகைகள் ஆகும். உடலில் உள்ள அனைத்து உறுப்பக்களும் செயல்பட சக்தி அளிக்கிறது. (எ-டு) தானியங்கள் வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் உலர்ந்த பழ வகைகள், எண்ணெய், வெண்ணெய் மற்றும் நெய்.



2.   உடல் கட்டுக்களை மேம்படுத்தும் உணவுகள்:
புரதச்சத்து அடங்கிய உணவு வகைகள் ஆகும். (எ-டு) பால், இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள்.

3. பாதுகாப்பான உணவுகள்:

புரதம், வைட்டமின் மற்றும ்தாதுப்பொருட்கள் கொண்ட உணவு வகை ஆகும். இவை உடற்செயல் மேம்பாடு, உடல் வெப்பத்தை மேம்படுத்துதல் தசை சுருக்குதல், நீர் உடல் நீரை சமநிலையில் வைத்தல் மற்றும் ரத்த உறைதலை தடுத்தல், உடல் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைத்தல், (எ-டு) பால், முட்டை, கல்லீரல், பழங்கள் மற்றும் காய்கறி வகைகள்.


சமூக செயல்பாடுகளின் அடிப்படையில் உணவு வகைகள்:
உணவு என்பது சமூகம் பண்பாடு மற்றும் மதம் கார்புக் கொண்ட மையப் பொருளாக விளக்குகிறது. மேலும் இலை அனபு, நட்புரிமை, மகிழ்ச்சியை மதம், சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவல்லதாகும்.




உளவியல் செயல்பாடுக் கொண்ட உணவு வகைகள்:


வினை மற்றும் சமூக தேவைகளை பூர்த்தியாவது மட்டுமின்றி மனிதனின் உணர்ச்சியையும் திருப்தி அடைய செய்ய வேண்டும்.
(எ-டு) வீட்டு அருஞ்சுவை உணவு செய்து பரிமாறினால் அதுவே அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாகும்.


ஆ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி செயலகம்: உணவு வகைகள்:

வ.எண் உணவு வகைகள் முக்கிய வகைகள்


1. தானியங்கள், குறுணிகள் மற்றும் சார்ந்த பொருட்கள்:

நெல், கோதுமை, ராகி, பாஜ்ரா, ஜோவர், பார்லி, அரிசி அப்பளம், கோதுமை மாவு சக்தி, புரதம், கரையாத கொழுப்பு வகைகள் தையாமின், ரிபோப்ளேவின், போலிக் அமிலம், இரும்பு மற்றும் நார் சத்து


2. பருப்பு மற்றும் பயிறு வகைகள்:


கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயிர், துவரை, மைசூர் பருப்பு, தட்டைப்பயிர், பட்டாணி, சோயா, பீன்ஸ் சக்தி.........
போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து



3. பால் மற்றும் இறைச்சி பொருட்கள்:


பால்: பால், தயிர், ஆடை நீக்கிய பால், நெய்
இறைச்சி: கோழிக்கறி, ஈரல், மீன், முட்டை, மற்றும் ஆட்டிறைச்சி புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்



4. பழங்கள் மற்றும் காய்கறிகள்:


பழங்கள்: மா, கொய்யா, பழுத்த தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி.

காய்கறிகள்: (பசுங்கீரை), கீரை, ஸ்பினாச், முருங்கை, கொத்தமல்லி, கடுகு மற்றும் வெந்தயக் கீரை.


இதர காய்கறிகள்: காரட், கத்தரி, வெண்டை, குடைமிளகாய், பீன்ஸ், வெங்காயம், முருங்கைக்காய், பூக்கோசு காரட்டினாய்டு, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து.


கரையாத கொழுப்பு வகைகள், காரட்டினாய்டு, ரிபோப்ளேவின், போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.


காரட்டினாய்டு, போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.



5. கொழுப்பு மற்றும் சர்க்கரை கொழுப்புக்கள்:


வெண்ணெய், நெய், நீர்ம எண்ணெய்கள், சமையல் எண்ணெய்கள் (கடலை, கடுகு மற்றும் தேங்காய்)

சர்க்கரை: சீனி, வெள்ளம் சக்தி, கொழுப்பு, தேவையான கொழுப்பு - எண்ணெய்கள் சக்தி




5. வகை உணவுகளின் முக்கியத்துவங்கள்:

நிறையான உணவுகளை தருவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கிறது.  ஊட்டச்சத்துக்களின் நிலையை அறிதல்இவற்றைக் கொண்டு தனிமனிதனுக்கு ஊட்டவியல் கல்வியை புகட்டலாம்.


உணவு பட்டை கூம்புகள்:


ஜக்கிய வேளாண் மாநில துறை, 1992 ஆம் ஆண்டு உணவு பட்டை கூம்பு கையேடுகளை அறிமுகம் படுத்தியது, ஆரோக்கிய வாழ்வு வாழ இக்கையோடு ஓர் அருமையான சாதனமாகும்.



உணவு பட்டைக் கூம்பு கையேடு:


சமநிலை:

வெவ்வேறு உணவு வகைகளிலிருந்து உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
ரகங்கள்:

ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வகை உணவுகளை சேர்க்க வேண்டும்.
மிதமானவை:

பரிமாறும் உணவு வகைகளை அளவோடு மேம்படுத்த வேண்டும்
உணவு பட்டைக் கூம்பு பதிவேடு தனிமனிதனின் உண்ணும் எண்ணிக்கை அளவை பரிந்துரைக்கும்



வயது வந்தோருக்கான சமமான பத்திய உணவு வகைகள்:

உணவு வகைகள் வயது வந்தோர் ஆண் வயது வந்தோர் பெண்
நிலையான பணி மிதமான பணி கடினமான பணி நிலையான பணி மிதமான பணி கடினமான பணி


தானிய வகைகள் 470 550 250 370 450 575
பருப்பு வகைகள் 40 60 60 40 45 50
கீரை வகைகள் 100 100 100 100 100 100
இதர காய்கறிகள் 60 70 80 40 40 50
வேர் மற்றும் கிழங்கு வகைகள் 50 70 80 50 50 60
பழங்கள் 30 30 30 30 30 30
பால் 150 200 250 100 150 200
கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் 30 40 45 20 25 30
சீனி / வெள்ளம் 30 40 50 25 30 30



குழந்தை மற்றும் வயதுவந்தோருக்கான சமமான உணவு வகைகள்:

உணவு வகைகள் குழந்தைகள் வயது வயதுவந்தோரின் வயது
1-3 4-6 7-9 10-12 13-15 16-18
தானிய வகைகள் 180 275 285 335 300 410 340 460 325
பருப்பு வகைகள் 25 35 60 60 60 60 60 60 50
கீரை வகைகள் 40 50 50 75 75 100 100 100 100
இதர காய்கறிகள் 20 30 50 50 50 75 75 75 75
வேர் மற்றும் கிழங்கு வகைகள் 10 20 30 30 30 50 50 50 50
பழங்கள் 50 50 50 50 50 50 50 50 50
பால் 300 250 200 200 200 200 200 200 200
கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் 15 25 30 30 30 50 40 50 40
சீனி / வெள்ளம் 30 40 50 40 40 40 40 50 50
(இறைச்சி உண்பர்களுக்கு ஒரு பங்கு பருப்பு உணவுக்கு 50 கிராம் முட்டை / கோழிக்கறி / ஆட்டிறைச்சி / மீன்) என்ற விகிதம் பின்பற்ற வேண்டும்.
மூலதனம்:

இந்தியர்களுக்கு பத்திய உணவுக்கான கையேடுகள் - கை நூல் (1998) தேசிய உணவியல் நிலையம், ஹைதராபாத் - 500007
‚லட்சுமி . பி. 2003. உணவு பத்தியங்கள் நியூ ஏஜ் இண்டர்நேஷனல் வெளியீட்டாளர் லிட், சென்னை.


கோபாலன். சி. ராமசாஸ்திரி.பி.வி. மற்றும் பாலசுப்பிரமணியம். எஸ்.சி. 1989 இந்திய உணவுகளின் ஊட்டச்சத்துக்களின் மதிப்பு தேசிய உணவியல் நிலையம், ஹைதராபாத்.




***
thanks tamil book
***



"வாழ்க வளமுடன்"

'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்

அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று ஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம் முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.

அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரான மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சில விவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்ய விழைகின்றேன்.

1.   வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன் அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்து கொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.



2.    கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையொப்பத்தை இட வேண்டும்.



3.   உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்பு மையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும்.



4.  உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன் வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள் மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts ) வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.


5.  அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.


6.   கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.


7.   டன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்.


8.  கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


9.   பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.


10.    டன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள் கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கான விலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும். உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில் தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையை கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறு பிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றவும்.



11.   நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையை இயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



12.    'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளை செய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



13.   உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டை தொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும். இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாக செய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவது முக்கியம்.




14.   உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசிய எண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லது வங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லது வேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள் தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும் கூட.


15.   எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன் அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில் வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்று இலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள். மேலே உள்ள படத்தை பார்க்கவும்.


16.   உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டை தொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோ அல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோ உங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.




***
நன்றி:சட்டபார்வை
***



"வாழ்க வளமுடன்"

17 பிப்ரவரி, 2012

குழந்தைகளுக்கு அலர்ஜி’



குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.



சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி?

டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.


டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது.
சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.


டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும். கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.



சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயின்மென்ட் பயன்படுத்தலாம். நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள்.


வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"
      

உடல் அழகிற்கு 20 அசத்தல் ஆலோசனைகள்



* ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


* பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.


* சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.


* மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.


* பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.


* அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல் லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.


* வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.


* வைட்டமின் `ஏ` மற்றும் `சி` அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.


* கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.


* பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய் யலாம்.


* வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண் டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.


* கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங் களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.


* கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள்.


* ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.


* உடலில் `புளோரின்` பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் `புளோரின்` சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆட்டுப் பால், வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேன்டும்.



* `சோடியம்` பற்றாக்குறையால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் சருமம் பிசுபிசுவென்று ஆகிறது. வெள்ளரிக்காய்க்கு `சோடியம்` பற்றாக் குறையைத் தடுக்கும் சக்தி உண்டு. மேலும், கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் ஜில்லென்று குளுமையாகி விடுகிறது.



* சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது `சிலிக்கான்` பற்றாக் குறையின் அறி குறியாகும். பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.


* `குளோரோபில்` பற்றாக்குறையால் தோல் உறியும். இதைத் தடுக்க கோதுமை மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


* பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.



* நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும்.


***

"வாழ்க வளமுடன்"

தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு தீமையா? நன்மையா?


தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும்தயிரிலிருந்தே பெறப்படுகிறது.


தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.



இதனால் ஏற்படும் நன்மைகள் சில...




1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.


2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.


3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.


4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.


5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.


6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.


7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது
.

***
thanks alake
***



"வாழ்க வளமுடன்"

16 பிப்ரவரி, 2012

ஆழ்கடலுக்கு மற்றும் ஒரு விருது:)




திருமதி. சாகம்பரி  அவர்கள் என் தளத்தை விரும்பி படிப்பதாக கூறி, இந்த விருதை என் தளத்திற்க்கு அளித்ததற்க்கு என் உளமார்ந்த நன்றிகள் அக்கா...........


என் தளத்தை மிக அதிகம் பேர் விரும்பி படிக்கிறார்கள் என்று பார்க்கும் பொது மிக்க மகிழ்ச்சி...என் தளத்தை விரும்பி படிப்பவர்கள் அனைவருக்கும் என்  மனமாற்ந்த   நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....


நான் படித்த எனக்கு விரும்பிய பயனுள்ள தகவளை தான், நான் ஆழ்கடலில் இடுகிறேன்....  அது மற்றவருக்கும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி....


 

////விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்///.


  இதுப்போல் திருமதி. சாகம்பரி அவர்கள் அவர்களின்  மகிழம்பூச்சரம் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதுப்போல் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி......

http://mahizhampoosaram.blogspot.com/


எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தளங்கள் இதோ....

1. counsel for any
http://counselforany.blogspot.com/




2.  லோகநாதனின் பகிர்வுகள்
http://kklogan.blogspot.com/



3.  ஆயுர்வேத மருத்துவம்
http://ayurvedamaruthuvam.blogspot.com/



4.  சித்த மருத்துவம்
http://polurdhayanithi.blogspot.com/


5.  கிருஷ்ணம்மாவின் சமையல் தளம்
http://krishnaamma.eegarai.com/


*

மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன்.  வாழ்த்துக்கள்:)


இந்த விருது பெற்ற அனைத்து தளத்திற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)


***

"வாழ்க வளமுடன்"
   

07 பிப்ரவரி, 2012

கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?



கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க

வேண்டுமென டாக்டர்கள் கூறுவர். அதற்காக அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில்லை.

அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிக முக்கியம். அப்போது தான் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடையும். கர்ப்பமடைவதற்கு முன் எடுத்து கொண்ட கலோரி அளவிலிருந்து, 100 முதல் 300 கலோரி வரையே கர்ப்பமடைந்த பின் பெண்களுக்கு தேவைப்படும். பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.

குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி.கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்து கொண்டே வர வேண்டும். அதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் கர்ப்ப காலத்தில் 16 முதல் 20 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி., குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா…

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற் கும், சத்துக்கள் மிக அவசியம்.

கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை காணப்பட்டால் என்ன செய்வது…

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்ய கூடாது. பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.

உப்புக்கு தடை…
கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. உப்புக்கள் தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும். டாக்டர் கீதா மத்தாய், வேலூர்.


கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை எப்படி மாறுகிறது?
குழந்தை 3.5 கி.கி., நஞ்சுக்கொடி 1 முதல் 1.5 கி.கி., வரை ஆம்னியாட்டிக் திரவம் 1 முதல் 1.5 கி.கி., வரை மார்பக திசுக்கள் 1 முதல் 1.5 கி.கி., வரை ரத்த ஓட்டம் 2 கி.கி., பிரசவ காலத்திற்கான கொழுப்பு சேமிப்பு மற்றும் 2.5 முதல் 4 கி.கி., வரை தாய்ப்பால் கொடுத்தல், கர்ப்பப்பை விரிவு 1 முதல் 2 கி.கி., வரை .


***
thanks jimdo
***



"வாழ்க வளமுடன்"

பிரசவம் எளிதாக ஆக வ‌ழி வகு‌க்கு‌ம்.



சோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம் குங்குமப் பூவை கரைத்துக் கொடுக்க பிரசவம் எளிதாகும்.

குழந்தை பிறந்த பின்னர் 3 கிராம் குங்குமப்பூவை பாலில் காய்ச்சி இரு வேளை குடித்து வர குருதி கேட்டினை குணமாக்கும்.

குங்குமப் பூ கர்ப்ப சூடு எனும் உடல் சூட்டை சமப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் 5ஆம் மாதம் முதல் இரவில் நாள் தோறும் பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, பிறக்கப்போகும் குழந்தை கர்ப்ப சூடும், நோயும் இன்றி அழகுடன் விளக்கும்.

பா‌லை‌க் கா‌ய்‌ச்சு‌ம்போதே ஒரு ‌சி‌ட்டிகை கு‌ங்கும‌ப் பூவை போ‌ட்டு ந‌ன்கு கா‌ய்‌ச்‌சி‌க் குடி‌‌ப்பது க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ந‌ல்லது.

நடை‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம், ‌வீ‌ட்டு வேலைகளை கு‌னி‌ந்து ‌நி‌மி‌ர்‌ந்து செ‌ய்வது‌ம், க‌ர்‌ப்ப‌ப்பை‌க்கு தள‌ர்‌ச்‌சியை‌க் கொடு‌த்து சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆக வ‌ழி வகு‌க்கு‌ம்.


***
thanks jimdo
***

"வாழ்க வளமுடன்"

உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்!!



சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.



***
thanks நிதுஸ்
***



"வாழ்க வளமுடன்"

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க



கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.


தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.


அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.


பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.



காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.


பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.


இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.


லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"
      

இளம் சூடான வெந்நீர் குடிங்க… புற்றுநோய் வராது!


உணவு உண்ட உடன் தண்ணீர் குடிப்பது குறித்து பல வித கருத்துக்கள் நிலவுகின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றனவாம் எனவே உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

டயட்டினை பின்பற்றுபவர்கள் சிறிதளவு உணவு உண்ணவேண்டும் என்பதற்காக அதிகமான தண்ணீரை அருந்துகின்றனர். மொத்தத்தில் தண்ணீரானது உடல் நலம் காக்கும் உன்னத மருந்தாகும்.


இளம் சூடான வெந்நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புற்றுநோய் செல்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இதன் மூலம் உணவானது எளிதில் செரிமானமாவதோடு கெட்டக் கொழுப்புக்கள் ஆங்காங்ககே சேர்ந்து உடலுக்கு கெடுதல் ஏற்படுவது தடுக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே தான் உணவு உண்டபின்னர் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கவும் பரிந்துரைக்கின்றனர்.

குளுமையான நீர் கூடாது

அதேசமயம் ஜில் நீர் இதற்கு எதிர்மறையான செயல்பாட்டினை ஏற்படுத்துமாம். அநேகம் பேர் உணவு உண்டவுடன் ப்ரிட்ஜில் வைத்த குளிர் நீர் பருகுவார்கள். இது இதயநோய், கேன்சர் போன்றவற்றிர்க்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், உண்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது.

நோய்களுக்கு காரணம்

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே வெது வெதுப்பான தண்ணீரே உடல் நலத்திற்கு ஏற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.


***
thanks நிதுஸ்
***



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "