...

"வாழ்க வளமுடன்"

16 ஜூன், 2011

முடிக்குக் கொடுங்க முக்கியத்துவம்!


`உரோமம்' எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சு வழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது.


உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள், உறுப்புகளுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றது, முடி.


பொடுகு - `செபோரிக் டெர்மட்டைட்டிஸ்' எனப்படுகிறது. தலை தோலின் மேல் அடுக்கில் காணப்படும். செதில் போல் லேசாக உதிரும்.


முடி உதிர்தல்

முடி இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது `அலோபேசி யா' எனப்படுகிறது. (கிரேக்க மொழியில் `அலோபெக்ஸ்' என்றால், நரி.) இதன் இறுதிநிலை, வழுக்கையாகும். ஹார்மோன் சிக்கல்கள், மருந்துகள், மன அழுத்தம், பாரம்பரியம் போன்றவை `வழுக்கை'க்குக் காரணமாகின் றன.


புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. முடி உதிர்வு, சத்துப் பற்றாக்குறையையும் குறிக்கும். மனிதர்களுக்கு முடி குட்டையாகவும், மென்மையாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கிறது. இதேபோல ஆப்பிரிக்கவாழ் பாலூட்டிகளான யானைகளுக்கும், நீர்யானைகளுக்கும் 2 ரோம அமைப்பு உள்ளது.



காக்கும் முடிகள்

புருவ முடிகளும், இமை முடிகளும் கண்களைக் காக்கின்றன. மூக்குத் துவாரங்களிலும், காதுகளுக்குள்ளும் காணப்படும் நுண் முடிகள், அவற்றுக்குள் நுண்ணுயிரிகள், தூசி தும்புகள் நுழையாமல் தடுக்கின்றன. தோலுக்கு மேலாக உள்ள முடியை நீக்குவது `டெபிலேஷன்' எனப்படுகிறது.



மயிர்க்கூச்செரிதல்

குளிரில் நமக்குப் பற்கள் கிடுகிடுக்கும்போது வேர்க்கால்களை ஒட்டிய `அரெக்டார் பைலி' தசைகள் நிமிர்கின்றன. அதனால், முடியும் குத்திட்டு நிற்கிறது. இதன் விளைவாக, முடி அடுக்கு, வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. நாம் இதை `மயிர்க்கூச்செரிதல்' என்கிறோம். மருத்துவரீதியாக இது `பைலோஎரெக்ஷன்' எனப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது, முடி அப்படியே தோலோடு ஒட்டிக்கொள்கிறது. எனவே வெப்பம் தக்க வைக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.



முடியை அகற்றும் முறைகள்

முடியை நீக்கும் `கிரீம்கள்'- இவற்றை முடி மீது பூச வேண்டும். அகற்றப்படும் முடிகள் 2- 5 நாட்களில் மீண்டும் வளர்ந்துவிடும்.

சவரம் - ரேசர் பிளேடை பயன்படுத்திச் செய்வது. சில மணி நேரத்தில் முடி வளரத் தொடங்கிவிடும்.

வாக்சிங் - ஒட்டக்கூடிய சூடான மெழுகையும், ஒரு துண்டுக் காகிதம் அல்லது துணியையும் பயன்படுத்தி மேற்கொள்வது. நான்கு முதல் ஒன்பது வாரங்களில் முடி மறுபடி வளரும்.

த்ரெட்டிங் - முடிச்சிட்ட நூலால் முடியை அகற்றுவது.

எலக்ட்ரோலிசிஸ் - சிறுபரப்புகளுக்குப் பயனுள்ளது. நிரந்தரமாக முடியகற்ற உதவுகிறது.

எபிலேட்டர் - முடியை வேர்ப்பையுடன் முழுமையாக அகற்றுகிறது.

லேசர் - கரிய, கரடுமுரடான முடி, `என்டி- ஓய்ஏஜி' லேசரை ஈர்த்து உதிர்கிறது. இதன்மூலம் 80- 90 சதவீத முடியை அகற்றலாம்.

நமக்கு `வேகம்' அதிகம்!

ஆசியக் கண்டத்தினரான நமது முடி வேகமாக வளர்கிறது. அதாவது, மாதம் 1.3 செ.மீ. என்ற அளவுக்கு. ஆனால் நமது முடியின் அடர்த்தி குறைவு, மெல்லியதாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தினரின் முடிதான் மெதுவாக வளர்வது. மாதத்துக்கு 0.9 செ.மீ. ஆனால் அது, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் முடியை விட அடர்த்தியானது. தலை தோலை ஒட்டியே வளரும் இது, சுருண்டுகொள்கிறது. காகேசிய இனத்தவரின் முடிதான் உலகிலேயே அடர்த்தியானது. அது, மாதத்துக்கு 1.2 செ.மீ. நீளம் வளர்கிறது.

***

1. வேர்ப்பை - முடியில் உயிருள்ள ஒரே பகுதி. முடி வேரின் அடிப்பகுதி, குமிழ் எனப்படுகிறது.

2. செபேசியஸ் சுரப்பிகள்- முடிக்கு எண்ணெய்ப் பளபளப்பை அளிக்கின்றன.

3. டெர்மிஸ்- எபிடெர்மிஸுக்கு கீழ் உள்ள தோல் அடுக்கு. இங்குதான் முடியின் வேர்ப்பை புதைந்துள்ளது.

4. மெடுல்லா- உள்ளார்ந்த பகுதி. அனைத்து முடிகளிலும் காணப்படுவதில்லை.

5. கார்ட்டெக்ஸ்- முடியின் நடு அடுக்கு. முடியின் பலத்துக்கான அடிப்படை ஆதாரம். முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் `மெலனினை' கொண்டிருக்கிறது. முடியின் வடிவத்தைத் தீர்மானிப்பது இதுதான்.

6. கியூட்டிக்கிள் - முடியின் வெளிப்புற அடுக்கு.

****

* தினசரி 100- 150 முடிகள் உதிர்வது இயல்பானது.

* 100 முடி இழைகளால் 10 கிலோ எடையைத் தூக்க முடியும்.

* இங்கிலாந்தில் 55 சதவீதக் குழந்தைகள் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுவதும் நுண்ணிய `வெல்லஸ்' முடிகளால் மூடப்பட்டுள்ளது.

* மாவீரன் நெப்போலியனின் முடியில் `ஆர்சனிக்' விஷம் காணப்பட்டது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

* தலைமுடியானது அகச்சிவப்புக் கதிர்வீச்சில் இருந்து உடலைக் காக்கிறது. பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.

* ஒரு முடிக் கற்றையால் அதன் எடையைப் போல் 30 சதவீத தண்ணீரைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

***

பாலிக்யூலிட்டீஸ் - வேர்ப்பையில் ஏற்படும் வீக்கம். முடியை அகற்றும்போது மோசமான சுகாதாரத்தால் இது ஏற்படக்கூடும்.

ஹிருசுட்டிசம் - அதிகமாக முடியடர்ந்து காணப்படுவது. குறிப்பாக, முகத்திலும், உடம்பிலும். ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலை, மருந்துகளின் பக்கவிளைவுகளால் இந்நிலை ஏற்படலாம்.

பேன் - ரத்தம் குடிக்கும் சிறு பூச்சியினம். முடியின் அடிப்பகுதியை இறுகப் பற்றிக்கொள்ளும் இவை, முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. மருந்து சேர்த்த ஷாம்புகள், லோஷன்கள், நெருக்கமான பற்கள் கொண்ட சீப்புகள் மூலம் பேன்களை அகற்றலாம். ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பேன் பரவுவது, `பெடிகுலோசிஸ்' எனப்படுகிறது. சீப்புகள், தொப்பிகள், துண்டுகள், தலையணைகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வது, அருகாமை போன்றவற்றால் பேன்கள் பரவலாம்.



***
thanks தினதந்தி
***



"வாழ்க வளமுடன்"




நெப்போலியன் பொன பார்ட் இறந்தது எப்படி?

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை
தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன்.


நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு
அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும்.


1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து
மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன.


1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலேநாத் தீவில் கழிந்தது.

நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.


நெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை
அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து
இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.

ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாகவெளியாகியுள்ளஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன்நெப்போலியன் இயற்கை மரணம்அடைந்ததாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு
முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.

ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது
ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது. நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.

ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.

பிரான்சின் பேரரசன் இத்தாலியின் மன்னன் சுவிஸ் கூட்டமைப்பின் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81) இணைப்பாளன்

ரைன் கூட்டாட்சியின் ( http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&action=edit&redlink=1)

காப்பாளன்ஆட்சிக்காலம் முடிசூட்டு விழா முழுப்பெயர் பிறப்பு பிறப்பிடம் இறப்பு இறந்த இடம் புதைக்கப்பட்டது முன்னிருந்தவர் பின்வந்தவர் துணைவி வாரிசுகள் அரச குடும்பம் தந்தை தாய்......




முதலாம் நெப்போலியன்
Napoléon I


நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது
மார்ச் 20, 1804–ஏப்ரல் 6,1814
மார்ச் 1, 1815–ஜூன் 22,1815
டிசம்பர் 2, 1804
நெப்போலியன் பொனபார்ட்
ஆகத்து 15 1769
கோர்சிக்கா
மே 5 1821 (அகவை 51)
சென் ஹெலெனா
பாரிஸ்
பிரெஞ்சு கொன்சுலேட்
முன்னைய அரசன்:பதினாறாம் லூயி(இ. 1793)
நடப்பின் படிபதினெட்டாம் லூயி
De Jure நெப்போலியன் II
ஜோசெஃபின் டெ பியூஹார்னை
மரீ லூயி
நெப்போலியன் II
பொனபார்ட்
கார்லோ பொனபார்ட்
லெற்றீசியா ரமோலினோ


***
thanks eegarai
***





"வாழ்க வளமுடன்"

தொப்பி ( கேப்) யை பற்றி சில உண்மைகள்



மன்னரின் முன்னிலையில் குடிமக்கள் யாரும் தொப்பி அணிந்திருக்கக்கூடாது என்பது இங்கிலாந்து நாட்டில் இன்று வரை இருந்துவரும் மரபாகும்.

*

இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக இருந்த சமயம் ஒரு பள்ளிக்கூடத்தைப் பார்வையிடச் சென்றார்.

*

அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த டாக்டர் புஸ்பி என்பவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கல்விமான் என்று போற்றப்பட்டாவர். அவர் தலைமையில் உள்ள பள்ளியில் தரமான கல்விப் போதனை உண்டு என்ற நற்‌பெயர் இருந்தது.

*

தம்முடைய பள்ளியைப் பார்வையிட வந்த மன்னர் இரண்டாம் சார்லஸ் டாக்டர் புஸ்லி மிகுந்த வணக்கத்துடன் வரவேற்றார். பள்ளி முழுவதையும் சுற்றிக் காண்பி்த்தார்.

*

டாக்டர் புஸ்பி, மன்னருடன் இருந்த நேரம் வரை தனதுத் தொப்பியை அகற்றவே இல்லை. மரபை மீறித் தலையில் தொப்பி அணிந்திருந்தார்.

*

மன்னர் பள்ளியை விட்டுப் புறப்படும் முன், மரபை மீறி மன்னர் முன்னிலையில் தொப்பி அணிந்திருந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் டாக்டர் புஸ்பி. பிறகு அதற்கான விளக்கத்தையும் சொன்னார்...

*

“மன்னர் அவர்களே.. தாங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. இந்த உலகத்தில் டாக்டர் புஸ்பியைவிட யாரும் உயர்ந்தவர்கள் இருக்க முடியாது என்று என்னுடைய மாணவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முன் நான் தொப்பியில்லாமல் காட்சியளித்தால் மாணவர்களிடம் என்னைப் பற்றிய மதிப்பும், மரியாதையும் குறைந்து விடும். ‌அதனால் தான் தங்கள் முன்னிலையில் நான் தொப்பியை எடுக்காமல் இருந்தேன்” என்றார்.

பின்பு அரசர் அவரைபாராட்டினார். இதுதாங்க நான் சொல்ல வந்ததது...


***


இன்னும் பிற உண்மைகள் :


தொப்பி (Hat) என்பது தலையில் அணியும் ஓர் ஆடையாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. வட்டம், நீள்வட்டம் என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும் தொப்பிகள் பயன்படுகின்றன.

*

சில தகவல்கள் :

1. தொப்பி அணிந்தவர்களில் மிகவும் கம்பீனமானவர் சுபாஷ் ....


2. எம்.ஜி.ஆர் அவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந்திருப்பார்.

3. முகமதிய நண்பர்கள் அவர்களது மத அடையாளமாக தொப்பி குல்லா அணிவார்கள்.

4.மொட்டை போட்டவர்கள், வெயில் அதிகமான காலத்தில் அணைவரும் தொ்பபி அணிவார்கள்.. :)


***
thanks கவிதை வீதி
***




"வாழ்க வளமுடன்"

ஆழ்ந்த துக்கம் இல்லையா? இதை படிங்க!!!


வணக்கம் டாக்டர்!”


“வாங்கம்மா.. என்ன விஷயம்?”


“உறங்கும்போது உளறுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”


”குழந்தைகள் உறங்கும்போது பேசறது, உளர்றது சகஜம்தான்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் காலப்போக்கிலே தானாகவே சரியாயிடும்..!”


“எதனாலே டாக்டர் இப்படி?”


“சில பேர் தூக்கத்துலே கெட்ட கனவு கண்டு பயந்து போய் பிதற்றுவது உண்டு.. சில பேர் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிக‌ள் சிலதை மனசுலே நினைச்சுக்கிட்டே தூங்குவாங்க.. அது தொடர்பாவே ஏதாவது கனவு கண்டு உளர்றதும் உண்டு. இதுக்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்லை!”


“அப்படிங்களா?”


“சிலப்பேர் நல்லா தூங்கிக்கிட்டிருக்கறப்போ திடீர்ன்னு பயந்து போய் முழிச்சிக்குவாங்க.. சிலபேர் தூக்கத்துலேயே எழுந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சுடுவாங்க.. இப்படி ஏதாவது இருந்தா டாக்டர் கிட்டே போகலாம்...”


“சரிங்க டாக்டர்..!”


“உங்க பிரச்சனை என்னங்கறதை இன்னும் சொல்லவே இல்லையே!”


“என் வீட்டிக்காரர் தூக்கத்துலே உளர்றார்.... என்னென்னமோ பேர்லாம் சொல்றார்.. சரியா புரியலே!”


“சரி.. அவர் உளர்றதை நிறுத்தணும்.. அதுக்கு மருந்து வேணும்.. அவ்வளவுதானே!”


“இல்லே டாக்டர்... அவரு சொல்ற பேரு என்னங்கறது எனக்குத் தெரியணும்.. அதனாலே அவர் கொஞ்சம் தெளிவா உளர்றதுக்கு ஏதாவது மருந்து வேணும் அவ்வளவுதான்..!” (நன்றி: வாரம் ஒரு தகவல்)




தூக்கம் மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம். உடல் நலத்தை பேணுவதற்கும், அதே உடல் நலம் சீர்கெடுவதற்கும் தூக்கம் காரணமாகிறது. மனித வாழ்வில் தூக்கம் குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. தூங்கும் சூழ்நிலையானது மிகவும் அமைதியகவும் இருக்க வேண்டும். தூக்கம் நன்றாக இருந்துவிட்டால் பகல் பொழுது நமக்கு சொர்கமாக இருக்கும். இரவில் தூக்கம் சரியில்லை என்றால் பகல் நமக்கு வேதனைதான்.


முதுகெலும்பு தரையில் படிம்படி படுத்துறங்கும் ஒரே விலங்கினம் மனிதன்தான். தூக்கத்திற்காக நாம் மது, தூக்க மாத்திரை போன்றவை பயன்படுத்துவதால் உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி விடுவதால் தூக்கம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கின்றன. எனவே இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். இயல்பான தூக்கம்தான் மனிதனின் ஆயுளை அதிகரிக்கும்...


தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:

காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.


***

மேலும் சில டிப்ஸ்:

http://www.mayoclinic.com/health/sleep/HQ01387

http://www.wenatex.ca/


***
thanks சித்ரா & கவிதை விதி
***





"வாழ்க வளமுடன்"

கோடை காலத்திற்கு ஏற்ற டிப்ஸ்!!!



கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதது. அதனால் கோடையில் அதிக சூடு உடலைத் தாக்குகிறது. அப்போது, `பாடி டெம்பரேச்சர் ரெகுலேஷன்' எனப்படும் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. கோடை காலத்தில் மிகுந்த சுகாதாரதன்மையுடன் உணவுகளை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நோய்கள் போட்டிபோட்டிக் கொண்டு நம்மை தாக்கும்.


கோடைகாலத்தில் சிறுவர்கள் நீச்சல் குளங்களில் விளையாடுவதை சுகமான அனுபவமாக கருதுவார்கள். அந்த தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் காதுகளில் தொற்று, கண்களில் எரிச்சல், சரும நோய் போன்றவை தோன்றும். உடலில் இருக்கும் காயத்தில் அந்த அழுக்கு நீர் படும்போது டைபாய்ட், எலி ஜுரம் போன்ற நோய்கள்கூட ஏற்படக்கூடும்.
கோடை வெயிலில் `அல்ட்ரா வயலட் கதிர்கள்' தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஓசோன் மண்டலம் அதன் தாக்குதல் தன்மையை தடுக்கும். இப்போது ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழும் பாதிப்பு இருப்பதால், கதிர்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளை நிற சருமம் கொண்ட வெளிநாட்டினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு சரும நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

இந்தியர்களின் சருமம் அனே கமாக கறுப்பு நிறத்தில் இருப்பதால், இந்த கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்க முடிகிறது. ஆயினும் கோடை வெயில் சருமத்தை பாதிக்காத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.

செயற்கைஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகள் அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலுக்குள் ஈர்க்கும். அதனால் உடல் பாதிக்கும். இள நிறம் உஷ்ணத்தை நிராகரிக்கும். அதனால் இளநிற ஆடைகளையே அணிய வேண்டும். கோடையில் சூடுகட்டி உடலில் உருவாகும். எல்லா வயதினருக்கும் இது உருவாகும் என்றாலும் சர்க்கரை நோயாளிகளை அதிக தொந்தரவிற்கு உள்ளாக்கும்.


கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறையும். ஆனால் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் தொடர்ச்சியாக உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவது குறைந்துகொண்டே போகும். அப்போது உடலில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சிறுநீரக கல் தோன்றுகிறது. தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகலாம். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளையும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். கல் உருவாகாது. ( நன்றி பல்வேறு நூல்கள்)

கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும். கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கமான இடத்தில் இருந்து சுற்றுலாவாகவோ, உறவினர்களைப் பார்க்கவோ இன்னொரு இடத்திற்கு செல்கிறார்கள். அப்போது வெளி உணவுகளை அவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் காலரா, டைபாய்ட், புட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.


***
thanks கவிதை வீதி
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "