...

"வாழ்க வளமுடன்"

05 ஜனவரி, 2011

ஆரோக்கியத்திற்கு கீரைகள் முதல் இடம் :)

கீரையின் மகத்துவத்தை வார்த்தை களில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம்.


1. புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறி விடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும்.


*

2. அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும்.



*

3. முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.



*

4. கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறு கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும்.



*

5. கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும்.



*

6. பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழைப்பார்கள். இது அதிக சுவையை உடையது. அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு, இந்த கீரையை கொடுத்தால் நாவறட்சியை தீர்க்கும்.



*

7. பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கு வெந்தயக் கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாகும். கபம் மற்றும் வாயுக் கோளாறுகள் விலகும். அடிக்கடி வரும் இருமல் நீங்கும். நாக்கில் ருசி இல்லாமல் இருந்தால் மாறி சுவையுணர்வு ஏற்படும். வயிற்றில் ஏற்படும் உப்புசம் போன்றவற்றை நீக்கும். வாதம் மற்றும் காச நோய்களுக்கு வெந்தயக்கீரை மிகவும் நல்லது.



*

8. வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.



*

9. புளிச்ச கீரை என்றழைக்கப்படும் புளிப்புக் கீரையை அடிக்கடி சாப்பிடுவோருக்கு வாத நோய்கள் நீங்கும். ரத்தத்தில் உள்ள உஷ்ணம் மற்றும் சிக்கல்கள் தீர்ந்து, சுத்தமாகும். கரப்பான் என்று அழைக்கப்படும் நோய் அகன்று விடும். பித்தம் தொடர்பான நோய்களும் தீரும். நாக்கில் சுவையுணர்வை அதிகரிக்க வைக்கும். வயிற்றில் உள்ள கோளாறுகளை நீக்கும்.



*

10. காசினிக் கீரையை தினமும் சாப்பிடுவோருக்கு உடலுக்கு தேவையான தாதுக்கள் அதிகமாகும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை நீக்கும். மேலும் உஷ்ணம் தொடர்பான அனைத்து வியாதிகளையும் அகற்றும். உடம்பில் வீக்கம் இருந்தாலோ அல்லது கட்டி இருந்தாலோ குணமாகும்.


***
நன்றி இணையம்
***



"வாழ்க வளமுடன்"

நடைப்பயிற்சி அனைவருக்கும் அவசியமா ஏன்?

நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.


கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

*

எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

*

ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.

*

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.

*

எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.

*

நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.

*

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.

***

பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு:

"ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன. பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

*

நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.

*

மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.

*

ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.

*

75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

*

நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.


நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.


நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.


நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.


சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.


பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.


***
thanks இ .த .உ
***


"வாழ்க வளமுடன்"

ரோஜாவும் அதன் அர்த்தமும் :)

நாம் அளிக்கும் ( எதிர் பாலினத்துக்கு ) ரோஜாவும் அதன் அர்த்தமும் :)


இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே, இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.


ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால்......,

*

சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

*

இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

*

மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

*

அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

*

இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

*

வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

*

நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

*

பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

*

இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

*

ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

*

சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

*

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.


எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.

*

வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

*

மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்!

***

தங்க்ஸ் இ.தா.உ

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "