...

"வாழ்க வளமுடன்"

07 டிசம்பர், 2010

சொத்தைப் பல்லை எடுத்த பிறகு !

தொல்லை தந்த பல்லைப் பிடுங்கிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?அப்படி இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பஞ்சு கற்றையைக் கொடுத்து ஒன்றரை மணி நேரம் பல் பிடுங்கிய இடத்தில் வைத்துக் கொள்ளச் சொன்னது தெரிந்திருக்கும்.

*

ஏனென்றால் ரத்தம் உறைந்தால்தான் காயம் குணமாகும்; புது எலும்பு உருவாகும். ரத்தம் உறைவது நிற்காவிட்டால் மற்றுமொரு பஞ்சு கற்றையை இன்னும் ஒரு முறை அரை மணி நேரத்துக்கு முயற்சி செய்யலாம்.

**

முகம், தாடை, கன்னத்தில் மீது ஐஸ் கட்டிகளை வைத்து குளிரச் செய்வது, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் அருந்துவதுகூட ரத்தம் உறைவதற்காகத்தான். ரத்தம் உறைந்த பின்னரும் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை.

**

பின்வருமாறு:

புகை பிடிப்பது, புகையிலை மெல்லுவது, மது அருந்துவது, குழல் (நற்ழ்ஹஜ்) வைத்து உறிஞ்சுவது, தீவிரமாக வாய் கொப்பளிப்பது, பல் பிடுங்கிய இடத்தை நாக்காலோ, விரலாலோ தொடுவது கூடாது.

*

மாறாக, நிறைய திரவ உணவை, மிருதுவான, சத்துள்ள உணவை சூடான, மசாலா மிகுந்த உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுக்குப் பின் உணவுத் துணுக்குகள் பல் பிடுங்கிய இடத்தில் இல்லாமல் இருக்க இதமாக கொப்பளிக்க வேண்டும்.

*

24 மணி நேரத்துக்குப் பின் இயல்பான நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள். இயல்பான நிலை திரும்பாமல், ரத்தக் கசிவு அல்லது தீவிர வலி அல்லது தொடர்ந்த வீக்கம் இருந்தால் உடனே உங்கள் பல் மருத்துவரை அணுகுங்கள்.


***
நன்றி தினமணி
***


"வாழ்க வளமுடன்"

அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா நீங்க?

சாப்பாட்டு ராமனா நீங்க? அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா? நொறுக்குத் தீனி தான் இஷ்டமா? எண்ணெய் சமாச்சாரங்கள் பிடிக் குமா? காய்கறி உணவு என்றாலே “ஙே…? நடக்கக்கூட யோசிப்பவரா?இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம்… என்று நீங்கள் சொன் னால், முதலில் டாக்டரை கவனியுங்கள்; முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; நாற்பது வயதானால் தான் எல்லா உடல் தொந்தரவும் தொடரும் என்பதில்லை; இப்போது முப்பது வயதில் கூட பி.பி., ஷுகர் ஆரம்பித்து விடுகின்றன!


*

நாம் எதற்காக உணவு சாப்பிடுகிறோம்? சாப்பாட்டுக்கு இடையே எதற் காக காபி, டீ, குளிர்பானம் சாப்பிடுகிறோம்? இதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

வாய்க்கு ருசியாக… :


ருசியாக இருக்கிறது என்று இனிப்புகளை “உள்ளே’ தள்ளுகிறோம்; வாய்க்கு காரம் தேவைப் படுகிறது என்று நொறுக்குத் தீனி, ஊறுகாய்களை ருசிக்கிறோம்; மசாலா, ப்ரை சமாச்சாரங்கள் என்றால், நாக்கில் நீர் வடிகிறது. ஆனால், இவை எல்லாம் உடலுக்கு சத்துக்களை அளிக்கின்றனவா என்று யாராவது யோசித்ததுண்டா?

*

கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டாக்டர்களும், உணவு நிபுணர்களும்,”டிவி’யிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும் சத்துணவு என்றால் என்ன என்று கத்தோகத்து என்று கத்தினாலும், பெரும்பாலானோர் சத்தான காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏனோ புறக்கணித்து வருகின்றனர்.

***

கேட்டுக்கொள்ளுங்கள் :


* வாரத்துக்கு எத்தனை முறை கீரை வகைகளை சாப்பிடுகிறீர்கள்…?

* சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…?

* பழங்களை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…?


* காலாற நடந்து செல்கிறீர்கள்…?


* அதிக நேரம்”டிவி’ பார்க்கிறீர்கள்…?இவற்றை எல்லாம் கணக் கிட்டால், உங்கள் உடல் நிலையில் எந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைகிறது என்பதை கணக்கிட்டு விடலாம்.

*

இருபது வயதில் இருந்து சத்தான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், முப்பதில் உடல் குண்டாகாது; நாற்பதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பாதிப்பு போன்றவை வராது.


**

கண்டபடி “உள்ளே’ :

ஆனால், சிலர் எதற்காக சாப்பிடுகின்றனர் என்றே தெரியாமல், எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டபடி இருப்பர். இப்படிப்பட்ட சாப்பாட்டு ராமன்கள் பலர், இப்போது இருபது வயதிலேயே உள்ளனர்.

*

வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில், உணவு முறையும் தலைகீழாக மாறிவிட்டது. அதனால், எப்போதும் ஓட்டல் சாப்பாடு, சாட் உணவு வகைகள், மசாலா கலந்த மொறுமொறுக்கள், ரசாயனம் கலந்த கோலாக்கள் ஆகியவை தான் இளம் தலைமுறையினரின் அன் றாட உணவாகிவிட்டது. இப்படி சாப்பிடுவதே பிரச்னை தரக் கூடியது தான். இத்துடன் மிக அதிகமாக சாப்பிடுவது என்பதும் ஆபத்தான விஷயம்.

*

அதிகமாக சாப்பிடுபவர்கள், உடனே பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம். என்னவெல்லாம் வரும்? : அதிகமாக சாப்பிடுவோருக்கு உடலில், முதலில் அதிக கொழுப்பு சத்து சேரும்; அதனால், உடல் குண்டாகும்.

*

“ஒபிசிட்டி’ ஏற் பட்ட பின், ரத்த அழுத்தம், சர்க் கரை அளவு அதிகரித்து கடைசியில் இதய நோயில் விட்டு விடும்.பாக்டீரியா , வைரஸ் தாக்குதலை தடுத்துக்கொள்வது உட்பட, எந்த தாக்குதலையும் தாங்கக்கூடிய வகையில் உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளது.

*

சத்தான உணவு சாப் பிட்டால் தான் இந்த எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இல்லாவிட்டால், அது பலவீனம் அடைய ஆரம்பிக்கும். அப்போது தான் கோளாறுகள் ஆரம்பமாகின்றன. கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைகிறது; கல்லீரலில் கொழுப்பு சேர்கிறது.

*

அதிகம் சாப்பிடுவது ஏன்? : போதை மருந்துக்கு ஆட்பட்டவரை, அப்பழக்கத்திற்கு அடிமையாகி விட வைப்பது, அவர் மூளையில் இருந்து வரும் உத்தரவு தான். தன்னை அறியாமல், அவர் போதைக்கு அடிமையாகி விடுகிறார். அது போலத்தான், ஒருவர் அதிகமாக சாப்பிட காரணம், அவருக்கு மூளையில் இருந்து வரும் கட் டளை தான்.

*

சாப்பிட, சாப்பிட அவருக்கு திருப்தியையே தராமல் இன்னும் அதிகம் சாப்பிட மூளையில் இருந்து உத்தரவு வந்தபடி இருக்கும்.


*

இளம் வயதில் இருந்தே சாப்பிடுவதை கட்டுப்படுத்திவிட்டால் போதும். பின்னாளில் பிரச்னை வராமல் தவிர்த்து விடலாம். இளம் வயதினரே… : ஆரம்பத்தில் 180 மில்லி பாட்டில் கோலாக்கள் விற்பனை செய்யப்பட்டன.

*

இதில் 60 கலோரி உள்ளது; அடுத்து, 300 மில்லி பாட்டில் விற்பனைக்கு வந்தது; இதில் 80 கலோரி உள்ளது. இப்போது, சினிமா தியேட்டர் உட்பட பல பொது இடங்களில் 600 மில்லி பாட்டில் வந்து விட்டது. இதை ருசித்து சாப்பிட்டு முடிக்கும் போது, உடலில் 180 கலோரி சேர்ந்து இருக்கும்.

*

அப்படியானால், எந்த அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

*
என்ன தான் வழி? :


* அதிகம் சாப்பிடுவதை தடுக்க டாக்டரிடம் வழி கேளுங்கள்.


* மொறுமொறுக்கள், கோலாக்கள் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.


* கலர் கலராய் காய்கறி, பழங் களை அதிகம் சாப்பிடலாம்.


* பிரஷ் ஜூஸ் சாப்பிடலாம்; எண்ணெய், நெய், உப்பு குறைக்கலாம்.


* அவ்வப்போது உடல் பரிசோதனை முக்கியம்.***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

தண்ணீர் சிகிச்சை !


தண்ணீர் சிகிச்சை தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்னால் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கவும், அதன் பிறகு பல் துலக்க வேண்டும்.

*

ஆனால் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. 45 நிமிடங்கள் கழிந்த பிறகு வழக்கம் போல சாப்பிடலாம், தண்ணீர் பருகலாம்.

**

மிக மிக முக்கியமான விஷயம்

இந்த தண்ணீர் சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இந்த 3 க்கும் பிறகு அடுத்த 2 மணி நேரம் எதையும் சாப்பிடவோ, பருகவோ கூடாது.

*

இந்த சிகிச்சையில் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, குறிப்பிட்ட நாளைக்கு என்றில்லாமல் தினமும் இந்த பழக்கத்தை தொடர்ந்தால் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.

*

தலைவலி, உடம்புவலி, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், ஆர்த்ரைடிஸ், காசநோய், உடலில் அதிகபடியான கொழுப்பு சேர்வது, வயிற்றுபோக்கு, கிட்னி மற்றும் யுரினரி பிரச்சனைகள், பைல்ஸ், சர்க்கரை வியாதி, மாதவிடாய் பிரச்சனைகள், கண் நோய்கள், காது, முக்கு, தொண்டை பிரச்சனைகள் இப்படி பல நோய்கள் தீர காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும்..... என்கிறது ஜப்பானிய மருத்துவ முறை.

***
நன்றி குமுதம் சிநேகிதி!
***
"வாழ்க வளமுடன்"


உடலில் வெண்படலம் படருவதால் ஆபத்தா?வெண்மை படலம் படிவதற்கு, “லூகோடெர்மா’ அல்லது “விடிலிகோ’ என்று பெயர். மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினருக்கு இது போன்று ஏற்படுகிறது. பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட காலத்தினருக்கு இது போன்று ஏற்படுகிறது.


யாருக்கு இது போன்று ஏற்படுமென சொல்வதற்கில்லை. சமூக பொருளாதார பின்னணியெல்லாம் பார்த்து கொண்டு, இது ஏற்படாது. உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சாதாரண மக்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களில் 25 சதவீதத்தினர், கவலை, மன அழுத்தம் அல்லது தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றனர். சமூகத்தில் எந்த தட்டு மக்களும் இதற்கு விதி விலக்கல்ல. பணம் படைத்தவர்களால் கூட, இந்நோயை குணப்படுத்திக் கொள்ள முடிவதில்லை; சிறந்த தோல் மருத்துவரை நாடி செல்ல மட்டுமே பணம் உதவுகிறது.


வெண் படலம் முதலில், கைகள் மற்றும் கால்களில் துவங்குகிறது. மைக்கேல் ஜாக்சனுக்கு முதலில் கையில் தான் வெண் படலம் துவங்கியது. அதை மறைக்கவே, கையில் “கிளவுஸ்’ அணிந்தபடி, பொது இடங்களில் தோன்றத் துவங்கினார். சிலருக்கு மூக்கு, வாய், கண்கள், தொப்புள், பிறப்பு உறுப்புகள், மலம் வெளியேறும் இடங்களில் வெண் படலம் தோன்றும்.பிறகு பரவாமல், அந்தந்த பகுதிகளுடன் நின்று விடும்; சிலருக்கு உடல் முழுவதும் பரவும். உடலின் இரண்டு பக்கங்களிலும் இது ஏற்படலாம். சில பகுதிகளில் தானாகவே சரி யாகி விடும். சில நேரங்களில், மற்ற பகுதிகளுக்கும் பரவும்.வெண் படலம் உருவாக, மரபணுவே காரணம். 17வது குரோமோசோமில் உள்ள சில மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் இது போன்ற நிலை ஏற்படுகிறது. பொதுவாக, இது பரம்பரை நோயாக ஏற்படும். சிலருக்கு, இந்த பிரச்னைக்குரிய மரபணு துண்டிப்பு, உடலில் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் வெண் படலம் ஏற்படாமலேயே போக வாய்ப்பும் ஏற்படும்.எனினும், குடும்பத்தில் ஒருவருக்கு இந்த படலம் தோன்றினால், மற்றவர்களுக்கும் தோன்ற, ஐந்து மடங்கு வாய்ப்பு அதிகம். இதே மரபணு தான், இள வயது நரைக்கும் காரணமாகிறது. சிலருக்கு உடலில் வெண் படலமாகத் தோன்றும். சிலருக்கு இருபது வயதிலேயே நரை தோன்றும். சிலருக்கு, எந்த பாதிப்புமே தோன்றாது.


கவலைகள் அதிகரிக்கும் போது இந்த மரபணு தன் குணத்தை காட்டத் தோன்றும். சில விபத்துக்களாலோ அல்லது ஒவ்வாத உடைகள், ஷூக்கள் அணிவதாலோ கூட, இந்த மரபணு தூண்டப்பட்டு விடும். மாற்றம் கொண்ட மரபணு, உட லில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, “மெலனோசைட்ஸ்’ என்ற நிறமி செல்களை, எதிர்க்கும் செல்களை உருவாக்கி விடுகிறது.எனவே, “மெலனோசைட்ஸ்’ செல்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. தைராய்டு, வயிறு, அண்ணீரக சுரப்பியை (அட்ரினல் கிளாண்டு) பாதிக்கும் நோய் எதிர்ப்பு செல்களால் கூட, வெண் படலம் தோன்றலாம். “சிஸ்டெமிக் லூபஸ்’ என்ற நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சில நேரங்களில், வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்கும். முடி கூட, இதற்கு வெண்மையாகவே இருக்கும். இதற்கு “அல்பீனிசம்’ என்ற பெயர். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களை, “அல்பினோ’ என்றழைப்பர்.


உடலுக்கு, “மெலனின்’ என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பரம்பரையாக ஏற்படுவது தான். தாய், தந்தை இருவருக்குமே இப்படிப்பட்ட மரபணு இருந்தால், குழந்தைக்கு இது போன்று ஏற்படும். இந்த மரபணு கொண்டவர்கள் சாதாரணமாகவே இருப்பர்.அவர்களை அறியாமல், இதே மரபணு கொண்டவர்களை திருமணம் செய்து கொள்ளும் போது, அவர்களுக்கு, “அல்பினோ’ வகை குழந்தை பிறக்கும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வெண் படலம் பரவும் வகையிலான அமைப்பு, பிறப்பிலேயே சிலருக்கு அமையும். இதற்கும் பாரம்பரியம் தான் காரணம்; “பீபால்டிசம்’ என இதற்கு பெயர்.உடலின் எந்த பகுதியிலும் இது ஏற்படலாம். மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு, தலையில் இக்குறைபாடு ஏற்பட்டதால், முன் பக்க முடியின் ஒரு பகுதி மட்டும் வெள்ளையாக இருந்தது. “விடிலிகோ, பீபால்டிசம், அல்பீனிசம், லெப்ராசி’ ஆகிய அனைத்துமே வெவ்வேறானவை. எல்லாவற்றிலுமே வெண் படலம் மட்டுமே கண்ணுக்கு தெரியும். எனவே தோல் பரிசோதனை செய்தால் மட்டுமே, எந்த வகையான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.வெண் படலம் தோன்றினால், நம் உடலில் சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மற்ற இடங்களில் தோல் கருப்பாகி, வெண் படலம் வித்தியாசமாக தெரிய துவங்கி விடும். எனவே, “சன் பில்டர்’ 30 சதவீதம் அடங்கிய, “சன்ஸ்கிரீன்’ லோஷனை, உடலில் வெயில் படும் இடங்களில் பூசிக் கொண்ட பிறகே, வெளியில் செல்ல வேண்டும். குடை விரித்து செல்வது மிக மிக அவசியம்.சிறிய வெண் படலங்களை, சில களிம்புகளைப் பூசி மறைக்கலாம். டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், ஸ்டிராய்டு களிம்புகளும் பூசலாம். எனினும், தொடர்ந்து களிம்பு பூசினால், தோலின் தன்மை கெட்டு விடும்.கி.மு., 1500 ஆண்டிலேயே, இந்தியர்களும், எகிப்தியர்களும் வெண் படலம் குறித்த ஆராய்ச்சியில் இறங்கி விட்டனர். பழங்கள், விதைகள், “சொராலியா கோரிபோலியா லினாஸ், ஆமி லஜுஸ் லினாஸ்’ போன்ற செடிகளின் இலைகளைக் கசக்கி பிழிந்து, அதை உடலில் பூசி, வெண் படலங்களை மறைத்தனர்.


இன்றும் கூட, இந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் வெளிப்பூச்சாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையாக தயாரிக்கப்படும் மருந்துகளும் உள்ளன. அவை அனைத்துமே, சூரிய ஒளியின் தாக்கத்தை எதிர் கொள்ளும் தன்மையில் அமைந்தவை. நிறம் கொடுப்பவை.


இயற்கையான சூரிய ஒளியோ, அல்ட்ரா வயலட் கதிர்களோ, பாதிக்கப்பட்ட இடத்தில் படச் செய்து சிகிச்சை அளிப்பது தான் தற்போதைய நடைமுறை. போட்டோதெரபி மூலமும் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், தோலில் எரிச்சல் தோன்றுவது இந்த சிகிச்சை முறைகளால் ஏற்படும் ஒரு பக்க விளைவு.ஒரு இடத்திலிருந்து தோலை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஒட்டும் சிகிச்சை முறையும் உள்ளது. இந்த சிகிச்சை முறை, 65 முதல் 90 சதவீதமே வெற்றி அடைந்துள்ளது. வெண் படலம் பரவாக கொண்டுள்ள சிலர், மற்ற கருமையான பகுதிகளையும் “ப்ளீச்’ செய்து, வெண்மையாக்கி கொள்கின்றனர்!***
thanks z9
***
"வாழ்க வளமுடன்"

ஈரம்: கூந்தலின் எதிரி !

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான்.சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.


குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.


அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

*

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

***

குளிக்கும்போது…

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும்.

*

அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும். தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும்.

*

தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும்.

*

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும்.

*

அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள்.

*

ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைம் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

***

சீப்பு

உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சப்பை பயன்படுத்துவது நல்லது.

*

சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும்.


***


மசாஜ்

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

***


இயற்கை தரும் அழகு

நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும்.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

பச்சரிசி சாப்பிட்டால் டயாபடீஸ் வரலாம்

பச்சரிசி உணவு குறித்து மாசசூசட்ஸ் நகரின் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.அதில் கூறியதாவது:
பச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரியர்கள் மட்டும் அதிகளவில் பயன்படுத்திய நிலை மாறி அமெரிக்காவிலும் பச்சரிசி உணவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். பச்சரிசி தயாரிக்கும் நடைமுறையில் உமி முற்றிலும் நீக்கப்பட்டு, பாலிஷ் செய்யப்படுகிறது.

*

ஆனால், இயற்கை முறையில் உமி நீக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் மேல் இழை நீடிக்கிறது. அதில் நார்ச்சத்து, மினரல்கள், விட்டமின்கள், பைட்டோகெமிக்கல் பாதுகாக்கப்படுகிறது.

*

இவை அரிசி உணவால் ரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி விடுகின்றன. எனவே, டயபடீஸ் நோயாளிகள் அதைப் பயன்படுத்த முடியும்.

*

பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் சத்துக்கள் அழிவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து டயபடீஸ் ஆபத்து அதிகரிக்கும்.

*

குறிப்பாக, வாரத்துக்கு 5முறைக்கு மேல் பச்சரிசி உணவை சாப்பிடுவதைப் தவிர்ப்பது அவசியம்.


***
thanks "குமுதம்"
***"வாழ்க வளமுடன்"

கறுப்புத் தேநீர் ( or ) எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தினால் நல்லது !

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேநீரை:உலகம் முழுவதும் தேநீர் அருந்தும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இந்த நிலையில் பால் சேர்க்காமல் இதற்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேநீரை அருந்தினால்,தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளை எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, அதிக அளவு உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது.

*

ஜப்பானில் இருபது வயதிற்கு மேற்பட்ட நாற்பதாயிரம் பேரை பதினொரு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆராய்ந்தார்கள்.இவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ள மனிதர்களே.

*

இவர்கள் தினமும் 5 முறை பால் சேர்க்காத கிரீன் டீ அல்லது சாதாரண கறுப்புத் தேநீர் அருந்துபவர்களே. இரு பிரிவினர்களும் பால் சேர்ப்பதில்லை. இவர்களுக்கு இதய நோய் பாதிப்பது 30% உடனடியாகக் குறைந்திருந்ததாம்.


*

இந்தத் தகவல்கள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. எனவே, பால் சேர்க்காமல், விரும்பினால் பாலிற்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தி வாருங்கள்.


***

கறுப்புத் தேநீர் (BlackTea)


லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலை பார்த்த ஒரு குழுவினருக்கு தினமும் இரண்டு கோப்பை கறுப்புத் தேநீர் (BlackTea)அருந்தக் கொடுத்தனர்.

*

இதனால் இவர்கள் மிகவும் அமைதியுடன் நெருக்கடியான சூழ்நிலையிலும் பதற்றமின்றிப் பணிபுரிந்தனர். இதேபோல நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு தேநீரில் எந்த அளவு காஃபைன் சேர்க்கப்பட்டதோ அதே அளவு காஃபைன் சேர்க்கப்பட்ட வேறு பானத்தைக் கொடுத்து வந்தனர்.

*

இவர்களோ மிகுந்த பதட்டத்துடனேயே தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். இருபிரிவினருக்கும் வழக்கமான தேநீர் என்று சொல்லியே பானங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

*

மேலும் கறுப்புத் தேநீர் (அல்லது கிரீன் டீ) அருந்தினால் கார்டிஸோல் என்ற மன இறுக்க ஹார்மோன் குறைவாகச் சுரக்கிறது. இந்த இயக்கு நீர் இரத்தத்தில் அதிகம் கலந்தால் அது, இதய நோய்களை உருவாக்கிவிடும். எனவே, பால் சேர்க்காத தேநீரை அருந்தப் பழகுங்கள்.

*

பால் சேர்த்து அருந்துகிறவர்கள் இரண்டு வேளையாவது கறுப்புத் தேநீர் அருந்தி வாருங்கள். பாலில் கால்சியமும் உள்ளது.

*

காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்களின் இதயத்தை இருபது ஆண்டுகள் ஆராய்ந்தனர். ஒரு இலட்சம் பேரின் காபி அருந்தும் பழக்கம் அவர்களின் இதயத்தை மிகவும் ஆரோக்கியமாக பராமரிப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்த விவரங்களை புகழ்பெற்ற 'சர்குலேஷன்' என்ற மருத்துவ இதழிலும் வெளியிட்டனர்.

*

எனவே, மூன்று வேளை காபி அருந்துகிறவர்கள் ஒரு வேளை கறுப்புத் தேநீர் அருந்தி வாருங்கள். முடிந்தால் எலுமிச்சம் பழத்தையும் இதில் பிழிந்து அருந்தி வாருங்கள்.

*

தேநீர் அருந்துகிறவர்கள் இரண்டு அல்லது மூன்று வேளை மட்டுமே கறுப்புத் (அல்லது கிரீன்டீ) தேநீர் அருந்தி வாருங்கள்.

*

தேநீரோ அல்லது காபியோ அதிகக் கோப்பைகள் அருந்தினால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்.

*

தேநீரைத் தயாரித்து நான்கு நிமிடங்கள் ஆறவைத்த பிறகே அருந்த வேண்டும். அதிகச் சூடு உள்ள தேநீர் நமது உணவுப் பாதையில் 5 மடங்கு வேகத்தில் புற்றுநோயை உண்டாக்கி விடுகிறதாம். எனவே, மிதமான சூட்டில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தும் தேநீர் பழக்கத்திற்கு மாறுங்கள்.

*

உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? உலகில் எவருமே தேநீரில் பால் கலந்து அருந்துவதில்லை.நாம் மட்டும் இத்தவறைத் தொடர்ந்து செய்கிறோம். எனவே நன்கு யோசித்து முடிவு எடுங்கள்!

*

by - கே.டி.எஸ்.


***
thanks "குமுதம்"
thanks கல்கண்டு
***
"வாழ்க வளமுடன்"

சில மருத்துவ துளிகள் !


தினந்தோறும் உடற்பயிற்சி செய்தால் லோ பிரஷர் குறையும்

பெர்லின்:

தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் லோ பிரஷர் குறையும் வாய்ப்புள்ளதாக ஜெர்மன் இருதய வல்லுநர் நார் பெர்ட் செம்டாக் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் நீச்சல் ,சைக்கிளிங், ஜாக்கிங்போன்றவை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறினார். மேலும் தினந்தோறும் குறைந்தபட்மாக 2 முதல் 3 லிட்டர் வரை குடிநீரை பருக வேண்டும்.


அவ்வாறு செய்வதால் புத்துணர்ச்சி கிடைக்க கூடும் எனவும் தெரிவித்தார். லோ பிரஷர் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதில்லை இருப்பினும் அவை உடல் வனப்பை பாழ்படுத்தி விடுகிறது.


பெரும்பாலும் இவை இளம்பெண்கள் மற்றும் பெண்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.***

குளிரால் மாரடைப்பு அபாயம் : ஆய்வில் தகவல்

லண்டன் :

குளிரான சூழலால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கிருஷ்ணன் பாஸ்கரன் மற்றும் அவரது சக பணியாளர்கள் ஆகியோர் நடத்திய ஆய்வில், சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


லண்டனில் ஒரு டிகிரி செல்சியல் தட்வெப்பத்திற்கும் கீழ் குறைந்ததால் 200 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதால், ரத்த அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2003 முதல் 2006ம் ஆண்டு வரை 84,010 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

***


தொடர் வெப்சைட்: இருதயத்துக்கு ஆபத்து

தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. அப்படியானால் இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் டெய்லி மெயில் எனும் மருத்து இதழின் ஆசிரியர் டேவிட் டஸ்டன் கூறுகையில்...
நாம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டரில் பணி செய்வதன் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இணையதளத்தில் முழ்கிவிடுவோம் அவ்வாறு நாள் ஒன்றுக்கு 23 மணிநேரமும் சைட் பார்ப்பவர்களுக்கு 65 சதவீத இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது சாதாரணமாக 11 மணிநேரம் சைட் பார்ப்பவர்களைவிட அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
சாதாரணமாக நாம் நடக்கும் போது, நிற்கும் போது கால்களில் தசைகளில் வேலை செய்கின்றன. இதன் மூலம் உடலில் நம் இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு சீராக உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் போது தான் உடல் ஆக்கச்சிதைவு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால் இருதயம் பலவீனமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது போன்று ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பதும் அதற்கு காரணமாகும். ஆகவே சிறிது நேரம் எழுந்து நிற்பது தான் சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
பெண்களில் ஆறு மணிநேரத்திற்கு மேல் பணியாற்றினால் 37 சதவீதமும், ஆண்களுக்கு 18 சதவீதமும் அதிகரிக்கும் என அமெரிக்காவின் மயோ மருத்துவமனையின் மருத்து பேராசிரியர் ஜேம்ஸ் லேவின் தெரிவித்துள்ளார்.


***

நோய்களை தீர்க்கும் யோகா

யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது. அதற்கெல்லாம் நேரம் ஏது என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் செயல் அல்ல.நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். எல்லா யோகாக்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் போன்ற முக்கியமான யோகாக்களையாவது தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து செய்வதால் நமது ஆரோக்கியத்திற்கு உத்திரவாதத்தை அளிக்க முடியும்.

நாம் உடலை கெடுத்துக் கொள்வதற்காக எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம். காசு கொடுத்து சிகரெட் வாங்கி புகைப்பது, மது அருந்துவது, கண்ணைக் கெடுக்கும் அளவிற்கு தொலைக்காட்சி பார்ப்பது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படி உடலைக் கெடுத்துக் கொள்ள எத்தனையோ விஷயங்களைச் செய்யும் நாம், ஆரோக்கியமாக இருக்க ஏன் இந்த யோகாவைப் பின்பற்றக் கூடாது.
வினை விதைத்தவன் தானே வினையை அறுக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய செயல்களை செய்த நாம்தானே ஆரோக்கியத்திற்கு தேவையான யோகாவையும் செய்தாக வேண்டும்.

நாம் ஆரோக்கியமாக வாழவும், வந்த நோயை விரட்டவும் கூட யோகா பயன்படுகிறது. ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, கருப்பை பிரச்சினை, மூட்டு வலி, கழுத்து வலி என பல நோய்களுக்கும் யோகாவின் மூலமாக தீர்வு காணலாம்.

யோகாவைச் செய்ய வயது வித்தியாசமோ, உடல் எடையோ, பாலினமோ எந்த தடையும் இல்லை. எந்த வயதினரும், எவ்வளவு எடை கொண்டவர்களும் இதனை செய்து பயன்பெறலாம்.

***

ரத்தசோகையும் தீர்வுகளும்


இரும்புச்சத்தின் குறைபாட்டால் அனிமீயா எனப்படும் ரத்த சோகை ஏற்படுகிறது. www.anemia.org என்ற வெப்சைட்டில் ரத்த சோகைக்கு மருத்துவம், உணவுப் பழக்க வழக்கங் களினால் தீர்வு காண்பது குறித்த வழிவகைகள் உள்ளன. இந்த வெப்சைட்டின் சார்பில், ஒரு மாதாந்திர நியூஸ் லெட்டரும் வெளியிடப்படுகிறது.


***

சர்க்கரைக்கும் உடல் எடைக்கும் சம்பந்தம் இல்லை

லண்டன் :

அதிக அளவில் இனிப்பு பானங்களை குடிப்பதால் உடல் எடை கூடும் என கருத்து பரவலாக நிலவி வந்தது. ஆனால் குறைந்த அளவு இனிப்பு பானங்களை குடிப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


எடின்பெர்க்கில் உள்ள குயின் மார்க்ரெட் பல்கலையில் மரியா ரிய்ட், பருமனான பெண்கள் சுக்ரோஸ் பானங்களையும், இனிப்பு உணவினையும் சாப்பிடுவதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படாது என தெரிவித்துள்ளார். பாடிமாஸ் இண்டெக்ஸ் 25 முதல் 30 வரையிலான, 20 வயது முதல் 55 வயதிலான பெண்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.ஆனால் அவர்களின் மனநிலையில் இனிப்பு பானங்கள் அருந்துவதால் எடை கூடுவதாக நினைக்கின்றனர். உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இழப்புகளை இனிப்பு உணவு சாப்பிடுவதால் சரிசெய்து விடமுடியும். எனவே சரிவிகித உணவில் இனிப்பும் ஒன்று. எனவேதான் தமிழர்கள் உணவில் இனிப்பிற்கும் ஒரு பகுதி கொடுத்துள்ளனர்.


***

இதய நோயாளிகளுக்கு பப்பாளி!

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.


பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.

தயாரிப்பது எப்படி?

நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.

இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.***
thanks - தினமலர்
thanks - மாலைமலர்.
thanks "லங்கா"
***"வாழ்க வளமுடன்"

முட்டை: உண்மையும் யூகங்களும்நாம் முட்டை உட்கொள்வதால், எடை கூடி, ரத்தத்தில் கொலஸ்டிராலை அதிகப்படுத்தும் என்ற கருத்து, மக்களிடையே உள்ளது. இது தவறான கருத்தாகும்.

*

ஒரு நாளைக்கு மனித உடலில் 2 ஆயிரம் மில்லி கிராம் கொலஸ்டிரால் உற்பத்தியாகிறது. ஆனால் முட்டையில் இருப்பது 275 மில்லி கிராம் கொலஸ்டிரால் மட்டுமேயாகும்.

*

இந்த மொத்த கொலஸ்டிராலில் 33.5 சதவீதம் உறைந்த கொழுப்பும் 66.5 சதவீதம் உறையாத கொழுப்பும் உள்ளன.

*

இதில் 33.5 சதவீதம் உள்ள உறைந்த கொழுப்பு தான், உடலுக்குத் தீமை செய்யும் கொழுப்பாகும். இதனை உட்கொள்ளும் போது, இதன் அளவைப் பொறுத்து உடலில் உள்ள கொலஸ்டிரால் உற்பத்தியின் அளவு குறையும்.

*

உணவில் உட்கொள்ளும் கொலஸ்டிராலை விட, ரத்தத்தில் உற்பத்தியாகும் கொலஸ்டிராலே உடல் நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

*

இந்த உற்பத்தி மரபணுக்களைச் சார்ந்துள்ளது. எனவே இது தனி நபர்களைப் பொறுத்து அமைகிறது.


***
thanks 'தினகரன்'
***"வாழ்க வளமுடன்"

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க 8 வழிகள் !

பிரித்தானியாவில் இறப்புக்கு அதிகம் காரணமாக இருப்பது மார்படைப்பு. தற்போது உயிர் காக்கும் மருந்துகளின் உதவியால் பலர் பிழைக்கின்றனர் என்றாலும் கூட மீண்டும் மார்படைப்பு எப்போது வரும் என்பது தெரியாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால் இதய ஆரோக்கியத்தை பேண சில எளிய பயனுள்ள வழிமுறைகளை உங்களுக்காக அளிக்கிறது தமிழ் சி.என்.என்.

மன அழுத்தம் என்பது இயல்பாக மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. சில ஹார்மோன்கள் இவற்றை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன.

*

அதையும் தாண்டி அதிகமான மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்தில் கோளாறு உருவாவதாக கூறுகிறது மருத்துவத்துறை. இன்னொரு முக்கியமான காரணம் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கவழக்கங்கள்.

*

இதய பலவீனத்திற்கு புகை பிடிப்பதும் புகையிலை சார்ந்த பிற பொருட்களை பயன்படுத்துவதும் மிக முக்கிய காரணம். கீழ்கண்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மார்படைப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் எனபதால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லது.

**

1. அடிக்கடி உணர்ச்சிவயப்படுதல்2. எப்போதும் கவலையுடன் இருத்தல்3. தினசரி செய்ய வேண்டிய வேலைகளை கூட செய்ய முடியாமல் திணறுதல்4. வழக்கத்திற்கும் அதிகமாக உறுதியில்லாத நிலையில் இருப்பதாக உணர்தல்5. மிக குறைவான பசி * ஒருமுகச் சிந்தனையில் சிரமம்6. சரியான தூக்கமின்மை


**


இதயத்தை பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள்:1. ஓய்வெடுக்கும் போது தசைகளை தளர்ச்சியாக வைத்துக் கொண்டு , அது தொடர்பான உடற்பயிற்சிகளை மட்டும் செய்தல்.

*

2. நாம் சாப்பிடக் கூடிய காய்கறிகள், பழங்கள் , தானியங்கள் அனைத்திலும் கார்போஹைட்ரேட் இருக்கும். அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் தருகிறது.

இதிலும் இரண்டு வகைகள் உண்டு.

ஒன்று எளிய கார்போஹைட்ரேட் உணவு மற்றுமொன்று கடின கார்போஹைட்ரேட்.

1. கோதுமை பாஸ்தா, கோதுமை ரொட்டி, தானியங்கள், சிகப்பு அரிசி, ஓட்ஸ், கோதுமை நூடில், உருளைக்கிழங்கு போன்ற உணவுப்பொருட்களில் இருப்பவை கடின கார்போஹைட்ரேட். இவற்றில் ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து அதிகாமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த வகை உணவுகள் சக்தியை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடும் ஆற்றல் கொண்டவை என்பதால் இது போன்ற உணவுப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

*

3. இதய தசைகள் பலவீனமாகி உடலின் பல பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலையில் பெரும்பாலும் இதயத்தில் கோளாறுகள் உண்டாகும். அதனால் செரிமானக்குறைவு ஏற்ப்பட்டு வயிற்று வலிகளும் உண்டாகலாம். எனவே அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் போதே அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

*

4. மன அழுத்தம் பல்வேறு வகைகளில் ஏற்படலாம். இதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒருவர் மனஅழுத்தத்தாலேயே இந்த நோய்க்கு ஆளாவதாக மருத்துவ குறிப்புக்கள் கூறுகின்றன. எனவே எப்போதும் மனதை இலேசாக வைத்துக் கொள்ளவும் மகிழ்ச்சியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் பழகுவது நல்லது.

*

5. உடல் பருமனாக இருப்பவர்கள் கூட உடற்பயிற்சி, தினமும் 2 மைல் நடை ஆகிவற்றை செய்து உடலை திடமாக வைத்திருந்தால் இதய நோய் வருவது குறையும்.

*

6. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட உடற்பயிற்சி செய்யலாம். அதற்கென தனியே எளிய உடற்பயிற்சிகள் உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது நல்லதே.

*

7. இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய பானங்களையும், மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் கடைபிடிப்பதும் சிறந்தது.

*

8. ஆல்கஹால் கலந்த பானங்களை அளவோடு மிக குறைவாக குடிப்பதால் இதயத்திற்கு கெடுதல் இல்லை என்றும் அதே நேரம் அதுவே அளவுக்கு மீறினால் மார்படைப்பு உண்டாக வழிவகுக்கும் எனவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "