இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
*
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
***
வசம்பின் மருத்துவ குணங்கள்:

1. சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
2. * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
*
3. இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
*
4. கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
*
5. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.
*
6. முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
*
7. விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு
*
9. குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி.
*
10. பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குத் தொண்டையில் படியும் "அக்கரம்" நீங்க, தினந்தோறும் உள்நாக்கில் தேனில் குழைத்த வசம்பு பொடி தடவி வரலாம். இது உடனடியாக உடனே உறிஞ்சப்படுவதால் "அக்கரம்" நீங்கும்; மூளை தூண்டப்படும்; கபம் சேராது; நல்ல ஜீரணசக்தி வரும்; மந்தம், மலச்சிக்கலும் வராது.
*
11. திருநீற்றுப் பச்சை இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது.இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும்.
*
12. வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.
*
13. பேரரத்தை, கொன்றைப்பட்டை, தேவதாறு, அதிமதூரம்,திராஷை, திப்பிலி, காட்டுமிளகு, நன்னாரிவேர், வெள்ளைச்சாரணை வசம்பு, ஜடாமாஞ்சி, சதாப்பிலை, கோரைக்கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, கோஷ்டம், இலவம்பிசின், கொத்தமல்லி, ஆலம்விழுது, அவுரிவேர், சுக்கு, இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.
*
14. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்
*
15. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
*
16. வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம். இது ஞாபக சக்தி பெருக உதவும்.
************
நான் வசம்புக்கு தேடி எனக்கு கிடைத்த தகவல் வைத்து இதில் இட்டு உள்ளேன்.
*
நன்றி. மகலிங்கம் த
*****