...

"வாழ்க வளமுடன்"

30 மார்ச், 2011

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும். * ஆடை - உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகலுக்கு உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும் * வேக நடை - அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள். * நிமிர்ந் நிலை - எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது , தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ளவர்கலின் கண்களை நேரே பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை உண்டாக்கும். * கேட்பது - நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள். * நன்றி - உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும். * மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே "நெகட்டிவ்" ஆக நினைக்கும்போது மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். * முன்னால் உட்காருங்கள் - மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை, பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில் உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும். * பேசுங்கள் - சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை உங்களை தேடி வரும். * உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும். * நாடு - நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும் பற்றியும் சிந்திக்க வேண்டும். "கடமையை செய் பலனை எதிர்பாராதே" இது நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..! ** இந்த தன்னம்பிக்கை நமது எல்ல திறனையும் வெளிக்காட்ட உதவும்.இவற்றை நாளைக்கு நாளைக்கு என தள்ளி போடமல் இன்றே முடிவு செய்து தொடங்குங்கள். இனி வெற்றி உங்கள் பக்கமே..! *** thanks google *** "வாழ்க வளமுடன்"

பாம்பு பால் குடிக்குமா குடிக்காதா ?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை. பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள். பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன. பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள். பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது. பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும். பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர். மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும். *** thanks google *** "வாழ்க வளமுடன்"

ஹரிக்கேன் விளக்கு உங்கள் அனைவருக்கும் நினைவு இருக்கா?

* ஹரிக்கேன் விளக்கு...கால ஓட்டத்தில் காணாமல் போனவை ..!

தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர். பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது. ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.


இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...


மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி ( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில் அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும், இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி.... *** thanks ஜாக்கிசேகர். *** "வாழ்க வளமுடன்"


மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை :)

மின்சார கணக்கை நாமே சோதனைசெய்யலாம் . பெரும்பாலும் நாம் மின்சார அலுவலர் ரீடிங் எடுத்து அவர் குறித்து கொடுக்கும் தொகையை கார்டில் குறித்து அதை அப்படியே மின் அலுவலகத்தில் சென்று பணம் கட்டி வருகிறோம். அந்த தொகை சரியானதா? ரீடிங் சரியா - மின்தொகை ரூபாய் சரியா என பெரும்பாலானோர் சரிபார்ப்பதில்லை. சரி அதை எப்படி சரிபார்ப்பது. கீழே கொடுத்துள்ள கணக்கு அதற்கு உதவும். முதலில் தற்போதைய ரீடிங் அளவை குறித்துக்கொள்ளவும். அதன் கீழே முன்மாத அளவை குறித்துக்கொள்ளவும். புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங் அளவை கழிக்கவும். உதாரணம்:- தற்போதைய ரீடிங் 0516 பழைய ரீடிங் 0330 ---------- ரீடிங் அளவு 186 யூனிட்கள் -------- கணக்கு போட தோதாக ரவுண்ட் டாக மாற்ற (180யூனிட் என -கணக்கீட்டாளர்களும் கணக்கு போடஅப்படியே செய்வார்கள்) 180 என குறித்துக்கொள்ளுங்கள். 1< 50 unit வரை 0.75 காசு எனில் தொகை = ரூ.37.50 51< 100 unit வரை 0.85 காசு எனில் தொகை =ரூ.42.50 மீதி 80 unit வரை 1.50 காசு எனில் தொகை= ரூ.120.00 --------- மொத்தம் ரூ.200.00 நிர்ணய கட்டணம் ரூ. 10.00 ---------- ஆக மொத்தம் ரூ.210.00. ---------- இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்த மின்கட்டண விகிதம் ----------------------------------------------------------------------------------- 1 முதல் 50 யூனிட் வரை - 0.75 (பைசா) ஒருயூனிட்டுக்கு 51 முதல் 100யூனிட் வரை -0.85 (பைசா) ஒருயூனிட்டுக்கு 101 முதல் 200யூனிட் வரை ரூ -1.50 ஒருயூனிட்டுக்கு 201 முதல் 601யூனிட் வரை ரூ -2.20 ஒருயூனிட்டுக்கு 601யூனிட்டுக்கு மேல் ரூ -3.05 ஒருயூனிட்டுக்கு -------0O0------- யப்பா எனக்கு இந்த கணக்கெல்லாம் போட வராது. அட போப்பா வேறுவேலை இல்லை என்கிறீர்களா.

உங்களுக்கான அட்டவணையை இணைத்துள்ளேன். பார்த்து கணக்கை தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை கணக்கீட்டாளர்கள் வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா என சோதனை செய்து கொள்ளுங்கள் உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.
இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே. மற்ற மின் உபயோகத்திற்கான அட்டவணையை தங்கள் மேலான ஆதரவு கண்டு வெளியிடுகின்றேன்.*** thanks vealan *** வாழ்க வளமுடன்"


குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது. போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. 2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம். இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப். குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள். அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் ! *** thanks nwes papaer *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "