...

"வாழ்க வளமுடன்"

06 ஜூலை, 2011

நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க சூப் & ... :)



நம் உடலில் நச்சுப்பொருட்கள் எவ்வாறு சேருகின்றன? சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்து உருவாகும் தூசி, மாசுகள் தவிர நாம் உண்ணும் உணவிலிருந்தும் நம் உடலில் குடிகொள்கின்றன.


நச்சுப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுவதால், ஆரோக்கியம் சீரடைகிறது. ஆயுர்வேதம் தொன்று தொட்டு உடலை விஷப்பொருட்கள் இல்லாமல் வைப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விடுகிறது. அதற்காக சிறந்த சிகிச்சை முறையான “பஞ்சகர்மா” வை உருவாக்கியது.


தவிர சிகிச்சை முறைகளின்றி உணவு முறைகளாலேயே நச்சுப்பொருட்களை விலக்கும் வழிகளையும் ஆயுர்வேதம் சொல்கிறது. நச்சுப்பொருட்களை நீக்குவதால் உடலின் ஜீரணசக்தி மேம்படுகிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகளை உருவாக்கும். அஜீரணம் களையப்படுகிறது.

தவிர அஜீரணம் களைப்பு, பசியின்மை, வாயில் துர்நாற்றம், பிரட்டல் இவற்றையும் உண்டாக்கும். ஆயுர்வேதம் கெடுதலை உண்டாக்கும் வேதிப்பொருட்களை உணவிலிருந்து தவிர்க்கவும். உடலை சுத்திகரிக்கும் உணவுகளையும் பரிந்துரைக்கிறது.


நச்சுப்பொருட்கள் நீங்கினால் உடல், லேசாகி, வலிமை நிறைந்து, நல்ல ஜீரண சக்தியால் சுறுசுறுப்புடன் செயலாற்றும்.
ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். அந்தந்த தோஷங்களுக்கு ஏற்றவாறு, நச்சுப்பொருட்களை நீக்கும் சூப் வகைகளை கீழே தரப்பட்டுள்ளன.


***

வாததோஷத்திற்கேற்ற சூப்:


தேவை

பாஸ்மதி அரிசி – 1/4 கப்
சுத்தமான தண்ணீர் – 6 (அ) 8 கப்
நறுக்கிய கீரை – 1/2 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
நறுக்கிய பீட்ரூட் – 1/4 கப்
துருவிய வெள்ளை முள்ளங்கி – 1 டே.ஸ்பூன்
கருமிளகு பொடி – 1/8 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/8 டீஸ்பூன்
தனியாப்பொடி – 1/8 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
இந்துப்பு (அ) உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை கழுவி நீரை வடிகட்டவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரிலிட்டு கொதிக்க வைக்கவும்.
அரிசி, காய்கறிகள், இஞ்சி, சீரகம், தனியா இவற்றை கொதிக்கும் நீருடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
பாத்திரத்தை மூடி சிறு தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் சமைக்கவும்.

உப்பையும், மிளகையும் சேர்க்கவும்.
ஒரு கரண்டியால் வெந்த காய்கறிகளை பாத்திரத்தின் பக்கவாட்டில் நன்றாக நசுக்கவும்.
வடிகட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.


***

கபதோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்:

தேவை

சுத்தமான தண்ணீர் – 4 – 6 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1/4 கப்
நறுக்கிய பச்சைக்கீரை – 1/2 கப்
கருமிளகு – 6 – 8
இஞ்சி – 1 – 2 சிறு மெல்லிய துண்டுகள்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்தையும் போட்டுக் கலக்கவும்.

கலவையை கொதிக்க வைக்கவும்.

இளந்தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கொதிக்க விடவும்.

நன்கு வெந்த பின் காய்கறிகளை கரண்டியால் நசுக்கவும். வடிகட்டி உபயோகிக்கவும்.



***


பித்ததோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்:


தேவை

பாஸ்மதி அரிசி – 1/4 கப்
சுத்தமான தண்ணீர் – 6 – 8 கப்
நறுக்கிய கீரை – 1/2 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
பெருஞ்சீரகக் கிழங்கு நறுக்கியது – 1/4 கப்
பெருஞ்சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/8 டீஸ்பூன்
தனியாப்பொடி – 1/8 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன்
இந்துப்பு (அ) உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை

அரிசியை கழுவி நீரை வடிகட்டவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரிலிட்டு கொதிக்க வைக்கவும்.
அரிசி, காய்கறி, பெருஞ்சீரகம், சீரகம், தனியா இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இளந்தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கொதிக்க விடவும்.

ஒரு கரண்டியால் வெந்த காய்கறிகளை பாத்திரத்தின் பக்கவாட்டில் நன்றாக நசுக்கவும்.

வடிகட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

***

இதர நச்சு அகற்றும் பொருட்கள்

நச்சு அகற்றும் வாசனை திரவியங்கள் (மசாலா மிக்ஸ்) சில வாசனை திரவியங்கள் உடலிலிருந்து நச்சு அகற்றுவதற்கு மிகவும் உதவுகின்றன.

இந்த மசாலாப் பொடிகளை காய்கறிகளிலும், சூப்புகளிலும் பயன்படுத்தலாம். இவற்றை ஒரு முறை செய்து கொண்டும் தினசரி உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்.


உபயோகிக்கும் முன்

(பருப்பு, காய்கறிகளில்) நெய்யில் வறுக்கவும்.


ஒரு பாகம் மஞ்சள் பொடி,
இரண்டு பாகம் சீரகப் பொடி,
மூன்று பாகம் தனியாப்பொடி,
நான்கு பாகம் பெருஞ்சீரகப்பொடி.


இவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

***


நச்சு அகற்றும் டீ

இவற்றை காலையில் எடுத்துக் கொள்வது நல்லது. அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.


இத்துடன் கால் டீஸ்பூன் சீரகம்,
அரை டீஸ்பூன் தனியா,
அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து பத்து நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.

வடிகட்டி ஒரு தெர்மோ பிளாஸ்கில் ஊற்றி நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.

***

நச்சு அகற்றும் பாகற்காய்

பாகற்காய் உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு சிறந்த காய்கறி. பாகற்காய் சாறு, கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு, தேன் – இவை ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நன்றாகக் கலந்து குடிக்கவும்.



***
thanks உணவு நலம்
***




"வாழ்க வளமுடன்"

வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் ?



பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வகை புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.


வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது.


மருத்துவ பயன்கள்

வேரின் பொடி குளிர்ச்சி தருகிறது. காய்ச்சல், வயிறு எரிச்சல் போன்றவற்றிர்க்கு சுகமளிக்கிறது. வெப்பம் தணிக்க பசையாக பூசலாம். இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.


உற்சாகம் தரும்

வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சி உண்டாகும்.

கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.


குளுமை பரவும்

இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்கும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.


வயிறு உபாதைகள் நீங்கும்

கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

வேரிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெயினை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.



***
thanks ஞானமுத்து
***




"வாழ்க வளமுடன்"

சேனைக்கிழங்குகளின் (கருணை கிழங்கு ) மருத்துவ குணங்கள்


ஈரம் நிறைந்த உஷ்ணப்பிரதேசங்களில், ‘டியாஸ்கோரியா’ இனத்தைச் சேர்ந்த கிழங்குகள், அவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், பரவலாக பயிரிடப்படுகின்றன. இவை தான் ஆப்ரிக்கா ஆசிய தென்அமெரிக்கா மற்றும் கடல் தீவுப்பிரதேசங்களில் வருடம் முழுவதும் பயிரிடப்படும் கொடியின வகைகள்.


சேனை கிழங்குகள் தான் லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு. இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப்படுகின்றன.


இந்த கிழங்கு செடி வகைகளை சுலபமாக பயிரிடலாம். இவைகளை நோய், நொடிகள் தாக்குவதில்லை. கிழங்குகளையே நட்டு பயிரிடலாம். கிழங்குளை சுலபமாக சேமித்து வைக்கலாம். பயிரிட்ட பின் 8 (அ) 10 மாதங்களில் பலன் தரும். அளவிலும், நிறத்திலும் ரகத்துக்கு ரகம் மாறுபடும்.


சேனை கிழங்குகள் 2.5 மீட்டர் வரை நீண்டும், 70 கிலோ வரை எடையுடனும் வளர முடியும். கரடு முரடான தோலை ‘உரிப்பது’ கடினம். சூடாக்கினால் மிருதுவாகிவிடும். சுலபமாக தோலை எடுக்கலாம். தோல்கள் வெளிர் சிவப்பு அல்லது பழுப்பு நிறங்களில் இருக்கும். இந்த இனக்கிழங்குகள் பெரும்பாலும் மாமிசம் போல் அதிக அடர்த்தியான பொருள் செறிந்திருக்கும். இந்த கதுப்புப் பொருள் முற்றிய காய்களில் வெள்ளை முதல் ஆரஞ்சு நிறம் வரை மாறுபடும்.


மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன.

இன்று வரை இந்த பிரதேசங்களின் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தக்கிழங்குள் இன்றியமையாதவை. குளிர்சாதன வசதியின்றி 6 மாதம் வரை இந்த கிழங்குகளை பாதுகாக்கலாம். எனவே மழைக்கால உணவு பஞ்சத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.


சேனைக்கிழங்குச் செடி


இந்த கிழங்குகளில் டயாஸ்கோரின் ஒரு ‘விஷ’ காரம் உள்ளது. ஆனால் குறைந்த அளவில் இருக்கிறது. கிழங்குகளை வேக வைத்தால் இந்த விஷம் அழிந்து விடும்.


டயாஸ்கோரின் தவிர, இந்த இன கிழங்குகளில் ஸ்டீராய்டுகளான சபோஜெனிங்களும் உள்ளன. எனவே இந்த கிழங்குகளை, சமைத்துத் தான் சாப்பிட வேண்டும்.


பச்சையாக உண்ணக் கூடாது. உண்டால் வியாதிகள் வரும்.
சில வகைகள் வெள்ளை மற்றும் மஞ்சள் வகைகள் ஆப்ரிக்க இனத்தை சேர்ந்தவை. இவற்றினிடையே 200 வகைகள் உள்ளன!


இவை பிரம்மாண்ட கொடி வகைகள்! 10 லிருந்து 12 மீட்டர் நீளம் உடையவை. கிழங்குகள் 25 கிலோ வரை எடை இருக்கும். நல்ல 7 லிருந்து 12 மாதங்களில் கிழங்குகளை ‘அறுவடை’ செய்யலாம்.
பெரும் வள்ளி கிழங்கு – இந்தியா முழுவதும் பயிராகும் இந்த கிழங்கு வாட்டர் யாம், விங்டட் யாம், மற்றும் பர்பிள் யாம் என்று சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் முதலில் பயிரிடப்பட்டிருக்கிறது.


ஆப்ரிக்க கிழங்கு போல் அளவில் அதிகமில்லாவிட்டாலும், ஆசியா, பசிபிக் தீவுகள், மேற்கிந்திய தீவுகள், ஆப்ரிக்கா முதலிய இடங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது.


கொடிக்கிழங்கு – இந்த வகை கிழங்குகள் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் பயிரிடப்படுகின்றன. கொடிகள் 6 மீட்டர் நீளம் வரை வளரும். கிழங்குகள் இருக்கும். ஆனால் இவற்றை விட கொடியின இலைகளின் கீழ்வளரும் உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகள் தான் முக்கிய உணவுப்பொருள்.


இவை அரைகிலோவிலிருந்து 2 கிலோ எடை இருக்கும். கொடிக்கிழங்குகளை விட இதர ரகங்கள் அதிக ருசி உடையதாக இருப்பதால் இவை வர்த்தக ரீதியாக பயிரிடப்படுவதில்லை.



வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. நான்கு மாதங்களிலேயே பலன் தரும் கொடிகள் 2 வருடம் வரை காய்களை தரும்.


சிறுவள்ளிக்கிழங்கு தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. அங்குதான் இன்றும் பயிரிடப்படுகிறது. உலகின் வேறு இடங்களில் பயிரிடப்படுவதில்லை. இதன் கொடிகள் 3 மீட்டர் நீளம் வளரும். கிழங்குகள் சிறியவை. உருளைக்கிழங்கு போல் வேக வைத்து, வறுத்து உண்ணப்படுகின்றன.


சுவையுள்ள இந்த கிழங்குகள் எதிர்காலத்தில் இன்னும் பிரசித்த ஆகுமென்று எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த ரகம் பயிரிடப்படுகின்றது. இந்த கிழங்குளை அதிக நாள் வைத்திருக்க முடியாது.



ஊட்டச்சத்துக்கள்

டயாஸ்கோரியா இன கிழங்குகளில், விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி – 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி 6 – இவை ஆரோக்கியத்தை பாதுகாப்பவை.

தவிர பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாக இருப்பது நல்லது. இதனால் எலும்பு அடர்த்தி குறைபாடும் ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. பூரித கொழுப்பு குறைவாக இருப்பதும் நல்லதே. இதயம் பாதுகாக்கப்படும்.

உருளை ரகங்களை விட, சேனைக்கிழங்கு வகைகள் சர்க்கரை குறைந்தவை. குறைந்த கிளைசமிக் அளவுகள் உள்ளவை. நீடித்து இருக்கும் சக்தியை கொடுப்பது மட்டுமன்றி, நீரிழிவு, அதீத உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்.



***
thanks Make Web Designs
***





"வாழ்க வளமுடன்"

இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்



எல்லா அப்பா , அம்மாகளுக்கும் தங்களுடைய பிள்ளைகள் எல்லாவற்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கூறி விட்டு , சில அப்பா,அம்மாகள் தங்களுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து TV பார்த்து பிள்ளைகளை பாதிக்க செய்கிறார்கள்.தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கி சிறுவர்களுக்கு உரிய TV நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பதே நல்லது.


தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் சில விளைவுகளை இங்கு பார்க்கலாம்

முரட்டுத்தனம்

ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200 000 சண்டை காட்சி களையும் , 50 000 கொலைகளையும் தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது.

அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது , 1 - 3 மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும்,22 .5 % ஆன சிறுவர்கள் மற்றயவர்களுடன் சண்டை,களவு என்பவற்றில் ஈடுபட்டுள்ளார்கள்.



05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது இந்த 22 .5 % - 28 .8 % க்கு உயர்வடைகிறது. இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும் குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5 .7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் . இதற்கு, வீடுகளில் சிறுவர்கள் பெற்றோரால் துன்புறுத்தப்படுவதும் ஒரு காரணியாக அமைகிறது .


தனிமை போல உணருதல்

சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் மாட்டுபட்டு இருப்பது போல காட்டுவார்கள் . அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள் .

படமாக இருந்ததால் 02 மணித்தியாலங்களுக்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின் நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடு படுவது போல காட்டுவார்கள்.

இவ்வாறான படங்களயும் , நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது நடிக நடிகைககளை Role Model ஆக பின்பற்றும் இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள் ., காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் [ விளையாட்டு பொருட்கள் ] கதைத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் .


ஒரு விடயத்தில் கவனம் [ concentration ] செலுத்த முடியாமை

சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சி நிகழ்சிகள் மிகவும் வேகமாகவும், நிறங்கள் அதிகமானதாகவும் , மிகவும் தெளிவாகவும் காட்டப்பட்டு இருக்கும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள். பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாகவும் , குறைந்த நேரம் மட்டுமே படிப்பிக்க வேண்டும் என இந்த சிறுவர்கள் எதிர் பார்க்கிறார்கள் .



சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறு கிறார்கள்.ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணித்தியாலங்கள் சிறுவர் களுக்கு TV பார்க்கவும் ,Games விளையாடவும் கொடுத்தபோது அநேக மானோர் சிறிது நாட்களின் பின்னர் பாடங்களில் கவனம் செலுத்த சிரமப் பட்டுள்ளார்கள்.


கனவுகளை மாற்றுகிறது

எங்களில் அநேகமானோருக்கு கனவுகள் [Dreams ]கருப்பு வெள்ளையில் தான் வருகிறது . 50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி [ இவர்களில் பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் , பாதிபேர் 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் ] ,இவர்கள் காணும் கனவுகளை ஒரு புத்தகத்தில் குறித்து வைக்க கூறி உள்ளார்கள் .

இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேக மானோர் கண்ட கனவுகள் பல நிறங்களாக [colourful ] உள்ளது . 55 வயதுக்கு மேற் பட்டவர்களில் அநேகமானோர் கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் வந்துள்ளது .55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது .


என்ன பார்க்கிறோம் என அறியாத வயது

தற்போது குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் தொலைகாட்சிகளில் போகும் பாட்டுகளுக்கு தனது கால்களை அசைத்து நடனம் ஆடுகிறது .இதை வீட்டுக்கு வரும் எல்லோரிடமும் பெற்றோர்கள் பெருமையாக சொல் கிறார்கள்.29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,


அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் கணக்கு பாடத்தில் குறைவான புள்ளிகளையும் , வகுப்பறைகளில் சோம்பலாகவும் இருப்பதாக கூறுகிறார்கள் .பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது .


உடல் பருமன்

TV ஐ தொடர்ந்து பார்ப்பதால் நாம் மற்றைய வேலைகளை செய்யாது ஒரே இடத்தில் இருந்து கொண்டு நொறுக்கு பண்டங்களை சாப்பிடும் போது calories இழக்கப்படாது உடல் பருமன் அசுர வேகத்தில் கூடி விடுகிறது . நடத்தப்பட்ட ஆராச்சியில் TV ஐ குறைவாக பார்த்தோர் , தினமும் 05 மணித்தியாலங்கள் TV ஐ பார்த்தோரை விட 120 calories ஐ இழந்துள்ளார்கள்.

இவற்றில் இருந்து விடுபட முயல்வதே சிறந்தது :)




***
thanks nishole
***




"வாழ்க வளமுடன்"

Fast Food கடைகளின் அந்தரங்கங்கள்



நாங்கள் எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.


ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.


1 .வரலாறு


•1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.

•1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது.

•1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.

•1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது




2 .சந்தை நிலவரம்


•McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion

•YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut ) $11.3 Billion

•Wendy 's & Arby 's இன் வருமானம் 6 700 locations களில்இருந்து $3.6 Billion

•Burger King இன் வருமானம் 11 200 locations களில்இருந்து $2.5 Billion



3.McDonald 's இன் சந்தை நிலவரம்


•126 நாடுகளில் இயங்குகிறது

•400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்

•அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன

•US இல் மாடு,பன்றி இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்



4 .Super Heavy users


•இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்

•75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது

•60 % sales Drive Through மூலம் நடக்கிறது



5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்


•61 % - கொங் Kong
•59% - மலேசியா
•54% - பிலிப்பைன்ஸ்
•50% - சிங்கபூர்
•44% - தாய்லாந்து
•41% - சீனா
•37% - இந்தியா
•35% - அமெரிக்கா
•14% - இங்கிலாந்த்து
•03% - சுவீடன்



6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு

45 - Jack In The Box
62 - Taco Bell
84 - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை
98 - Subway
98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ கையாளல்
102 - KFC - காலாவதியான இறைச்சி
111 - Burger King
115 - Arby 's
118 - Hardee 's
126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை



7 .பயங்கரம்

•ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்

•McDonald 's அநோமதய விலங்கு பொருட்களில் இருந்து சுவை ஊட்டப்படுகிறது

•Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை கொண்டது.

•Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது

•ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது



8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்


•Sodium Phosphate - Fast Food Coffee
•Titanium Diaoxcide - fat free ranch dressing
•Dimethylpolysiloxane - McNuggets
•Azodicarbonamide - Sub way bread
•Diacetyl - Milk Shake


***
thanks nishole
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "