...

"வாழ்க வளமுடன்"

17 ஜூன், 2011

பல் வலி, கூசுதல், அரணி சரியாக ....பல் உறுதியாக – மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெரும்.

பல் நோய் – மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது.

பல்வலி நிவாரணம் பெற – கோவைப்பழம் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை வராமல் இருக்க – செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.

பல் ஆடுதல் – மகிழ மறக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும்.

பல்வலி நீங்க – ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.

பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற – ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.

பல்லரணை – கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.

பல் உறுதியாக – குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

பற்கள் உறுதியாக – பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்துவர உறுதியாகும்.

பல் வலி, பல் அரணை தீர – கண்டங்கத்திரி பழத்தை நெருப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும்.

பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர – புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.

பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க – பேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பல் உறுதியாக – காலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல் துலக்கி விடுவது மிக நன்று.

ஈறு பலமடைய – மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.***
thanks uma
***"வாழ்க வளமுடன்"

ஆரோக்கியமான காய்கறிகள்வெண்டைக்காய் :

குளிர்ச்சியான தன்மை கொண்டது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.கத்தரிக்காய் :

இதில் பல வண்ணங் கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன.அவரைக்காய் :

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.புடலங்காய் :

நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளை போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.சுரைக்காய் :

இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.


***
thanks சிவா
***"வாழ்க வளமுடன்"

உடனடி, வீட்டு மருத்துவக் குறிப்புகள்சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.


வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.


உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.


வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.


ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.***
நன்றி YAHOO தமிழ்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "