...

"வாழ்க வளமுடன்"

22 ஜனவரி, 2010

அதிசயங்களின் அணிவகுப்பு! - 3

அங்கோர் வாட்:
தாஜ்மஹால்:

மாச்சு பிச்சு-பெரு: " மேகங்கள் உரசும் நகரம் "



7 உலக அதிசயங்கள்

இந்த‌ படத்தை கிளிக் பண்ணிப் பாருங்க.

அதிசயங்களின் அணிவகுப்பு! - 2

சுதந்திரதேவி சிலை:
அமெரிக்கா என்றதும் நினைவுக்கு வரும் விஷயம், சுதந்திரதேவி சிலைதன்.பிரான்ஸ் அரசாங்கத்தால் பரிசளிக்கப்பட்டுள்ள இந்த சிலை அமெரிக்கர்களின் பேராதரவுடன் உலக அதிசயங்களின் லிஸ்ட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாம்.

எகிப்திய பிரமிடுகள்:
எகிப்திய மம்மிகளும், பிரமிடுகளும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளதற்கான காரணத்தை சொல்லத் தேவையில்லை.இப்போதுள்ள உலக அதிசயங்களில் மிகப் பழமையான எகிப்திய பிரமிடுகள், அடுத்த அதிசய லிஸ்டிலும் இடம் பெறத் துடிக்கிறது.


ஓபரா ஹவுஸ்:

நவீன ஓவியத்தின் மாடலில் சிட்னி நகரில் 1973ல் கட்டப்பட்டது தான் இந்த ஓபரா ஹவுஸ்.தாமரை இதழ்கள் விரிவதைப் போன்றது இதன் வடிவமைப்பு.மிகக் குறுகிய காலகட்டத்திலேயே ஆஸ்திரேயாவின் புகழ்பெற்ற சின்னமாக மாறியது.

ஸ்டோன்ஹென்ச்:
இங்கிலாந்தில் உள்ள அமெஸ்பரி நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன நகரம் இது.கி.மு. 1600ல் பிரமாண்டமான பாறைகளால் இங்கு சிறு சிறு கோயில்களை போன்ற அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இவை கோயில்களா அல்லது அப்போது வாழ்ந்த புகழ்மிக்கவர்களின் கல்லறையா என்பது பற்றி ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது.

திம்புக்டு:
அரபு உலகத்துக்கும் ஜரோப்பா கண்டத்துக்கும் ஒரு காலத்தில் இணைப்பு பலமாக விளங்கிய நகரம்தான் மாலியின் திம்புக்டு.பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை நினைவுபடுத்தும் இந்நகரம், ஒரு காலத்தில் உலகின் பணக்கார நகரமாக இருந்ததாம்.

பெட்ரா:
அரேபியா பாலைவனத்துக்கு நடுவே, முதலாம் நூற்றாண்டில் ஜோர்டனில் கட்டப்பட்ட நகரம் தான் பெட்ரா.பிரமாண்டமான சுரங்கங்களும், நாடக அரங்கங்களும் இந்த நகரத்தின் அழகுக்கு பிளஸ்பாயின்ட்.


தாஜ்மஹால்:
இந்த லிஸ்டில் இந்தியாவுக்கு உள்ள ஒரே சந்தோஷம் தாஜ்மஹால் தான்.
காதலின் சின்னமான இந்த கட்டடம் லிஸ்டில் தொடர்ந்து இடம் பிடிக்க வேண்டும்.
ஷாஜகானின் சின்னம்; உலக அதிசயங்களின் சின்னம்!

நன்றி சிறுவர்மலர் ( 2007 )

அதிசயங்களின் அணிவகுப்பு! - 1

அனைவருக்கும் என‌து அன்பு.

உலகத்தில் அதிசயங்கள் நமக்கு தெரியாமல் நிறையவே உள்ளது...
அவற்றைத் தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் வாருங்கள்...

இவை தினமலர் சிறுவர் மலரில் 2007, ஜனவரி 26ம் தேதி அன்று வெளிவந்தது....எனக்கு இது மிகவும் பிடித்த அறிவு பூர்வமாண விசயமாக‌ இருந்தது....

அவை இதோ

அதிசயங்களின் அணிவகுப்பு!

புதிய 7 உலக அதிசயங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்டர் நெட்டில் நடந்தது. 200 இடங்களில் தொடங்கிய இந்த தேர்தல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற பல இடங்களை தள்ளி, கடைசி 21 இடங்களில் நின்ற அதிசய இடங்களின் தகவல்கள் இதோ.

அக்ரொபொலிஸ்:
உலக நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் கிரேக்க நாட்டின் பழமையான கட்டிடம் இது.புனிதப் பாறை என கிரேக்கர்கள் கருதும் ஒரு பாறை மீது கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் யுனெஸ்கோவின் சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது.

ஆலம்பரா:
ஸ்பெயின் நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா இடமாகக் கருதப்படும் இந்தக் கோட்டை 9ம் நூற்றாண்டின் மூர் வம்ச ம‌ன்னனான முகமதின் அர‌ண்மனையாக இருந்தது.
13 ஹெக்டேர் நிலப்பரப்பில், உலகின் ஒட்டு மொத்த கலை அழகையும் நிரப்பி இந்த அரண்மனையை உருவாக்கியுள்ளார் மூர் முகமது.

அங்கோர் வாட்:
ஆதிகாலத்தில் இந்தியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாம்... அந்த உறவுக்கு இன்றுள்ள ஒரே சாட்சி இந்தோனேஷியாவில் உள்ள அங்கோர்வாட் தான்.இந்த கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களை விட அழகு வாய்ந்தவை.

சிசென் இட்சா:
நம்ம ஊர் காஞ்சிபுரத்தை போல மெக்சிகோவின் புகழ்பெற்ற கோயில் நகரம் இது.எகிப்து பிரமிடுகளுக்கு இணையாக குகுல்கன் பிரமிட், ஆயிரம் கால் மண்டபம், பிரமாண்ட விளையாட்டரங்கம் ஆகியவற்றை கொண்ட பழங்கால கலைப் பொக்கிஷம் இது.

மாச்சு பிச்சு:

" மேகங்கள் உரசும் நகரம் " என்று இதை பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம்.பெரு நாட்டில் உள்ள ஒரு பிரமாண்ட மலையில் மீது 15 ஏக்கர் பரப்பளவில் இந்த மலை நகரம் அமைக்கப்படுள்ளது.
15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டாலும் 1911ம் ஆண்டில் ஹிராம் பிஸ்ஹாம் என்பவரால் தான் இந்த மலைநகரம் உலக மக்களுக்கு தெரியவந்தது.

கிறிஸ்ட் ரிடீமர்:
கால்பந்துக்கு இணையாக பிரேசிலில் புகழ்பெற்ற மற்றோரு விஷயம் இங்குள்ள கிறிஸ்து சிலை.இரு கைகளை விரித்து 38 மீட்டர் உயரத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்த சிலை ரியோ டீ ஜெனிரோவின் அழகுக்கு வைரக் கீரீடம்.


கியோமிசு ஆலயம்:

ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரம், அரண்மனைகளுக்கும் ஆலயங்களுக்கும் பெயர் பெற்றது.
அதிலும் அரண்மனையை ஒட்டியுள்ள கியோமிசு ஆலயம் அலாதியானது.
ஜப்பானிய கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது.
இதன் முக்கிய பகுதிகள் தங்க தகடுகளால் வேயப்பட்டுள்ளமை, இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

ஈஸ்டர் ஜலண்ட் சிலைகள்:
சிலி நாட்டில் உள்ள‌ ஈஸ்ட‌ர் தீவுக‌ளில் ஜேக்க‌ப் ராகோவின் என்ப‌வ‌ரால் 1722ல் இந்த‌ சிலைக‌ள் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌வை.இந்த‌ சிலைக‌ள், ச‌ராச‌ரியாக‌ 25 மீட்ட‌ர் உயர‌முள்ள‌வை. மிக‌ அழ‌கான‌வை. ஆனால், யாருடைய‌து என்று ம‌ட்டும் தெரியவில்லை.

ஹசியா சோபியா:

6ம் நூற்றாண்டின் துருக்கியை ஆண்ட‌ ஜ‌ஸ்டினிய‌ன் என்ற‌ ம‌ன்ன‌ன். த‌ன் ச‌க்தியையும், சாம்ராஜ்ய‌த்தின் ஆற்ற‌லையும் உணர்த்த‌ க‌ட்டிய‌ மாளிகை தான் ஹசியா சோபியா.
பிற்கால‌த்தில் இந்த‌ க‌ட்டட‌த்தின் அமைப்பை பின்ப‌ற்றியே ம‌சூதிக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌ச் சொல்கின்ற‌ன‌ர். இப்போது இந்த‌க் க‌ட்ட‌ட‌ம் மியூசிய‌மாக‌ உள்ள‌து.


கிரம்ளின் மாளிகை:
செஞ்ச‌துக்க‌த்துக்குப் பின்னால், க‌ம்பீர‌மாக‌ நிற்கும் கிர‌ம்ளின் மாளிகை, ஒரு கால‌த்தில் ஜார் ம‌ன்ன‌ர்க‌ளின் அர‌ண்மனையாக இருந்த‌து.
இன்றைக்கு இது ர‌ஷ்ய‌ அதிப‌ர்க‌ளின் அலுவ‌ல‌க‌ம். கால‌ம் மாறினாலும் ஆட்சி மாளிகையாக‌வே இருக்கிறது.

நியூக்வாஸ்டீன் கோட்டை:
19ம் நூற்றாண்டில் ஜெர்மனியை ஆண்ட லட்விக் என்ற மன்னனுக்கு மலை மீது ஒரு பிரமாண்ட கோட்டையை எழுப்பும் ஆசை வந்தது.
இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் இரும்புக் கரத்தால் மக்களை அடக்கி, இந்த கனவுக் கோட்டையைக் கட்டி முடித்தார்.
360 அறைகளை கொண்ட இந்த கோட்டையைக் கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆனதாம்.

சீனப் பெருஞ்சுவர்:

எதிரிக‌ளின் தாக்குத‌லைத் த‌டுக்க‌, அர‌ச‌ர்க‌ள் அன்று க‌ட்டிய‌ பெருஞ்சுவ‌ர், இன்றும் அந்நாட்டின் புக‌ழை பாடுகின்ற‌து.

நில‌வில் இருந்து உல‌கைப் பார்த்தால், இந்த‌ சுவ‌ர் ம‌ட்டும் தான் தெளிவாக‌த் தெரியும்.

நூடுல்ஸ் உப்புமா

இது எங்க‌ வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். டேஸ்ட்டும் நன்றாக இருக்கும்...

தேவையான‌ பொருட்க‌ள்:
நூடுல்ஸ் - 2 பாக்கட்
வெங்காய‌ம் - 2 மீடியம் சைஸ்
காய்ந்த‌ மிள‌காய் - 2

தாளிக்க‌:
க‌டுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
க‌ட‌லைப்ப‌ருப்பு - 1 ஸ்பூன்
க‌றிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது
காய்ந்த‌ மிள‌காய் - 2

செய்முறை:
1. அடுப்பில் க‌டாய் வைத்து காய்ந்த‌தும் எண்ணெய் ஊற்றி தாளிக்க‌ வேண்டிய‌தை சேர்த்து தாளிக்க‌வும்...

2. வெங்காயம் சேர்த்து ( அடுப்பை சிம்மில் வைத்து ) வ‌த‌க்கினால் ந‌ல்லா இருக்கும்...

3. வெங்காயம் வ‌த‌க்கும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வ‌த‌க்கினால் சீக்கிர‌ம் வெங்காயம் வ‌த‌ங்கும்... ( எல்லா ச‌மையலிலும் )

4. சாதாரணமாக நீங்கள் நூடுல்ஸ் செய்ய எவ்வளவு தண்ணீர் ஊற்றுவீர்களோ அதைவிடக் கம்மியாக ஊற்றிக் கொதித்ததும் நூடுல்ஸை போட்டு சிறிது உப்பு சேர்க்கவும்...

5. தண்ணீர் சுண்டி உப்புமா ப‌தத்திற்கு ( சுருள வதக்குவது போல் ) வந்ததும் இறக்கவும்...

குறிப்பு:
இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்...

பரிமாறும் அளவு
2 நபர்களுக்கு

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "