...

"வாழ்க வளமுடன்"

14 பிப்ரவரி, 2010

கொலஸ்ட்ரால் பற்றிய மேலும் சில துளிகள்.


கொலஸ்ட்ரால் வருவது எப்படி?

கொலஸ்ட்ரால் - நாம் சாப்பிடும் சில உணவு வகைகள், மன அழுத்தம், பழக்க வழக் கங்களால் ஏற்படும் கொழுப்பு இது. ரத்தத்தில் ஓரளவு வரை கொழுப்பு சேரலாம்; ஆனால், அளவு மிஞ்சினால் ஆபத்து தான். அப்போது தான் அது இதயம் வரை லொள்ளு செய்ய ஆரம்பித்து விடுகிறது. ரத்தத் தில் சேரும் கொழுப்பு, சிறிது சிறிதாக அதிகமாகி, இதய ரத்தக்குழாயில் உள்ள சுவருடன் ஒட்டி, அதை தடிமனாக் குகிறது. அப்போது ரத்தம் சீராக போக முடியாமல் போகிறது. அதனால், ரத்தம் கட்டி விடுகிறது. அப்படி கட்டிவிடும் போது, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டால், இதய பாதிப்பு வருகிறது; மாரடைப்பு ஏற்படுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் கொழுப்பு வேறு; கொலஸ் ட்ரால் வேறு; ஆனால், கொழுப்பில் இருந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது தான் கொலஸ்ட் ரால். ஓரளவு கொழுப்பு , நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல; செல்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதே கொழுப்பு, அதிகரிக் கும் போது, கெட்ட கொழுப் பாக மாறுகிறது. அப்போது தான் கொலஸ்ட்ரால் என்று கணக்கிடப்படுகிறது.
இரு வகை கொழுப்பு
எல்.டி.எல்: "லோ டென் சிட்டி லிப்போப் ரோட் டீன்ஸ்' என்று அழைக்கப்படும் எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், மிக ஆபத்தானது. அதிக அளவில் ரத்தத்தில் சேர்ந்தால், ரத்தக்குழாய் சுவரில் படிந்து, அதை அடைக்கிறது. ரத்தக்குழாய் அடைப்புக்கு இது தான் முக்கிய காரணம்.
எச்.டி.எல்: "ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்' என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி உள்ள கொலஸ்ட்ரால். இது உடலில் அதிகமாக சேர்ந்தாலும், கல்லீரலுக்கு போய், அங்கிருந்து கழிவாக வெளியேறி விடும்.
ட்ரைகிளிசரைட்ஸ்:
இது மூன்றாவது வகை கொழுப்பு. தசைநார்களுக்கு எனர்ஜியை தரும் இது, அதிகமாகும் போது கொழுப்பாகி, ரத்தத்தில் சேர்கிறது. இதய பாதிப்பு வரும் போது, ரத்தத்தில் இதன் அளவும் சரிபார்க்கப்படுகிறது.
உணவால் தான்...
கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. கொழுப்புஉணவால், உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக சேர்கிறது. வயிறு வழியாக உணவு சென்றவுடன், கல்லீரலில் கொழுப்பு பிரிந்து, கொலஸ்ட்ராலாக ரத்தத்தில் சேர்கிறது.
200க்கு மேல் உஷார்
*கொலஸ்ட்ரால் எல்லாருக் கும் இருக்கும்; அது 200 க்குள் இருக் கும் வரை பிரச்னை பண்ணாது.*ஆபத்தான அளவு என்பது 200ல் இருந்து 239 வரை. அப்போது கண்டிப்பாக விழித் துக்கொள்ள வேண்டும்.
*240 ஐ தாண்டி விட்டால், இனியும் சும்மா இருந்தால், அவ்ளோ தான். அலட்சியம், விபரீதத்துக்கு வழி வகுத்து விடும்.
*200, 240 என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன தெரியுமா? ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மில்லி கிராம் தான்.
*எல்.டி.எல்.,எச்.டி.எல்.,மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றிலும் இந்த அளவு உண்டு. எல்.டி.எல்.,130க்குள் இருக்க வேண்டும்; எச்.டி.எல்.,60 க்கு மேல் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைட்ஸ் 200 க்கு கீழ் இருக்க வேண்டும்.
பக்கவாதம் எப்படி?
இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு வருகிறது. அதுபோல, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. உடலில் நரம்புகள் இயங்கினால் தான் கை, கால்கள் இயங்குவது, வாய் பேசுவது , நடப்பது, மடக்குவது போன்றவை செய்ய முடியும். ரத்தம் சீராக செல்லாமல் போனால், மூளைக்கும் ஆக்சிஜன், சத்துக்கள் பாதிக்கப் பட்டு விடுகிறது; அதனால், அதன் இயக்கம் தடைபடுகிறது. அதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.
1.A. ஆரோக்கியமான ரத்தக்குழாய் இது. உயர் அடர்த்தி வாய்ந்த எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக்குழாயில் சென்று, மற்ற கொலஸ்ட்ராலையும் வெளியேற்றி, கழிவாக மாற்றி விடுகிறது.
1.B.ரத்தக்குழாய் சுவரில் படிந்திருப்பது தான் கெட்ட கொலஸ்ட்ரால். இது தான் ரத்தம் செல்வதை பாதித்து, ரத்தக்கட்டியை உருவாக்குகிறது.
மாரடைப்பு வருவது எப்படி?
இதயத்துக்கு ரத்தக்குழாய் மூலம் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் சீராக செல்வது தடைபடும்; ஆக்சிஜன், சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும். இதயத்தை எந்நேரமும் இயங்க செய்யும் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அது செயலிழக்கும் போது, இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறது. அதன் அளவு சீராக இல்லாமல் போகிறது. இப்படி எல்லாம் தடைபடும் போது, மாரடைப்பு வருகிறது.
நன்றி ஈகரை.

கொழுப்பை குறைக்கும் பப்பாளி


எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.
இந்த பழத்தில் கிடைக்கும் சில பயன்கள்:
1. இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.
2. பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
3. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.
4. அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
5. பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.
6. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.
7. பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.
8. கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
9. சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.
நன்றி தமிழ்சிகரம்.காம்

பூண்டின் மருத்துவ குணங்கள்
இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல்வேறு மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரங்களில் பூண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூண்டு சாப்பிட்டால் நாற்றம் வீசும் என்பதற்காக சிலர் அதை ஒதுக்கித் தள்ளுகின்றனர். இது முற்றிலும் தவறானது.1. உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.2. இதய அடைப்பை நீக்கி இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
3. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.4. நாள்பட்ட சளித் தொல்லையையும், தொண்டை சதையை நீக்கும்.
5. மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் சக்தி இதற்க்கு உண்டு.
6. தாய்மார்கள் இதை அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். எல்லா பெண்களுக்கும் மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.
7. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.


8. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.9. பூண்டின் மருத்துவ சக்தி அபரீதமானது. சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அது திகழ்கிறது.10. நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம்,மலச்சிக்கல் போன்ற வற்றுக்கும் இது சிறந்த நிவாரணி ஆகும்.
11. பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் உள்ளதாம்.
12. வெண் குஷ்டம், குடல் வாயு, கொழுப்பு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.
13. பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "