...

"வாழ்க வளமுடன்"

15 மார்ச், 2010

மரபணுவாக மாறும் காய்கள் தேவைதானா?

உயிருக்கு வேட்டு வைக்கும் பி.டி. கத்திரிக்காய்:

*

உலகம் முழுவதிலும் மரபணு பயிர்கள், காய்கறி, பழங்களை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்க நிறுவனங்களான மான்சான்டோ, பயோனியர் போன்றவை தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

இதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் தரகர்களை நியமித்து அரசியல்வாதிகள் உதவியுடன் கள்ளத்தனமாக மரபணு பயிர்களை அந்நாடுகளில் பயிரிட்டு வருகின்றனர். நம் நாட்டிலும் கடந்த 10 ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய வணிக நிறுவனங்கள் நடத்தும் காய்கறி- பழ கடைகளிலும் மரபணு காய்கறி- பழங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.

*

இவை பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை கடைகளுக்கு வந்துள்ள ராட்சத கேரட் மலைக்க வைப்பதாக உள்ளது. இந்த மரபணு கேரட் விஷத்தன்மை உடையதால் சீக்கிரம் அழுகாது. இதை காரணம் காட்டி சர்வதேச மரபணு காய் கறி நிறுவன புரோக்கர்கள் நம்மூர் வியாபாரிகளிடம் கேரட் போன்ற காய்கறிகளை விற்கிறார்கள்

*

பி.டி. கத்தரிக்காய் பற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “பி.டி. கத்தரிக்காய் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் என்ற திடுக்கிடும் தகவலும் இடம் பெற்றுள்ளது. ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் கத்தரிக்காய் மாமருந்தாக திகழ்கிறது.

***

இதுபற்றி சென்னையின் பிரபல டாக்டர் திருத்தணிகா சலம் கூறியதாவது:-

*

கத்தரிக்காயில் பூச்சி வெட்டு பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது.ஆனால் மரபணு கத்தரிக்காயில் விஷத்தன்மை இருப்பதால் இக்காயில் புழு- பூச்சி வெட்டு ஏற்படாது. பி.டி. கத்தரிகாயில் வைரஸ் விஷம் இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நன்கு வேக வைத்தால் விஷம் போய்விடும் என்று பி.டி. கத்தரிக்காய் விதைக்கம்பெனி கூறுவதை மத்திய அரசின் நிபுணர் குழுவே ஏற்றுக்கொண்டுள்ளது.

*

இந்த கத்தரிக்காயை சாப்பிடும் புழு, பூச்சி, தேனீக்கள் அனைத்தும் இதன் விஷத்தால் இறந்துவிடும். எனவே கத்தரிக்காயில் ஓட்டை, பூச்சி இருக்காது. ஆனால் இதை சாப்பிட்டால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுமே என்று இயற்கை ஆர்வலர்கள் பயப்படுகிறார்கள்.

*

பி.டி. கத்தரிக்காயை வேக வைக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள கிரை1ஏசி வைரஸ் விஷமானது மனிதனை கடுமையாக தாக்கும் பேராபத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலில் சளி பிரச்சினையை அதிகரிக்கும். பி.டி. கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

*

மரபணு கத்தரிக்காயை பற்றி பல்வேறு தரப்பினரிடம் நடத்திய ஆய்வில் நன்மையை விட தீமைகளே அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மரபணு காய்கறி பயிரிடும் நிலமானது சில ஆண்டுகளிலேயே விஷத்தன்மையாகி மாறி விடுவதால் அந்நிலமானது எந்த பயிரையும் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது.

*

முதலில் பி.டி. கத்தரிக்காய். அடுத்து வாழைப்பழம், கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, மக்காச்சோளம், நெல், கோதுமை, பீன்ஸ், பீட்ரூட், ஆப்பிள், ஆரஞ்சு.... என்று அத்தனை வகையான மரபணு காய்கறி- பழங்களையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளன என்கிறார்.

***



அது என்ன மான்சான்டோ?

*

அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.

*

அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் ப­யாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?

*

நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி­ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,

*

மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,

*

மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியா விலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.

***

உடல் நலத்திற்கு ஆபத்து:

*

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா­னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எ­கள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈர­ன் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

*

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

***

தேவை தடை:

*

மான்சான்டோவின் உலக முதலாளித் துவ சதிக்கு ப­யாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும். இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக் கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.

*

உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண் டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.

***

நன்றி அபூ அயிஷா.

நன்றி நக்கீரன்.

***

இவ்வளவு ஆபத்தை ஏற்ப்படுத்தும் மரபணு காய்கறிகள் தேவைதான?

*

யோசியிங்கள் மக்களே!

*

நம் குழந்தை சொல்வங்கலுக்கு நல்ல எதிரிகாலம் உண்டக்க உடல் நலம் முக்கியம் அதனால் யோசித்து முடிவு எடுங்கள்.

***

ஆப்பிள் வரலாறும், சத்துக்களும்.

ஆப்பிள் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அதை பற்றி மேலும் சில தகவல்.


***

இதுதான் ஆப்பிள் மரத்தின் பூக்கள்


***

ஆப்பிள் வரலாறு:

*

தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் ரகங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

*


அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக ஆப்பிள் தான் பல்லாயிரம் ஆன்டுகளாக பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில் ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில்ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.

*

ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது.

***

ஆப்பிள் ஒரு குளிர் பகுதிப் பழம் ஆகும். மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

*


ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.

*


பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 ரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்க குளிர் அவசியம் என்பதால் பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்காது. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும்.

*

மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது

***



ஆப்பிள் பழங்களின் சத்துக்கள்:

*

1. தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.

2. ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

*

3. இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த ரெட் டெலிசியஸ் வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

*

4. ஆப்பிள்கள்களைக் கொண்டு ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.

*

5. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

*

6. தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

*

7. ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

*

8. வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.
குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் அழிந்துவிடும்.

*

9. திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.

*

10. ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.


11. சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து இன்ஷா அல்லாஹ் பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
*
12. ஆப்பிள் ஜூஸ் :
*
ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
*
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.An Apple a day keeps the doctor away.
***
நன்றி விக்கிபீடியா.
நன்றி குமுதம் ஹெல்த்.
***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "