...

"வாழ்க வளமுடன்"

04 டிசம்பர், 2010

இரத்த நாளங்களை காக்க மீன் சாப்பிடுங்க :)

விட்டமின் ஈ உடலில் குறைந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்பது பள்ளிக்கூட நூலகளில் காணப்படும் செய்தி


அது தவிர காலில் உணர்ச்சி குறைந்து நடக்க இயலாத நிலையும் ஏற்படும் என்பது புதிய செய்தி.

*

பெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease PAD) என்பது மருத்துவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நோய்.

*

கால்களில் ஓடும் ரத்த நாளங்களின் தடிமன் குறைந்து, அதில் கொழுப்பு உள்படிந்து, தொடர்ந்து கால்வலியும், நடக்கவே இயலாத நிலையும் ஏற்படும்.


*

இது மிகவும் சாதாரண நோய். உலகில் எண்பது மில்லியன் பேர்களுக்காவது இந்த நோய் இருக்கலாம்.



புற ரத்தநாள நோய்க்கான காரணம் விட்டமின் ஈ குறைபாடு என்பது ஒரு சர்வேயில் இருந்து வெளிப்பட்டது. 4839 அமெரிக்கர்களின் விட்டமின் ஈ அளவு கண்காணிக்கப்பட்டது.

*
கூடவே அவர்களது இரத்த கொலஸ்ட்ரல் இரத்த அழுத்தம் முழங்கால் -மூட்டு இந்டெக்ஸ் (Ankle-Brachial Index) போன்ற புற இரத்தநாள நோய் தொடர்பான குறிகளும் அளவிடப்பட்டன.

*

உடலில் விட்டமின் ஈ அதிகமுள்ளவர்களிடம் மிகக் குறைவாகவே புற இரத்தநாள நோய் இருப்பது தெரிந்தது.

*

எப்படி விட்டமின் ஈ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது என்பதை டாக்டர் மைக்கேல் (Michael Milemad, Dept. of medicine and epidemiology & Population health science. Albert Einstin college of Medicine) ஆராய்ந்தபோது இரத்த நாளங்களின் மேல் பரப்பிலேயே விட்டமின் ஈ சென்று உட்காரக் கூடிய புரதங்கள் இருப்பதைக் கண்ணுற்றார்.

*

இதன் மூலம் விட்டமின் ஈ ஹார்மோன்களின் துணையில்லாமல் நேரடியாகவே இரத்த நாளங்களை விரித்து நிறுத்திக் காப்பாற்றும் என்பது தெரிய வருகிறது.

*

எனவே மீன் சாப்பிடுங்கள்.



***
by- மு.குருமூர்த்தி
thans கலைக்கதிர்.ஜூலை 2008
***



"வாழ்க வளமுடன்"

பிட்னஸ் ( நம் உடலின் முழுநலன் )

பிட்னஸ் என்றால் என்ன?

பிட்னஸ் என்பதை முழுநலம் என்று பொருள் கொள்ளலாம்


முழுநலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப்படுகிறது.

*

அன்றாட வேலைகளைச் செய்யும்போது சோர்வின்றி செய்வதற்கான திறன் இருத்தல் வேண்டும். சுவாச உறுப்புகளும், இதயமும் நன்றாக இயங்கும்போது இந்த திறன் அதிகரிக்கும். மூச்சு வாங்குதல், படபடப்பு, அதிக வியர்வை, மயக்கம் போன்ற அடையாளங்கள் வேலை செய்யும் முழுநலனுக்கு எதிரானவை.

*

ஒரு தசை அல்லது பல தசைகள் இணைந்து வலிமையை வெளிப்படுத்தலாம். அசையாத பொருளின்மீது சக்தியை செலுத்துவது ஐசோமெட்ரிக் உறுதி என்றும் அசையும் பொருளின்மீது சக்தியை வெளிப்படுத்துவது ஐசோடோனிக் உறுதி என்றும் வகைப்படுத்தலாம்.

*

நம் உடலின் எளிதான இயக்கங்களுக்கு மூட்டுகள் அவசியமானவை. மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசைகளின் உறுதியைப் பொறுத்து மூட்டுக்களின் அசைவுகள் அமைகின்றன. உடற்பயிற்சி மூலம் இந்த தசைகளுக்கு உரமேற்றலாம். உறுதியான உடலுக்கு ஈடாக அமைதியான மனம் அவசியம். எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.

*

ஒரு தூண்டுதலுக்கு நம்முடைய உடல் எவ்வளவு வேகமாக, எவ்வளவு சக்தியுடன் வினைபுரிகிறது என்பதும் கூட முழுநலனின் ஒரு கூறுதான். நம்முடைய உடலின் முழுநலன் சிறுவயதில் குறைவாகவும், வாலிபத்தில் உச்சத்திலும், 60 வயதிற்குமேல் குறைவாகவும் இருக்கும்.

*

10முதல் 14 வயதுகளில் முழுநலன் வேகமாக இருக்கும்.20 வயதுகளில் உறுதி இருக்கும்.30 முதல் 40 வயதுகளில் வேலைசெய்யும் திறன் உச்சத்தில் இருக்கும்.40 வயதுக்கு மேல் வேகம், உறுதி ஆகியவை குறையும்.

*

ஆண்களுக்கு வேகமும், உறுதியும் அதிகம்.பெண்களுக்கு தொடர்ந்து வேலை செய்யும் திறன் அதிகம்.ஆண்களின் உடல் உறுதி பெண்களின் உடல் உறுதியைக் காட்டிலும் 30 முதல் 50 சதவீதம் அதிகமாக இருக்கும். நோய்களாலும், சரிவிகித உணவு இன்மையாலும், எடை குறைவுபடுவதாலும், எடை அதிகமாக இருப்பதாலும் முழுநலம் பாதிக்கப்படுகிறது.

*

நிம்மதியான தூக்கம் உடல்திறனை அதிகமாக்குகிறது. தூக்கத்தினால் தசைகளின் திசுக்களில் தேங்கிவிட்ட கழிவுகள் நஞ்சுகள் வெளியேற்றப்படுகின்றன. பழுதுபட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.


***
நன்றி: கலைக்கதிர்
***




"வாழ்க வளமுடன்"

குடியை நிறுத்த நினைக்கும் நண்பர்களுக்கு !

மது (ஆல்கஹால்) என்றால் என்ன?




ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும்.


ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம்.



புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.


**

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?


குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.


1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.


**


குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.


இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.


இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.


**


ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...?

பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்” என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.


1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா...?

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ?

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...?


இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை மீட்பது உறுதி.


**


மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?


சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.


**


குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

14. உடற்களைப்பைப் போக்கும்.

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.


***


ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் எவை...?

1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.

10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

15. கடைகளில் திருடுவது.


***


குடிநோயின் உச்சம்:

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது

12. முற்றிலுமாக மறந்து போதல்

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.

***

குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள் எவை.?


1. சோதித்துப் பார்க்கும் நிலை...

ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.

*

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை...

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.

*

3. சார்பு நிலை...

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.

*

4. தீவிரமடைந்த நிலை

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.

*


ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...?

இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.



***
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
***


"வாழ்க வளமுடன்"

கருவுற்ற பெண்ணுக்கு ஸ்கேனிங் அவசியமா?

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

1. 11லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

*

2. 20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

**

3. மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் (Maternal Serum Screening)


1. கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.



2. கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் (First Trimester Screening) சோதனையும், 15-21 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் (Triple Screening test) சோதனையும் செய்ய வேண்டும்.


3. பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் (Carrier Screening) சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.


***
thanks கீற்று
***


"வாழ்க வளமுடன்"

குழந்தை பெறப்போகும் தாய்மார்களுக்கு ( மருத்துவ ஆலோசனைகள் )



1. குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும்.

*
2. அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது.

*

3. குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்கவேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்கவேண்டும்.

*

4. 20 வாரத்தில் குப்புறப்படுக்கவேண்டும். 6 மாதத்திற்குள் உட்காரவேண்டும்.

*

5. 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்கவேண்டும்.

*

6. இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும்.

*

7. இதில் ஏதும் மாறுதல் இருக்கும்பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும்.

*


எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.


***
thanks கீற்று
***



"வாழ்க வளமுடன்"

மது பிரியர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியானது !

இன்றய உலகில் மது பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக சிறுவர்கள் கூட மது பாவனைக்கு அடிமையாகி விட்டார்கள்.சோகம், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் super market க்கு போய் அங்குள்ள அனைத்து ரக குடிவகைகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு , மிச்சமெல்லாம் அடுத்த நாள் விடியலில் தான்.




இவர்கள் தமக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களை கண்டு கொள்வ தாக தெரியவில்லை. இங்கு நாம் மதுவால் ஏற்பட கூடிய தீங்குகளை பார்க்கலாம்.


மது பிரியர்கள்


சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 152 ounces சாராயம் அருந்துகிறார். அதிகமாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது.

Wisconsin என்னும் இடத்தில் 7 .4 % Wisconsin என்னும் இடத்தில் சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் 11 .32 % குறைவாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது West Virginia , Utah என்னும் இடங்களில் 2 .8 %
சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உள்ளது North Carolina வில் 5 .97 %

*

வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் )

526 ounces Luxembourg
463 ounces Ireland
397 ounces UK
386 ounces France
349 ounces Russia
291 ounces USA
263 ounces Canada
256 ounces Japan
0 .0 ounces Iran
0 .0 ounces Saudi Arabia
ஈரான், சவூதி அரேபியா வில் மது பாவனை தடை செய்யபட்டு உள்ளது

*

அதிக இறப்பை சந்தித்துள்ள நாடுகள்

10 -14 % கிழக்கு ஐரோப்பா, ரஷ்ஸியா
5 -10 % இந்தோனேசியா, வியட்னாம்
5 -10 % மத்திய, கிழக்கு அமரிக்கா
2 -5 % வடக்கு அமரிக்கா
2 -5 % தெற்கு அமரிக்கா
0 -2 % மத்திய கிழக்கு
0 -2 % மேற்கு ஐரோப்பா
0 -2 % வடக்கு ஆபிரிக்கா

*

பாடசாலைகளில் மது பாவனை

6 % ஆன மாணவர்கள் மது பாவனைக்கு அடிமையாக உள்ளார்கள்.


25 % ஆன மாணவர்கள் எங்கே இருந்தோம், குடிக்கும் போது என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த முடியாது உள்ளார்கள்.


599000 ஆனோர் ஒவ்வொருவருடமும் போதையில் உள்ள போது காயப் படு கிறார்கள்.

1700 பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.

*

ஆபத்துகள் ( 20 -30 % )


Oesophageal cancer
Liver Cancer
Cirrhosis of the Liver
Homicide
Epilepsy
Motor Vehicle Accident
HippoCampus என்கிற இடம், எங்களுக்கு குடிப்பதை நிறுத்துவதற்கான Self Control ஐ தருகிறது. அதிகமாக மது அருந்துவது Brain Cell உற்பத்தியை HippoCampus எனும் இடத்தில் குறைக்கிறது.



குடும்பத்தில் அண்ணன், தம்பி இரட்டையர்களாக இருந்தால் , ஒருவர் மதுவிற்கு அடிமையானால் மற்றையவரும் அடிமையாவதற்கான சாத்தியம் அதிகம். இருவரும் Twins ஆக இல்லாத விடத்து இது குறைவாக உள்ளது.

*

நோய்களில் ஏற்பட கூடிய அதிகரிப்பு


70% Throat Cancer
80% Colon Cancer
50% Lung Cancer
100% High Blood Pressure

கர்ப்பிணி தாய்மார்கள் மது அருந்துவது ( Ratio )
National : Native American = 1 : 3

கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பது ( Ratio )
National : Native American = 1 : 6

*

நல்ல செய்தி


35 % ஆன இருதய நோயை குறைக்கிறது
85 % ஆன குளிரில் இருந்து எம்மை பாதுகாக்கிறது
25% ஆன இறப்பை குறைக்கிறது


குடியை நிறுத்த முடியாதவர்கள், அளவாக குடித்து உடலை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.


***
thanks http://nishole.blogspot.com/
***

"வாழ்க வளமுடன்"

நம் அனைவரின் ( இந்த காலத்தில் ) வாழ்கையை புரட்டிபோட்ட இணையம் !

அமெரிக்க ராணுவத்தால் மட்டும் ஆரம்பத்தில் பயனபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த கணணி வலையமைப்பு அதாவது இன்டர்நெட் இன்று சிறு குழந்தை முதல் முதியவர் வரை கடை முதல் நாசா வரை பல்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் உள்ளது. அதன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய சம்பவங்களை பார்க்கலாம்.




1962

J .C .R Licklider (1915 -1990 ) என்பவர் உலகத்தில் உள்ள கணனிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு தகவல்கள் பரிமாறப்பட முடியும் என்பதற்கான அடிப் படையான "Intergalactic NetworK" எண்ணக்கருவை உருவாக்கினார்.

*

1974

Vint Cerf , Bob kahn என்பவர்கள் "Internet " என்ற சொற் பதத்தை Transmission Control Protocol பேப்பர் (இணையதளத்தின் தகவல் பரிமாற்றத்தின் போதான அடிப் படையான கட்டுப்பாட்டுக் காரணி) இல் பயன்படுத்தினர்.

*

1976

Dr .Robert Metcalfe என்பவர் விரைவு பரிமாற்றத்துக்கு Ethernet ,Coaxial Cables ஐ கண்டு பிடித்தார். Ethernet குறுகிய எல்லை கணணி வலையமைப்பின் (வீடு, பாடசாலை, அலுவலகம்) முக்கிய பங்கு வகிக்கும் தொழில் நுட்பமாக திகழ்கிறது.

*

1978


முதன் முதலில் E -mail Spam Gary Thuerk என்பவரால் தனது மினி கம்ப்யூட்டர் களை விளம்பரபடுத்தி ARPANET (Advanced Research Projects Agency Network ) இல் இருத்த 400 பாவனையாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

*

1983

1 .1 .1983 இல் ARPANET இல் இணைக்கப்பட்டிருந்த அனைத்து கணணிகளும் TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol ) இனை பயன்படுத்த வேண்டும் என ஆக்கப்பட்டது. TCP/IP இணையத்தின் கருவாக வந்தது .

*

1984

Dr .John Postel என்பவரால் .com ,.org ,.gov ,.edu ,.mil என்பவற்றுக்கான எண்ணக்கரு உருவாக்கதிட்டம் என்பன குறித்து Internet Engineering Task போர்சே(IETF ) இன் வெளியீடுகளில் விரிவாக விபரிக்கப்பட்டிருந்தது.

*

1989

The World எனும் இணையதள சேவை வழங்குனரால் முதன் முதலில் மக்களுக் கான வர்த்தக ரீதியான Dial -Up இணைய சேவை வழங்கப்பட்டது. அனால் முதலாவது ISP Netom என்றாலும் மக்களுக்கு ஆனது அல்ல.

*

1992

Corporation for Education and Research Network (CREN ) World Wide Web இனை வெளி யிட்டது. NSFNET ( The National Science Foundation Network ) 44 .739 Mbps இக்கு தரமுரத்தப்பட்டது

*

1993

Marc Andreesson , NCSA , Illninois பல்கலைக்கழகம் சேர்ந்து "Mosaic for X " என்ற முதலாவது WWW இக்கான Graphical Interface இனை உருவாக்கினர். Mosaic for X அக்காலத்தில் முதலாவது பரவலான பாவிப்பில் இருந்த Web Browser ஆக இருந்தது.

*

1994

Pizza Hut அவர்களது இணைய தளமூடான ஆர்டர் பண்ணுவதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். இது தொடக்கத்தில் பிரபலமாகவிடினும் பின் ராக்கெட் வேகத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமானது.பேசப்பட்டது

*

1995


Pierre Omidyar என்பவரால் இணையதள வியாபாரம் அறிமுகப்படுத்தப்படது. பின்னாளில் இது eBay ஆக மாறியது. .gov , .edu தவிர்ந்தஇலவசமாக இருந்த அனைத்து டொமைன் களுக்கும் வருடாந்த கட்டான அறவீடு ஆரம்பமாகியது.

*

1996

Hotmail ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு Microsoft ஆல் 40 கோடி டொலர் களுக்கு வாங்கப்பட்டது. Internet2 எனும் Network Of Research And Education Institutions உருவானது

*

2001

wikipedia அறிமுகமானது. ஆரம்பத்தில் விக்கிபீடியா .com என இருந்தாலும் பின்னர் இது .org என மாற்றம் பெற்று இன்று உலகளாவிய ரீதியில் தனக் கென்று தனியான ஒரு இடத்தினை பெற்றுள்ளது.

*

2003

Apple iTunes Store இனை ஆரம்பித்தது. அப்போது வெறும் 200 000 பாடல்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் 24 மணிநேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் மேலான பாடல்கள் விலையாகின.

*

2004

1 .1 .2004 இல் yahoo hotamil 2MB எனும் Storage Capacity இனை வழங்கியபோது Google gmail இனை1GB என்ற கொள்ளளவு வசதியுடன் அறிவிப்பு செய்தது .அது அப் போது April fool joke என சிலரால் கருதப்பட்டது.

*

2005

You tube ஆரம்பிக்கப்பட்டது. இணையதளமூடான வீடியோ களுக்காக இது உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு Google இதனை 1 .6 பில்லியன் டாலர்ஸ் களுக்கு youtube இனை வாங்கியது.

*

2006

Dom Sagolla வினால் Twitter தளம் வெளியீடு செய்யப்பட்டது. இதே வருடம் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த Facebook இல் யாரும் இணையலாம் என அறிவிக்கப்பட்டது.

*

2009

தொலைபேசி ஊடான ஒலி பரிமாற்றத்தை விட Data பரிமாற்றத்தின் அளவு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. உலகளாவிய ரீதியில் முதன் முறையாக Data பரிமாற்றத்தின் அளவு 1exa byte (1 billion giga bytes ) என்ற எல்லையை தாண்டியது.


***


அதிக நேரம் Laptop Battery Charge பேண


CD /DVD ஐ தேவையற்ற போது டிரைவர் இல் விட வேண்டாம்


wi -fi ,bluetooth , speaker களை தேவையற்ற போது turnoff செய்க

display brightness இனை குறைவாக பேணுதல்


தேவையற்ற போது mouse,speakers,USB இணைக்க வேண்டாம்

Hibernate ஆனது standby ஐ விட அதிகம் சேமிக்கும்


***
thanks http://nishole.blogspot.com/
***



"வாழ்க வளமுடன்"

சரியான தகவல்கள் என நினைத்து நாம் தவறாக விளங்கி வைத்திருக்கும் சில தகவல்கள்.

நாம் கற்ற, காதால் அறிந்த விடயங்களில் பல தவறானவை.
தவறான புரிதல்களுக்கு உட்பட்டு உலாவருகின்றன. இவற்றில் பல நாம் பாடசாலை நாட்களில் அறிந்தவை.சிலவேளைகளில் பின்னாளில் அவை தவறென அறிந்திருப்போம் .






1 .வானத்தை பிரதிபலிப்பதால் கடல் நீர் நீலம்


உண்மையில் தூய நீர் நீல நிற இரசாயன பொருள். நீரின் மூலககட்டமைப்பு ஒளியின் நீலம் தவிர்ந்த அனைத்து நிறங்களையும் உறிஞ்சி விட்டு நீலத்தை மட்டும் வெளிவிடுகிறது.கோப்பை ஒன்றில் உள்ள நீர் அளவு குறை வென்பதால் வெளியாகும் நீலம் கண்ணுக்கு தெரியாது என்பதால் அது நீலமாக தெரிவ தில்லை.

*

2 .பிரதான நிறங்கள் - சிவப்பு மஞ்சள் நீலம்


உண்மையில் பிரதான நிறங்கள் சிவப்பு பச்சை நீலம் (RGB) ஆகும்.இவை தான் ஒளியின் பிரதான கட்டமைப்பு நிறங்கள் ஆகும். பாடசாலையில் சிவப்பு மஞ்சள் நீலம் கொண்டு பல நிறங்களை ஆக்கலாம் என கூறப்பட்டாலும் உண்மையில் RGB கொண்டு ஆக்க கூடிய நிறங்களை RYB கொண்டு ஆக்க முடியாது.

*

3 .சீன பெரும் சுவர் விண்வெளியில் தெரியும்


உலகில் நீளமான மனித படைப்பான இது வெண்வெளியில் (9000Km )இருந்து அதுவும் சந்திரனில் இருந்து பார்க்கமுடியும் என பரவலாக கருதப்பட்டாலும் வெறும் 10 மீட்டர் அகலமான இதனை காண்பது சாத்தியமே அல்ல என நாசா கூறுகிறது.இது 2700 Km அப்பால் இருந்து ஒரு தலை முடியை பார்ப்பதற்கு ஒப்பானது.

*

4 .கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார்


கொலம்பஸ் 1492 இல் அங்கு போக முதலே அமெரிக்காவில் ஆதிவாசிகள் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது. போர்த்துக்கேயர்கயர்கள் 1424 இல் போயுள்ளனர். மேலும் பல ஆதாரங்கள் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிக்க முதலே பலர் அங்கு போயுள்ளனர் அல்லது வசித்துள்ளனர் என கூறுகின்றன.

*

5 .எடிசன் மின்குமிழை கண்டு பிடித்தார்


எடிசனுக்கு முதலிலேயே 22 இக்கும் மேற்பட்ட வேறுபட்ட வகை விளக்கு கண்டு பிடிப்புகள் உள்ளன.குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு தொடக்கபகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட Humphry Davy இனது.ஆனால் எடிசன் October 1879, இல் அன்றாட வாழ்கையில் நீண்ட காலம் பாவிக்ககூடிய மின் விளக்குகளையே கண்து பிடித்தார்.

*

6 .வௌவால்கள் குருடு


இது வரையில் கண்டு பிடிக்கப்பட்ட 1100 இக்கும் மேற்பட்ட வௌவால் வகைகளில் அனைத்துக்குமே பார்வை திறன் உள்ளன. அவை எதிரொலியை பிரதானமாக பயன்படுத்தினாலும் சில வகை கண்களையே பிரதானமாக பாவிக்கின்றன.அவற்றால கண்களால் வடிவம்,நிறம் என்பவற்றை கூட வேறுபடுத்தி காண முடியும் .

*

7 .தாவரங்கள் இரவில் சுவாசிக்கிறன


தாவரங்கள் பகலில் மட்டும் சூரிய ஓளி உதவியுடன் ஒளித்தொகுப்பு செய்கின்றன. ஆனால் ஏனைய உயிர்களை போல அவை எந்நேரமும் அதாவது இரவு பகலாக சுவாசிக்கின்றன. நாம் கற்றது போல இரவில் மட்டும் தாவரங் கள் சுவாசிப்பதில்லை. எனவே இரவு பகலாக அவை ஓட்சிசனை உள்ளெடுத்து CO2 வை வெளிவிடுகின்றன.

*

8 .10 % மூளையை தான் பயன்படுத்துகிறோம்


குறித்த ஒரு நேரத்தில் பத்து விகித மூளை பயன் பயன்படுவது சரியாக இருக்கலாம்.ஆனால் ஒரு நாள் முடிவில் பார்த்தால் எமது மூளையின் அனைத்து பகுதிகளும் ஏதாவது ஒரு தருணத்தில் பயன் பட்டு இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு மூளை பகுதியை பயன்படுத்துகின்றன.

*

9 .வட துருவ நட்சத்திரமே பிரகாசமானது


Polaris, அதாவது வட துருவ நட்சத்திரம் என அழைக்கப்படும் இது தான் மிக பிரகாசமானது என பல இடங்களில் கற்பிக்கப்பட்டாலும் உண்மையில் வீட்டு முற்றத்தில் இருந்து இதை அவதானிப்பதே கடினம். மங்கலான ஒரு நட்சத்திரம். வானத்தில் உள்ள மிக பிரகாசமான நட்சத்திரம் சூரியனை தவிர்த்து Sirius, ஆகும்.

*

10 .நெப்போலியன் குள்ளமானவர்


உண்மையில் நெப்போலியன் கிட்டத்தட்ட 6 அடி உயரமானவர். ஆனால் உயர அளவு முறை வேறுபாடுகளால் இவரது உயரம் பற்றி தவறான எண்ணங்கள் உலாவுகின்றன. The Little Corporal என அவர் அழைக்கப்பட்டதும்,அவர் உயரமான மெயகாவலர்களால் சூழப்பட்டு இருந்தமையும் இவ்வதந்திக்கு காரணமாயின.

*

11 .பாணுக்கு பதில் கேக்


பிரான்சில் பாண் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் அரசி Marie Antoinette பாணை விடுத்து கேக் சாப்பிட சொன்ன கல் நெஞ்ச காரி என தூற்றப்படுபவர். உண்மையில் அக்காலப்பகுதியில் அவர் பத்து வயதான சிறுமியாகவே இருந்தார். எனவே இவர் இவ்வார்த்தைகளை கூறியிருக்க வாய்ப்பில்லை.

*

12 .Cleopatra எகிப்தியர்


ஜூலியஸ் சீசரின் மனைவி அழகி Cleopatra ஒரு எகிப்திய நாட்டவரே அல்லர். கிரேக்க நாகரிகத்தை உடையவர்.ஆனால் எகிப்திய மொழி தெரிந்ததா வெகு சில ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர். Cleopatra ஒரு எகிப்திய ராணி என கற்பிக்கப்பட்டது தவறு.பலர் அவ்வாறு தான் நினைக்கின்றனர்.



***
thanks ராவணா

***


"வாழ்க வளமுடன்"

வியர்வை பற்றிய சில அறிய தகவல்கள் !

ஆணுக்கு பெண்ணை விட அதிகமாக வியர்க்கும்:


சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று. ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.

*

வியர்வைசுரப்பு பற்றிய பல அடிப்படை தகவல்களை நீங்கள் ஆரம்ப வகுப்பு களிலேயே கற்று இருப்பீர்கள்.அறிந்து இருப்பீர்கள்.எனவே சுருக்கமான சுவாரசிய சில வியர்வை பற்றிய அடிப்படை தகவல்கள் பற்றிய ஒரு பார்வை:

**

வியர்வையின் தொழில்

உடட்கழிவுகளை வெளியேற்றல்
உடல் வெப்பநிலையை சீராக பேணுதல்
தோலை ஈரலிப்பாக பாதுகாப்பாக பேணல்

*

வியர்வைச்சுரப்பிகள்

2 - 4 மில்லியன் சுரப்பிகள் உடலில் உள்ளன
இவை ஒருநாளைக்கு 12 லீற்றர் வியர்வையை சுரக்க வல்லன
வியர்வையில் நீர்,உப்பு,சீனி அடங்கியுள்ளது

*

உருவாக்கம்

உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பகுதி வியர்வைசுரப்பிகளுக்கு Signals களை அனுப்பி தேவைக்கேற்ப வியர்வைவை சுரக்க வைக்கிறது.

*

Eccrine
உடல் சூடாக உள்ளபோது வியர்வையை சுரப்பவை

*

Apocrine
நாம் Emotion அடையும் போது சுரப்பவை

*

சூழ்நிலை
சூடான காலத்தில்,அதிகவேலை/டென்சன் நாளில் சாதாரண நாளை விட 7 மடங்கு நீரை வியர்வையாக இழக்கின்றோம்.

***

ஆண் - பெண்

பெண்களுக்கு ஆண்களை விட அதிக வியர்வை சுரப்பிகள் இருந்தாலும் ஆண்களுக்கு பெண்களை விட 40 % அதிகமாக வியர்க்கின்றது.

*

வீரியம்

சிறுநீரகங்கள் 24 மணிநேரம் வேலை செய்து வெளியேற்றும் உடற்களிவுகளை, Sauna எனும் இடத்தில் 15 நிமிடங்கள் இருந்தால் உடலிலிருந்து வெளியேறும் 1 லீட்டர் வியர்வை வெளியேற்றிவிடும்.

*

உறுப்பு

பாதங்கள் வியர்வைசுரப்பிகள் செறிவாகவுள்ள உறுப்பு
பாதத்தில் 25000 சுரப்பிகள் உள்ளன

*

வியர்வையை தூண்டும் உணவுகள்

வெங்காயம்
மிளகாய்
பூண்டு

*

விளையாட்டும், ஒருமணிக்கு வியர்க்கும் வியர்வை

2 .43 லீட்டர் - உதைபந்தாட்டம்
1 .49 லீட்டர் - ஓட்டம்
1 .25 லீட்டர் - சைக்கிளோட்டம்
1 .6 லீட்டர் - கூடைப்பந்தாட்டம்
0 .8 லீட்டர் - கரப்பந்தாட்டம்
???? - விளையாட்டு

*

வியர்வை நோய்கள்

Hyperhidrosis - அதிக வியர்வை
Anhidrosis - குறைந்த வியர்வை
Prickly heat - வியர்வை தடைப்படல்

*

விலங்குகளும் வியர்வையும்

குதிரை - அதிகம் வியர்க்கும் விலங்கு
பன்றி - வியர்வைசுரப்பிகளற்றது.
மாடு - மூக்கில் சுரப்பிகள் உண்டு
முயல் - உதட்டில் சுரப்பிகள் உண்டு
நாய் - பாதத்தில் சுரப்பிகள் உண்டு
பூனை - பாதத்தில் சுரப்பிகள் உண்டு


***
thanks இன்றைய வீடியோ (பல்கலைக்கழகம்)
***


"வாழ்க வளமுடன்"

இயற்க்கை + அழகு = ஆரோக்கியம் :)

முகம் அழகாக தோன்ற வேண்டுமானால் உடலில் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.




இன்றைய காலத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், பொருள் இதன் பட்டியலில் அழகும் இடம்பிடித்து விட்டது.

*

எனவே உடலை நன்கு பராமரித்தால்தான் இயற்கையான உண்மையான அழகைப் பெறமுடியும்.

*

இன்றைய நவீன உலகில் உணவு மாறுபாடு காரணமாக முகமும், சருமமும் பாதித்த நிலையிலேயே பலர் காணப்படுகின்றனர். இவர்களின் இந்த நிலையைப் பயன்படுத்தி பணம் குவிக்க பல அழகு நிலையங்கள் ஆங்காங்கே புதிது புதிதாய் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

*

முக அழகை பராமரிக்க மேலை நாட்டினர் இரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை மேல்பூச்சாக பூசி வந்தனர்.

*

நாளடைவில் மேலை நாட்டினரும் இயற்கையை நேசித்து, அதன் அருமையை புரிந்துகொண்ட இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கையான உணவுகளை சாப்பிட்டு இயற்கையாக உடல் அழகையும் முக அழகையும் பெற ஆரம்பித்துள்ளனர்.

*

ஆனால் நம் மக்கள் பலர் மேல்நாட்டு மோகத்தால் ரசாயன அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

***

பொதுவாக சருமத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. சாதாரண சருமம்

2. வறட்சியான சருமம்

3. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்

***

2. வறட்சியான சருமம்:

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் மிகவும் கறுத்து களையிழந்து காணப்படும். இதற்குக் காரணம் இவர்களின் உணவு முறையே. வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இவர்கள் உணவில் அதிகம் புளி, தக்காளி போன்ற புளிப்புச் சுவையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

*

முகம் பளபளக்க சில வழிமுறைகள்:


1. வெண்டைக்காய் பிஞ்சு - 2

காரட் - 1

இவற்றை எடுத்து நறுக்கி தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் எங்கும் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் ஒளிபெறும்.



2. · செம்பருத்தி இலை, பயித்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.


3· அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும்பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.


4· வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


5· சருமத்தை வறட்சியுறச் செய்யும் குளியல் சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது.


6· பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் மிதமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும் .


7· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.


8. வெண்டைகாய் - 150 கிராம்

சிறுபயறு - 30 கிராம்

துத்தியிலை - 10 கிராம்

ஆவாரம் பூ - 1 கைப்பிடி

மிளகு - 5

சீரகம் - 5 கிராம்

பூண்டு - 2 பல்

பெருங்காயம் - தேவையான அளவு

இவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த சாறினை வடிகட்டி அருந்தி வந்தால் வறட்சியான உடல் குளிர்ச்சியடைந்து பளபளப்பாகும். தொடர்ந்து ஒரு மண்டலம் இவ்வாறு செய்து வருவது நல்லது.



***


3. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்


சிலருடைய முகம் எப்போதும் எண்ணெய் பசையுடனே காணப்படும். மேலும் அவர்கள் எவ்வளவுதான் முகத்தை கழுவினாலும் எண்ணெய் வடிவது போன்றே இருக்கும். இதற்கு காரணம் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதே.


இவர்கள்:


1· தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.


2· வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் காயவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.


3· சின்ன வெங்காயத்தை நன்கு வேகவைத்து தயிர் கலந்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும்.


4. ஆரஞ்சு ஜூஸ் - 100 மிலி

எலுமிச்சை ஜூஸ் - 100 மிலி

நெல்லிச்சாறு - 100 மிலி

புதினா சாறு - 100 மிலி

சாத்துகுடி சாறு - 100 மிலி

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அதனுடன் 300 மிலி தேனை சேர்த்து பதமாகக் காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இருவேளையும் 200 மிலி தண்ணீரில் 15 மிலி அளவு கலந்து அருந்தி வந்தால் முகம் மற்றும் உடல் பளபளக்கும்.



***
thanks நக்கீரன்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "