...

"வாழ்க வளமுடன்"

11 அக்டோபர், 2010

"டிப்ரஷனுக்கு காரணம் உர்ர்ர்ர் தான்""

"டிப்ரஷன்' ஆரம்பமே இது தான்:



சோகம்; வருத்தம்; வேதனை; நோயால் பாதிப்பு; மன தளர்ச்சி என்று எது வேண்டுமானாலும், "டிப்ரஷன்' என்று மருத்துவ அகராதியில் கூறப்படுகிறது.

*

சில காரணங்களால் "டிப்ரஷன்' வருகிறது என்று டாக்டர்கள் கூறினாலும், மனதை சரிசமமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதும் உர்ர்ர்ர்...என்றிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறியே!

*

எந்த ஒரு கோளாறும் , குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது; அப்படியிருந்தால் ஏதோ பெரிய வியாதிக்கு அறிகுறி. அதுபோல, மனத்தளர்ச்சி எந்த உருவில் வந்தாலும், நாட்கணக்கில் நீடித்தால், கண்டிப்பாக அதை உடனே கவனிக்க வேண்டும்.

***

டிப்ரஷன் என்றால்?:

1. டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். ஆனால், மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், அது இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.

*

2. ஆனால், எந்த காரணமும் இல்லாமல், எப்போதும் உர்ர்ர்ர்... என்றிருப்பதும் கூட டிப்ரஷனில் விட்டுவிடும் ஆபத்து உண்டு. தனக்கு நேர்ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்துபேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோசிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பாமை ஆகியவையும் கூட, மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.

*

3. இதனால், முகத்தில் புன்முறுவல் வராது;அப்படியே வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு விடுவர். அர்த்தமில்லாத கோபம் வரும்; தேவையில்லாத குழப்பம் வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டு விடும்; அதன் பின் கேட்கவே வேண்டாம்... ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய் , கதவை தட்ட ஆரம்பித்து விடும்.

***

எப்படி வருகிறது?

1. எல்லா நோய்களுக்கும் இருப்பது போல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணமாக உள்ளது; அதற்கு அடுத்து, வாழ்க்கையில் நேரும் நிகழ்வுகளை சொல்லலாம்.

*

2. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ டிப்ரஷன் வரலாம். மூளையில் உள்ள ஒரு வித ரசாயன மாற்றம் தான் டிப்ரஷனை அதிகப்படுத்துகிறது.


*

3. ஆண்களை விட, பெண்களிடம் தான் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

*

4. குறிப்பாக, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு டிப்ரஷன் அதிகமாக நேர வாய்ப்பு உண்டு. மருத்துவ ரீதியான டிப்ரஷனும் கூட இவர்களுக்கு நேருவது உண்டு.

*

5. பரம்பரையில் யாருக்காவது இருந்தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறைக்கு முன் இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.

*

6. பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கியவர்கள் மரணம் கணிசமான அளவில் டிப்ரஷனுக்கு காரணமாகிறது.

*

7. புற்றுநோய் உட்பட சில நோய் பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு இது வரும்.


*

8. முதுமை நோய்க்கு டிப்ரஷனும் ஒரு அறிகுறி தான்.

*

9. சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட இந்த பாதிப்பு வரும்.

*

10. கோபம், ஆத்திரம், தோல்வி மனப்பான்மை போன்றவையும் டிப்ரஷனில் விட்டு விடும்.

***

அறிகுறிகள் எவை?

1. ராத்திரி படுத்தால் தூக்கம் வராது; அடிக்கடி விழிப்பு வரும்; தூக்கம் தடை படும்.

*

2. சோர்வு ஏற்படும்; சிறிய தூரம் நடந்து சென்று விட்டுவந்தால் கூட சோர்வு ஏற்படும்.

*

3. அடிக்கடி தலைவலி வரும்.

*

4. சிறிய விஷயங்களுக்கு கூட அழுகை வந்து விடும்; எப்போதும் ஒரு வித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

*

5. பசி அறவே இருக்காது; அப்ப டியே பசிப்பதாக தட்டு முன் உட்கார்ந்தால், சாப்பிட பிடிக்காது.

*

6. படிப்பிலும்,வேலையிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒரு வித வலி இருந்துகொண்டே இருக்கும்.

*

7. உடல் எடை சில சமயம் அதிகமாக இருக்கும்; சில சமயம், மிக குறைவாக இருக்கும்.

*

8. மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படும். குற்ற மனப்பான்மை இருக்கும். "நாம் எதற்கும் லாயக்கில்லை' என்ற உணர்வு தலைதூக்கும்.

*

9. தற்கொலை எண்ணம் மனதில் நிழலாடும்;

*

10. தற்கொலை முயற்சியும் செய்ய வைக்கும்.


***

கண்டுபிடிப்பது எப்படி?

டாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடிப்பார். அதன் பின், ரத்த பரிசோதனை எடுக்கப்படும். ரத்த சோகை, தைராய்டு போன்ற பிரச்னை இல்லை என்று தெரிந்தால், மனோதத்துவ நிபுணர் பரிசோதிப்பார்.

*

இரண்டு வாரம் தொடர்ந்து நோயாளியை பரிசோதித்தால், எதனால் டிப்ரஷன் என்பது சரியாக கணக்கிட முடியும். அதன் பின், சிகிச்சை முறை உறுதி செய்யப்படும்.

***

சிகிச்சை சுலபமே!

1. "ஆன்டி டிப்ரஷன்' மாத்திரைகள் உள்ளன;அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அளவு கண்டுபிடிக்க முடியும்.


*

2. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், இரண்டு வாரத்தில் அதன் குணம் தெரியும்; முதலில், நல்ல தூக்கம் வரும்; தூக்கப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

*

3. மன திடத்தை ஏற்படுத்த சில உடல், மனது பயிற்சிகள் உள்ளன. தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்துவிடும். கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.


***

நன்றி விபரம்.

***

"வாழ்க வளமுடன்"

***

வாயில் துர்நாற்றத்தைத் துரத்த....

கடந்த ஒரு வருடமாக வாயில் துர்நாற்றமடிக்கிறது.​ வாயில் ஊறும் எச்சிலைத் துப்ப இரவில் இரண்டு அல்லது மூன்றுமுறை எழுந்திருக்க வேண்டியுள்ளதால் தூக்கமும் கெடுகிறது.​ பற்களில் கறையும் மஞ்சள் நிறமும் படர்ந்துள்ளது.​ கடந்த ஏழு வருடமாக வெளியூரில் தங்கி ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில்தான் சாப்பிடுகிறேன்.​ இந்த உபாதைகள் நீங்க வழி என்ன?

ச.ஸ்ரீநிவாஸ்,​​ குமாரபாளையம்.



துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை பித்ததோஷ சீற்றத்தின் தனி வெளிப்பாடே என்று ஆயுர்வேதம் உறுதிபடக் கூறுகிறது.​

*

கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளிலிருந்து உங்களுக்குப் பித்த ஊறல் அதிகமாக உள்ளதை இவை காட்டுகின்றன.​

*

இரவில் இட்லி சாம்பார் சட்னியுடன் சாப்பிடும் நபர்களுக்கு,​​ அதிலுள்ள உளுந்து சீரணமாவதன் வாயிலாக,​​ இந்தத் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஏற்படக் கூடும்.​

*

உங்களைப் பொறுத்தவரை,​​ இரவில் புழுங்கலரிசிக் கஞ்சி அல்லது புழுங்கலரிசி கஞ்சியுடன் மோர் கலந்து சாப்பிடுவதே நல்லது.​ பச்சரிசி வேக வைத்த சாதத்துடன் பால் கலந்து சாப்பிடுவதும் நல்லதே.​ இவை அனைத்தும் பித்த ஊறலைக் கட்டுப்படுத்தும் நல்ல உணவு வகைகளாகும்.

*

""பித்தே திக்த:​ ததஸ்வாது:​ கஷாயஸ்ச ரúஸôஹித:'' என்கிறார் வாக்படர் எனும் ஆயுர்வேத முனிவர்.​

*

பித்த ஊறலைக் கட்டுப்படுத்துவதில் கசப்புச் சுவைதான் சிறந்தது,​​ அதற்கு அடுத்ததாக இனிப்பும்,​​ அடுத்தபடியாக துவர்ப்புச் சுவையும் சிறந்தவை என்று அதற்கு அர்த்தமாகும்.

*

ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில் கசப்புச் சுவை கொண்ட உணவு வகைகளான மணத்தக்காளிக் கீரை,​​ வெந்தயக் கீரை,​​ பாகற்காய்,​​ சுண்டைக்காய் என்றெல்லாம் சமைத்துப் போட்டால் அங்கு யாரும் வரமாட்டார்கள்.​

*
வியாபாரமும் படுத்துவிடும்.​ உங்களுக்கோ சமைப்பதற்கு நேரமுமில்லை.​ இப்படி இக்கட்டான நிலையில் உள்ள உங்களுக்கு,​​ முனிவரின் உபதேசத்தை எப்படிப் பயன்படுத்த முடியும்?​ அதற்கு ஒரு வழி இருக்கிறது.​

*

சுவையில் கசப்பான வேர் கொண்ட விலாமிச்சை,​​ வெட்டிவேர் மற்றும் சந்தனத்தை சிறு மூட்டையாகக் கட்டி மண் பானைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

*

மொட்டை மாடியில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் படும்படி பானையின் வாயை மெல்லிய துணியால் கட்டியும் இதைச் செய்யலாம்.​ இந்தத் தண்ணீரைக் காலையில் பருகுவதால் பித்த ஊறலை மட்டுப்படுத்தி,​​ உங்களுடைய வாய் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் கறையிலிருந்து விடுபடலாம்.​ வாய் கொப்பளிப்பதற்கு இந்தப் பானைத் தண்ணீரையே பயன்படுத்தவும்.

*

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயைச் சீவல் போல சீவி வைத்துக் கொண்டு,​​ சிறிய அளவில் வாயில் போட்டு மென்று தின்றுவிடவும்.​

*

நல்ல தூக்கத்தைத் தரும்.​ வாயில் அதிக எச்சில் ஊறுவதை மட்டுப்படுத்தும்.​ வயிற்றில் பித்த சுரப்பையும் தடுக்கும்.

*

இருமாதங்களுக்கு ஒரு முறை சூரத்தாவரை இலை,​​ ரோஜாமொக்கு,​​ காய்ந்த திராட்சை,​​ பிஞ்சுக் கடுக்காய்,​​ சுக்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து இரவு முழுவதும் சுமார் 300 மி.லி.​

*

தண்ணீரில் ஊறவைத்து,​​ மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க,​​ நீர்ப் பேதியாகி குடலிலிருந்து தேவையற்ற பித்தத்தை வெளியேற்றிவிடும்.

*

உணவில் உப்பு,​​ புளி,​​ காரம் குறைக்கவும்.​ நொறுக்குத் தீனி எனப்படும் மிக்ஸர்,​​ முறுக்கு,​​ சிப்ஸ் போன்றவற்றை மாலை வேளைகளில் சாப்பிடுவதை நிறுத்தி,​​ நல்ல இனிப்புச் சுவையுள்ள பழங்களாகிய வாழைப்பழம்,​​ திராட்சை,​​ ஆப்பிள்,​​ பலாப் பழம்,​​ சப்போட்டா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சாப்பிடவும்.​

*

காப்பி,​​ டீக்குப் பதிலாக ஹார்லிக்ஸ்,​​ போர்ன்விட்டா,​​ காம்ப்ளான் போன்றவற்றில் ஒன்றைப் பாலுடன் கலந்து பருகவும்.​ உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.


***


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

***
நன்றி தினமணி.
***

"வாழ்க வளமுடன்"

***

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

இயற்கை வைத்தியம்:




1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

*

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

*

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

*

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

*

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

*

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

*

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

*

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

*

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

*

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

*

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

*

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

***

நன்றி webdunia!

***

"வாழ்க வளமுடன்"



***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "