...

"வாழ்க வளமுடன்"

06 ஜூன், 2011

விருத்தசேதனம் / சுன்னத்து ( ஆண்குழந்தைகளுக்கு )

*
(ஆண்குறியின் நுனித்தோலை நீக்குதல்)

பிறந்த ஆண்பிள்ளைகளின் ஆண்குறியின் முனையில், உறை அல்லது தொப்பி போன்ற நுனித்தோல் காணப்படும். விருத்த சேதனத்தின் போது, ஆண்குறியின் முனைப்பகுதி வெளியில் தெரியும் வண்ணமாக, நுனித்தோல் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்படும்.•குழந்தை பிறந்த இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் விருத்தசேதனம்/சுன்னத்து செய்வது மிக நல்லது. ஆனால் பொதுவாக இந்த முறையானது பிள்ளை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் செய்யப்படும். (அநேக வேலைகளில் பிறந்த 48 மணி நேரத்திற்குள்ளும் செய்யப்படும்)
•குறைப்பிரசவத்தில் பிறந்தக் குழந்தைகள் மற்றும் உடல் நலக் குறைவு உள்ள குழந்தைளுக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டப் பிறகே சுன்னத்து செய்யப்படும்
•ஆண்குறியில் பிரச்சனை உள்ள குழந்தைகட்கு, அப்பிரச்சனை அறுவைசிகிச்சை முறையில் சரிசெய்தப் பிறகே விருத்த சேதனம் செய்யப்படுகிறது. ஏனெனில், விருத்தசேதனத்தின் போது நீக்கப்படும் நுனித்தோலானது சில சமயங்களில், குறைபாடுடன் உள்ள ஆண்குறியினைச் சரிசெய்ய பயன்படும்.

**
விருத்தசேதனம் பண்ணப்பட்ட ஆண்குறியினை பராமரித்தல்

•ஒவ்வொரு முறை குளிப்பாட்டும் போதும் பதமான சுடுதண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவவேண்டும்.
•குழந்தைகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தாவண்ணம் அவர்களை கவனமாக பராமரிக்க வேண்டும்
•நுனித்தோல் எடுக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போடப்பட்டிருப்பின் தேவையின் அடிப்படையில புதியக் கட்டினை போட்டுக்கொள்ளலாம்
•விருத்தசேதனத்தின் போது ஏற்படும் காயம் ஆற 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். அதுவரை அப்பகுதி ரணமாக அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

*கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்1. தொடர்ந்து இரத்தக்கசிவு இருத்தல்


2. ஆண்குறியின் முனை சிவப்பாக மாறி 3 நாட்களில் இது மிகவும் மோசமாகும் போது.


3. காய்ச்சல் இருந்தால


4. நோய் தொற்று வந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டால் அதாவது சீழுடன் கூடிய சிவப்பு நிற சிறு பிளவைகள் போன்றவை இருந்தால்.


5. விருத்தசேதனம் செய்த 6 முதல் 8 மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிக்கவில்லை என்றால்.


***
thanks indg
***"வாழ்க வளமுடன்"

மிளகாய் சாப்பிடுவது நல்லதா?நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.

அளவுடன் தினசரி உணவில் சேரும் பச்சை மிளகாயும், அரைத்த கார மிளகாய்ப் பொடியும் உடலில் இருந்து நன்கு வியர்வை வெளியேற உதவுகிறது. இயக்கத்தைத் தூண்டிவிடுகிறது. வெப்பப் பிரதேச நாடுகளில் நோயாளிகளை உடனே வியர்க்கச் செய்யவேண்டுமென்றே கார மிளகாய் சேர்ந்த உணவைச் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் வியர்வைப் பெருகி காய்ச்சல் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.

காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்ற கழலைகளையும் உடனடியாகக் குணமாக்குகிறது. இவ்விரண்டையும் குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.

மூலிகை மருத்துவர்கள், அளவுடன் தவறாமல் மிளகாய் சேர்த்து உணவு சமைக்கச் சொல்கிறார்கள். மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெறத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. வைட்டமின் சி இறந்த உயிரணுக்களுக்குப் பதிலாக புதிய உயிரணுக்களை உற்பத்திச் செய்கிறது. செரிமானம் தடையின்றி நடைபெற உமிழ்நீர் நன்கு சுரக்க வைக்கிறது. உமிழ்நீர் நன்கு சுரந்தால் பற்களும் தூய்மையடைகின்றன.

முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும்.

மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.


***
thanks tamilvanan
***
"வாழ்க வளமுடன்"

ப்ளோரைடு பற்பசை நல்லதா? கெட்டதா? (Fluoride Toothpaste )ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல்மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார் கள். நாம் வசிக்கும் இடத் தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

1997ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

"WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately."

ஒரு முறை பல்துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

*

ப்ளோரைடு பற்பசை வரலாறு

ப்ளோரைடு இயற்கையாகவே பூமியில் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால் பூமியில் கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற வகை. இது பூமியில் அதிகமாக இருக்கும் இடங்களில் நீரிலும் அதிக அளவு கலந்திருக்கும். இந்த இடங்களில் இருப்பவர்களின் பற்களில் பற்குழிகள் விழுவது மிகக் குறைவு. ஆனால் பெரும்பாலும் பற்களில் கறைகள் படிந்து அழகில்லாமல் காட்சியளிக்கும். இது நீரில் உள்ள அதிக அளவு ப்ளோரைடினால் தான் ஏற்படுகிறது என்று கண்டறிந்த பின் பற்குழிகளை தடுக்க பல் மருத்துவர்கள் ப்ளோரைடை அளவோடு பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ப்ளோரைடு பற்குழிகள் விழாமல் தடுக்கிறது என்று அறிந்த பின், பல் மருத்துவர்கள் பற்குழி விழுந்த சிறுவர் சிறுமியர்க்கு ப்ளோரைடு பெயிண்டிங் என்ற முறையில் பற்களில் ப்ளோரைடினை பூசினார்கள். 1973-ம் ஆண்டு வாக்கில் பற்பசையில் ப்ளோரைடு கலந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இந்த பற்பசைகள் உபயோகத்திற்கு வந்த பத்து வருடங்களில் குழந்தைகள் பற்குழிக்காக பல்மருத் துவரிடம் வருவது வெகுவாக குறைந்தது. பல இடங்களில் வருமானம் போதாமல் பல் க்ளினிக்குகள் மூடப்பட்டன. அதன் பின்பு ப்ளோரைடு பற்பசைகள் உலகெங்கும் உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.

*

பக்க விளைவுகள், ஆபத்துக்கள்

அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல்மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

*

ப்ளோரைடு விஷமா?

ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக்கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்று காரசாரமாக விவாதிக்க இரண்டு புறமும் வல்லுநர் அணிகள் இருக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:


http://www.doctorspiller.com/fluoride.htm
http://www.dentalgentlecare.com/toothpaste.htm

ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:

http://www.aroma-essence.com/research-reports/fluoride.html
http://www.mercola.com/2001/may/30/toothpaste.htm
http://www.sonic.net/kryptox/dentistr/dentistr.htm


ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக 'ப்ளோரைடு செயல் கூட்டணி' (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது. http://www.fluoridealert.org
நாம் செய்யக்கூடியது.

குழந்தைகளுக்கு ஆறு வயது வரை ப்ளோரைடு பற்பசையை தவிர்ப்பது நல்லது. அதற்கு முன்பு உபயோகிப்பதானால் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம்.

நமக்கு பற்பசை மட்டுமல்லாமல், நீர், உணவு, குளிர்பானங்கள் மூலமாகவும் ப்ளோரைடு உடலில் சேரும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே முடிந் தவரை ப்ளோரைடு கலவாத பற்பசைகளை உபயோகிக்கலாம். ப்ளோரைடு பற்பசைகளை உபயோகிப்பதானால் அவற்றை பட்டானி அளவிற்கு மிகாமல் எடுத்து உபயோகிக்க வேண்டும்.

தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.

*

பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?

பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் 'FOAMING FLUORIDATED TOOTHPASTE' என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ' contains 1000PPM of available fluoride' என்றும் எழுதப்பட்டிருக்கும்.
***
நன்றி viggie
***"வாழ்க வளமுடன்"

விலங்குகளின் 2 வகைகள்


பூமியில் வாழும் உயிரினங்களை அடிப்படை யாகக் கொண்டு தாவர உலகம், விலங்கு உலகம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், தாவர உலகத்தைவிட விலங்கு களின் உலகம் மிகப்பெரியது. தாவரங்களையோ அல்லது பிற விலங் குகளையோ உணவாக உட்கொண்டுதான் விலங்கு கள் தங்களுக்கான சக்தியைப் பெறுகின்றன.

விலங்குகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. முதுகெலும்பு உள்ளவை,

2. முதுகெலும்பு அற்றவை.

*

முதுகெலும்பு இல்லாதவை

பெரும்பாலான விலங்கினங்கள், முதுகெலும்பு அற்ற வையே. நீருக்கு அடியில், நிலத்துக்கு அடியில், நிலத்துக்கு மேல், பிற விலங்கு களின் உடலில் ஒட்டுண்ணிகளாக பல்வேறு விதமான இடங்களில் இவை வாழ்கின்றன. இவற்றை, கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

கடல்பஞ்சு போன்றவை

இவை, கடலில் வாழ்பவை. இவற்றுக்கு உடல் உறுப்புகள், தசை, நரம்புகள் எதுவும் கிடையாது. கடல் நீருடன் சேர்த்து உயிரினங்களை உட் கொண்டு, நீரை மட்டும் வெளியேற்றிவிடும். `போரிபெரா' என்பது இதன் விலங்கியல் பெயராகும். இவை, இரண்டு முறைகளில் இனப்பெருக்கம் செய் கின்றன. ஒன்று, பஞ்சுகள் அப்படியே இரண்டாகப் பிரிந்து, தள்ளிச் சென்று, இரண்டு வெவ்வேறு உயிர் களாக வாழத் தொடங்கிவிடும். மற்றொன்று, விந்து களையும், முட்டைகளையும் இவை தண்ணீரில் போட்டு விடுகின்றன. அவை ஒன்று சேர்ந்து கருவுற்று, மற்றொரு பஞ்சாக மாறும்.

பவளம், ஜெல்லி மீன்கள் போன்றவை

இவையும் பெரும்பாலும் கடலில் வாழ்பவையே. இவற்றுக்கு வயிறு உண்டு. உடலின் சில நீட்சிகள் மூலம் தம்மை ஏதோ தொடுகிறது என்பதை இவற் றால் உணர முடியும். இப்படி தம்மைத் தொடுகின்ற உயிரினங்களைப் பிடித்து, உடலுக்கு வெளியிலேயே அவற்றை ஜீரணிக்கத் தொடங்குகின்றன. பின்னர், அதை விழுங்கி, மீதியை வயிற்றுக்குள்ளே ஜீரணம் செய்கின்றன. இவற்றை, `ஸ்னிடேரியா' மற்றும் `டெனோபோரா' என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.

ஒட்டுண்ணிப் புழுக்கள்

இவை விலங்குகளின் உடல்களில், அவற்றின் ஜீரண மண்ட லத்தில், குடல்களுக்கு அருகில் வாழ்பவை. விலங்கு களின் உடலுக்கு உள்ளே கிடைக்கும் உணவை உண்கின்றன. இவற்றுக்கு குழாய் போன்ற உடல் அமைப்பும், அதில், தலை மற்றும் வாய்ப்பகுதியும் உள்ளன. கழிவுகளை வெளியேற்று வதற்காக பின்புறம் ஒரு துவாரமும் உள்ளது. ஆண், பெண் என இரண்டு பாலுறுப்புகளுமே இவற்றுக்கு உண்டு. வெவ் வேறு சமயங்களில் இவை ஆணாகவும், பெண்ணாகவும் நடந்து கொள்கின்றன. `ஹெல்மிந்தெஸ்' என்பது இவற்றின் விலங்கியல் பெயராகும்.

புழுக்கள்

மண்புழு, அட்டை போன்றவை இதில் அடங்கும். இவை ஒட்டுண்ணிப் புழுக்கள் போல இல்லாமல், புற உலகில் வசிக்கின்றன. தலை, வாய், கழிவுகளைத் தள்ளும் ஓட்டை போன்ற அமைப்புகள் இவற்றுக்கு உண்டு. மேலும், அடிப்படை ரத்த ஓட்ட மண்டலமும் உள்ளது. இவற்றின் உடலின் மேற்புறத்தில் நிறைய துவாரங்கள் உள்ளன. அவற்றின் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிக் கொள்கின்றன.

பூச்சிகள்

முதுகெலும்பு இல்லாத விலங்குகளில் பூச்சிகள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எறும்பு, ஈ, வெட்டுக்கிளி, நண்டு என இது மிகப்பெரிய கூட்டம். விலங்கியலில் இவற்றுக்கு `ஆர்த்ரோபோடா' என்று பெயர். இந்த வகை விலங்கு களுக்கு கால்களும், உடம்பைச் சுற்றி கடினமான ஒரு கூடும் உண்டு.

நத்தை, ஆக்டோபஸ் போன்றவை

இவை பெரும்பாலும் கடலில் வாழ்பவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம் ஆகியவற்றுடன் மைய நரம்பு மண்டலமும் இவற்றுக்கு உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர், `மொலஸ்கா' என்பதாகும்.

நட்சத்திர மீன் போன்றவை

இவற்றின் விலங்கியல் பெயர், `எக்கினோடெர்மேடா' என்பதாகும். இவையும் கடல்வாழ் பிராணியே.

**

முதுகெலும்பிகள்

நன்றாக உருவான எலும்பு மண்டலம், முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவை. ஜீரண மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், மைய நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் போன்றவையும் இவற்றுக்கு உண்டு. கீழ்க்கண்ட 5 வகைகளில் இவற்றை வகைப் படுத்தலாம்.

1. ஊர்வன - பாம்பு, பல்லி போன்றவை

2. நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - தவளை, முதலை

3. மீன்கள்

4. பறவைகள்

5. பாலூட்டிகள் - அனைத்து நான்கு கால் விலங்குகள், மனிதன்

திமிங்கலமும், டால்பினும் நீரில் வசித்தாலும், இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பிற பாலூட்டிகள் நிலத்தில் மட்டுமே வசிப்பவை. பறவைகள் அனைத்துக்கும் இறக்கைகள் உண்டு. நெருப்புக்கோழி, ஈமு, கிவி போன்ற சில பறவைகளைத் தவிர அனைத்துமே பறக்கக் கூடியவை.

அனைத்து முதுகெலும்பிகளுமே பால் இனப்பெருக்கம் செய்பவை. இவற்றில் ஆண், பெண் என்ற தெளிவான வரையறை உண்டு. பாலூட்டிகள் தவிர்த்து அனைத்து முதுகெலும்பிகளுமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. பாலூட்டிகளின் குழந்தைகள், தாயின் வயிற்றுக்குள்ளேயே வளர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியே தள்ளப்படுகின்றன.***
நன்றி தினதந்தி
***
"வாழ்க வளமுடன்"

மடிக்கணணிகளை (Laptops) வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை!


இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவைகள்:


கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள்.

உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள்.


Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும்.


ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல. மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள்.


ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள். தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன.


Screen Resolution மிகக் குறைந்தது 800-600 pixels முதல் 1600-1200 pixels வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settingsகளை செய்து Screenஐப் பார்வையிடுங்கள்.


சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settings அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.


USB2 மற்றும் Firewire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை iPods, Digital iPods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.


இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Card பயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.

***
thanks tamilbirdszz
***"வாழ்க வளமுடன்"

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!!1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.


2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.

-பிடிரோஸ்போரம் ஓவல்- என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.


3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்
பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20. அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்


**

மேலும் சில குறிப்புகள் :

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


* 4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

***


கூந்தல் மிருதுவாக இருக்க-

*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.***
thanks Mohamed ali
***
"வாழ்க வளமுடன்"

யார் யாரிடம் இருந்து இரத்தம் பெற முடியும் -- அட்டவணைஜப்பான் ஆராய்ச்சி நிறுவனம் இரத்தத்தின் வகைகளை கொண்டு மனிதர்களின் குணநலன்களைப் பகுத்து ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ளது.


வகை O

நீங்கள் தலைமைப் பண்பு கொண்டவர்கள் ,ஒன்றை அடைய வேண்டும் என்று முடிவு கொண்டால் எப்பாடு பட்டேனும் சாதித்து விடுவீர்கள். நீங்கள் நேர்மையான, நம்ம்பிக்கைக்கு உரியவர். தன்னம்பிக்கை அதிகம். உங்களிடம் பொறாமையும் , வெறுப்பும் உங்களுடைய பலவீனங்கள்.

*

வகை A

நீங்கள் குழுவாக இணைந்து செயல்பட விரும்புவீர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். அமைதியும் அன்பும் உங்களின் பலம் .பிடிவாதம் உங்களின் பலவீனம் .

*

வகை B

இவர்கள் முரட்டுதனமானவர்கள் ,எதையும் நேருக்கு நேர் ,தங்களின் எண்ணப்படியே செயல்படும் தன்னறிவாளர்கள் . ஆக்கபூர்வமானவர்கள் ,படைப்புத்திறன் மிக்கவர்கள். எந்த விதமான சூழ்நிலைகளுக்கும் பொருந்தி செல்லும் குணம் இவர்களின் பலம் . இவர்களின் தனி தன்மையே இவர்களின் பலவீனமுமாகும் .

*

வகை AB

தன்னிலை உணர்ந்த பொறுமைசாலிகள் , உங்களிடம் பழகவே பலரும் விரும்புவர் .நவரசம் ததும்பும் கலைஞர்கள் .உண்மையானவர்கள். முடிவெடுக்க தயங்குவதும் ,விட்டு கொடுக்காமையும் இவர்களின் பலவீனம்

**

கூடுதல் தகவல்கள் :


யார் யாரிடம் இருந்து இரத்தம் பெற முடியும் ,யார் யாருக்கு இரத்தத்தை கொடையாக கொடுக்க முடியும் என்பதற்கு ஒரு சிறு அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.receipient - பெறுநர் , donar -கொடைஞர் (கொடுப்பவர்)blood transfusion எனப்படும் இரத்தத்தை மாற்றுதல் -எந்த எந்த வகையினருக்கு எவரிடமிருந்து பெறப்படுகிறது என்பதை சதவீதக் கணக்கில் அட்டவனையோடு***
நன்றி jskpondy
***
"வாழ்க வளமுடன்"

பாதம் காக்கும் பத்து வழிமுறைகள்உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ள ஒரு ஆய்வில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம் என்றும், சுமார் 10 நபர்களில் இரண்டு பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகாவும் சர்க்கரை நோய் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


கடந்த 20 ஆண்டுகளில் 30 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 230 மில்லியனாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய சர்க்கரை நோய் மருத்துவர்களின் மாநாட்டில் 230 மில்லியன் 2025 ஆம் ஆண்டு 350 மில்லியனாக உயரும் என்று கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 6 மில்லியன் மக்கள் உலகளவில் பாதிக்கப்படுகின்றனர்.


உலகில் அதிகம் பேரை கொல்லும் நான்கவது வியாதி இதுவாகும். இன்சுலின் ஹோர்மோன் சுரப்பு குறைவாதால் உடம்பின் ஏற்படுத்தும் மாற்றங்களே சர்க்கரை வியாதி. இது பொதுவாகக் கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் (life style changes) போன்ற முக்கிய காரணங்களால் மனிதர்களைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் மனிதனின் உடல் உறுப்புக்கள் தலை முதல் பாதம் வரை அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கிறது. இதில் கால் பாதத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் கடைசியில் காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய் விடுகிறது.

இதைத் தமிழில் சிலர் இனிப்பு நீர் வியாதி என்றும் அழைக்கின்றனர். கால் பாதம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று இந்தக் கட்டுரையில் சிறிது விரிவாகப் பார்க்கலாம். முன்பு சொன்னது போல உடம்பின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் சர்க்கரை நோய் உடம்பில் உள்ள கால் பகுதியில் உள்ள நரம்புகளையும், ரத்தக் குழாய்களையும் மிக மிக மோசமாகத் தாக்குவதால் கால்கள் அதிகமாக பாதிப்படைகிறது.

உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் முக்கியமாக இரண்டு வேலையை செய்ய மூளையால் பணிக்கப்படுகின்றன. இதில் ஒரு முக்கியப் பணி தொடு உணர்வுகளைக் கடத்தும் பணி. இந்த நோய் நரம்புகள் செய்யும் இந்த வேலையை முற்றிலுமாக துண்டிக்கிறது. நரம்புகளின் அன்றாட செய்யும் பணிகளை பாதித்து அதாவது நீங்கள் நடக்கும் போதோ, பேருந்தில் பயணிக்கும் போதோ, கால் உணர்ச்சிகள் இன்றியமையாதது. நரம்புகள் செயல் இழப்பதால், கால் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் நாம் நடக்கும் போது சாலையிலோ அல்லது வீட்டிலோ கால்கள் உராய்வினால் தோலில் ஏற்படும் சிறு காயங்கள் மிகப் பெரிய புண்ணாக உருமாறி கால்களைத் துண்டிக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

ரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் தேங்கிப்போய் சிறு புண்கள் பின் புரையோட ஆரம்பித்து செல்களை செயல் இழக்கச் செய்து அதை இறக்கச் செய்கிறது. இந்த நிலையை மருத்துவர்கள் கால்கள் அழுகிய நிலை (நெக்ரோசிஸ்) என்கின்றனர். கடைசியில் வேறுவழி இல்லாமல் மருத்துவர்கள் நோயாளியின் கால்களை எடுக்கும் (amputation) நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதில் இருந்து எப்படி சர்க்கரை வியாதிக்காரர்கள் அழகிய பாதங்களை பாதுகாப்பது என்று சில வழிமுறைகளை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நம் கால் பாதம் குட்டியான 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 100 தசைகளையும், 250,000 வேர்வை சுரப்பிகளையும் உள்ளடிக்கியது. ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 115,000 மைல்கள் நடக்கின்றான். நடப்பது ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது பாதங்களுக்கும், உடம்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கிறது. உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 56,000 பேர் சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமல் இந்த நோயால் கால்களை இழக்கின்றனர். இப்படிப்பட்ட உன்னதக் குணங்கள் கொண்ட பாதம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் அழகிய பாதங்களை எப்படி பாதுகாப்பது என்ற சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

***

கால் பாதம் காக்கும் பத்து சிறந்த வழி முறைகள்

1. எங்கு சென்றாலும் செருப்பு அணிவதை கடமையாக கொள்ளலாமே. செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள். அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலனி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும்.

2. வராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது உங்களின் ஒரு முக்கியக் கடமையாக கொள்ளுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் புண்ணை உருவாகத் துணை செய்கிறீர்கள் எனலாம்.

3. மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்.
4. உங்கள் பாதங்களின் பின் பகுதி உங்களால் எளிதாகப் பார்க்க முடியாததால் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு புண்கள், கொப்புளங்கள், தோலின் சிவந்த நிறம் ஏதும் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதியுங்கள் நீங்களே. இது ஒரு வருமுன் காக்கும் முறையாகும்.

5. படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

6. நீங்கள் நடக்கும் போது பாதம் உங்கள் உடல் எடையின் பெரும் பகுதியை தாங்கிக் கொள்கிறது. அதனால் உங்கள் கால்களுக்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை உங்கள் பாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க MCR (MICRO CELLULAR RUBBER) என்ற ஒரு வகை ரப்பரால் செய்யப்பட்ட காலனிகளை வாங்கி அணிவது ஒரு நல்ல வழியாகும். இது அனைத்து செருப்புக் கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7. நீங்கள் காலனி (SHOE) அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை (COTTON SHOCKS) உபயோகியுங்கள். காலனிகளை அணியும் முன் உள்ளே ஏதும் கூரான குப்பைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பின் அணியுங்கள்.

8. நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும்.

9. அப்படி புண்கள் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.

10. உங்களின் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக முக்கியம்.***
நன்றி jskpondy
***


"வாழ்க வளமுடன்"

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுகள்இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.
■அருணாசலப் பிரதேசம் - AR
■அஸ்ஸாம் - AS
■ஆந்திரப் பிரதேசம் - AP
■பீகார் - BR
■கோவா - GA
■குஜராத் - GJ
■ஹரியானா - HR
■இமாசலப் பிரதேசம் - HP
■கர்நாடகம் - KA
■கேரளம் - KL
■மத்தியப் பிரதேசம் - MP
■மகாராஷ்டிரம் - MH
■மணிப்பூர் - MN
■மேகாலயா - ML
■மிசோரம் - MZ
■நாகலாந்து - NL
■ஒரிசா - OR
■பஞ்சாப் - PB
■ராஜஸ்தான் - RJ
■சிக்கிம் - SK
■தமிழ்நாடு - TN
■திரிபுரா - TR
■உத்திர பிரதேசம் - UP
■மேற்கு வங்காளம் - WB
■அந்தமான்-நிகோபார் - AN
■சண்டிகர் - CH
■தாத்ரா நாகர்ஹவேலி - DN
■டாமன் - டையூ - DD
■தில்லி - DL
■இலட்சத் தீவுகள் - LD
■பாண்டிச்சேரி - PY.***
thanks ஜெ.சதீஷ் குமார்
***


"வாழ்க வளமுடன்"

லவங்க பட்டையின் மருத்துவ குணங்கள்!நீரிழிவு, கொழுப்பு அதிகமா? கவலையே படாதீங்க!

லவங்க பட்டை பற்றி கேள்விப்பட்டிருப் பீர்கள். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.

இவ்வாறு சொல்லியிருப்பவர்கள் யார் தெரியுமா?அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.

நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர். 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.

* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.


அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .


கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.

நம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.


***
thanks Mohamed Ali Blog
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "