...

"வாழ்க வளமுடன்"

20 ஆகஸ்ட், 2012

குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !


 அம்மா,அப்பா,டீச்சர்.. மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு… உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்… இதையெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்துவிட்டால் போதும்… குழந்தைகளை நாம் நல்லபடியாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால்…
‘அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி… என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன?
அம்மா, அப்பாவிடம் குழந்தைகள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்?
ஸ்கூலில் டீச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்?
அம்மா, அப்பா, டீச்சர் பற்றியெல்லாம் அவர்களுடைய மனதில் படிந்திருக்கும் அபிப்பிராயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன?’
- இப்படிப்பட்ட கேள்விகளை எப்போதாவது அவர்களிடம் எழுப்பியிருக்கிறோமா என்று கேட்டால்… பெரும்பாலான பெற்றோரின் பதில்… ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கிறது இங்கு!
ஆனால், இனியும்கூட இத்தகைய கேள்விகளை எழுப்பி நாம் விடை காணாவிட்டால், நாளைய தலைமுறையைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் அனைத்துமே தூள் தூளாகிவிடும் என்று எச்சரிக்கிறது… பிஞ்சுக் குழந்தைகளிடம் ‘அவள் விகடன்’ நடத்திய ஸ்பெஷல் சர்வே!
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்கள்; பழனி, கரூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி, உசிலம்பட்டி போன்ற நகரங்கள்; மண்மாரி, கீழ்நாச்சிப்பட்டு, வில்லிசேரி, தொட்டப்பநாயக்கனூர், சாமிநாதபுரம் போன்ற சிற்றூர்கள்… இங்கெல்லாம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் 2,673 மாணவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான 11 கேள்விகள் அடங்கிய தாளைக் கொடுத்து, அவற்றைப் படித்துச் சொல்லி ‘அப்ஜெக்டிவ்’ டைப்பில் அதை பூர்த்தி செய்ய வைத்தோம். சர்வே பேப்பரை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டுவராமல், குழந்தைகளிடம் நெஞ்சுக்கு நெருக்கமாக பேசிப்பேசி… பற்பல தகவல்களையும் பெற்று வந்துள்ளனர் இப்பணியை முன்னின்று செய்த… விகடன் மாணவ பத்திரிகையாளர்கள். குழந்தைகளின் மனதை முழுமையாகப் புரிந்துகொள்ள, தாய்மை நிரம்பிய அக்கறையுடன் அந்த முடிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுஉள்ளன.
எல்லாக் குழந்தைகளும்… அம்மா மீது அதீதப் பாசத்துடனும் அன்புடனும் இருப்பதால், ”அம்மாவை மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லியுள்ளன. ஆனால், அம்மாவின் வகைவகையான சமையலும், வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளும்… அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். மாநகரம், நகரம், சிற்றூர் என எந்தக் குழந்தைகளும் இதில் வேறுபடவில்லை.
குழந்தைகள் அப்பாவிடம் அதிக அன்பை எதிர்பார்க்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. ‘அப்பா அவ்வப்போது பார்க், பீச், சினிமா, கோயில் என்று எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பதை பெரும்பாலும் வலியுறுத்தியிருக்கின்றன குழந்தைகள்.
‘அப்பாவிடம் பிடிக்காத விஷயம்..?’ என்ற கேள்விக்கு ‘அம்மாவிடம் சண்டை போடுவது’, ‘அம்மாவைத் திட்டுவது’, ‘சிகரெட், குடி என்று அப்பாவிடம் இருக்கும் தவறான பழக்க வழக்கங்கள்’ என்று பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டிருக்கின்றன.
இந்த சர்வே முடிவுகளையெல்லாம் எடுத்து வைத்து, ”குழந்தைகளின் இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் எதனை உணர்த்துகின்றன?” என்று மனநல ஆலோசகர் டாக்டர் ராஜ்மோகன் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பியபோது… அவர்கள் தந்த பதில்கள்…
”வேலைப்பளு, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சமூக நிர்ப்பந்தம் காரணமாக அப்பாக்கள் வேலை மற்றும் தொழில் சார்ந்து வீட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால்தான் இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ‘வெளியே போகும்போதாவது அதிக நேரம் அப்பா நம்முடன் இருப்பார்’ என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதிக நேரத்தை குழந்தையுடன் செலவிட முடியாத அப்பா, அதை ஈடு செய்கிறேன் பேர்வழி என்று நிறைய பொம்மைகள் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ‘குவாலிட்டி’ நேரத்தை செலவிட முடியாவிட்டால், அதனை பொருளாகக் கொடுத்து குழந்தையையும் பொருள்சார்ந்த வாழ்க்கைக்குள் இழுக்கிறார் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதைவிட, எப்படி செலவிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். வீட்டில் காலையில் ஒரு மணிநேரம் இருக்கிறீர்கள் என்றால்… அதில் குழந்தைக்கு என்று சிலநிமிடங்களை செலவிடுங்கள் என்கிற படிப்பினையைத்தான் சொல்கிறது, உங்கள் சர்வே முடிவுகள்” என்று அக்கறையுடன் சொன்னார் ராஜ்மோகன்.
”இன்று பெரும்பான்மையான மத்தியதரக் குடும்பங்களில் வீட்டு லோன், டூ-வீலர் லோன், கார் லோன் என்று பலதரப்பட்ட லோன்களை வாங்கி வைத்துள்ளனர். அதையெல்லாம் அடைப்பதற்காக, எப்போதும் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார் அப்பா. இத்தகைய பொருளாதாரம் சார்ந்த சுமைகள் அதிகமிருப்பதால்… குடும்ப உறவுகளுக்குள் சிக்கல் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. மாறிவரும் கலாசார பொருளாதாரச் சூழலையும் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்வது போல் இருக்கிறது இந்த சர்வே முடிவுகள்” என்றார் ஜெயந்தினி.
”முதல் காரணம், பொருளாதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கார், வீடு என்று அதிகம் சம்பாதிக்க ஓடும்போது… குழந்தை, மனைவி என நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படுகிறது. அது சண்டையாக வெடிக்கிறது. தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம்” என்று கூடுதல் விளக்கம் தந்தார் ராஜ்மோகன்.
‘அம்மாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?’ என்ற கேள்விக்கு ‘வெளியில் விளையாட அனுமதிக்காததுதான்’ என்று சிற்றூர் குழந்தைகளும்… ‘டி.வி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அனுமதிப்பது இல்லை’ என்று நகர்ப்புறக் குழந்தைகளும் கூறியுள்ளன.
”விளையாட்டு என்பது, பெற்றோரைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அலட்சியமான விஷயம் ஆகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. நகர்ப்புறக் குழந்தைகள் டி.வி, வீடியோ கேம்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெளியே சென்று விளையாடுவதற்கு இடம் இல்லாததாலும், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தைகளே இருப்பதாலும் நகர்புறத்தில் வாழும் குழந்தைகள் மனதளவில் இப்படி தயாராகிவிடுகின்றன. ஆனால், சிற்றூர்களில் வாழும் குழந்தைக்கு வாய்ப்பு இருந்தும்… படிப்பு, பாதுகாப்பு போன்ற காரணங்களால் விளையாட அனுமதி கிடைப்பதில்லை. விளையாடும் குழந்தைக்குத்தான் உடல், மனம் வலிமையாக இருக்கும்; விளையாட்டு புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஜெயந்தினி.
டீச்சர்கள் நட்புடன் இருப்பதையும், தாங்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவதையுமே 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் விரும்புகின்றன. தண்டனை தருவது, போர் அடிப்பது போல் பாடம் நடத்துவது ஆகியவற்றை பிடிக்காத விஷயங்களாகவும் குழந்தைகள் வரிசைப்படுத்தியுள்ளன.
”நட்புடன் சிரிக்கும் டீச்சரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அத்தகைய ஆசிரியர் நடத்தும் பாடத்தைத்தான் விரும்பிப் படிக்கின்றன குழந்தைகள். இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஆசிரியருக்கு கிடைக்கும் தகவல்கள், இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்கூட்டியே மாணவனுக்கும் கிடைத்துவிடுகிறது என்பதையும் ஆசிரியர்கள் உணர வேண்டும்.
ஒரு விதை எப்படி வளர்கிறது என்பதை கையில் விதையைக் கொடுத்து, மண்ணில் போட்டு வளர், செம்மண்ணில் வைத்து வெயிலில் படும்படி வை என்றெல்லாம் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பதற்கும், ‘விதை வளர்வதற்கு சூரிய ஒளி, தண்ணீர், மண் வேண்டும்’ என்று வாசித்து மனப்பாடம் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் ஜெயந்தினி.
குழந்தைகளின் மனங்களைக் குடைந்து, உள்ளே குடிகொண்டிருக்கும் குமுறல்களை இங்கே கொட்டிவிட்டோம். தீர்வு காண வேண்டியது… பெற்றோரும்… ஆசிரியர்களும்தான்!

***
தொகுப்பு: நாச்சியாள் – அவள் விகடன் டீம்

***


"வாழ்க வளமுடன்"
 

தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா?அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை அவள் விகடன் 
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?


தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.


இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!
இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ… தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.


‘மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?’ என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.


”மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.


அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்” என்ற டாக்டர்,
”விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.


”கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.


இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.
அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.


இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!” என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,
”இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.


ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை” என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-”மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.


முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!’

***
நன்றி:அவள் விகடன்

***"வாழ்க வளமுடன்"
 

03 ஜூலை, 2012

கருவின் வளர்ச்சி


தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர்
.புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.


கருத்தரிக்கக்கூடிய காலம்

மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்து கரு உண்டாகும்.சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.


ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது.


ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது.

ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் கருக்கட்டப்பட்ட முட்டையாகும்.கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது.

கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் தொடங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பின்பு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.

ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.

கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன

கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது.


கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன


கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.

பிறப்புறுப்புக்கள் நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.

கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.


கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.

மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.


5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.


6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.


கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது.

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.


கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.


கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது.
அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது


கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.


கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.


கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள்

கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன


கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.


கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.***
thanks மங்கையர் உலகம்
***
"வாழ்க வளமுடன்"

.கர்ப்பிணிகளுக்கான உணவுக் குறிப்புகள்ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் என்பது மிகவும் சந்தோஷமான காலம் ஆகும். கர்ப்ப காலத்தில் நல்ல சமச்சீரான உணவை பராமரிப்பது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் இவ்வாறு செய்ய உங்களுக்கு உதவ இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், நோயாளி அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இந்த ஒன்பது மாதங்களை அனுபவித்து மகிழுங்கள்.

நீங்கள் அசௌகரியமாக உணர்வதைத் தடுக்கும் வகையிலான லைட் ஆனால் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உண்வை சாப்பிடுங்கள். நீங்கள் பாலக் பன்னீர், மேத்தி ரோட்டி அல்லது பீன் சூப் சாப்பிட்டுப் பாருங்கள்.

அதிகமாகத் தாளித்துக் கொட்டிய மற்றும் அதிகமாக மசாலா உள்ள உண்வுகளை சாப்பிடாதீர்கள். அவை குமட்டலை அதிகரிக்கின்றன். வெள்ளரி மற்றும் தயிர் சோறு போன்ற மிதமான சுவையுள்ள உணவை சாப்பிடவும்.

கர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்பு சத்து மிகவும் முக்கியமாகும். ராஜ்மா சாக்வாலா போன்ற பண்டம் ஆரோக்கியமான இரும்பு சத்து அளவை பராமரிக்க உதவும்.

கால்ஷியம் அதிகமாக சாப்பிடவும். இது தாய்ப்பாலுக்கு நன்மை அளிக்கக்கூடியது மற்றும் குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையானது. ஈஸி சீஸ் பாஸ்தா போன்ற பண்டத்தை தயார் செய்ய மற்ற உணவு வகைகளுடன் கால்ஷியம் உள்ள உணவை சேர்க்க முடியும்.

உங்கள் உணவில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது. பழங்கள், கீரை வகைகள் மற்றும் முழு கோதுமை தயாரிப்புகள் போன்ற இயற்கையான அன்ப்ரோஸெஸ்ட் உணவை சாப்பிடவும். கொய்யாப் பழத்தில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் மலச்சிக்கலுக்கு உதவும் என்பதால், இதை நிச்சயமாக சாப்பிடவும்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ப்ராக்கேலி மற்றும் கீரை போன்ற பச்சிலை வகைகளை தினமும் முறை தவறாமல் சாப்பிடுவதிலிருந்து தேவையான ஜிங்க் அளவை நீங்கள் பெற முடியும்.

திரவங்கள் குடித்துக் கொண்டிருக்கவும். உங்கள் உடலில் நீர் தேங்கம் பாதிப்பு இருந்தாலும் கூட நீங்கள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உண்வின் பிற்சேர்க்கையாக பழரசங்கள், சூப், மோர் மற்றும் இளநீர் பயன்படுத்துங்கள். இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சக்தி அளிக்கின்றன.

உங்கள் கடைசி மூன்று மாதகாலத்தில், நிறைய பூண்டு, வெந்தயம், சப்ஜா, பால் மற்றும் பாதாம் கொட்டை சாப்பிடவும். இவை கலக்டோகாக் உணவு எனப்படுகின்றன. அதாவது இவை முலைப் பாலை ஊக்குவிக்கின்றன எனப் பொருள் ஆகும்.
 
***
thanks darulsafa
***


"வாழ்க வளமுடன்"
     

காய், பழ வகைகளும் தெரிஞ்சு சாப்பிடுவோம் :)
இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் காய், பழ வகைகளும் ஆகும்.

படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்!

தவறாமல் தினமும் சாப்பிடுகிறோம்தானே! நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அப்போதைய நம் உடல்நிலைக்கு பருவநிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட உதவவே இந்த இணைப்பு. எதையுமே தெரிந்து அனுபவிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் அலாதிதான். தாஜ்மஹால் என்பதை எந்தப் பின்னணியும் அறியாமல் பார்க்கும்போது அது பிரமிக்க வைக்கிற கட்டடக்கலை மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள காதலறிந்து பார்க்கும்போது உங்களுக்குள்ளும் கவிதை அனுபவம் கிட்டும்.
அப்படித்தான் தினமும் சாப்பிடும் காய், பழங்களின் ருசியோடு அதிலுள்ள பயன்களையும் அறிந்து சாப்பிடுவதும். இவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எது யாருக்கு ஏற்றது? யார் எதை விலக்கி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து உண்டு பயனும், பலமும் பெறவே இந்த இணைப்பு.கத்தரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.


முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.


மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ

யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
 தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.


அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.


பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.


கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.

பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.


புடலங்காய்


என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.


பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.


சுரைக்காய்

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.


பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.


***
thanks எம். முஹம்மது ஹுசைன் கனி
***"வாழ்க வளமுடன்"

11 மே, 2012

கக்கூஸை விட கம்ப்யூட்டர் மவுஸிஸ்தான் எக்கச்சக்க பாக்டீரியா இருக்காம்!

Office Computer Mouse Has More Germs On It Than Toilet
வீடோ, அலுவலகமோ இன்றைக்கு கணினியை பயன்படுத்துபவர் அதிகரித்து விட்டனர். கணினியின் மிக முக்கிய பகுதியான மவுஸ் கிருமிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கழிவறையில் உள்ளதை விட அலுவலக கணினி மவுஸ்களில் மூன்று மடங்கு கிருமிகள் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.


இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டவர்கள் மூன்று வெவ்வேறு அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து எடுக்கப்பட்ட 158 பொருட்களையும் 28 டாய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.
 
 
அப்போது கழிப்பறையில் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் குழாயின் கைப்பிடியை விட கணினி மவுஸ்களில் இரண்டு மடங்கு பாக்டீரியாக்கள் காணப்படுவது கண்டறியப்பட்டது.
 
 
இதற்கு காரணம் அலுவலகத்தில் தான் பணி புரியும் மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேசைகளில் உணவு
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் உணவு பொருட்கள் கணினிகளில் குறிப்பாக, மவுஸ், கீபோர்ட் மீது படிந்துவிடுகின்றன. இதனால், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடமாகவும் அவை மாறிவிடுகின்றன என்று தொழில்நுட்ப மேலாளரான பீட்டர் பாரட் கூறியுள்ளார். தற்போது குறிப்பாக அலுவலகங்களில், மின்னணு பொருட்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால் கிருமிகள் பரவு கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்கள் அதிக அசுத்தம்
மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தமிக்கவர்களாக காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை உள்ளதாம்.அடுத்ததாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகளில் அதிக கிருமிகள் உள்ளன. அதுமட்டுமல்லாது, அதிக கிருமிகள் கொண்டவைகளாக சமையலறை, வாகன ஸ்டியரிங், நாற்காலிகள், ஷாப்பிங் டிராலிகள், லிப்ட் பட்டன்கள் என பல இடங்களில் கிருமிகள் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. எனவே வீடோ அலுவலகமோ நாம் உபயோகப்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
***
thanks ஆய்வாளர்கள்
***


"வாழ்க வளமுடன்"

கர்ப்ப காலம்-துணுக்குகள் ( tips )

கர்ப்ப காலம்


1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வழக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

***

ஆணின் பங்கு என்ன?

ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.1. நல்ல ஆரோக்கியமான உணவு

2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.

3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்

4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.***

கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய வழிகள்1. சமவீத உணவை உட்கொள்ளல்:
பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

*

2. போலிக் அமிலம் மாத்திரைகள்:
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல்
உட்கொள்ள வேண்டும்.

முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள்.


கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

*

3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை
தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.


விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

*

4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:
சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும்.


தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும்.


தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

*

5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:
கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால
மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம்.

போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.


***


மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.
*

டோக்சோ பிளாஸ்மோசிஸ்
இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

*

 பரிசோதனை நேரம்:
கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.
*

 மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.
*

 புகை பிடித்தலை தவிர்த்தல்:
எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.


***
thanks dkaran
***"வாழ்க வளமுடன்"

கர்பிணி பெண்களுக்கு எடை குறைவு


 

கர்பிணி பெண்களுக்கு எடை குறைவு மற்றும் இரத்ததின் அளவு கம்மியாகி
விட்டால்


1.இரவு இரண்டு வேலையும் அத்தி பழம் இரண்டு பேரிட்சை இரண்டும், காய்ந்த‌ திராட்சை ஸ்வீட்டுக்கு ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து இது முன்றையும் தினம் காலையில் சாப்பிட‌வேண்டும்.இது முன்றையும் சேர்த்து ஹ‌ல்வாவாக‌வும் செய்து சாப்பிட‌லாம்.


2.புரோகோலி சூப், பொரிய‌ல்,புரோகோலி பீஃப் போன்ற‌வை சாப்பிட‌லாம்.இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.


3.ஏதாவ‌து ஒரு கீரை சிறு ப‌ருப்பு சேர்த்து கூட்டு வைத்து (அ) பிர‌ட்டியோ க‌றியுட‌ன் சேர்த்தோ சாப்பிட‌லாம்.


4.ம‌ண்ணீர‌ல் சுட்டு அல்ல‌து பொரித்தோ சாப்பிட‌லாம். இது வார‌ம் முன்று முறை சாப்பிடாலே ஹிமோகுளோபின் அள‌வு கூடும்.


5.சால‌ட் நிறைய‌ செய்து சாப்பிட‌லாம்.


6.கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலை அரைத்து ,துவையலாக‌ (அ) ர‌ச‌ம் வைத்து சாப்பிட‌லாம்.


7.ப‌யிறு வ‌கைக‌ளை ஊற‌வைத்து அடையாக‌ சுட்டு சாப்பிட‌லாம்.


8. கேழ்வ‌ர‌கில் பான‌ம், புட்டு,இனிப்பு அடை போன்ற‌வை சாப்பிட‌லாம்.


9.பீட்ரூட் ஜூஸ், ஹல்வா, பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.


10. இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.

**


ஏன் உட‌ல் எடை குறைகிற‌து என்றால் ம‌ச‌க்கை கார‌ண‌மாக‌ இர‌வில் லைட்டாக‌ ச‌ப்பாத்தி சாப்பிட்டு வ‌ருவ‌தால் நாள‌ட‌டைவில் பிள்ளை பெறும் நேர‌த்தில் எடை குறைந்து விடுகிற‌து. ஒரு நாளைக்கு முன்று ட‌ம்ள‌ர் பால் அருந்துவ‌து ந‌ல்ல‌து. இது குழ‌ந்தை வ‌ள‌ரும் ச‌மைய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு தேவையான கால்சிய‌ம் ச‌த்து கிடைத்து விடும்.


அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையை போய் தான் அடைகிறது என்பதை மனதில் கொண்டு நேரம் தவராமல் சாப்பிடவேண்டும்.


இரண்டு மாததிலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு ந‌ல்ல‌து.

***
thanks dinakaran
***


"வாழ்க வளமுடன்"
      

28 மார்ச், 2012

யோகாவும் அதீத உடல் பருமனும்

யோகா

உணவும் கலோரிகளும்:
 
நாம் சாப்பிடும் உணவை கலோரிகள் அளவை உபயோகித்து, கட்டுப்படுத்தலாம். அதிக கலோரிகள் உடல் எடையை கூட்டும். எடை அதிகமானால் இதய பாதிப்பிலிருந்து எல்லா நோய்களும் வந்து தாக்கும்.
 
 
இதை இன்றும் பல ‘குண்டான’ மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. முதலில் ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் (ஙிவிமி), என்ற முறையின் மூலம் நீங்கள் பருமனா இல்லை ‘ஒவர்’ பருமனா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
ஙிவிமி = எடை (கிலோகிராம்)
உங்கள் உயரம் ஜ் உயரம் (மீட்டரில்)
 
 
உதாரணம்:
உயரம்: 1.70 செ.மீ. உங்கள் எடை: 80 கிலோ
உங்கள் BMI = 80
—— = 27
1.70×1.70
 
 
BMI அட்டவணை:-
 
 
17 – 27 நார்மல் எடை,
 
27 – 32 – அதிக பருமன்
 
32- க்கு மேல் -மிக அதிக பருமன்
 
 
ஙிவிமி மட்டும் போதாது. இடுப்பு சுற்றளவு பெண்களுக்கு 80 செ.மீ. ( 32″)
 
 
ஆண்களுக்கு 94 செ.மீ. ( 37″) மேல் இருக்கக் கூடாது.
 
 
உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை கண்டுபிடிப்பது?
 
இதற்கு ஃபார்மூலா – (உயரம் சென்டி மீட்டர் – 100) ஜ் 0.9. வரும் விடை தான் நீங்கள் இருக்க வேண்டிய எடை. உங்கள் எடை இதை விட அதிகமாக இருந்தால், அதிலிருந்து நீங்கள் இருக்க வேண்டிய எடையை கழித்தால், உங்களின் கூடுதல் எடை தெரியும். சர்க்கரை வியாதிற்கும், உங்கள் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், நீங்கள் இருக்க வேண்டிய எடையை துல்லியமாக தெரிந்து கொள்ளுங்கள்
 
 
ஆரோக்கிய எடை
 
 
ஆண்கள் எடை பெண்கள் எடை
 
 
உயரம் (செ.மீ) கி.கிராம் உயரம் (செ.மீ) கி.கிராம்
157 56-60 152 51-54
160 57-61 155 52-55
162 59-63 157 53-57
165 61-65 160 54-58
168 62-67 162 56-60
170 64-68 165 58-61
173 66-71 168 59-63
175 68-73 170 61-65
178 69-74 173 62-67
180 71-76 175 64-68
183 73-78 178 66-70
185 75-81 180 67-72
188 78-83 183 68-74
 
 
செய்ய வேண்டிய ஆசனங்கள்
 
 
சூரிய நமஸ்காரம் ,
சிரசாசனம்,
ஹலாசனம்,
பத்தகோனாசனம்,
கூர்மாசனம்,
மத்ஸ்யேந்திராசனம்,
பச்சிமோத்தாசனம்,
சர்வாங்காசனம்,
புஜங்காசனம்,
தனுராசனம்,
மயூராசனம்,
சக்கராசனம்,
சவாசனம்.
 
 
பிராணாயாமா – அனுலோமா – விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தம்
 
 
சில டிப்ஸ்
 
• தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை பழம் சாறு குடிப்பது எடை குறைய உதவுகிறது.
 
 
• இதே போல நெல்லிக்காய் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
 
 
• வெங்காய சாறு குடிப்பதும் கொலஸ்ட்ராலை குறைப்பது நல்லது.***
thanks  Ayurveda
***"வாழ்க வளமுடன்"

பெண்களின் இளமை உணவுகள்பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகளாகும்.


ஆண்களின் அதிக உன்னத உணவுகளாகவும் இவை உள்ளன. ஆனால் இரு பாலர்களும் இவற்றில் இரண்டைக் கூட தினமும் உணவில் சேர்ப்பதில்லை என்பதே உண்மை.


மேற்கண்ட ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக (கிஸீtவீஷீஜ்வீபீணீஸீt) செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமின்னும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் (சிமீறீறீs) உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன.


அத்துடன் முதுமைப்படுதலை, உடலில் முதுமைப் பண்பு வளர்ச்சியை தாமதம்படுத்துகிறது. திசுக்களும் கடினமாகி கெட்டியாகிவிடாமலும் பாதுகாக்கின்றன. இத்துடன் இதே செலினியம் உப்பு திசுக்கள் இளமையாகவும் வலுவுடையதாகவும் நெகிழும் தன்மையுடன் இருக்குமாறு பராமரிக்கவும் செய்கிறது.


இந்த செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் உடலில் அடிக்கடி வீக்கம், புற்றுநோய், இதயநோய் அபாயம் உச்ச அளவில் இருக்கும் மேலும் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும். இதனால் வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றமும் கண்ணில் காட்ராக்ட் அபாயமும் ஏற்பட்டு விடும்.


பெண்களுக்கு வரும் எல்லா விதமான புற்று நோய்களையும் செலினியம் குணப்படுத்தி தடுத்தும் விடுகிறது. புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருட்களையும் மட்டுப்படுத்தி விடுகிறது. இதயத்தின் தசை நார்களை இனச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எரிச்சல் படாமல் சரி செய்து விடும் அரிய உப்பு, செலினியம், பொடுகு வராமல் தடுக்கிறது. அப்படி பொடுகு இருந்தால் மேற்கண்ட ஏழு உணவுகளும் குணப்படுத்தி விடுகின்றன. உடலில் உள்ள உலோக நச்சுக் கழிவுகள் வெளியேறவும் இந்த செலினியம் உப்பே உதவுகிறது.
இரத்தத்தில் செலினியம் உப்பு குறைவாக இருந்தால் புற்றுநோயும் இதய நோயும் எளிதாக எட்டிப்பிடிக்கும்.


எனவே, பெண்கள் தங்களின் சிறந்த நண்பர்களாக வைட்டமின் ‘இ’ யும், செலினியம் உப்பும் உள்ள உணவு வகைகளைத் தேர்வு செய்து சேர்த்து வந்தால் மருத்துவச் செலவின்றி ஆரோக்கியமாக இளமைத் துடிப்புடன் வாழலாம்.


பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறமுள்ள பழங்கள்!


அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வானவில் உணவு திட்டத்தில் எல்லாவிதமான நிறங்களிலும் உள்ள பழங்களும் காய்கறிகளும் உண்டு. இட்லி, பால், தயிர், வெள்ளை நிறம் என்பதால் இவற்றை இரவில் சேர்த்துக் கொள்ளலாம்.


உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் இந்த உணவுத் திட்டம் உதவும்.

இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.


காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன் தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் இந்தக் காலைப் பலகாரம் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் தக்காளிச் சாறு (இது சிகப்பு நிறம்) அருந்தவும். குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும் சிவப்பான பழங்கள், காய்கறிகள், இதற்கு சிவப்பு உணவு என்று பெயர்.

*

காலை உணவு சிவப்பு

காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று.


*


மதிய உணவு பச்சை


மதியம பச்சை உணவு! பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.


எனவே மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன் லெட்டூஸ், வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு ஸ்லைஸ் ரொட்டித் துண்டு + பச்சை நிற திராட்சை.


காய்கறி சூப்பில் லெட்டூஸ், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, பச்சை ஆப்பிள் முதலியன சேர்ந்திருக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் தனியாக சாப்பிடவும்.


*


இரவு நீல உணவு


நீலம் (மிஸீபீவீரீஷீ) கருஞ்சிவப்பு (றிuக்ஷீஜீறீமீ) ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். அன்றைய தினம் எப்படியிருந்தாலும் பின்பற்றத் தக்க குறிக்கோளிலிருந்து விலகி விடாமல் தடுத்து தன்னம்பிக்கையுடன் தூங்க வைக்கும்.


எனவே, இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள்.


ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.
மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் 5 பவுண்டு வீதம் குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள்.


முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். அதிகம் உண்ண விரும்புவது, மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட நோய்களுக்காக சாப்பிடுவதும் குறைந்தும் போய் விடும். இதனால் சுறுசுறுப்பையும் சக்தியுள்ளதையும் உணர்ந்து உற்சாகமாக வாழ்வீர்கள்.


எனவே, குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.


***
thanks Ayurveda
***


"வாழ்க வளமுடன்"

விஷக்கடிக்கு மருந்தாகும் துளசிவீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர்.

12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து.

துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் சமம். இவ்வளவு புண்ணியம் வாய்ந்த துளசிச் செடி ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்.***
thanks tbs
****"வாழ்க வளமுடன்"
      

27 மார்ச், 2012

கூந்தல் உதிர்வதை தடுக்க…..சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.


இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.


இதோ சில டிப்ஸ்வெந்தயம்:

கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.எள்ளுச்செடி:


எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும்

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.


 ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது.


என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள்.....


 இதோ சில டிப்ஸ்…* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.


* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.


* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.


* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.


* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.


* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.


* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.


* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.***
thanks Mohamed
***
"வாழ்க வளமுடன்"
      

பட்டுச் சேலை பராமரிப்பு!1. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.


2. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.


3. எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.


4. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.


5. பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.6. அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.7. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.***
thanks Mohamed
***"வாழ்க வளமுடன்"
      

எக்ஸாம் டிப்ஸ் !


வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம்.
அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?


“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க.

சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும்.

முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும். அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும்.


 பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும்.


நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்வுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது.


ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.படித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது. நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது.


எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும்.


முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது.


மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும்.


சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும்.


மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது.

வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும்.


புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம்.


கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.


களம் காத்திருக்கிறது கலக்குங்க கண்மணிகளா!

***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"

மலரும் மருத்துவமும் குங்குமப்பூ…

பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணம். இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.


இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.


மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம். இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.


குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள். குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.


குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை. இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும். இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.
இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.
Tamil – Kungumapoo
English – Saffron
Sanskrit – Kumkuma
Malayalam – Kugamapoo
Telugu – Kumkumapoova
Hindi – Kesar


குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்


பொருள் – நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.
மருத்துவப் பயன்கள்


காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.


கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.


ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம்.


ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.


கண் பார்வையை தெளிவாக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும். கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.


அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

***
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
***
 
 
"வாழ்க வளமுடன்"

நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறதுஉங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.


குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.


பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.

ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது’ என்கிறார்கள்.


இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.


ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


“இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.


***
thanks vayal
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "