...

"வாழ்க வளமுடன்"

19 ஜனவரி, 2011

ஐஸ்கிரிம் சாப்பிட ஆசையா?

ஐந்து வயதுக் குழந்தையானாலும் அது அறுபது வயதுக்குழந்தையானாலும்(!), ஐஸ்கிரிம் ஆசை மட்டும் அடங்காது.




அன்றாடம் அடிக்கப்படும் மாடுகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட எலும்புகளில், மிகச்சிறிய எலும்புகள் மட்டுமே இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகின்றன. அளவில் பெரிய எலும்புகள் எல்லாம் அரைக்கப்பட்டு, ஜெலட்டினாக மாற்றப்பட்டு ஐஸ்கிரிமுடன் ஐக்கியமாகின்றன.


இவ்வாறு தயாரிக்கப்படும் ஜெலட்டினில் புரதமும், கால்சியமும் மிகுதியாய்க் காணப்படுகின்றன. ஐஸ்கிரிம் முதல் சாக்லேட், கேக், ஜெல் வகை உணவுகள் வரை இந்த மாட்டு எலும்பிலிருந்து தயாராகும் ஜெலட்டின் இடம் பெறுகிறது.



இத்தகைய ஜெலட்டினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளிலிருந்து தொற்றுநோய்கள் நம்மை பற்றிக்கொள்ளும்.



கவனம்.


இப்ப சொல்லுங்க ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா!!!!!!!!!!!!!!!!! :(


***
thanks FOOD
***


"வாழ்க வளமுடன்"

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட :)

"பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது" என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.




"நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது" என்று விஞ்ஞானம் சொல்கிறது.


நூலகப் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால், தனியொரு புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ; அதே போன்று நினைவு அடுக்குகளில் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்கவில்லை எனில் தேவையான போது வெளியே எடுப்பது கடினம்.


சரியான முறையில் படித்தால் தகவல்கள் பிசிறில்லாமல் நேரடியாக மூளையின் நினைவகத்தில் தொகுக்கப்பட்டு விடுகிறது. எனவே, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பாடங்களைப் படித்தால் அவர்களின் நினைவாற்றல் திறன் மேம்படும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

***

சரியான முறையைப் பின்பற்றி பாடங்களைப் படிக்க சில நிபந்தனைகள்:


1. பொருள் உணர்ந்து படி:

ஆர்வம் இருந்தால் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவது எளிது. அதே போன்று படிப்பதை வெறும் கடமையாக நினைக்காமல், ஆர்வத்துடன் கற்க முயற்சி செய்யுங்கள். மேலும் ஒருவரி படித்தாலும் அதன் உட்பொருளை உணர்ந்து படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

*

2. படிக்கும் சூழல்:

இரைச்சல் மிகுந்த இடங்களில் வசித்தாலும் கருத்தூன்றி படித்து சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அமைதியான சூழலில் கவனமின்றி படித்து தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட, படிக்கும் போது உங்கள் மனம் தெளிவாக குழப்பமின்றி இருப்பதே முக்கியம்.

*

3. நினைவுக்குக் கொண்டு வருதல்:

படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுகூர்வது சிறந்த மாணவர்களுக்கு அழகு. படித்த விஷயங்களை அடிக்கடி மனத்திரையில் ஓடவிட்டு பயிற்சி செய்வது ஞாபகத்திறனை அதிகப்படுத்தும் வழிகளில் முக்கியமானது. இதனால் பாடங்கள் மறக்காமல் இருப்பதுடன், தேர்வு பயமும் தோன்றாது.

*

4. மனப்பாடம் கூடாது:

மாணவர்களின் கற்கும் முறைகளில் உள்ள பெரிய குறைபாடு மனப்பாடம் செய்தல். பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை உருக்குலையாமல் அப்படியே மனப்பாடம் செய்து எழுதுவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதில் மாணவர்களுக்கான எழுத்து நடை கொஞ்சமும் இருக்காது. கல்லூரி மாணவர்களை விட, பள்ளி மாணவர்களே மனப்பாடம் செய்வதில் கில்லாடியாக உள்ளனர். கல்லூரி படிப்பிற்குத் தேவையான அடிப்படை பாடங்கள் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் நடத்தப்படுகின்றன.

அப்போது நீங்கள் பாடத்தைப் புரிந்து படிக்காமல் மனப்பாடம் உத்தியை செயல்படுத்தினால் கல்லூரியில் திண்டாட வேண்டி இருக்கும். அதாவது கல்லூரி பேராசிரியர் நீங்கள் பள்ளியில் படித்த அடிப்படை பாடத்தை மேலோட்டமாக நடத்தி விட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால் கல்லூரியிலும் நீங்கள் விழிக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் புரிந்து படித்தால் அது காலத்திற்கும் மறக்காது என்பதால், கல்லூரியிலும் நீங்கள் கலக்க உதவியாக இருக்கும்.

*

5. அன்றே படிக்க வேண்டும்:

பாடங்களை அனுதினமும் படித்தால் பாடச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. படிக்கும் போது முக்கிய குறிப்புகளைத் தனியாக ஒரு டைரியில் பாடத் தலைப்பு வாரியாக குறித்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் மொத்தப் பாடத்திற்கான குறிப்புகளும் அந்த டைரியினுள் அடங்கிவிடும். அடிக்கடி அந்த குறிப்புரைகளைக் கொண்டு நீங்கள் படித்ததை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் தேர்வின் போது பாடப்புத்தகம் முழுமையையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.


***
thanks ஊர்க்குருவி

***



"வாழ்க வளமுடன்"

சோரியாஸிஸ் ( சருமக்கோளாறு ) பற்றி அறிவோம்!

சோரியாஸிஸ் என்றால் என்ன?

சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத ஒரு சருமக்கோளாறு. இது, ஒரு குடும்பத்தில் பரம்பரையாக வரக் கூடிய நோய். இவ்வியாதியானது, சிவப்பு நிறமான செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும்.




சோரியாஸிஸ் ஏற்படக் காரணங்கள் யாவை?

குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்காணும் இரண்டு முக்கிய காரணங்களோடு தொடர்புடையது

* பரம்பரையாக வரக்கூடியது
* ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை


*


செதில் வடிவிலான சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?

தோலின் வெளிப்புறத்தில் உள்ள அடுக்கில் அதிகமான தோல் செல்கள் ஏற்படுவதினால் செதில்கள் போன்ற சிவப்புநிற தடிப்புகள் தோலின் மீது ஏற்படுகிறது. பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபரில் தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது.

*


சோரியாஸிஸை எப்படி கண்டறிவது?


தோல் சிவப்பதால் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், அரிப்பு, தோல் தடிமனாதல், வெடிப்புகள் ஏற்படுதல், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவை சோரியாஸிஸ்-ன் அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.


*


சோரியாஸிஸை அதிகமாக்கும் அல்லது அதிக கேடான நிலைக்கு கொண்டு செல்லும் காரணிகள் உண்டா?

சில காரணிகள் சோரியாஸிஸ் வாதையை அதிகப்படுத்தும். அவற்றுள் சில. வேதிப்பொருட்களினால், தொற்று நோயினால், சொறிவதினால் ஏற்படும் காயங்கள், சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புகைபிடித்தல், பீடா சுவைத்தல் மற்றும் மன அழுத்தம்.

*

சோரியாஸிஸ் (பரவும்) தொற்றும் தன்மை கொண்டதா?

இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.


*

இந்நோயினை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

* தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும்
* வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும்
* மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும்
* நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும்
* மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்
* நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும்
* தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும்
* தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும்
* உடல் நலக்குறைவு மற்றும் தொறறும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும்.

**


உணவு பழக்கம் முக்கியமா?


சோரியாஸிஸ்-னால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.



***
thanKS இணையம்

***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "