...

"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2011

உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?!

*

தேசிய கண்தான இரு வார விழா - ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வையற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் கண் தானம் செய்வது புனிதமான மற்றும் அவசியமான செயல் என்று அனைவருக்கும் எடுத்து சொல்லப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும் தேசிய வார விழாவாக இது அனுசரிக்கப்படுகிறது.

கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மதங்களும் ஆதரிக்கின்றன..!

அனைத்து ஜாதிகளும் மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுகின்றன.

இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள்.

எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட்ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தானம் அளிக்கலாம்.

எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, வெறிநாய்க்கடி, பாம்பு கடி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாக பெற மாட்டார்கள்.

இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.

எப்படி தானம் செய்வது?

* கண்தானம் செய்வது எளிது. உயிருடன் இருக்கும் போதே இதற்கான உறுதிமொழி படிவத்தை அருகில் உள்ள கண் வங்கியில் கொடுத்து வைத்து விடலாம். இத்தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து கண் வங்கியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து வைத்திருந்தால், இறந்த பிறகு கண் தானம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

* கண்களை ஏற்கனவே உறுதி மொழி கொடுக்காவிட்டாலும் தானம் செய்யலாம். கண்களை விலைக்கு வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம்.

* ஒரு மனிதன் இறந்தபிறகு மட்டும் கண்களை தானம் செய்ய முடியும்.

* இறந்த சுமார் 6 மணி நேரத்திற்குள் இறந்தவரின் கண்களை எடுத்து பாதுகாத்துவிட்டால், பார்வையற்றவருக்கு அதை பொறுத்த முடியும்..

* கண் வங்கி குழுவினர் வந்து இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்கும் வரை அந்தக் கண்களை பாதுகாப்பது மிக முக்கியம். கண்களில் சுத்தமான தண்ணீர் விட்டு கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். அல்லது கண்களை மூடி அதன் மீது சுத்தமான ஈரத் துணியை போட்டு மூடி வைக்க வேண்டும்.

* இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்க 15-20 நிமிட நேரமே ஆகும்.

* கண்களை எடுப்பதால் எடுத்தற்கான அறிகுறியோ, இறந்தவரின் முகம் விவகாரமாகவோ ஆகாது என்பது உறுதி. தேவைப்பட்டால் செயற்கை கண்களை கூட பொருத்திவிடலாம்.

இலங்கையின் உதவி..!

மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிலும் அதற்கான முழு விழிப்புணர்வு வந்து, நாமும் அனைஅவ்வாறு கண் தானம் செய்யும்பட்சத்தில் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்ய முடியும்.

கண் பார்வையை பாதுகாக்க டிப்ஸ்..

* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல்

* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யவும்

* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது டிவி பார்க்கும் போது அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும்.

* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும்.

* வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர்லெஸ் கண்ணாடி அணியுங்கள்.

* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்

* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.

இரு யோசனைகள்..!

* நம் நாட்டை பொறுத்த வரையில் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏறப்டும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவமனை மேற்கொள்ளலாம். ஒப்புதல் படிவங்களில் கணவன்/மனைவி/மகன்/மகள் அல்லது பொறுப்பான உறவினரின் கையப்பத்தை பெற்று கண்களை எடுத்து, தேவைப்படுவருக்காக வைத்துக் கொள்ளலாம்.

* உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடைந்து விட்டால் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும். மருத்துவமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவார்கள்.

கண் தானம் வீடியோ ரிப்போர்ட்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U10WN_l99Q4- சி.சரவணன்


***
thanks யூத்ஃபுல் விகடன்
***"வாழ்க வளமுடன்"

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!


''வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது தெரிவதில்லை. சில ஆயிரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டினால், பல லட்ச ரூபாய் செலவை எளிதாக தவிர்க்க முடியும்'' என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே விளக்கிச் சொன்னார்.

''இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். இந்த மாணவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. மாணவர் மற்றும் பெற்றோர் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே இதற்கு காரணம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். அப்போதே இந்த இன்ஷூரன்ஸை எடுத்துக் கொண்டால் நல்லது'' என்றவர், வெளிநாடு செல்லும் மாணவர்கள் என்னென்ன இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

டிராவல் இன்ஷூரன்ஸ்!

''வெளிநாட்டுப் பயணத்தின் போது, இந்தியாவிலிருந்து கிளம்பி அங்கு சென்று சேரும் வரை இந்த பாலிசி பயனளிக்கும். விமானப் பயணத்தின்போது ஏற்படும் விபத்து மற்றும் உடல்நிலை பாதிப்பு, லக்கேஜ் காணாமல் போவது, பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ் போன்றவைகள் காணாமல் போவது, தீவிரவாதி களால் விமானம் கடத்திச் செல்லப்படுவது, விமானப் பயணம் காலதாமதமாவது போன்ற காரணங்களுக்கு இந்த பாலிசியில் இழப்பீடு கிடைக்கும்.

60 முதல் 90 நாட்களுக்கான படிப்பு என்றால், போக - வர சேர்த்து டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். வருடக் கணக்கில் சென்று படிக்கப் போகிறார்கள் எனில், போகும்போது தனியாக டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொண்டு, வரும்போது தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ்!

பொதுவாக ஒரு இடத் திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது தட்பவெப்பநிலை காரணமாக உடல்நிலை பாதிப்படையும். இந்தியாவில் ஆகும் மருத்துவச் செலவைவிட வெளிநாடுகளில் பல மடங்கு கூடுதலாகச் செலவாகும். அந்த வகையில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். ஆக்ஸ்ஃபோர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் அனைத்துவிதமான அம்சங்களும் அடங்கிய பாலிசியை காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி, அதற்கான செலவை

கட்டணத்துடன் சேர்த்து விடுகின்றன. சில பல்கலைக் கழகங்களில் இந்த வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் பிரீமியம் அதிகமாக இருக்கும். இதை அலசி ஆராய்ந்து பல்கலைக் கழக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதா? அல்லது தனியாக மெடிக்ளைம் பாலிசி எடுப்பது நல்லதா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியவை..!

எவ்வளவு காலம் வெளிநாட்டுக்குப் படிக்க போகிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பாலிசியை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ஏதாவது ஒரு நோய் இருந்தால் அதை பாலிசி எடுக்கும்போது மறக்காமல் குறிப்பிடுங்கள்.

மருத்துவமனை மற்றும் மருத்துவமனை அல்லாத சிகிச்சைகள் என இரண்டு விதமாக கவரேஜ் இருக்கிறது. தேவைக்கேற்ப இதை எடுத்துக் கொள்ளலாம்.

வெளிநாடுகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பெற்றோர்கள் அங்கு செல்வதற்கும், உடலை இந்தியா கொண்டு வருவதற்கும் ஆகும் செலவுகளைச் சேர்த்து கவரேஜ் கிடைக்கும்படியாக பாலிசி எடுக்கலாம்.

கலவரம், உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் படிப்பு தடையானால் ஏற்படும் இழப்புக்கும் சேர்த்து கவரேஜ் இருக்க வேண்டும்.

கிளைம் எப்படி வாங்குவது?

இங்கிருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து பாலிசியை விற்கின்றன. எனவே, இந்தியாவில் பாலிசி எடுத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றால், இங்குள்ள நிறுவனம் நீங்கள் எடுத்திருக்கும் பாலிசியின் வெளிநாட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா டெலிபோன் நம்பரை கொடுத்துவிடும். அந்த நம்பரை தொடர்பு கொண்டால் கிளைம் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மற்றும் கவரேஜ்!எல்லாம் சரி, இதற்கு எவ்வளவு பிரீமியம் என்றுதானே கேட்கிறீர்கள். 23 வயதான ஒரு மாணவர், ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கவரேஜ் கிடைக்கும் வகையில் இரண்டு வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 31,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். டிராவல், மெடிக்ளைம் மற்றும் தனிநபர் விபத்து பாலிசிகளை உள்ளடக்கியது இந்த பாலிசி.

மருத்துவச் செலவு - 50,000 டாலர், அசம்பாவிதம் - 1 லட்சம் டாலர், பொதுவான சிகிச்சை - 250 டாலர், பாஸ்போர்ட் காணாமல் போனால்- 200 டாலர், லக்கேஜ் காணாமல் போனால் - 1,000 டாலர், தனிநபர் விபத்து - 10,000 டாலர், படிப்பு இடையில் தடைப்பட்டால் - 7,500 டாலர், தற்செயல் பாதிப்பு - 1 லட்சம் டாலர் போன்ற அம்சங்கள் கவராகும்.

மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒன்று நடந்து கிளைம் கிடைத்தால் அதுபோக மீதி இருக்கும் தொகையைத்தான் மீண்டும் கிளைம் செய்ய முடியும்'' என்று முடித்தார்.

இனியாவது வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் இந்த பாலிசியையும் எடுத்துக்கொண்டு பறந்தால் எந்தச் சூழ்நிலையிலும் பதற வேண்டியதிருக்காது.


***
thanks யூத்ஃபுல் விகடன்
***"வாழ்க வளமுடன்"

ஜிம் செய்யாமலே ஜம் என்ற தோற்றம் வேண்டுமா

*

உடற்பயிற்சி செய்தால் தசைகளுக்கு நல்லது என்று யாருக்குத்தான் தெரியாது?

ஆனால் தினமும் சிறிது நேரம் கூட இதற்காக ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு இருக்கலாம். தவிர இன்னும் கூட பல குடும்பங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதைப் பிறர் கொஞ்சம் கிண்டலாகத்தான் பார்க்கிறார்கள்.

உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரமும் செலவாகக் கூடாது. நான் செய்யும் பயிற்சிகள் பிறருக்குப் பளிச்சென்று தெரியவும் கூடாது. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பெருமூச்சு விடும் பெண்களுக்கு இதோ சில வியக்கத்தக்க பயிற்சிகள்.

1. கொடுமையான விஷயம் வரிசையில் நிற்பதுதான். எப்படியோ எங்காவது அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது கூட அந்த நேரத்தில் பயனுள்ளதாக கழிக்க முடியும்.

உடலைச் சிறிதும் அசைக்காமல் கழுத்தை வலமும் இடமுமாக முடிந்தவரை அதிக அளவுக்குத் திருப்புங்கள். கழுத்துக்கும் இது நல்ல பயிற்சி. தெரிந்தவர்கள் யாரும் தட்டுப் படுகிறார்களா என்று கவனித்த மாதிரியும் இருக்கும்.

2. இந்தப் பயிற்சிகளைக் கூட வரிசையில் நிற்கும் போது செய்து பயனடையலாம்.

ஏதோ ஒரு சுவரில் சாய்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முட்டிகளை இலோசாக வளைத்தபடி முதுகுப் புறத்தை கொஞ்சம் கீழே கொண்டு வாருங்கள். இதைச் செய்யும் போது உங்கள் முதுகுப் பகுதியும் தலையும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் இருக்க வேண்டும்.

அதே நிலையில் உங்கள் தோள்களைப் பின்புறமாக இழுங்கள். ஏதோ இரண்டு தோள்களும் ஒன்றையொன்று தொட முயற்சிப்பது போல அப்படியே சில நொடிகள் இருந்து விட்டு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்

இப்போது ஆழ்ந்து சுவாசியுங்கள். சுவாசக் காற்றை வெளியேற்றும் போது உங்கள் வயிற்றுத் தசை முதுகெலும்பில் படும்படி இழுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படியே சில நொடிகள் இருங்கள். பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வரலாம்.

3. ஒரு வேளை நீங்கள் உயரம் குறைவானவராக இருக்கலாம். அதனால் நீங்கள் சந்திக்க இருப்பவர் முதல் பார்வையிலேயே குறைவானவராக எடை போட்டு விடுவாரோ என்ற பயம் உங்களுக்குத் தோன்றலாம். இதற்கு நீங்கள் சில சாதாரண உடற்பயிற்சிகள் மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் கூட செய்யலாம்.

நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் சரி நின்று கொண்டிருந்தாலும் சரி மிக அதிகமான பரப்பளவை அடைத்துக் கொள்ளும்படி இருங்கள். அதாவது உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். தோள்கள் பின்புறம் செல்ல வேண்டும்.

கால்களும், பாதங்களும் ஒன்றுக்கொன்று குறுக்கே வைத்துக் கொள்ளாது இணைகோடுகள் போல தரையில் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவற்றின் மூலம் உங்களுக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுவதோடு உங்களுக்கே சுவாரஸ்யம் ஏற்படும். உங்களுக்கே தோற்றத்தில் உள்ள குறைபாடு தெரியாது.

4. உடலில் கீழ்ப்பகுதியைச் சிறிதும் அசைக்காமல் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை வலதும் இடதுமாகத் திருப்புங்கள். (பார்ப்பவர்களுக்கு நீங்கள் யாரையோ தேடுவது போலிருக்கும்.).

ஏதாவது கூட்டம் குறைந்த பொது இடத்தில் நிற்கும் போது கூட இதைச் செய்யலாம். தொப்பைப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி கொழுப்புச் சத்தில் ஒரு பகுதியையாவது காணாமல் போகச் செய்யும் இந்தப் பயிற்சி.

5. மணிக்கட்டுகளுக்கான பயிற்சி இது. இதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

முஷ்டியை நன்கு இறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொன்றாக எல்லா விரல்களையும் அகலமாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மணிக்கட்டைச் சுழற்றுங்கள். பிறகு மணிக்கட்டை மேலும் கீழுமாக சில முறை உதறுங்கள். பிறகு மொத்த கையுமே தளர்த்தியாக விட்டுக் கொண்டு அசைத்துப் பாருங்கள்.

6. வீட்டில் யாருடனாவது தொலைபேசியில் பேசும் போது ஒரு கைதானே ரிஸ’வரைப் பிடித்துள்ளது. இன்னொரு கையும் உடலின் மற்ற பல பகுதிகளும் ஏன் வேஸ்டாக இருக்க வேண்டும்? இதோ சில பயிற்சிகள்.

ரிசிவரை இடது கையில் வைத்திருந்தால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வலது கையில் கனமான ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். (அதற்காக அம்மிகுழவி லெவலுக்குப் போய் விட வேண்டாம். ஒரு பேப்பர் வெயிட், கனமான புத்தகம் இப்படி இருக்கலாம்.)

இப்போது அந்த எடையை உச்சிக்குத் தூக்குங்கள். ஏதோ மேல் கூரையைத் தொடுமளவிற்கு பிறகு உங்கள் தலைக்குப் பின்புறம் வழியாக அதை நன்கு கீழே கொண்டு வாருங்கள்.

பிறகு அதைப் பக்கவாட்டில் இங்குமங்குமாக ஆட்டுங்கள். அதாவது உங்கள் மார்புப் பகுதியை நோக்கி கொண்டு வருவது போலிருக்க வேண்டும். பிறகு மெதுவாகப் பக்கவாட்டில் இறக்குங்கள். தரையைத் தொடுவது போல முயற்சி. தொடர்ந்து சில தடவைகள் செய்யுங்கள். அடிக்கடி செய்தால் கைகள் வலிமை பெறும்.

7. உட்கார்ந்திருக்கும் போது பின்புறம் உட்காரும் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் இரு கால்களையும் நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை நன்கு உள்ளுக்கிழுக்க வேண்டும்.
நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி அல்லது சோபாவினுள் உங்கள் கையை நுழைத்து அதைத் தூக்குவது போல் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் ஒரு உற்சாகம் வரும். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

8. வீட்டில் உங்கள் தொலைபேசியில் பேசும் போதும், சமையலறையில் வேலை செய்து கொண்டே இதைச் செய்யலாம். பாட்டில் வடிவத்தில் உள்ள ஒரு ரப்பர் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். இலேசாக உடல் தள்ளாடினாலும் பேலன்ஸ் செய்து கொள்ள முடியும் என்றால் ரப்பர் பந்தைப் பயன்படுத்தலாம். ரப்பர் பொருளைக் கீழே வைத்து விட்டு பாதத்தால் உருட்ட வேண்டும்.

இதனால் பாதத்துக்கு மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படுகிறது. கால் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அது மட்டுமல்ல, பல உடல் உறுப்புகளின் நரம்புகள் பாதத்தின் கீழ்ப்பகுதியில் முடிவடைவதால் இப்படி மசாஜ் செய்து கொள்வதன் மூலமும் உடலின் எல்லாப் பகுதிகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

9. வயிற்றுப் பகுதியில் மட்டுமல்ல புருவங்களுக்கு நடுவே கோடுகள் தென்பட்டால் கூட அவை முகப்பொலிவைக் கெடுத்துவிடும்.
நெற்றியில் உள்ள தசைகள் உதவியுடன் புருவங்களை ஒன்றோடு ஒன்று நெருக்கமாகக் கொண்டு வாருங்கள்.

யாரையாவது கோபமாகப் பார்க்கும் போது செய்கிற மாதிரி இருக்கிறதே என்கிறீர்களா? கடுகடு வென்று முகம் அந்த நேரத்தில் காட்சியளிக்கும் என்றாலும் தசைப் பயிற்சிதானே!

பிறகு முடிந்தவரை புருவங்களுக்கு நடுவேயுள்ள தூரத்தை அதிகப்படுத்துங்கள். இதையெல்லாம் செய்வதற்கு கை விரல்களைப் பயன்படுத்த வேண்டாம். நெற்றித் தசைகளைப் பயன்படுத்துங்கள்.

ஒரு கூடுதல் ரகசியம். புருவங்களை விலகச் செய்து மேலெழும்பும் சமயங்களில் கண்களை நன்கு மூடிக் கொள்ளுங்கள். இதன் காரணமாக கண் பகுதியில் உள்ள இரத்தம் ஓட்டம் சிறப்பாக அமையும்.

10. முகம் ஜம்மென்று இருக்க கொட்டாவி விடலாம். அதாவது வெறுமனே கொட்டாவி விடாமல் கொட்டாவி விடும்போதே சில பயிற்சிகளைச் செய்யலாம். எப்படியும் கொட்டாவி விடும் போது கையால் வாய்ப்பகுதியை மறைத்துக் கொள்வோம். அப்போதுதானே அந்தக் கொட்டாவி ஒரு தொற்று வியாதியைப் போல் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும்? தவிர அதுதானே நாகரிகம்?

கொட்டாவி வரும்போது உதடுகளால் பற்களை முடிந்தவரை மடித்து மூடிக் கொள்ளுங்கள். பிறகு மெல்ல கொட்டாவி விடும்போது வலிந்து ஒரு நீளமான புன்னகையை வெளிப்படுத்துவதன் மூலம் வாயின் இரு ஓரங்களுக்கும் அழுத்தம் கொடுங்கள்.

ஒவ்வொரு முறையும் தானாக உதடுகள் விரிவதை விட கொஞ்சம் முயற்சித்து மேலும் அதிகமாக வாயைத் திறக்க வேண்டும். அப்போது கழுத்துத் தசைகள் கூட விரிவடைவதை உணர்வீர்கள்.

இந்தக் கொட்டாவிப் பயிற்சியால் வாய்ப்பகுதியும் கன்னங்களும் தங்கள் தொளதொள தன்மையை இழந்து பொலிவு பெறும். கண்ணுக்குக் கீழேயும் கழுத்திலும் சுருக்கங்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும்


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?


நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.
இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.


சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.


சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.


தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.


பசை, தண்­ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.


நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது.
ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே.
நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.


நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.


வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம்.
எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கியூடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.***
thanks google
***"வாழ்க வளமுடன்"

டீன் ஏச் பெண்களின் தாய்மார்களுக்கான ஆலோசனைகள்

*

பெண்களின் வாழ்க்கையில் ‘டீன் ஏஜ்’ என்பது வசந்தகாலம் போன்றது

பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை ‘டீன் ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால் பெற்றோராகிய நீங்கள் குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல் இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன?

பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில் உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால் இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர்.

எனவே இதுகுறித்து பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

அடுத்து இளம் பெண்களுக்கு , தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால் உணர்வுப் பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும்.

மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்சினைகளால், டீன் ஏஜ் குழந்தைகள் பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு.

இவற்றை சரிப்படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால் படிப்பில் முன்னேற்றம் வேலையில் சுறுசுறுப்பு ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.***
thanks vanakkam
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "