...

"வாழ்க வளமுடன்"

26 டிசம்பர், 2010

மழைக் காலம்… உஷார்!

குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைந்து, சேற்றை அளைந்து, குதித்து விளையாடுவது, பச்சைத் தண்ணீரைக் குடிப்பது என, நம் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செய்யும் குட்டீஸ் ஏராளம்.



மழைக் காலத்தில் அவர்களைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:

நீரால் பரவும் நோய்களை தடுப்பது எவ்வாறு?


*

1. தண்ணீரை குறைந் தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடிக்க வேண்டும்; அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டும்.

*

2. உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்னரும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

*

3. வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

*

4. வீட்டில் சுகாதாரத்தை பேண வேண்டும்.

*

5. வீட்டிலேயும், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

**

வயிற்றுப் போக்கு அறிகுறியில் இருந்து விடுபட:

* வயிற்று போக்கு ஏற்பட்டால், உடலின் நீர் வற்றி விடாமல் இருக்க இளநீர் அல்லது எலுமிச்சை சாறுடன், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து அருந்தலாம்.


* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் உண்டாகும் நீரிழப்பை ஈடுகட்ட, தண்ணீர் கொடுக்க வேண்டும். உதடு மற்றும் நாக்கு வறண்டு போகாமல் இருக்க, பஞ்சில் நீரை தொட்டு, தேய்க்கலாம்.


* வயிற்றுப்போக்கு நிற்க தொடங்கியதும், படிப்படியாக, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆப்பிள், சூப், பருப்பு சாதம் போன்ற உணவுகளை சாப்பிட தொடங்கலாம்.


* வயிற்றுப் போக்கில் இருந்து முழுமையாக விடுபடும் வரை, பால், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* கண்கள் குழிந்து காணப்படுதல், வெளிறிய தோல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், குளிர்வது போன்ற உணர்வு மற்றும் எவ்வித உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் இருந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

***

கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?

* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசுவலை கட்டுவதோடு, ஜன்னல்களிலும் வலை பொருத்தலாம்.


* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.


* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


* கொசுக்கள் அதிகளவில் காணப் பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனைகள், “அலர்ஜி’யை ஏற்படுத்தி விடும்.


* “டெங்கு’ காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். எனவே, அனைத்து வேளைகளிலும், கொசு கடிப்பதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

***

பூஞ்சை தொற்றுக்களை தடுப்பது எப்படி?


* உடலை எப்போதும், சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளை குளிப்பது நல்லது. * பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும் சோப்புகளை பயன்படுத்தலாம்.

* பூஞ்சை தொற்றை தடுக்கும் பவுடர்களை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை போடவும் .

***

thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "