...

"வாழ்க வளமுடன்"

27 மார்ச், 2010

இரத்தம் பற்றிய பொது அறிவு

இரத்தம் பற்றிய நமக்கு எந்த அளவு தெரியும்? வாங்க அதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும்!




இரத்தம் - உண்மைத் துளிகள்:

*

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

*

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.

*

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

***

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

*
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

***

3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

*

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

***

4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?

*
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.

***

5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

*
ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

***

6. ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்” அணுக்களின் வேலை என்ன?

*
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

***

8. பிளாஸ்மா என்றால் என்ன?

*
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

***

9. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

*
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.

***

10. ரத்த அழுத்தம் என்றால் என்ன?

*
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

***


11. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

*
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

***

12. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

*
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

***

13. உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?

*
எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

***

14. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

*
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

***

15. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?

*
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

***

16. தலசீமியா என்பது தொற்றுநோயா?

*
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.

***

17. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

*
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

***

18. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

*
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.

***

19. ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

*
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

***

20. ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?

*
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

***

21. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

*
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும். இளம்பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக்கூடாது.

***

22. ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

*
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

***

23. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

*
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.

***


24. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?

*
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

***

25. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

*
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.

***

26. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

*
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.

***

27. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

*
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.

***


28. யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

*
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

***

29. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

*
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்துவிடலாம்.

***

30. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

*
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

***

31. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

*
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

***

32. ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

*
ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர்பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

***

நன்றி தினமணி.

நன்றி கீற்று.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1209:2009-11-13-07-49-08&catid=13:heart&Itemid=93

***


இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்!




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

வயதைக் குறைக்கும் வானவில் உணவுகள்

எல்லா மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் கொடுக்கும் அறிவுரை ‍ உணவில் அதிக காய்கறிகளும், பழங்களும் இடம் பெறவேண்டும் என்று கூறுகிறார்க‌ள்.


அதுவும் வான‌வில்லின் வ‌ண்ண‌ங்க‌ளுடைய ( உணவுகளின் நிறம் ) உணவை உண்பது உடலுக்கு நல்லது என்று வலியுறுத்துகின்றனர்.

*

அமெரிக்காவில் 1992ம் ஆண்டு சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவர் " வானவில் உணவுத்திட்டதில் "
எல்லாவித நிறங்களிலும் உள்ள பழங்களும், காய்கறிகளும் உண்டு என்று கூறுகிறார்.


*

இவ்வகை காய்களும், பழம்ங்களும் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கவும், ஆரோகியமாகவும், இளமையாகவும் இருக்க இந்த உணவுத் திட்டம் உதவும் என்றும், இதன் மூலம் 1000 லிருந்து 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமையோடு வாழலாம் என்று கூறுகிறார்.


*


அதை நீங்கள் செயல் படுத்த நினைத்தால் பின்வரும் தகவல்கள் உங்களுக்கு தான்:


காலை:

*

1. காலையில் சிவப்பு நிற உணவுகளான‌ தக்காளி, சிவப்பு முள்ளங்கி, சிவப்பு குடைமிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் அதிக சத்துக்கள் ( Lycopene, Ellagic acid, Quercetin மற்றும் Hesperidin ) உள்ளன.

*

2. இவைகள் உயர் ரத்த அழுத்தம், ப்ரோஸ்டேட் புற்று நோய், கொலஸ்ட்ரால், free radicals இவற்றை எல்லாம் வராமல் தடுக்கின்றன.


*

3. மேலும் கேரட், பப்பாளி, ஆரஞ்சு, மஞ்சள் வண்ண காய்கறிகள், மற்றும் பழங்கள் பீடா காரோடோன்,Zea Xanthin. flavonoids, லிகோபீன், பொட்டாசியம் மற்றும் விட்டமின் " சி " உள்ளன.

*

4. இவைகளை உண்டால் வயதானால் வரும் அவயச் சிதைவுகள், ப்ரோஸ்டேட் புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் முதலியன குறைத்து, மூட்டுகளை ஆரோகியமாக வைத்து, எலும்புகளை பலப்படுத்துகிறது.


*


5. காலையில் சிவப்பு நிற தக்காளி அல்லது ஆரஞ்சு சாறு 1 கப் குடித்தால் மலச்சிக்கலை போக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள், வாழப்பழம், அன்னாச்சி பழங்கள் எதேனும் ஒன்று சாப்பிடலாம்.

***

மதியம்:

*



1. ம‌திய‌ம் ப‌ச்சை நிற‌க்காய்க‌ள், கீரைகளும் ஆகும். கீரையில் கால்சிய‌ம், இரும்புச்ச‌த்து, விட்ட‌மின் " சி ", பீடா க‌ரோடீன், ரிபோஃப்ளாவின் ம‌ற்றும் ஃப்போலிக் அமில‌ம் முத‌லின‌ ந‌ம‌க்கு கிடைக்கிற‌து.


என‌வே தின‌மும் 50 கிராம் கீரை க‌ட்டாயம் சாப்பிட்டால் ந‌ல்ல‌து.


*


2. இத‌ர‌ காய்க‌ள் முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பீன்ஸ், அவ‌ரை, புட‌ல‌ங்காய் ஆகிய‌வ‌ற்றில் ஏதேனும் ஒன்று க‌ட்டாய‌ம் சாப்பிட்டால் உட‌லுக்கு ந‌ல்ல‌து.

*

3. இதில் குளோரேஃபில் ( ப‌ச்ச‌ய‌ம் ), நார்ச்ச‌த்து, லுடின், கால்சிய‌ம், விட்ட‌மின் " சி " , பீடா க‌ரோடீன் இவை கீரை ம‌ற்றும் ப‌ச்சை காய்க‌ளிள் அதிக‌ம் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.


*


4. இவ‌ற்றை த‌வ‌றாம‌ல் உட்கொண்டால் புற்று நோய், கொலஸ்ட்ரால் அதிக‌ரிப்பு ஏற்ப்ப‌டுவ‌தை த‌டுக்கும். உட‌லில் நோய் எதிர்ப்பு ச‌க்தியை அதிக‌ரிக்கும். இதில் இருக்கும் தாதுப் பொருட்க‌ள் உட‌ல் வ‌ள‌ச்சிக்கு உத‌வும்.

*

5. இத‌ய‌ம், பிட்யூட‌ரி சுர‌ப்பி முத‌லிய‌ன‌ சீராக‌ செய‌ல்படும். காய்க‌றிக‌ள் ஜீர‌ண‌ சக்தியை தூண்டி விட்டு நமக்கு உதவுகிறது. க‌ண்களையும் காக்கிறது.


***

இர‌வு:

*

1. இர‌வில் நீல‌ நிற அல்ல‌து க‌ருஞ்சிவ‌ப்பு உணவை உட்க்கொள்ள‌லாம். வெள்ளை நிற உண‌வும் சேர்த்துக் கொள்ள‌லாம். ப‌ழ‌ங்க‌ளில் மாதுள‌ம். காய்க‌றிக‌ளில் கத்த‌ரிக்காய்.

*

2. ம‌ற்றும் இட்லி, பால், த‌யிர் ( நாம் தயிர் இரவில் உண்ணக்கூடாது என்று சொல்லுவோம். இதில் எனக்கு தெரியலை ) போன்ற வெள்ளை உண‌வுக‌ளையும் எடுத்துக் கொள்ள‌லாம்.

*

3. இவ்வ‌கை உண‌வுக‌ள் ந‌ம்ம‌லை அமைதிப்ப‌டுத்த‌வும், ந‌ன்கு தூங்க‌வும் வைக்கும் என்று கூறுகிறார்.

***


குறிப்பு:

*

கூடிய‌ வ‌ரை காய்க‌றிக‌ள் ச‌மைக்கும் போது நீராவியில் வேக‌ வைத்து உண்ண‌லாம். அதில் இருக்கும் ச‌த்துக்க‌ளின் இழ‌ப்பு குறைவாக‌ இருக்கும்.

***


என்ன நண்பர்களே! இவைகளை தொடர்ந்து முயற்ச்சித்தால் கட்டாயம் இளமையாகவும், திடமாகவும் இருக்கலாம் என்று எண்ணி சொயல் படுவோம்!

***


இவை ஆயுர்வேதம் . காம் புத்தகத்தில் இருந்து பார்த்து டைப் செய்தது.

*

இதன் ஆசிரியர்:

செந்தில் குமார்,
B.Sc ( Bot )., D.N.M, R.M.P.,

***


நன்றி டாக்டர்.
நன்றி ஆயிர்வேதம் . காம்.


***

வானவில்லின் வண்ண உணவுகளான காய்கறிகளும், பழங்களும் நல்லது என்று நினைப்பவர்கள் கட்டாயம் சப்பிடவும்.


இல்லை என்னால் அதுப்போல் இருக்க முடியாது என்று கட்டுப்பாடு இல்லாமல் வயிற்றில் தள்ளும் மக்கள் கொஞ்ம் சிந்தித்து செயல் படுங்கள்.

*

ஒரு சிலர் அதை விடுத்து வயிற்றினுல் எப்போதும் உணவு, மற்ற ஸ்னக்ஸ் சாப்பிடும் நபர்களுக்கு மேலோ படத்தில் காட்டி இருக்கும் " வானவில்லின் மாத்திரிகள் தான் " என்று சிந்தித்து பாருங்கள் .

*

கட்டாயம் வானவில்லின் வண்ண உணவுகளான காய்கறிகளும், பழங்களும் எடுத்துக் கொள்ளுவீர்கள்.


***

இதுப் போல் உணவு முறையை பின்பற்றி வாழ்வில் இளமையாக இருக்க வாழ்த்துக்கள் நண்பர்ளே!


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "