...

"வாழ்க வளமுடன்"

28 மார்ச், 2010

என் உள்ளம் கவந்த‌ ( 10 ) பெண்கள்

எத்தனையோ சாதனை பெண்கள் இருந்தாலும் என்னை கவந்தவர்களில் சிலர்...


***

நைட்டிங்கேல் அம்மையார் ( தாதியர் )

புளோரன்ஸ் நைட்டிங்கேல் நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியர்.

*

போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார்.

*

விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
*
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.


***

அன்னிபெசன்ட் அம்மையார் ( ஹோம்ரூல் இயக்கம் )

*

சுதந்திரத்திற்கு முன்பே அயர்லாந்து பெண்மணியான இவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.


தனது 46-வது வயதில் இந்தியா வந்த அவர், `ஹோம்ரூல்' இயக்கத்தை தொடங்கியதுடன், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதுடன், நிர் இந்தியா என்னும் பத்திரிகையையும் நடத்தினார்.


கல்வி, சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.


***

சகுந்தலா தேவி (மனித கணினி)

*

1980-ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில், எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி.


இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு.


மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார்.


***

அன்னை திரைசாஅன்பும் கருனையும் மறு வடிவமான அன்னை திரைசா எனக்கு மிகவும் பிடிக்கும். தன்னலம் இல்லதா சேவையும், அன்பை தவிர வெறு ஒன்றும் ( வெறுப்பு, அறுவறுப்பு ) தெரியாத அந்த அன்பு உள்ளம் எனக்கு பிடிக்கும்.


நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் இவர்.


இறந்தும் வாழும் இவர், உலகம் இருக்கும் வரை இவரை நினைக்கத மக்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் அனைவரும் மனதில் இடம் பெற்று விட்டார்.


***
M. S. சுப்புலக்ஷ்மி ( கர்நாடக சங்கீத பாடகி )
.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரலும், அவர்களின் லயிப்பும், பாடலின் நடுநடுவே அவர்கள் தட்டும் இசையும் நம்மை உருக வைக்கும் என்பது நிச்சயம்.
இன்றும் இவர் குரலில் ஒளித்த சுப்புரபாதமும், சஷ்டிக் கவசமும் யாராலும் மறக்க முடியாது.
இந்த தலை முறைக்கூட அவர்களின் குரலை கேட்டு மகிழ்க்கிறது என்றால் அது அவர்களின் குரலும், அந்த சாந்த சொருபமான முகமும் தான் என்று சொல்லுவதில் சிறிதும் ஜயம் இல்லை.
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

***
திருமதி. திலகவதி மேம்
*
நான் கல்லுரியில் படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் திலகவதி மேம். அவர்கள் மிகவும் கண்டிப்பு. ஆனால் அன்புமும், கருணையும், கொண்ட அவர்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்.
*
விவேகானந்தர் சொன்னதுப் போல் "ஒருவர் செய்யும் செயலை அவர்கள் முதுகில் தட்டிக்கெடுத்து முன்னேற்றுவது தான்:" என்றும் அதையே என் மேம் செய்ததால் அவர் என் கண்ணுக்கு ஒரு பெண் விவேகானந்தராக தான் தெரிந்தார்.
*
அவர்களை போல் வாழ வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டு முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன்.
*
அவர்களை இப்போது நினைத்தாலும் என்னுல் எழும் சுறுசுறுப்பும், ஆர்வமும் என்னை ஊக்குவிக்கும்.
*
நன்றி திருமதி. திலகவதி
***
உமாபலக்குமார் & ரமணிச்சந்திரன் ( எழுத்தாளர்கள் )
*
இருவரும் சிறந்த நாவல் ஆசிரியர்கள். இவர்களுடைய நாவல் கதைகள் குடும்ப நாவல்கள்.
*
நம் குடும்பத்தில் நடப்பது போல் இருக்கும் நிறைய விஷயமும், காதலும், நல் ஆண்மகன் & பெண்கள் நிலையும் எப்படி வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும் என்று எடுத்து கூறும் அளவுக்கு இருக்கும்.
*
படித்து அந்த புத்தகத்தை கீழே வைத்ததும் நம் மனதில் ஏற்ப்படும் அந்த உணர்ச்சி அதிக மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும். நம் வீட்டில் அந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டது போல் இருக்கும்.
*
நான் அவர்கள் புத்தக்த்தை படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டேன்.
*
அதனால் இவர்களையும், இவர்கள் எழுத்து நாவல்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
***
பழம்பொரும் நடிகை பானுமதி
பத்மஸ்ரீ டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா .
*
எனக்கு இவருடைய நடிப்பும், அவருடைய கணீர் என்ற குரலும் மிகவும் பிடிக்கும்.
*
இப்போதும் அவர் பாடிய பாடலில் அன்னை படத்தில் " பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூக்காமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று " இந்த பாடலை யாராலும் மற‌க்க முடியாது.
*
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்று உள்ளார். 3 முறை தேசிய விருது பெற்றார்.
*
தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார்.
*
இவரது நடிப்பை பாராட்டி ஆந்திர மாநில அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. நடிப்பு கல்லூரி முதல்வராகவும் இருந்திருக்கிறார்.
*
இவர் தன்னுடைய 80வது வயதில் உயிர் நீத்தார்.
*
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
***
உஷா உதுப் ( பாப் இசை )

எல்லா இடங்களிலும் ( உலகம் முழுவதும் ) பாடும் இந்த பெண்மணி நம் இந்திய கலச்சாரப்படி தலை நிறைய பூவும், பெரிய பொட்டும், பட்டு புடவையும், அந்த கணீர் என்ற குரலும் என்னை மிகவும் கவந்தது.
*
வித்தியாசமான குரலில் பாப் இசையைக் குழைத்துப் பாடிய உஷா உதுப் பல பாடல்களைத் தமிழ்ப் படங்களில் பாடி இருந்தாலும் அவரை முழுமையாகத் தமிழ் உலகம் பயன்படுத்த முன்வரவில்லை.
*
சுமார் 150 பாடல்களுக்கும் மேலாக உஷா பல மொழிகளிலும் பாடியுள்ளார். ஆனால் அவர் பாடிய ஆங்கிலப் பாடல்கள் தமிழ்ப் படங்களில் தனி முத்திரையைப் பதித்து விட்டது.
***
பெண் விமான ஓட்டுனரும், பணிப்பெண்களும்
அடுத்து என்னை கவர்ந்தவர்கள் பெண் விமான ஓட்டுனரும், பனிப்பெண்களும் தான். ஒரு பெண் தனித்து இவ்வளவு துனிச்சலுடன் இருப்பது பெரிய விஷயம். அவர்கள் துணிச்சல் பாறாட்ட வேண்டிய ஒன்று.
*
அவர்களின் அந்த இன்முகமும், சேவையும் என்னை மிகவும் கவந்தது.
*
நான் விமானத்தில் சொல்லும் போது அவர்கள் செய்யும் பணியை பார்த்து வியந்து இருக்கிறேன்.

***
இப்படி ஒரு நல்வாய்ப்பை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
***
இந்த பதிவு உங்களை கவரும் என்று எண்ணுகிறேன். என் மனமர்ந்த நன்றிகள்.***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.
*

ஆழ்கடல் களஞ்சியத்துக்கு விருது

இந்த தளத்துக்கு விருது வழங்கிய‌ மற்ற இணைய நண்பர்களுக்கும், விருது வழங்க‌ நினைத்த மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த விருதை எனக்கு அளித்த என் இணைய நண்பர்களான ஆசியா அக்கா, ஜலீலா அக்காவுக்கும், செல்வி அம்மா ஆகியவர்களுக்கு மிக்க நன்றி.


( இந்த விருது வாங்க இந்த ஆழ்கடல் களஞ்சியம் என்ன சாதித்தது என்று தெரியவில்லை. இந்த களஞ்சியம் ஆரம்பித்து 3 மாதம் கூட ஆகலை. )


இருந்தும் நீங்கள் அளித்த விருதை நான் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ளுகிறோன்.


மிக்க நன்றி ஆசியா அக்கா, ஜலீலா அக்கா செல்வி அம்மா.


இந்த விருதை நான், இது போல் இணையம் ஆரம்பிக்க ஊக்குவித்த நம் அன்பு உள்ளம் கொண்ட இமா அம்மாவுக்கும், அனைத்து நல் உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறோன்.


***

அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

வல்லாரை மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரையை நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அது மாத்திரியாகவும் உட்கொள்ளுகிறோம். அது நியாபக சக்தி மட்டும் இல்லாமல் மற்றதுக்கும் ( உடல் நலத்துக்கு ) இது நல்லது.
வல்லாரை (Centella asiatica) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.*


பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.

*
வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

*

இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. சரசுவதிக் கீரையென்றும் வெறு பெயருடனும் அழைக்கின்றனர்.

***

இக்கீரையின் ச‌த்துக்க‌ள்:

*

1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

*

2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

*

3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

*

4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

*

5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.

*

6. வல்லாரையில் இருவகை உண்டு:
*
சமவெளி வல்லாரை - வெளிர் பச்சை நிற இலைகளுடையது.

*

7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை:
*
கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

*

8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.

***

மருத்துவ குணங்கள்:

*

1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
*
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
*
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
*
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
*
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
*
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
*
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
*
8. கண் மங்கலை சரி செய்யும்.
*
9. சீத பேதியை நிறுத்தும்.
*
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
*
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
*
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
*
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
*
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
*
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.


***

வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:

*


a. இரத்த சோகை (Anaemia):
*
1. 1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.

2. பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு

3. வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.

**

b. ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்:
*
வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.


***

c. தூக்கமின்மை:
*
1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.


***


d. ஞாபகமறதி:
*
5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து தினமும் உண்ணவும்.

*
6. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.

*

7. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

*

8. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

*

9. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

*

10. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

*

11. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

*

12. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

***

சமைத்து உண்ணும் முறை:


1. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

*

2. வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

*

3. இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

*

4. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

*

5. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

*

6. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

*

7. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

*

8. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
*
1. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை,
*
2. பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
*
3. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
*
4. சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
*
5. வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.


***

நன்றி விக்கிபீடியா.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88
***

வல்லாரை பற்றி இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மிக்க நன்றிகள்.
***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.
*

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "